தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றய (15.08.12) ஆர்ப்பாட்டம் இடையூறுகள் இன்றி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் இன்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போராட்டம் நண்பகல் 12 மணியை தாண்டியும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என கேள்வியெழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட டெல்றொக்சனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தமது பிள்ளையின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியதோடு பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டதில் கலந்து கொனண்டதே முன்னைநாள் போரளீ ….கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யார்…….கருணா, கே.பி, பிள்ளையான் யார்…லுசு கூட்டம்
இது ஆரம்பம்தான், இனி சரியான முறையில் கட்டமைக்கப்பட்ட வேகுஜனபோராட்டங்கள் ஆங்காங்கே வெடிக்கும்.