கருணா திரும்பினால்? : இணைத்துக்கொள்வோம் -பிள்ளையான்

கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் ராசையா இளந்திரையனை கோடிட்டு வெளியிட்டுள்ளது.
கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் படையினர் கைப்பற்றிய இடங்களை விரைவில் மீண்டும் கைபற்றுவதற்கு உதவிப்படைகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கை வான்படையினர் ஓமந்தையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சாவடிக்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதன் காரணமாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளமையால், ஓமந்தையூடாக பயணம் செய்யும் மக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, கருணா மீண்டும் இலங்கைக்கு வந்தால் தாம் அவரை ஏற்றுக்கொள்ளத்தயார் என பிள்ளையான் குழு அறிவித்துள்ளது.

One thought on “கருணா திரும்பினால்? : இணைத்துக்கொள்வோம் -பிள்ளையான்”

  1. ராசையா இலந்திரையன் மதவாச்சியில் நின்று சொல்லும் வரைக்கும் அவரின் அறிக்கைகளும்
    நேரத்தை வீணடிப்பதற்கே. அடுத்ததாக கருணாவுக்கு வன்னி என்பது வெளிப்படையான எதிரி.
    பிள்ளையான் என்பது உள்வீட்டு எதிரி.மொத்தத்தில் கருணாவுக்கு இலங்கை என்பது நெற்றியில்
    ஒருரூபாகுத்தி.

Comments are closed.