23.10.2008.
வைகோ மற்றும் கண்ணப்பன் கைது செய்யப்பட்ட பிறகு அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அவர்களைக் கைது செய்ய முதல்வர் கருணாநிதிக்கு தார்மீக உரிமை இல்லை, ஏனெனில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தலைவர்களுக்கு இரங்கற்பா எழுதி இலங்கைத்தமிழர் பிரச்சினையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மாற்றியது முதல்வர் கருணாநிதிதான், எனவே முதலில் அவர்தான் கைது செய்யப்படவேண்டும், அதற்காக முதற்கட்டத்தில் திமுக அரசை மத்திய அரசு கலைக்கவேண்டும் எனக் கோரி இருக்கிறார்.
தவிரவும் வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்த தமிழக அரசு ஏன் ராமேஸ்வரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்த சீமான், அமீர், பாரதிராஜா மற்றும் பேரணிக்கு ஏற்பாடு செய்த ராம நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளார்.