Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது-திருமாவளவன் தூக்கிய புதிய காவடியும் உண்மை நிலையும்:மணி

இனியொரு... by இனியொரு...
04/13/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு ‘அம்பேத்கர் சுடர்‘ என்னும் விருது வழங்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் காலை 9 மணி அளவில் கோயம்பேடு சந்தை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அத்துடன், கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறுகிறது.

 இவ்விழாவில், தமிழக முதல்வர் கலைஞருக்கு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை பாராட்டும் வகையில், ‘அம்பேத்கர் சுடர்‘ என்னும் விருதும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. விழாவில் கலைஞர் கருணாநிதி உரையாற்றுகிறார்.திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணிக்கு ‘பெரியார் ஒளி‘ விருதும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு ‘காமராசர் கதிர்‘ விருதும், கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ‘காயிதே மில்லத் பிறை‘ விருதும், ஞான அலாய்சியஸ்க்கு ‘அயோத்திதாசர் ஆதவன்‘ விருதும் மறைந்த தமிழ் பேரறிஞர் தேவநேய பாவாணருக்கு ‘செம்மொழி ஞாயிறு‘ விருதும் வழங்கப்படுகின்றன.விருதுகளுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் கலைநிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது‘ எனக் கூறியுள்ளார்.
உண்மை நிலை?

சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் விருதை திருமாவளனுக்கு வழங்கினார். கருணாநிதி. அதற்கு பிரதி உபாகரமாக திருமாவளவன் இப்போது கருணாந்திக்கு அம்பேதகர் விருதை வழங்குகிறார். பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் நிலையில் வழங்கப்படும் இவ்விருது ஒரு பக்கம் இருந்தாலும் அருந்ததியின மக்களுக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் நீண்ட நாட்களாகவே வெளிப்படையாக எதிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் அருந்ததியின மக்களை தெலுங்கு பேசுகிறவர்கள் அவர்கள் தமிழர்கள் அல்லர் என்றெல்லாம் கூட சொன்னார்கள் சிறுத்தைகள் கட்சியினர். தலித் மக்களுக்காகவும் பழங்குடி மக்களுக்காகவும் நீண்ட காலம் பணியாற்றியதால் இந்த விருது என்று அறிவித்திருக்கும் திருமா இப்போது அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது கருணாந்தி வழங்கியிருக்கும் இட ஒதுக்கீட்டைத்தான்.

சந்தர்ப்பவாத அரசியல் எந்த மேடைகளுக்கு ஏற்றவாரும் திருமாவால் நடிக்க முடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. கருணாநிதியின் தலித் மக்கள் மீதான பற்று பற்றி குறிப்பிடுவதென்றால் எவ்வளவோ பட்டியிலம் போடலாம். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் மக்கள் 19 பேரை அடித்துக் கொன்று தாமிரபரணியாற்றில் வீசியவர் கருணாநிதி. அது தொடர்பான வழக்குகளைக் கூட நடத்த விடாமல் குறிப்பிட்ட ஒரு சாதிப் போலீசைக் காப்பாற்றியவர். உத்தபுரத்தில் வெள்ளாளர்களால் தலித் மக்களுக்கு எதிராக கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரில் ஒரு செங்கலை மட்டும் நீக்கி விட்டு உத்தபுரம் சுவரையே இடித்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கினார் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் திமுகவின் தலைவர்கள் எல்லாம் படையெடுத்து கோபமடைந்த வெள்ளாளச் சாதித் தலைவர்களை சமாதானம் செய்தனர்.

இப்போதும் உத்தபுரத்தில் தலித் மக்கள் அஞ்சி அஞ்சியே வாழ்கின்றனர். தமிழகமெங்கிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பெரியார் திராவிடர் கழகமும் தீண்டாமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே கோவில் நுழைவு உரிமை கேட்டு தலித்துக்கள் போராடும் போதெல்லாம் தமிழக போலீஸ் நுழைந்து தலித்துக்களை தாக்குகிறது. இதை எலலாம் விட சில ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது சுமார் 2,500 மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள் கல்வி கற்றனர். ஆனால் அவர்களை அர்க்கராக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அத்தோடு அர்ச்சகர் பயிர்ச்சிப் பள்ளியையும் மூடி விட்டது.

 இந்த வழக்கு தொடர்பாக கருணாநிதி அரசு நீதிமன்றத்தில் வைக்கும் வாதமே வருணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக் கொண்டுதான் வாதாடுகிறதே தவிற வருணதர்மமே மனித குலத்திற்கு எதிரானது என்பதாக இல்லை. மேலும் எஸ்.டி., எஸ்.சி ஆணையம் சமீபத்தில் கருணாநிதி மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. தமிழக அரசு தலித்துக்கள் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் மத்திய நிதியை வேறு திட்டங்களுக்கு செலவிடுகிறது மாநில அரசு என்று வெளிப்படையாகவேக் கூறியிருந்தது. சமத்துவ புரம் என்னும் பெயரில் ஊருக்கு ஒதுக்குப் புறங்களில் குடியிறுப்புகளைத் துவங்கி வைத்தார் கருணாநிதி ஆனால் அங்கும் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைதான்.

திராவிட இயக்கமே நாங்கள்தான் என்று இடைவிடாது கூவிக் கொண்டிருக்கும் கருணாநிதி பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதியினருக்கே தன் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரமிக்க பதவிகளைக் கொடுக்கிறார். எந்தெந்த பகுதியில் பெரும்பான்மை ஆதிக்க சாதி எதுவோ அவர்களுக்கே தேர்தலில் சீட்டும் வழங்கப்படுகிறது. அவர்களின் வெற்றிக்காக அந்தந்த சாதி அரசியலை அதிமுகவிட அழகாகச் செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. அவரது சேவைக்காகத் தான் இந்த அம்பேத்கர் விருது.
 
 

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அன்புள்ள லீனா மணிமேகலைக்கு அன்புடன் : யமுனா ராஜேந்திரன்

Comments 8

  1. THAMILMARAN says:
    16 years ago

    சமரசம் இன்றீ அரசியல் சாக்கடையில் நீந்தவே முடியாது கெளதம புத்தரும் காந்தியும் இஜேசுவும் கூட இதைத்தான் செய்வார்கள்.பகவத் கீதயில் கிருஸ்ணர் சொல்லும் சரணாகதி இதுதான்.அரசியல் என்பதே வித்தை காட்டுவதுதான் மக்களீன் உணர்ச்சியில் விளயாடுவது.திருமாவளவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அடக்கப்படும் மக்களூக்காகப் போராட வேண்டியவர் அவரது இந்த விருது கலைஜருக்கும் பெருமை திருமாவுக்கும் பெருமை.

    எதுவாக இருந்தாலும் எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் இரட்டைத் தம்ளர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    • xxx says:
      16 years ago

      சம்பந்தன் ஐயாவுக்கு நல்ல நீச்சல் பழக்கம் இருக்க வேண்டும்.

    • xxx says:
      16 years ago

      ஈழத்துப் புலம் பெயர் தலித்தியச் செம்மல்கள் என்ன சொல்வார்கள்?

  2. சமத்துவன் says:
    16 years ago

    எப்படியாவது திருமாவை அரசியல் தலத்தில் இருந்து கெழ் இரக்கவென்டும் என்று நினைப்பவர் கட்டுரை இது எப்பொழுது திருமா அருந்ததியர் உள் ஒதுக்கிடை எதிர்த்தார்? எந்த விடுதலை சிறுத்தை தொன்டன் அவர்களை தெலுகர் என்ட்ரு கோரியது? கருணானிதிக்கு வ்ருது கொடுத்தது ஒரு அரசியல் எதிர்பார்ப்பு என்றே வைத்து கொல்வொம், திருமா சாதியை எதிர்க்கதவர் என்பதில் என்ன நியாயம்?

  3. ramu says:
    16 years ago

    கருணாநிதிக்கு விழா எடுப்பது, விருது கொடுப்பது, அவரது அரசியல் கூட்டாளிகளின் முக்கியகடமையாக கருதப்படுகின்றது என நினைக்கின்றேன். வருடத்தில் பெரும்பாலான தினங்களை பாராட்டுமழையில் நனைவதற்கே பயன்படுத்துகின்றார். இருந்த போதிலும் நானறிந்த வகையிலும்,சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்த பத்திரிகை செய்தியின்படியும் திருமாவளவன் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை தீவிரமாக ஆதரித்தவர் எனநினைக்கின்றேன். அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்தவர் புதியதமிழகம் டாக்டர். கிருஸ்ணசாமி. அதற்கெதிராக பேரணி நடத்தப்போவதாக அப்போது எச்சரித்திருந்தார். விளிம்புநிலை மாந்தரான அருந்த்ததியருக்கு (தலித்துக்களாலும் சிலசமயம் ஒடுக்க,ஒதுக்க படுவோர்) சமுகபாதுகாப்பு , கல்விக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒதுக்கீடு அவசியமானதே. சமூகநீதி பேசி அரசியலில் இத்தனை ஆண்டுகள் குப்பை கொட்டும் கருணாநிதி தன்னுடைய இருபதுவயது பேரப்பிள்ளைகள் பலகோடி ரூபாக்களில் சினிமா தயாரிக்கின்ற அளவுக்கு முன்னேற்றியதை(?) போல, அந்த வேகத்தை அருந்ததியரின்,தலித்துக்களின் சமூகமுன்னேற்றத்தில் காட்டினாரா?. பிறகெதற்கு இந்த பாராட்டு,பட்டமளிப்பு கூத்தெல்லாம்.

  4. சிவராசு says:
    15 years ago

    ராமு சமத்துவன் இருவருக்கும் ஒனறு சொல்ல விரும்புகிறேன் அம்போத்கர் என்ற மனிதரை போன்று ஒருவர் இனி பிறக்க முடியாது .அவ் உயரிய மனிதனுடைய விருது கலைஞர்க்கு அளித்த திருமா ஒரு சுயநலவாதி . அருந்ததியர் என்பவர்கள் ஒரு தலித் இனமே அவர்கள் வந்தேறிகள் என்று சித்தரித்தவன் தான் இந்த தூரோகவளவன் இவர் ஒரு பார்பனர் போல் நினைக்கிறார் .ஜெயலலிதா வீட்டில் சென்றதற்கு வீட்டை கழிவி விட்டார்கள் அதை மறந்துவீட்டார் போல .

  5. ஜோசப் பறையர் says:
    15 years ago

    பிராமனர்கள் திருந்திவிட்டார்கள் அவர்களின் கொட்டத்தை பெரியார் ஒடுக்கிவிட்டார் ஆனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் இன்றும் தலித்துகளை தீண்டாமையின் பிடியில்தான் வைத்திருக்கின்றனர் இவர்களை ஒடுக்க யார் வருவார்கள்? 

  6. THAMILMARAN says:
    15 years ago

    கோயிலின் கருவறக்குள் சென்றூ பிராமணரல்லாதவரும் பூசை செய்யும் காலம் வந்து விட்டது.செம்மொழி தமிழ் பூசை மொழியாகி விட்டது.திருமுறகள் ஒலிக்கின்றன.இனிமைத் தமிழ் என்னைத் தலாட்டுகிறது.விழித்துப் பார்த்தால் எல்லாம் கனவு.உண்மை அய்.தி.சம்பந்தர் எங்கள் கா.பொ.அய்யாவுக்கு செய்திருக்கும் அஞ்சலி.எங்கும் தமிழ்,எல்லாம் தமிழ் என வாழ்ந்த மனுசன் அவரது கம்பிரத் தமிழும் அந்தக் கம்பீர நடையும்.அவர் வாழ்க்கை ஒரு கவிதை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...