கரம்பன் குளம் படையினர் வசம், இரசாயன ஆயுதங்கள்!

நேற்று மாலை கரம்பகுளம் பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.