இத்தாலியில் பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு மேலும் வறுமையை நோக்கிச் செல்லும் என எதிர்வு கூறப்படுகின்றது. இத்தாலி என்ற நாட்டின் முழு உரிமையுமே தனியார் மயப்படுத்தப்படுகின்றது. மக்கள் வரலாறுகாணத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். எழுச்சி பெறும் மக்கள் போராட்டங்களைத் தலைமை தாங்கக் கூடும் என்ற அச்சத்தில் பன்னிரண்டு கம்யூனிஸ்டுக்களை இத்தாலிய அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. விசாரணையின்றிய இச்சிறைவைப்பு ஊடகங்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் சில அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.