கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி வந்த பிறகு, மயிலாப்பூர் சிஐடி காலனி வீட்டில் திரண்ட செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார்.
“எந்த தவறும் செய்யாத தனது மகள் கைது செய்யப்பட்டால் அவளின் தந்தை என்ன மன நிலையில் இருப்பாரோ அந்த நிலையில்தான் நானும் உள்ளேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
கனிமொழியை பிணையில் எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழி கைது விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறியுமா என்று கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்காத கருணாநிதி, மற்ற கட்சிகளுடன் நல்லுறவு வைத்திருப்பதையே தி.மு.க. விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
///மற்ற கட்சிகளுடன் நல்லுறவு வைத்திருப்பதையே தி.மு.க விரும்புகிறது//எந்த எந்தக் கட்சிகள்?உங்களுடன் “சேர்ந்து” சீரோவான அந்தக் கட்சிகளா?புரியிற மாதிரி சொல்லுங்களேன் ஐயா?
டில்லிக்கு மடல் எழுத பேனாவுக்கு மை இல்லையா?…. ஈழத்தமிழன் இரத்தம் இன்னும் காயவில்லை.
டில்லிக்கு ஏன் மனு எழுத வேண்டும்?அது தான் மனுவே வேண்டாமென்று”முடிவு” கட்டி விட்டார்களே,ஒட்டு மொத்தமாக?
தமிழர்களின் தொப்புள் கொடியறுத்து தன் குடும்ப வளர்ச்சிக்கு உரமிட்ட கயவன் ஒருவனை தமிழர்கள் உதைத்து வீழ்த்தியிருந்தாலும் முழுவதும் வீழ்ந்து விடாமல் இந்திய மத்திய அரசில் அமைச்சுப்பதவி என்ற விழுதுகளில் அது தொங்கிபடியேதான் உள்ளது. முழுவதும் அறுந்து வீழாது தவிர்ப்பதற்கு, சொக்கத் தங்கத்தை கொஞ்சியும், மன்மதன் சிங்கை கெஞ்சியும் டெல்லிக்கு பல பல கடிதங்கள் எழுதவேண்டிய தேவையை மறுப்பதற்கில்லை.
இன்னொருவர் வேதனை இவர்களூக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை என்ற பழைய பாடல் காற்றீல் வந்து என்னைக் களவாடிப் போகிறது.கவிதாயினி கனிமொழி காலத்தின் சதியால் கைதாகிப் போயிருக்கலாம் ஆனால் இன்நாளூம் மாறூம் இந்திக்காரன் சதிகளூம் அவனுக்கு எதிராகத் திரும்பும்.அதுவரை மெளனம் மட்டுமே மறூமொழி.
உலகத்தையே காணாத கருவிலிருந்த குழந்தைமுதற்கொண்டு, காலன் வா வா என்றழைக்கும் வயதுமுதிர்ந்த அப்பாவித் தமிழர்வரை, தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக கற்பனை செய்துபார்க்கவே முடியாதளவுக்கு மிகக்கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதைக் கண்டு மனம் வலிக்கவில்லையா?… பிணம்புணரும் படைகொண்டு ஒரு இனத்தை பூண்டோடு அழிக்கத்துடிக்கும் ஈவிரக்கமற்ற ஒரு மனிதமிருகத்திற்கு, பொன்னாடை போர்த்திக் குதூகலிக்கும் கவிதாயினி கவியாக இருந்தாலென்ன பேயாக இருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.
ம்னித மிருகம் மகிந்த உலகமெல்லாம் உலாவிக் கொண்டிருக்கிறான் எல்லாக் கொலைகளயும் செய்த கோத்தாவும் சவீந்திர சில்வாவும் உயர்ந்த பதவிகளீல் ஆனால் தமிழிச்சி கனிமொழி இந்திக்காரன் ச்தியால் சிற்யில் இது கொடுமை மகேந்திரா.
ராஜீவ்காந்தி நினைவு நாள் – கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்: ஜெயலலிதாமறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை (மே 21-ந்தேதி) ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்கப்படுகிறது.நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் தமிழக அரசின் சார்பில் இன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு ராஜீவ் காந்தியின் திருஉருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.பகல் 12 மணி அளவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வருகை தந்து ராஜீவ் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை வாசிக்க, அதை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், தலைமை செயலக ஊழியர்களும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.புலி ஆதரவு அமைப்புக்கள் எதிரிகளை நண்பர்களாக அறிவிக்கும் செயற்பாட்டைத் இன்னும் நிறுத்தவில்லை. ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்ற நாளன்று கோமாளித்தனமாக அனைத்துப் புலிசார் அமைப்புக்களும் அவருக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பின. பல்லாயிரம் அப்பாவிகள் இலங்கை இந்திய அரசுகளால் கொலைசெய்யப்பட்ட நாளில் ரஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக மட்டும் ஜெயலாலிதா வருந்தியிருக்கிறார். அந்த நாளைக் கொடுஞ்செயல் நாளாக வேறு அறிவித்திருக்கிறார். யாரையாவது அணுகி, லஞ்சம் கொடுத்தும் ஆள்சேர்த்தும் எதையாவது சாதித்துவிடலாம் என எண்ணும் குறுந்தேசிய வாதிகள் ஜெயலலிதாவின் மாற்றத்தைத் தொடர்ந்து கருணாநிதியை மீண்டும் தமழர் தலைவர் என்று அறிவித்தாலும் வியப்படைவதற்கில்லை.
கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்
செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….
கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?
சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி 01 ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?
ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி கருணாநிதி பரபரக்க வைத்தார். நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..
எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.
நல்லையா தயாபரன்