
தடுத்து வைக்கப்படுள்ள ஆப்கானிஸ்தான் கைதிகளை சித்திரவைதைக்கு உட்படுத்தியது குறித்தும் அவர்களை மீதான வன் முறைகளுக்கு எதிராகவும் கனடா போர்க்குற்ற விசாரணைக்குள்ளாக்கப்படுமா என பரவலான எதிர்பார்பு நிலவுகிறது.
சித்திரவதைகள் குறித்த விரைவில் வெளிளியிடப்படவுள்ள ஆவணப்படம் ஒன்றில் அதன் தயாரிப்பாளர் பெரி ஸ்ரீவன்ஸ் எழுப்பிய கேள்வியொன்றிற்குப் பதிலளித்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லூயி ஓகம்போ, சாட்சிகள் வழங்கப்படுமாயின் அதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாகப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சேபனை தெரிவித்த போது இதற்கான விவாதம் நிறுத்தப்பட்டது.