வயலெல்லாம் வறண்டு போச்சு
விரிசல் விழுந்தது நிலங்கள்
காற்;றில் கூட ஈரம் இல்லை
துளி நீருக்காய் வானம் பார்த்து
பிளந்து கிடக்கிறது துரவு
ஆனாலும் நூலிழையில் தொங்கிக் கிடக்கிறது
நம்பிக்கை
கண்ட இடமெங்கும் கட்டாக்காலி மேய்ச்சல்
தடுப்புவேலிகளும் இல்லை
தடியெடுத்து கலைக்கவும் வீரியம் இல்லை
சுதந்திரம் வேண்டி விலை கொடுத்த இனம்
வாடிக்கிடக்கிறது
தோல் சுற்றிய எலும்பாய்
வதங்கிக் கிடக்கிறது
கொடுத்த விலைக்கு ஆதாரமாய்
உறுதிகள் நகல்கள் ஏதும் இல்லை
எல்லாம் முடிந்ததென்று உழுது மறைத்துவிட்டனர்
புயலும் மழையும் அடித்த காட்டில்
இன்று புலராத வைகறை
எந்த திக்கிலும் ஒளியைக் காணவில்லை
இருளே மண்டிக்கிடக்கிறது.
புடையனும் தேளும் முதலையும் கீரியும்
நீக்கமற நிறைந்து கிடக்கிறது
கழனிகரையெல்லாம் களைகளே நிறைந்து கிடக்கு
நாளேடுகளை எடுத்தாலே
நாடி நரம்பெல்லாம் நடுங்குகின்றது.
பாட்டியைக் கற்பழித்த பேரன்
என்ன இழிவடா இது
இதற்காகவா இத்தனை உயிர்களைத் தீய்த்தோம்
இதற்கா ஊழித்தாண்டவமாடினோம்.
எல்லாம் முடிந்ததென்று அவர்களுக்கு முசுப்பாத்தி
சுதந்திரத்திற்கான யாகங்கள்
அழிவின் சிதலங்கள்
இழந்துபோன வலிகள்
அப்படியே கிடக்க
மீண்டுமொருமுறை மேடைகள் போடப்படுகின்றன.
கலர் கலராய் போஸ்டர்கள் கொடிகள்
வெள்ளையடித்த சுவரெல்லாம்
கொள்ளையர் படங்கள்
அழுத கண் காயவில்லை
இழந்த வலி மறையவில்லை
முறிந்த கால் நிமிரவில்லை
அதற்குள் மீண்டுமொரு திருவிழா
எமது விடுதலைக்காய் எத்தனை வியாபாரிகள்
தலைமறைவாய் திரிந்ததுகள்
தாடிவைத்து உருமறைத்ததுகள் எல்லாம் வந்து
வாசல் கதவை தட்டுகின்றன.
தேசியம் பேசுகின்றன.
கையெடுத்துக்கும்பிடு போடுகின்றன.
துயிலுமில்லங்களை உழுதுதொலைத்தவனைக்
கொண்டாடி ஒரு கூட்டம்
காட்டிக் கொடுத்தவனையும்
கூட்டிக் கொடுத்தவனையம் கும்பிட்டு ஒரு கூட்டம்
இறுதியில் இதுதானென்று தெரிந்திருந்தும்
இவ்வளவு விரைவிலா என்று
ஏற்காத மனம்.
என்ன செய்யப்போகிறோம்…….!
இது முள்வழி
மெல்லத்தான் நகர வேண்டும்
கொஞ்சம் வழிமாறினாலோ முட்கள் கிழித்துவிடும்
பழியை எம்மீது போட
உலகை ஏமாற்ற நாடகம் நடக்கிறது
மாகாணசபையென்னும் மகோன்னத வாழ்வு
தருகிறோமென
நல்லதோர் ஒப்பனையில்
கனகச்சிதமாய் கதைவசனம் எழுதி நாடகம் மேடையேறுகிறது.
கவர்ச்சி நடிகைகளும் அதிகம்
வயிறு காட்டியே எம் வாழ்வை முடிக்க
கங்கணம் கட்டியாடுகிறார்கள்
மெய்மறந்திருந்தால் நமக்குத்தானே அழிவு
இத்தனைபேரை இழந்தோமேயெனக்
கத்தவேண்டும் போலிருக்கும் மனம்
நித்தம் பூசித்தவரைக் காணாமல்
செத்துவிடலாமோவெனக் கதறியழும் நிதம்
சித்தப்பிரமை பிடித்து அலறும் உள்ளிருந்துகுரல்
மொத்தமும் தொலைத்தவருக்கு மோகமென்ன பாசமென்ன
மணிமுடியைக் காணவில்லை
மண்டைக்கு ஏனிந்த ஒப்பனை
முகமிழந்தவர்களுக்கு ஏன் இந்த முகப்பூச்சு
வாழ்வைப் பறித்தவரே வரங்கள் தருகிறார்கள் அதை
வாங்கித்தரவென்று வந்திருக்கிறார் இவர்கள்
தேசியம்
தன்னாட்சி
சுயநிர்ணயம்
பதின்மூன்று பிளஸ்
இணைப்பதும் பிரிப்பதும் அவர்களென்றால்
ஈழைக்கிழவி இழுத்துச் சாகவேண்டியதுதானே
பின்னென்ன சுயநிர்ணயம்
உழுதுவிட்டு அடுத்த மழைக்காய் காத்திருக்கையில்
அவர்கள் இருந்த நெல்லையும் பிடுங்கிக் கொண்டபோது
என்ன தன்னாட்சி புண்ணாக்கு
……………….. பதின்மூன்று பிளஸ்
(புள்ளியிட்ட வெளியில்; விரும்பிய தூஷண வார்தையை இணைக்க)
அன்று
வேலியிட்ட சிறு புலவுவொன்றை கண்டோம்
நல்லவர்க்காய் கதவு திறக்கப்பட்டது
தவறிழைத்தும் திருந்தியோரும் புடம்போடப்பட்டு ஈர்க்கப்பட்டனர்
நல்ல காற்றுமட்டும் உள்ளே வந்தது
தமிழன் வாக்குப்பலத்தை உலகம் உணர்ந்தது
ராஜயசபாவும் வெள்ளைமாளிகையும் உள்ளதுணர்ந்தன.
மேய்ப்பன் இல்லா வேளையிலும்
புலவு திறந்து கிடந்தது
காடை கடைப்புளி எல்லாம் உள்ளே வந்தன
கட்டாக்காலிகளின் மேய்ச்சல் தரையானது புலவு
திறந்திருந்த வாயிலூடாக இன்றும்
காற்று வந்தது கூடவே காவாலிகளும் வந்தனர்
ஊத்தைகளும் குப்பைகளும்
குந்தியிருந்து கும்மியடிக்குமிடமானது புலவு
ஏய் யாராவது கதவை மூடுங்கள்
காற்றுவருவது நிற்கட்டும்.
~ச.நித்தியானந்தன்-யாழ் பல்கலைக்கழகம்~
சி.சந்திரமெளலிசன்
Posted on 07/26/2013 at 08:23
சவால் விடுகின்றேன். சவால் விடுகின்றேன். சவால் விடுகின்றேன்.
தமிழீழம் தான் ஒரே தீர்வு என தெளிவாக வலியுறுத்தி ச.”நிதி” ஆனந்தன் ஒரு கட்டுரை வரைவாரா? முடியவே முடியாது .
ஏனெனில் ஆறாவது திருத்தச் சட்டம் அங்கு வாழ்வோரைக் கட்டிப் பொட்டிருக்கின்றது . அது தான் உண்மை. சும்மா சப்பைக் கட்டுக் கட்டக் கூடாது.
Reply
Nithiananthan
Posted on 07/26/2013 at 10:19
சவாலை ஏற்றுக்கொள்கிறேன் சந்திரமௌலி சகோதரனே
விரைவில் சந்திக்கிறேன்
யாமார்க்கும் குடிஎல்லோம் நமனை அஞ்சோம்
HONESTY IS VERY BASIC THING I RESPECT WHETHER YOU ARE WITH ME OR WITH THE ENEMY .
I SERIOUSLY DOUBT YOU DO NOT HAVE THAT . UNTIL UP TO TODAY NOT A SINGLE PERSON TOLD ME THAT THEY SAW YOU IN JAFFNA UNI DEMO AND SUPPORT OUR FREEDOM STRUGLLES.
CAN YOU DISPROVE IT .
I have posted a clear answer to your questin within 24 hours of seeing the question , you are unable to keep your promise even after 7 days .
what a shame !!!!
1956. Late Vetivel Yogeswaran was there at London, England, airport to greet the Prime Minister of Ceylon – Sri Lanka – S>w.R.D. Bandaranaike. You guys must be thinking that you all can blabber anything from there. Please find another past time instead.
Great words. It touches a nerve in all of us. Then we should also think positive and practical. Where do we go from here. We should keep going forward and not backwords. I heard that Nithyananthan is running some television programs in England..
காற்றுவருவது நிண்டால் நம்ம கதையே முடிந்துவிடுமே என்ன செய்வது. இழப்பையே நினைத்திருந்தால் .. .. இனிவாழ்வு கிடைக்குமா?
எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை இப்போதைக்காவது எடுத்துக்கொள்ளவேண்டாமா?
பட்டுவேட்டியைப் பிறகுபெறுவோம் கோவணத்தையாவது இறுகக்கட்டுவோமே இல்லையேல் அவர்கள் வென்று படஇடுவேட்டிதருவதாகக்கூறிக் கோவணத்தையும் அல்லவா உருவிவிடுவார்கள்.
எனக்கென்னமோ “அதிதீவிரவாதம் பேசுவதும் தேர்தல் புறக்கணிப்புக்காய் வேண்டுவதும் காலத்துக்கு ஒவ்வாததாகவே படுகின்றது.
“வாழ்வைப் பறித்தவரிடமே வரம்வேண்டித்தர வருகிறார்கள் ” என்ற வரிகள் யதார்த்தமானது. என்ன செய்வது ஒற்றுமையில்லாத எமக்கு இதைவிடச் சிறந்த தேர்வு இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள்.
நாங்கள் தெரிந்தே தோற்றுப் போனவர்கள். போராட்டம (ஆயுத) நடந்த காலப்பகுதி முழுதும் மக்களுக்கான எந்த உரிமைகளையும் ஆயுதம் தாங்கியோர் அனுமதித்ததில்லை. உண்மையாகப் போராட முயன்றவர்களுக்கு மரணமே துரோகியெனும் பட்டத்துடன் பரிசளிக்கப்பட்டது. அது பற்றியெல்லாம் பேசவும் கருத்துக் கூறவும் விவாதிக்கவும் இன்னமும் எவரும் தயாரில்லை. எப்படி விடுதலை அடைவது?
நெஞ்சை அசைக்கவல்ல வரிகள், இருந்தாலும் தவறை,வாக்குக்கேட்டு வருபவா்களிடம் மட்டும் திணித்து விட்டு சிலா் தப்பிக்கமுயல்வது தெரிகிறது.
ஆயுதம் தாங்கிய தலைமைகள் தாம் அழிகின்ற நிலை வந்த போது வேறு எவருமே அதை தொடரமுடியாத நிலை ஒன்றிலேயே விட்டு சென்றுள்ளார்கள். ஆகவே அவா்களுடய தவறுகளை இலகுவில் மறந்துவிடலாகாது, ஆனால் போராளிகள் என்றும் போற்றப்படவேண்டியவா்களே.
சிங்கள பேரினவாதிகளுக்கு இன்னும் கூடியது மூன்று வருடங்கள் கிடைத்தால் தமிழ் இன அளிப்பை முற்றாக நிறைவேற்றி வடகிழக்கில் தமிழ் பெரும்பான்மை என்ற ஒன்றை இல்லாது செய்துவிடமுடியும் அதை செய்வதற்கு இந்த தோ்தல் மிகவும் தடையாக வந்துள்ளது.தோ்தலைஅழுத்தங்களின் காரணமாகவே நடாத்த முடிவு செய்துள்ளனா் இதில் காணி,பொலிஸ் அதிகாரங்களை பிடுங்குவதன் மூலம் தமிழா் தரப்பை பகிஸ்கரிக்கவைத்தால் டக்ளஸ் போன்ற ஒருவரை முதலமைச்சராக்கி காரியத்தை சாதித்துவிடலாம் ஆகவே இந்த தோ்தலால் எந்த இலாபமும் இல்லையாகினும் இனவளிப்பை தடுப்பதற்கு இதை வெல்வது மிகவும் முக்கியம்.
They do not feel comfortable enough to hold elections to the Northern Provincial Council. They may feel that secessionist tendencies may be entrenched in the hearts and minds of the people. That is not so and people value their Sri Lankan Citizenship more than ever before. Professor Arulnadhy said that Time is the best healer of everyhting.
நீதி தேவன் குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனை
நான் ஏன் வணங்குகின்றேன் ????
ஒரு சிறு விளக்கம்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் ”
பொருள் ——மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை விண்ணுலகத்
தெய்வமாய் நன்குமதிப்பர்
திருக்குறள்
அறத்துப் பால்:
இல்லற இயல் :
அதிகாரம் :5 இல்வாழ்க்கை
////////// S.Nithiananthan
Posted on 07/31/2013 at 10:27
சந்திர மௌலீசன் பல பேர்களில் வந்து குணாநிதியை கும்பிடும் காரணம் புரியவில்லை ///////////
இதோ என் பதில்
//////////////////////
ஒரு சமூகத்தின் தலைவனாக இருப்பதற்கு விரும்பும் ஒருவர் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் அவை நீதி தேவன் குணாநிதி ஐயா விக்கினேஸ்வரனிடம் இருப்பதாக நான் உறுதியாக நம்புகின்றேன். அவையாவன
1) கண்ணியமானவனாக இருக்க வேண்டும். அதாவது, கருத்து எதுவாக இருந்தாலும் சொல்வதைச் செய்பவனாகவும் செய்வதைச் சொல்பவனாகவும் இருக்க வேண்டும் .
2) அதிகம் பிரசங்கித் தனம் அற்ற புகழ் விரும்பாத தன்னடக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் .
3) பட்டம் , பதவி , சுகங்களுக்காக தன்மானததை விற்காதவனாக இருக்க வேன்டும் .
4) சமூகத்தில் ஒற்றுமையை வளர்க்க கூடிய முன் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும்.
5) எல்லாதரப்பும் சொல்வதை உணர்சிகளுக்கு உட்படாமல் சுய கருத்துக்களுக்கு(EQ ) உட்படாமல் கேட்டு நடு நிலையான பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்கக் கூடியவர் என எதிரியும் , வழக்காளியும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.
6) நீண்ட சிக்கலான விவாதத்தை அமைதியாக கேட்டு , படித்து உள்ளார்ந்த அர்த்தத்தை புரியக்கூடிய நுண்ணறிவு(IQ) படைத்தவனாக இருக்க வேண்டும்.
7) எந்த தரப்பும் சொல்லும் பேசும் விடயங்களை புரிந்து கொள்ளக் கூடிய விடய தானத்துக்கு உட்பட்டதும் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் இணைந்த பொது அறிவு (GQ ) உடையவனாக
8) சரி பிழைகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சார சமூக விழுமியங்களை போற்றி மதித்து கூச்சமின்றி எவர் முன்னும் கடைப் பிடிப்பவனாக இருக்க வேண்டும் .
9)எதிரி தன் சமூகத்தின் மீது என்ன கொடுமைகளைச் செய்திருக்கின்றான் என்பதை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் . அதை எதிரியின் கூடாரத்துள் நின்றும் தெளிவாக , உரத்துச் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும் . அதை உலக மக்களும் சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடியள வுக்கும் மதிப்பும் கண்ணியமும் உள்ளவராக இருக்க வேண்டும் .
இத்தனையும் மட்டுமல்ல இன்னும் பட்டியலிடலாம். அவை நீதி தேவன் குணாநிதி ஐயா விக்கினேஸ்வ்ரனிடம் இருக்கு இதை நான் 1983 முதல் அறிந்தவன் அது மட்டுமல்ல இந்த தலைவனுக்குரிய பண்பு பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன் . அதுதான் IQ-EQ-GQ அந்த மூன்று அங்கமும் நான் வணங்கும் கண்கண்ட தெய்வம் குணாநிதி நீதி தேவனிடம் இருக்கு .
உங்களால் முடிந்தால் ஒரு தலைவனுக்கு என்ன பண்பு வேண்டும் என்பதை வரையறுத்து அதில் எது கடவுள் தந்த பாக்கியமாய் வந்த நீதி தேவனிடம் இல்லை எனக் காட்டுங்கள்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் ”
பொருள் ——மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை விண்ணுலகத்
தெய்வமாய் நன்குமதிப்பர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ(வைக்க) நினைப்பவன்
காடுறையும் வன்னிப் பங்ஙரில் வைக்கப்படும்!
அது அன்று!
வையத்துள் வாழ்வாங்கு வாழ நினைப்பவன்
மகிந்தரின் காலடியில் நன்கு மிதிக்கப்படும் – என்பது இன்று!!
I need a little more time to analyse the Wanni War. Taraki – Dharmaratnam Sivaram – got an opportunity to read for a degree at the Peradeniya Campus in 1983. He should have done that. This is Sri Lanka. They did not spare Lasantha Wickrematunga either.
சரி அனலைஸ் பண்ணி என்ன பண்ண போறீங்க, திரும்பவும் யாழ்பாணத்தான் திட்டுறதுக்கா.
ரஸ்சியா போன்ற நாடுகலிடம் அப்படி ஒரு திட்டமும் இருந்திருக்காது என்ற ஒரு பிரமையை இந்த பதிவு எற்படுத்துகின்றது.
மேற்குலக நாடுகளில் ஜனநாயகம் குற்றுயிராகவேனும் இருக்கின்றது என்பதை இந்த செய்தி காட்டுவதாகவே நான் நம்புகின்றேன்.
ஆனால் கம்யூனிச நடுகளில் 1000 ஆண்டுகள் சென்றாலும் அவர்கள் யாரை எப்படிக் கொண்றார்கள் என்பது தெரிய வராது .
பிரீடம் ஒவ் இன்பொரபோர்மேசன் போன்ற குற்றுயிர் ஜனனாயகத்தில் இருந்து நாம் மெலும் முன்னேற வேண்டும் அதுதான் ஸ்னொடனும் , மார்னிங்கும் , ஒரு சினொடனோ மார்னிங்கோ கம்யூனிச நாடுகளில் வெளிவரவில்லை காரணம் அங்கே மிக மிக மொசமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன .
இரன்டாம் உலகப் போரின் பின் மேற்குலக நாடுகள் காலனித்துவ கொள்கையை கைவிட ஆரம்பித்தார்கள். ரஸியா தான் பிடித்த கிழக்கு ஐரொப்பிய நாடுகளை 90 களில் தான் விட்டது .
போலந்து மக்களின் பிராடுத்தனம் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை .
சம உடமைக் கொள்கைக்கு நான் எதிரானவன் அல்ல ஆனால் சம உடமை என்ற பெயரில் மோசமான அடக்குமுறைதான் இது வரை நடந்திருக்கின்றது .
யாரங்கே மனிதனை மனிதனாக மதித்து ஆட்சி நடாத்தும் அல்லது நடாத்திய ஒரு சம உடமை நாடு சொல்லுங்கோ .
தனது அற்புதமான கருத்துக்கள் இப்படி துஸ்பிரயோகம் செய்யப்படும் என்று மார்க்ஸ் ஒரு பொழுதும் நினைத்திருக்க மாட்டார்.
பாவம் அந்த மனிதனும் கம்யூனிச ஆட்சிக்குள் விழுந்த மக்களும் .
அட போங்க அவர் அப்பா யாழ்பாண்த்தான் ஐயா . அவரை எனக்கு நன்றாகவே தெரியும் . அவர் சொல்லுவார் வெறுங்கையுடன் மட்டக்க்களப்பு சென்றேன் என .இவர் எப்பிடி மட்டக்கிளப்பான் ஆக முடியும் . சந்ததி அடிப்படையில் இவர் யாழபானதான் சிதம்பரப்பபிள்ளையின் மகன் , அதை விடுங்க இன அடிப்படையில் இவர் இவர் தமிழன் ஐயா இவர் எப்பிடி இலங்கையன் ஆக முடியும் . இதை உவர் அனலைஸ் பண்ண வேண்டும் . நானும் பர்த்துக் கொண்டுதான் வாறன் இவர் ஏதோ யாழபானதான் மட்டக் கிளப்பான் என்று பிரிவினை பெசுறார் .
இந்த குழுவாதம் , பிரதேசவாதம் என்பன உடையவர் அத்தனை பேரும் சாதீய சிந்தனை மூளையில் இருந்து விழும் நச்சு விதை கொண்ட இனித்த பழங்கள். பரதேசிகளை….. .
.
அட போங்க அவர் அப்பா யாழ்பாண்த்தான் ஐயா . அவரை எனக்கு நன்றாகவே தெரியும் . அவர் சொல்லுவார் வெறுங்கையுடன் மட்டக்க்களப்பு சென்றேன் என .இவர் எப்பிடி மட்டக்கிளப்பான் ஆக முடியும் . சந்ததி அடிப்படையில் இவர் யாழபானதான் சிதம்பரப்பபிள்ளையின் மகன் , அதை விடுங்க இன அடிப்படையில் இவர் இவர் தமிழன் ஐயா இவர் எப்பிடி இலங்கையன் ஆக முடியும் . இதை உவர் அனலைஸ் பண்ண வேண்டும் . நானும் பர்த்துக் கொண்டுதான் வாறன் இவர் ஏதோ யாழபானதான் மட்டக் கிளப்பான் என்று பிரிவினை பெசுறார் .
இந்த குழுவாதம் , பிரதேசவாதம் என்பன உடையவர் அத்தனை பேரும் சாதீய சிந்தனை மூளையில் இருந்து விழும் நச்சு விதை கொண்ட இனித்த பழங்கள். பரதேசிகளை….. .
.