தமிழ்நாட்டையே உலுக்கிய கண்ணகி முருகேன் ஆணவக் கொலை வழக்கில் இன்று தண்டனை வழங்கப்பட்டது. 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் முருகேன் பச்சியல் சாதியைச் சேர்ந்த பட்டதாரி. இவரும் இதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் மகள் கண்ணகியும் காதலித்தனர். 2003-ஆம் ஆண்டு மே 5 –ம் தேதி ரகசிய திருமணம் புரிந்து கொண்டு அவரவர் வீட்டில் தனியே வாழ்ந்ஹ்டு வந்தனர். இருவருமே சட்ட ரீதியாக திருமண வயதை எட்டியவர்கள்.
இவர்களின் ரகசிய திருமணம் கண்ணகி வீட்டிற்கு தெரியவர முருகேசன் தனது உறவினர் வீட்டில் கண்ணகியை தங்க வைத்தார். ஆனால் 2003 ஜூலை 8-ஆம் தேதி முருகேன் கண்ணகியின் உறவினர்களிடம் பிடிபட்டு விடுகிறார்கள். பின்னர் கண்ணகியின் இடமும் தெரியவர கண்ணகியை முருகேசன் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தனர், அங்குள்ள மயானத்திற்குச் சென்று இருவரின் காது மூக்கு வழியே விஷத்தை ஊற்றி அவர்களை கொலை செய்து தடயம் இல்லாத அளவுக்கு இருவரையும் எரித்தே கொன்று விட்டனர்.
18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த ஆணவக்கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கியது. தலித் அமைப்புகளும் இடஹ்டுசாரி அமைப்புகளும் கண்ணகி முருகேன் கொலைக்கு நீதி கேட்டு போராடி வந்தனர். இந்நிலையில் இக்கொலைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிழர் சாட்சிகளாக மாறினர்.
கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி உத்தமராஜா வழக்கினார்.
அதில் தொடர்புடைய பெண்ணின் தந்தை துரைசாமி, பெண்ணின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது ஆய்வாளராக செல்லமுத்து (தற்போது ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அப்போது உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் (தற்போது ஆய்வாளர்) உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் அய்யாச்சாமி மற்றும் குணசேகரன் குற்றவாளி இல்லை என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.