கண்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரால் பலவந்தமாக கள்ள வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் மனோ கணேசன் சற்று முன்னர் இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரின் குண்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
தொலஸ்பாகே, அலுகல்ல, இவல்கொல்ல, பரகல, ஹெலிவுன்ன, மாவத்துர, திம்புல்பிட்டிய ஆகிய வாக்கெடுப்பு நிலையங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு ஆளும் கட்சியினருக்கு சார்பாக வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் செயலகப் பொறுப்பாளராகச் செயற்படும் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் கணிப்பு:
யாழில் தொடர்பு கொண்டு அறிந்ததில் பெரும்பான்மையோர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. அதே நேரம் கூத்தமைப்பைச் சேர்ந்த திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில், ஈ.பி.டி.பி சார்பு கருத்துக் கணிப்பு:
1. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) – 72 வீதம்
2. தமிழரசுக் கட்சி – 14 வீதம்
3. ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் கூட்டணி – 12 வீதம்
4. ஐக்கிய தேசியக் கட்சி – 02 வீதம்
இப்படி சொல்லும் நிலையில், தேர்தலிற்கு முன்னேயே தாம் இப்போட்டியில் தோற்க்கப்போகிறோம் என்று தெரிந்த நிலையில் (கட்டுக்காசு என்னவோ தெரியவில்லை) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் முதலிலேயே அறிக்கைகள் மூலம் சமிக்சை காட்டிவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வரப்போகும் இத்தேர்தல் முடிவுகளில் என்னுடைய ஓர் கணிப்பு.
யாழ்:
கூட்டமைப்பு – 4
வெற்றிலை – 3
மெழுகுதிரி – 1
யு.என்.பி – 1
வன்னி:
கூட்டமைப்பு – 2
நங்கூரம் – 2
வெற்றிலை – 1
யு.என்.பி – 1
மட்டக்களப்பு:
கூட்டமைப்பு – 2
வெற்றிலை – 2
யு.என்.பி – 1
திருகோணமலை:
கூட்டமைப்பு – 1
வெற்றிலை – 2
யு.என்.பி – 1
ஆனால் தற்போதைய மாவட்ட விகிதாசார முறையை எடுத்துக் கொண்டால் வன்னியிலும் மட்டக்களப்பிலும் முதலாவதாக வரும் கட்சிக்கும் இரண்டாவதாக வரும் கட்சிக்கும் ஒரு போதும் சமனான ஆசனங்கள் கிடைக்காது. 2 , 1, அல்லது 3, 2, அல்லது 3,1. என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் கிடைக்கும். ஆதலினால் பொறுத்திருந்து பார்ப்போம்.
அத்துடன் நாடு தழுவிய 196 கதிரைகளை பெறுவதில் வெற்றிலை பெரும்பான்மையான 120 (குறைந்தது) கதிரைகளைப் பெறும்.
கணிப்பு நேரம்: இலங்கை நேரப்படி மாலை 6.00
– அலெக்ஸ் இரவி
வட,கிழக்கு தமிழர் பகுதிகளில் 30வீத வாக்களிப்பு : நாடளாவிய ரீதியில் 55வீத வாக்களிப்பு
பொதுத்தேர்தல் வாக்களிப்பு பிற்பகல் 4மணியுடன் நிறைவடைந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் மிகக்குறைவாக காணப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 50வீதத்திற்கு மேல் வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாகவும் வடக்கு, கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் 95வீதத்தை காட்டிய போதிலும் தமிழ் பகுதிகளில் 35வீதத்திற்கு குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். இதனால் வன்னி திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் குறையலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று காலையில் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க சென்ற போது தடுக்கப்பட்டதாகவும் அச்சுறுத்தல் காரணமாக தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லீம் பிரதேசங்களில் 95வீதமானவர்கள் வாக்களித்திருக்கின்ற அதேவேளை தமிழ் பிரதேசங்களில் 30வீதத்திற்கு குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள்.
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களித்த போதிலும் தமிழ் பிரதேசங்களில் உள்ள வாக்குச்சாவடிகள் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவு தளம் அதிகம் உள்ள கல்லடி, செட்டிப்பாளையம், குருக்கள்மடம் ஆகிய இடங்களில் முரளிதரன் குழுவைச் சேர்ந்த பிரசாந்தன் தலைமையிலான குழுவினரும் சந்திரகாந்தன் குழுவினரும் பொதுமக்களை தாக்கி வாக்களிக்க விடாது தடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிரான துண்டுப்பிரசுரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வைத்து பிள்ளையான் குழு விநியோகித்தாகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலர் போட்டியிலிருந்து விலகி விட்டதாகவும் பிரசாரம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1250வாக்காளர் உள்ள குருக்கள்மடம் வாக்குச்சாவடியில் அச்சம் காரணமாக 300பேருக்கு குறைவானர்களே வாக்களித்திருக்கிறார்கள். ஆரையம்பதியில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் மதுவில் மயக்கமருந்துகளை கலந்து கொடுத்ததால் பெருந்தொகையானவர்கள் வாக்களிக்க முடியாது பாதிக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதங்களால் அப்பகுதியில் உள்ள பெண்களும் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் 3இலட்சத்து 30ஆயிரம் வாக்காளர்களில் 80ஆயிரம் பேர் முஸ்லீம் வாக்காளர்களாகும். இன்றைய தேர்தல்களில் 76ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்த அதேநேரம் தமிழர்கள் 90ஆயிரத்திற்கு குறைவானர்களே வாக்களித்திருக்கிறார்கள். ஒரு இலட்சத்து 40ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாக்களிக்கவில்லை என நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனால் தமிழரசுக்கட்சியின் வெற்றிவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டமை, தேர்தல்களில் அக்கறை இன்மை காரணமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்திருக்கிறார்கள் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையின் வடக்கேயும் கும்புறுபிட்டியிலிருந்து தெற்கே மூதூர் பிரதேசத்திலும் ஆளும் கட்சியில் போட்டியிடும் அமைச்சுப் பதவி வகிக்கும்
வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் வாக்களிக்கச்செல்லும் தமிழ் வாக்காளர்களை தடுத்ததாவும் வன்முறை பாவிப்பதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையிலும் மூதூர் உட்பட முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் 85வீதத்தை தாண்டிய போதிலும் திருகோணமலை நகரம் உட்பட தமிழ் பிரதேசங்களில் 35வீதத்திற்கு குறைவாகவே காணப்பட்டதாக நமது திருகோணமலை செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25வீதமே வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 7இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பதியப்பட்ட போதிலும் உண்மையில் 3இலட்சம் வாக்காளர்களே அங்கு இருப்பதாகவும் இதனாலேயே வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுவதாகவும் நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இன்று காலையில் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலர் தேர்தலிலிருந்து விலகி விட்டதாகவும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் கூட மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்திருப்பது தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பாதகமாக அமையலாம் என கருதப்படுகிறது.
வன்னியில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருக்கும் மக்களை வாக்களிக்க விடாது அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் தடுத்ததாக டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்கள் வவுனியா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கொத்தணி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இங்கு கூட 25வீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 80 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 55வீதமானவர்கள் வாக்களித்திருப்பதாகவும் பவ்ரல் அமைப்பின் தலைவர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இரவு 8மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11மணிக்கு பின்னரும் தொகுதி ரீதியான வாக்களிப்பு முடிவுகள் நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னரும் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். – Tamilwin.
Election update:
– நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தேர்தல் முறைகேடுகளை அடுத்து நாவலப்பிட்டிவாக்குகள்
எண்ணப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Reason: வாக்கெடுப்பு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தேர்தல்களை கண்காணிக்கும் ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் நாவலப்பிட்டியவில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் பலவந்தமாக வாக்கெடுப்பு நிலையத்துக்குள் நுழைய முற்பட்டவேளை அதனைத் தடுக்க முயன்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் இணைப்பாளர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்
– கண்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரால் பலவந்தமாக கள்ள வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் மனோ கணேசன் வீரகேசரி இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரின் குண்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
தொலஸ்பாகே, அலுகல்ல, இவல்கொல்ல, பரகல, ஹெலிவுன்ன, மாவத்துர, திம்புல்பிட்டிய ஆகிய வாக்கெடுப்பு நிலையங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு ஆளும் கட்சியினருக்கு சார்பாக வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
– புத்தளம் 4ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள றஹ்மத் நகர் வாக்களிப்பு நியைத்தில், வாக்களித்து விட்டு திரும்பிய அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளரான அப்துல் கபூர் முஹம்மத் நசீம் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று வாகனங்களில் வந்த ஐக்கியத் தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நூர்தீன் மசூர் தலைமையிலான குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து புத்தளம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, பாலாவி, எருக்கலம்பிட்டி வாக்குச்சாவடிக்கு முகவராகச் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் ஆசாத் என்பவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த முச்சக்கர வண்டியும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது
– mமட்டக்களப்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் நளினிக்கு இந்திய பத்திரிகையில் படத்துடன் முக்கியத்துவம்:
இந்த பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வேட்பாளர் நளினி கூறியதாவது: மக்களின் வயிற்றுப் பசியை போக்குவதே, என் முதல் குறிக்கோள். தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில், நிரந்தர ஒற்றுமையை மேம்படுத்துதல், வறுமையை ஒழித்தல், இந்த மாவட்டத்தின் எதிர்கால சக்திகளான இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை போக்குதல், பெண்களை சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி நிலையில் வலுவாக்குதல் ஆகியவையே எனது நோக்கம். மேலும், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாத்தல், மீடியா சுதந்திரத்திற்காக, பெரியளவில் குரல் கொடுத்தல் ஆகியவற்றிற்காக பணியாற்றுவோம். இவ்வாறு நளினி கூறினார்.
மேலும்:
http://www.dinamalar.com/world_detail.asp?news_id=5243
– மாத்தறை மாவட்டம்
தபால் மூல வாக்குகள் முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் 69 சதவீத வாக்குகளைப்பெற்று ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியில் திகழ்கின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி 10560 வாக்குகள் (70%),ஐக்கிய தேசியக்கட்சி 3041 வாக்குகள்(20%), ஜனநாயக தேசிய முன்னணி 1439 வாக்குகள் (0.15%)
– இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியதையடுத்து இரத்தினபுரி, இறக்குவானை, பலாங்கொடை உள்ளிட்ட நகரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தற்போது பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதாக அங்கிருக்கும் செய்தி
இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்
ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்
ஐ.தே.க – 3,010 வாக்குகள்
ஜ.தே.கூ – 696 வாக்குகள்
மட்டக்களப்பு:
TNA – 2,576 42.44%
UPFA- 2254 37.13%
UNP – 671 11.05%
VALID – 6,070 97.81%
REJECTED – 136 2.19%
Matale:
UPFA- 9893 72.79%
UNP – 2854 21.06%
VALID – 6,070 97.81%
REJECTED – 136 2.19%
மேலும் மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய:
http://www.virakesari.lk/election/index.php
http://www.srilankanelections.com/results/results-main.shtml
இச் செய்திக் குறிப்புக்கும் உங்கள் இடுகைக்கும் என்ன தொடர்பு?
சற்றுப் பொறுப்புடன் உங்கள் இடுகைகளைச் சுருக்கமாகவும் உரிய இடத்திலும் வேன்டுமாயின் தனிக் கட்டுரையாகவும் இடுங்கள்.
நூலகத்தில் தவறன இடத்தில் வைக்கப் பட்ட நூல் தொலைந்துபோன நூல் போல. இணையத்தள இடுகைகளும் அவ்வாறே.
இரண்டுமே பிற விடயங்களைத் தேடவும் சிரமமளிப்பவை.
இவ் விடயத்தில் இணையத்தளப் பொறுப்பாளர்களின் கண்டிப்பான வழிகாட்டல் அவசியமாகிறது.
இச் செய்திக்கும் என்னுடைய இடுகைக்கும் நேரடித் தொடர்பு இல்லைதான். ஆனால் இங்கு தரப்பட்டிருக்கும் செய்திகளில் “கண்டியில் கள்ள வாக்குகள்; ஆளும் தரப்பினர் அட்டகாசம்! “என்னும் தேர்தல் சம்பந்தப்பட்ட செய்தி கூடிய தொடர்ப்பாக இருந்ததினால் இச் செய்திக்கு கீழ் போடப்பட்டது.