கணணியில்(Computer) வைரஸ் தொற்றிக்கொள்வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மென்பொருளில் ஏற்படும் தவறுகள் காலப் போக்கில் வைரசாக மாறுவதுண்டு. இணையத் தொழில் நுட்பம் பாவனைக்கு வந்த பின்னர் இரண்டு பிரதான வைரஸ் வகைகள் கணணியைத் தொற்றிக்கொள்வது வழமையாகிவிட்டது. விளம்பரப் பொருள் (adware) மற்றும் வேவு பொருள்(spyware) என்ற இரு வைரஸ் வகைகளும் தகவல் தொழில் நுட்ப உலகத்திற்கு சவாலாக இருந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக வேவு பொருள் என்பது கணணிப் பாவனையாளரின் தகவல்களைத் எங்கோ தொலைவில் உள்ளவர் திருடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. வங்கிக் கணக்கிலங்கள், மின்னஞ்சல் தொடர்புகள், குரல்வழித் தொடர்புகள் போன்றவற்றைத் திருடுவதற்காக தகவல் தொழில் நுட்பக் கொள்ளைக் காரர்களால் வேவு பொருள் பாவிக்கப்படுகின்றது.
தகவல் தொழில் நுட்பக் கொள்ளையர்கள் பாவித்த வேவு பொருட்களால் மில்லியன் கணக்கில் திருட்டுக்கள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக மைக்ரோசொப்ட் இயக்கு மென்பொருளைப் (Microsoft operating system) உபயோகிக்கும் அனைவருக்கும் வேவு பொருளின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
வைரஸ் மென்பொருளை அனுப்புவதும் அதனூடாக ஏனையோர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதும் நாளாந்தம் நடைபெறும் வழமையான நிகழ்வுகள்.
2009ம் ஆண்டு அமரிக்காவின் பாதுகாப்பு ஆலோசனை மையம் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் பயங்கரவாதிகள் இவ்வாறான மென்பொருட்களைப் பாவனைக்கு உட்படுத்தி சைபர் கிரைமில் ஈடுபடுவார்கள் என அச்சுறுத்தியிருந்தது.
ஆக, இங்கு யார் கிரிமினல்கள்? அவர்களை நிறுத்துவது எப்படி என்ற அலசல்கள் முடியும் முன்னமே, உலகத்தின் மிகப் பெரிய சைபர் கிரிமினல் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வேறு வழங்கிவிட்டார். ஆனால் அவர் தண்டிக்கப்படவில்லை.
ஜேர்மனிய அரசு தான் அந்தக் கடைந்தெடுத்த கிரிமினல். கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசிக்கொள்ளும் ஜேர்மனிய அரசாங்கம் ஜெர்மனியப் பிரசைகளின் கணனிகளுக்கு ஸ்பைவேர் மின் பொருளைத் திருட்டுத்தனமாக அனுப்பியுள்ளது. அவர்களைக் கண்காணிக்கும் நோக்கோடு அனுப்பிவைக்கப்பட்ட மென் பொருளினூடாக சாதாரண குடிமக்கள் குறித்த தகவல்கள் ஜேர்மனிய உளவுப் பிரிவினால் பெறப்பட்டுள்ளது.
இந்த spywaer இன் நோக்கம் வெப் கமராக்களையும், மைக்ரோ போனையும் கேட்டும் கருவி ஒன்றிற்கு மாற்றி ஒட்டுக்கேட்பதாகும் என்பதை ஜேர்மனிய அரசின் இரகசிய உளவுப் பிரிவு ஏற்றுக்கொண்டாலும் அது ஏனைய தகவல்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது. The Chaos Computer Club என்ற நிறுவமனே முதலில் ஜேர்மனிய அரசு நிகழ்த்திவந்த குற்றச் செயலைக் கண்டுகொண்டது. இந்த நிறுவனத்தின் கணனிகளுக்கும் வைரஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
“0zapftis”, “Bundestrojaner” , “R2D2,” என்ற வைரஸ் மென்பொருட்களே குறிப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை உருவாக்குவதற்காக அமரிக்க எப்.பி.ஐ இன் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஜேர்மனிய உளவுத்துறையின் பிரிவினரின் வாக்கு மூலத்தை விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றும் பதிவு செய்துள்ளது.
ஜேர்மனியில் மின்னஞ்சலில் இணைப்புக்களாகவே வைரஸ் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமரிக்க எப்.பிஐ. இர்டன்னெட் வழங்குனருக்கு ஊடாகவே வைரஸ்களை அனுப்பிவைக்க ஆரம்பித்துவிட்டது.
மைக்ரோசொப்ட் மென் பொருட்களே அதிகமாக வேவு பொருட்களால் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் காணப்படுகின்றன.
உலகம் முழுவது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஐரோப்பிய அமரிக்க அரசுகள் அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக எதிர்வு கூறப்படுகிறது. அரேபிய நாடுகளில் ஏகபோகங்களுகு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.
மத்திய கிழக்கில் 80 வீதமானோர் அமரிக்க ஐரோப்பிய அரசுகளே தமது பிரதேசங்களில் போரை உருவாக்குவதாகக் கருதுகின்றனர் என்கிறது அண்மைய கருத்துக்கணிப்பு. உலகம் மக்களில் பெரும்பாலானோரும் புதிய அறிவுசார் உலகமும் அமரிக்க ஐரோப்பிய அரச அதிகாரங்களின் கபடத் தனத்தை அறிந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மைக்ரோசொப்ட் மென்பொருளை விற்பனை செய்வதற்காக ஜெயலலிதாவைக் கிலாரி கிளின்டன் சந்தித்தமை குறிப்பிடத் தக்கது. பல் தேசிய நிறுவங்களின் பணச் சுரண்டலோடு கூடிய மேலதிக நோக்கம் உளவறிதல் என்பதை மேற்குறித்த சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
தொடர்புடைய பதிவுகள்:
மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!