லிபிய சர்வாதிகாரி கேணல் முவமர் கடாபி ஷேர்த் நகரத் தெருக்களில் கோரமாகக் கொலை செய்யப்பட்ட முறை மனிதாபிமான உலகத்தை உறையச் செய்தது. முன்னதாக கடாபியுடன் கைகோர்த்துக் குதூகலித்த கிலாரி கிளிங்டன் கடாபியின் மரணம் குறித்துக் குதூகலிப்பதைக் கீழ் வரும் காணொளியில் காணலாம். கடாபியின் இறப்பிற்கு முன்னதாக வன்னியில் நடந்ததைப் போன்றே லிபிய நகரங்கள் எங்கும் மக்கள் குடியிருப்புக்கள் மீது அமரிக்க ஐரோப்பிய படைகள் குண்டுத் தாக்குதல் நடத்தி பெரும் இனவழிப்பையே நடத்தியிருக்கின்றன. எண்ணை வளம் மிக்க நாடுகளைக் கண்டவுடன் மனிதாபிமானம் பொங்கும் அமரிக்க அரசியல்வாதியின் கோரமுகம் இந்தக் காணொளியில் இழையோடுகிறது.
கடாஃபி பிடிக்கப்பட்ட சமயத்தில் உயிரோடு இருந்துள்ளார் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று காட்டும் கைத்தொலைபேசி வீடியோ படங்கள் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.