மதுரையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்துக்குள்ளும் நுழைய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோருக்கு தடை விதித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார்.
ஊர் உராகச் சென்று ஆதிக்க சாதிக் கட்சிகளை இணைத்து வன்முறையைப் பரப்பிவரும் ரமதாஸ் ஈழப் தமிழர் பிரச்சனைகளிலும் அடிக்கடி தலையீடு செய்து வருகிறார்.
காதல் திருமணங்களுக்கு எதிராகவும் தலித்துகளை விமர்சித்தும் பேசி வருகிறார். இதனாலேயே அவர் ராமதநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த அனைத்து சமுதாய கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி அந்த மாவட்டத்துக்குள் அவர் நுழைய தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பிற மாவட்டங்களில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனைத்து சமுதாய கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள பதற்றமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் 21.1.2013 முதல் வரும் 20.3.2013 முடிய உள்ள காலத்திற்கு ஆணையிடப்படுகிறது என்று கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறியுள்ளார்.