Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கடற்படை மீது மக்கள் தாக்குதல் – கசக்காத உண்மைகள்

இனியொரு... by இனியொரு...
08/15/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

பாசிச அதிகாரத்தின் இயல்பு என்பது பல பொதுத் தன்மைகளைக் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். மக்களை ஒருவகையான பய உணர்விற்கு உட்படுத்துவதும், அவற்றிலிருந்து தமது தொடர்ச்சியான அதிகாரத்தை உறுதி செய்துகொள்வதும் பாசிஸ்டுக்களின் பொதுவான பண்புகளில் ஒன்று. இலங்கை முழுவதும் அப்பாவி மக்கள் மீதான அரச அதிகாரத்தின் புதிய தாக்குதல் கிறீஸ் பூதம் என்ற உருவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

“கிறிஸ்பூதம் என்று சந்தேகிக்கப்பட்ட குழு ஒன்றை பிரதேச மக்கள் துரத்திச்சென்றனர். அப்போது அந்தக்குழுவினர் கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்குள் ஓடி தப்பினர்.”

இதுவரைக்கும் இந்த வன்முறைகளை இலங்கை அரசே கட்டவிழ்த்துவிட்டுள்ளது எபதை ஜே.வி.பி வெளிப்படையாகக் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களை இலங்கைப் பாசிஸ்டுக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச மக்கள் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்றும், கிரீஸ் பூதம் என்ற பெயரில் அவரது அரசு உலாவ விட்டிருக்கும் சமூக விரோதிகளை மக்கள் கண்டுகொள்ளக் கூடாது என்றும் மக்களை எச்சரித்திருக்கிறார்.
கிழக்கில் மர்மமனிதன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி ஆராய  நேற்று மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா  இராணுவத்தின் கிழக்குப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா  பொதுமக்களை, குறிப்பாக முஸ்லிம்களை கடுமையாக மிரட்டும் வகையில்  உரையாற்றியுள்ளார்.

கிழக்கில் நூற்றுக்கணக்கில் சோதனைச்சாவடிகள்  அமைத்து வாழ்வின் பெரும்பாலான நேரத்தை வீதியில் கழிக்க வைப்பேன் என்றும்,  வீடுகளுக்குள் புகுந்து சோதனையிட்டு கைது செய்வேன் என்றும், கடைகளை  மூடவைத்து வியாபாரத்தை நடக்க விடாமல் கெடுப்பேன் என்றும் அவர் கண்டபடி  அச்சுறுத்தியுள்ளார்.

 கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும், கொள்ளை திருட்டு போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் அரச படைகள் என்பதை மக்கள் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடற்படையைச் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர்.
தமது சமூகவிரோதச் செயலைக்கண்டு வாழ்வதற்காகப் போராடிய மக்கள் மீது கடற்படையும் பொலீசாரும் தாக்குதல் நடத்தினர்.

பொதுமக்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தினர். இதனால் காயமடைந்த இரண்டு பொதுமக்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு பின்னர் திருகோணமலைக்கு மாற்றப்பட்டனர்.

இதேவேளை பைசால் நகரில் ஏற்பட்ட நிலைமையை கட்டுப்படுத்த சென்ற கிண்ணியா பொலிஸ் அதிகாரி உட்பட்ட குழுவினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் அவர்கள் சென்ற வாகனமும் தீயிடப்பட்டது. இதன்போது மூன்று பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இப்போராட்டங்களிலிருந்து இரண்டு சில முடிபுகளுக்கு வரலாம்.

1. இலங்கையில் பாசிச இராணுவ ஆட்சிக்கு மத்தியிலும் மக்கள் போராடுகிறார்கள். இது வாழ்வதற்கான அவர்களின் போராட்டம்.

2. மலையகத்திலும், வடகிழக்கிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் (முஸ்லீம்கள் உட்பட) போராட்டம் என்பதால் அரச இராணுவத்தால் உடனடியாக ஒடுக்கிவிட முடியவில்லை.

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகள் மக்கள் போராட்டங்களை ஆதரிக்கவில்லை.

4. புலம் பெயர் நாடுகளின் குறுந்தேசியக் குழுக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் குறைந்தபட்சம் ஊக்கப்படுத்தும் அறிக்கை கூட வெளியிடவில்லை.
அரேபியா நாடுகளில் ஆரம்பித்து ஐரோப்பா ஈறாக இலங்கை வரை மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் சந்தர்ப்வாத அரசியல் தலைமைகள் அவர்களைக் கைகழுவி விடுகின்றன. எதோ ஒருவகையில் அரச அதிகாரங்களோடு சமரசம் செய்துகொண்டு குறுக்கு வழிகளில் அதிகாரத்தில் பங்கு கேட்கும் இவர்களுகளும் மக்களின் எதிரிகளே.

சில உண்மைகள் வெளிப்படுகின்றன:

1. மக்கள் போராடுவார்கள்.

2. முஸ்லீம்கள் மலயக மக்கள் இணைந்த ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் சிங்கள் மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராடும் போது இலங்கை அரச பாசிசம் தோற்றுப் போகும்.

3. சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் நிராகரிக்கப்பட்டு புதிய அரசியல் தலைமை மக்கள் மத்தியிலிருந்து உருவாகும்,

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கட்டுநாயக்க தாக்குதல் - இரு மாதங்களின் பின்னர்... : ஜனக விஜேகுணதிலக

Comments 10

  1. Sutha says:
    15 years ago

    நல்ல சந்தர்ப்பம். தோழர் செந்தில்வேல் , ரயாகரன் அவர்கள் இந்த தருணத்தை
    பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
    மக்கள் போராட ரெடி. இராணுவ முகாம்களை தாக்கும் அளவிற்கு
    வீதிக்கு வந்துவிட்டார்கள். இது அரச யந்திரத்திற்கு எதிரான
    போராட்டம்தான். இதிலும் ஏதாவது ஏகாதிபத்தியங்களின் பின்னணி
    இருக்குமென்று பேசாமல் இருக்க வேண்டாம்

  2. chandran.raja says:
    15 years ago

    இலங்கையில்-இலங்கை உழைப்பாளிமக்களை ஒன்றுதிரட்டியோ இலங்கைத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தோ 2009 மேமாததிற்கு முதல் எந்த போராட்டத்தையும் வெற்றிபெற நடத்த முடியவில்லை. காரணம் இலங்கை உழைப்பாளர் மத்தியில் நடந்துமுடிந்த யுத்தத்தில் குண்டடிகளில் பீதியை கிளப்பி இனவெறியை ஊட்டிவிடப்பட்டு தமது சுயஉணர்வை மழுங்கடிக்கப் பட்டதே!.

    இதற்காகவே முதாலித்துவ அமைப்பு செய்கையாகவும் இனமோதல்களையும் மதமோதல்களையும் தூண்டிவிடுகிறது. யார் எப்படி தோற்க்கடித்தார்கள் என்பதை விட்டு புலிகள்தோற்கடிக்காமல் இருந்திருந்தால் சுகந்திரவர்த்தகவலய தொழிலாளர் களின் ஓய்வூதியத்திற்கான போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா? தயவு செய்து நிதானமாகச் சிந்தியுங்கள்.

    மகிந்தாராஜபக்சாயரசு ஒரு முதாலித்துவயரசு என்பதை கணக்கில் கொண்டால் முதாலித்துவ ஜனநாயகத்தை பேணுவதும்மல்லாமல் முதாலித்துவத்துவ அரசியல் இருக்கக் கூடிய அத்தனை கசட்டுதனம் பிற்போக்கு தன்மை போன்றவற்றையும் சந்தேகமில்லாமல் கொண்டிருக்கிறது. இலங்கை தொழிலாளிவர்கம் தமது இனமத அடையாளங்களை துறந்து ஐக்கியப்பட்டிருவார்களோ என்பதே நித்திரையிலும் பயப்படுத்தும் கனவு.
    பிச்சைக்காரனுக்கு புண்வேண்டும். முதாலித்தவத்திற்கு தொழிலாளவர்கதின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு ஏதாவது அமைதியின்மையை தோற்றுவிற்பதற்கு பிரச்சனைகள் வேண்டும். முன்புஇதை போதியவரை செய்வதற்கு புலிகள் இருந்தார்கள். இன்று அதை செய்கையாக அரசே தோற்றுவிக்க வேண்டிய தேவையுள்ளது. அதுவே கிறீஸ்பூதம். இதையும் மிஞ்சி வடக்கும்தெற்கும் கிழக்கும் மேற்கும் உள்ளதொழிலாளர்கள் தடைகளை உடைத்து தமது ஐக்கியத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதையே சர்வதேச பொருளாதாரநிலமைகள் எடுத்துக் காட்டுகின்றன.

  3. நிர்மலன் says:
    15 years ago

    1) தங்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து முஸ்லீம்கள் செய்வது வெறும் கலகமே! தவிர மறுக்கப்படும் உரிமை மீட்பு போராட்டமல்ல. வடகிழக்கு மலையகத்தில் பூரணமான சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவ நிர்வாகம் சர்வதேச நெருக்கடி ஏற்படாத வகையில் நிறுவியதும் கிறீஸ் மனிதர்கள் இல்லாது போய்விடுவார்கள். அவ்நிர்வாகத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை சிறிலங்கா முஸ்லீம் பெற்றவுடன். இதே படையின் கைக்கூலிகளாக சிறிலங்கா முஸ்லீம்கள் பூரணவிசுவாசத்துடன் செயற்படுவதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
    முஸ்லீம் பெண்கள் இணையத்தளத்தை பார்த்த போது காத்தான்குடி பள்ளிவாசல் மிருகத்தனமாக நடந்தது அதை தடுக்க முற்பட்ட சிறிலங்கா காவல்துறைமீது கல்லெறிந்தார்கள்தான் இதுவும் மக்கள் போராட்டமா??? கிறீஸ் மனித விளையாட்டை பார்த்து புத்தள மற்றும் தென்னிலங்கை முஸ்லீம்கள் காட்டும் கடும் கள்ளமெளனமா சிறிலங்கா முஸ்லீம்களின் மக்கள் போராட்டம்???
    2)அவசர காலசட்டத்தை நீக்கும்பட்சத்தில் தமிழர் அடக்குமுறைளை ஏதொவொரு வடிவில் தொடரவே கிறீஸ் மனிதர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம்களை பாதுகாக்வெனும் போர்வையில் சிறிலங்கா முஸ்லீம் நாடளமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் பெயரில் வடகிழக்கில் பூரணமான சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவ நிர்வாகம் உருவாகும் அதற்குரிய களக்கனிவுக்குரிய காலஅவகாசமே சிறிலங்கா முஸ்லீம் கலக்காரர்களிற்கு வழங்கப்பட்டள்ளது. மற்றப்படி கிறீஸ் மனித விளையாட்டை நிறுத்தினாலே போதும் உடனே சிறிலங்கா முஸ்லீம் கலகம் அடங்கிவிடும்.
    3)சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவ பசிக்கு தமிழர்கள் பலியானதே போதும் போதுமென போதும். நன்றிகெட்ட சலுக்கைக்கு விலைபோகும் சிறிலங்கா முஸ்லீம்களிற்காக ஒரு தமிழ் உயிரும் பலியாகக்கூடாது.
    சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவு முஸ்லீம் நாடளமன்ற உறுப்பினர்களை முஸ்லீம்கள் கண்டிக்காத நிலையில். தமிழருக்கென்ன அக்கறை வேண்டியிருக்கு!
    4) மகிந்தாவினானால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை இன்றும் வரவேற்று மகிந்தாவை பாதுகாக்க சிறிலங்கா முஸ்லீம் உறுதியாக இருக்கும் போது புலம்பெயர் தமிழர்கள் கிறீஸ் மனித விளையாட்டை கண்டிக்கணுமெனும் எந்தத்தார்மீக கடமையுமில்லை. சிறிலங்கா தேசபுத்திரர்கள் இதில் தலையிட்டுக்கொள்ளட்டும்.
    அ) ஆம். மக்கள் போராடுவார்கள் சிறிலங்கா முஸ்லீம்கள் அதில் நன்றாக குளிர்காய்வார்கள். இதுதானே 80 வருடகால அனுபவம்.
    சிங்களவர்கள் ஆட்சிமாற்றத்திற்கு போராடுவார்கள் அதில் வெற்றிகண்டால் சிறிலங்கா முஸ்லீம்கள் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வார்கள். மற்றப்படி தமிழரின் உரிமை பறிப்பதில் ஐதேக சிறிலங்காசுதந்திரக்கட்சி ஜே.வி.பி சிறிலங்கா போலிக் கொம்முனிசிட்டுக்கள் ஓரேமகாவம்ச குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தமிழர் கண்ணீரிலும் செந்நீரிலும் வயிறுவளர்க்கும் கூட்டமே சிறிலங்கா முஸ்லீம்கள்.

    • chandran.raja says:
      15 years ago

      நோர்வே கொலைவெறியன் பிரேவீக் டயலக்கிலேயே பேசுகிறீர்கள். அவனுக்கும் முஸ்லீம்களும் மாக்ஸியகலாச்சாரமும் தான் முதலாவது எதிரி.
      இந்த ரேஞ்சிலேயே போட்டுபிடியுங்க!….நிர்மலன்.

    • mohamed Risvi says:
      15 years ago

      who are you ?,you dont talk about muslims.anyway mind your wards.
      muslims lofty in sri lanka keep your mind.we didnt afraid any way we have a right ful.

  4. நிர்மலன் says:
    15 years ago

    மட்டக்களப்பு சேத்துக்குடாவில் நடமாடிய 3 கிறிஸ்பூசிய சிங்களப்படையினரை தமிழ்பொதுமக்கள் துரத்தி சென்ற போது அவர்கள் சிறிலங்கா அரசபயங்கரவாத ஆக்கிரமிப்புபடையின் காவலரணுக்குள் புகுந்தனர். அதையடுத்து தமிழர்களை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் கட்சிகளால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் சிறிலங்கா முஸ்லிம்களின் பிரதிநிதிகள் கள்ள மெளன காத்து சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை பாதுகாக்கின்றனர். சிறிலங்கா முஸ்லிம்கள் சிங்களஅரச பயங்கரவாத அடிவருடிகள் என்பதையே காட்டுகிறது.

    • chandran.raja says:
      15 years ago

      தமிழனை கொலைசெய்ய பிரேமதாஸவிடம் ஆயுதம் வாங்கியன் முதலாவதாக ஒரு தமிழன்தான். அதை முதலிலை கண்டுபிடியுங்க..அப்புறம் முஸ்லீம்களை பற்றி யோசிக்கலாம்.

  5. நிர்மலன் says:
    15 years ago

    மக்கள் போராட்ட வெத்துவேட்டு கட்டுரையாளரின் புலுடாவும் தங்கள் புத்தியை மீண்டும் தவறாது நிரூபித்துள்ள சிறிலங்காமுஸ்லிம்களும்.
    Lankamuslim.orgOne World One Ummah
    அமைச்சர்களின் கிண்ணியா விஜயம்
    with one comment

    கியாஸ் ஷாபி: அமைச்சர்களின் கிண்ணியா விஜயத்தை அடுத்து இன்று காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரையும் 6 மணித்திலாலமாக பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமும் பிரதேச செயலக முற்றுகையும் முடிவுக்கு வந்தன.

    இன்று பகல் 12.30 மணிக்கு அமைச்சர்களான ரிஷாத் பதியுத்தீன், ஹக்கீம் எ.எச்.எம்.பௌசி ஜனாதிபதியின் இணைப்பாளா; நஜீப் அப்துல் மஜீத் ஆகியோஇர் களைக் கொண்ட குழு விசேட ஹெலிகப்டர் மூலம் கிண்ணியாவுக்கு வருகை தந்தனர் படங்கள்
    இவர்கள் முற்றகையிடப்பட்ட பிரதேச செயலகத்தினுள் பிரவேசித்து அங்குள்ள அதிகாரிகளுடன் சுமார் 1 மணித்தியாலமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் இன்றைய பொழுதுக்குள் பலாத்காரமாக கைது செய்யப்பட்ட 24 இளைஞர் களையும் மீட்டுத் தருவோம் என்ற அமைச்சர் குழுவினரின் உறுதி மொழியை அடுத்து பொது மக்கள் தங்கள் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    இதனையடுத்து கிண்ணியா புஹாரிப் பள்ளிவாசலில் நடைபெற்ற உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் தலைவா;களுடனான சந்திப்புக்களிலும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

  6. நிர்மலன் says:
    15 years ago

    நோர்வே கொலைவெறியன் பிரேவீக் டயலக்கிலேயே பேசுகிறீர்கள். அவனுக்கும் முஸ்லீம்களும் மாக்ஸியகலாச்சாரமும் தான் முதலாவது எதிரி.
    அவன் சொன்னது மிகச்சரியென்பதைதானே இலண்டணில் சோம்பேறி மாக்ஸியகலாச்சாரக்காரர்களும். கறுப்பினத்தவர்களும் நிரூபித்தார்கள்.
    //தமிழனை கொலைசெய்ய பிரேமதாஸவிடம் ஆயுதம் வாங்கியன் முதலாவதாக ஒரு தமிழன்தான். அதை முதலிலை கண்டுபிடியுங்க//
    இந்தியக் கைக்கூலிகள் தமிழர்களா! அவர்கள் தமிழின கோடாரிகாம்புகள்.
    //who are you ?,you dont talk about muslims.anyway mind your wards.
    muslims lofty in sri lanka keep your mind.we didnt afraid any way we have a right ful.

    //
    சிங்கள+சிறிலங்கா முஸ்லீம்கூட்டுப் பயங்கரவாதத்தால் உரிமை பறிக்கப்பட்டு வதைப்படும் ஈழத்தமிழன். சிறிலங்கா முஸ்லீம் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் துணையுடன் ஈழத்தமிழரின் உரிமையை உயிரை பறிப்பதை நிறுத்தும் மட்டும் சிறிலங்கா முஸ்லீம்களின் நடத்தைபற்றி பேசும் உரிமை எனக்கிருக்கு. அதை மறுக்க இது சிறிலங்கா அரசபயங்கரவாத இராட்சியமல்ல.
    சிறிலங்கா முஸ்லீம் காடையருக்கு மாண்பிருக்கா? 6வயது சிறுமியை மணந்து 9வயதில் தாம்பத்திய உறவு வைத்த காட்டுமிராண்டியை வழிகாட்டியாக கொண்ட ஒரு சமூகம் உயர்ந்த மாண்புமிக்க சமூகமெனச் சொல்வது வேடிக்கைதான். சலுகைக்கு சிங்களத்தின் எடுபிடியாக இருக்கும் சமூகம் ஒரு இழிசமூகமே!
    எது உரிமை! மதஅடிப்படைவாத பயங்கரவாதம் ஒரு உரிமையா! சிங்கள அடிமைகள் உரிமைபற்றி பேசுவது ரொம்ப வேடிக்கைதான்.

  7. thurai says:
    15 years ago

    ஒவ்வொரு இனத்திலும், சமூகத்திலும் உயர்ந்தவ்ர்கள், தாழ்ந்தவ்ர்களென்று அவரவ்ர்
    நடத்தைகளிற்கும், குணங்களிர்குமேற்க மனிதர்கள் உண்டு. இங்கு சிலர் கண்மூடித்தன்மாக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தை குற்ரம் சாட்டி வருகின்றனர்.
    இவர்களே உலகின் பயங்கரவாதிகழும், பயங்க்ரவாதத்தை தூண்டுபவர்கழுமாவார்..
    இவர்களெல்லாம் தமிழரின் உருமை பற்ரிப் பேசுவதற்கு தமிழர் என்ன பாவ்ம செய்தார்களோ?.துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...