கடந்த வருடம் நாட்டில் மொத்தம் 1,663 கொலைகள் இடம்பெற்றுள்ளன:பொலிஸ் தலைமையகம்.

08.09.2008.

கடந்த வருடம் நாட்டில் மொத்தம் 1,663 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஆகக்கூடியதாக 255 கொலைகள் யாழ்ப்பாணத்திலும் அதற்கடுத்தபடியாக 189 கொலைகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. வவுனியாவில் 154 கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இப்புள்ளிவிபரங்களின்படி மிகக் குறைந்தளவு கொலைச் சம்பவங்கள் ஹற்றனிலும், நுவரெலியாவிலும் இடம்பெற்றுள்ளன. இப் பகுதிகளில் தலா 8 கொலைகளே நிகழ்ந்துள்ளன. இதே போன்று கம்பளைப் பகுதியிலும் 8 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டத்தில் 88 கொலைகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 255 கொலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 189 கொலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் 108 கொலைகளும் மன்னார் மாவட்டத்தில் 74 கொலைகளும் வவுனியா மாவட்டத்தில் 154 கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

மொத்தம் 1663 கொலைச் சம்பவங்களில் 327 கொலைகள் தொடர்பான குற்றவாளிகளையே பொலிஸார் இனங்கண்டுள்ளனர். 1284 கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் உள்ளன.

கடந்த வருட இறுதிக்குள் கொலைகள் தொடர்பான 379 வழக்குகள் மாத்திரமே முடிவடைந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.