சோகம் படர்ந்த இந்தியத் நிலப்பரப்பின் தென் மூலையின் கண்ணீர்த் துளிபோல அமைந்திருக்கும் இலங்கைத் தீவினை மையப் புள்ளியாய் முன்வைத்து இத்தனை அரசியல் நகர்வுகள்! இலங்கை என்றால் தேயிலையைப் பற்றியும் தேனீர் பற்றியும் பேசிக்கொள்ளும் காலம் கடந்து இத் தீவினைச் சுற்றி இத்தனை இரஜதந்திரிகளும் அரசியலும்!!
கேட்பாரற்றுக்கிடந்த குட்டித் தீவினைச் சுற்றி நிகழும் அரசியல் சதுரங்கம், நிச்சயமற்ற தன்மை எல்லாம் புதிய உலக மாற்றத்தின், புதிய உலக ஒழுங்கு விதியின் குறியீடுகளே! உலக அரசியலின் மையப் புள்ளி அமரிக்கா மட்டுமே என்றிருந்த நிலை இப்போதில்லை. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற துருவ வல்லரசுகளின் ஆதிக்கம் உலக விதிகளை முன்னெப்போதும் இல்லாதவாறு மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இவை அனைதிற்கும் மத்தியில் கொலைகளின் கோரத்தில் துயர்கொண்ட புதிதாய் எழும் கட்சிகளும் இயக்கங்களும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமின்றி, தோற்றுப் போன கடந்த காலம் குறித்த எந்த ஆய்வுமின்றி, தமது உணர்ச்சிகளின் வடிகால்களாய் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றன.
கடந்த போன அவலங்கள் நிறைந்த காலம் குறித்து சுய விமர்சனம் செய்து கொள்ளல் என்ற உயர் வடிவத்திற்கு எம்மை தயாராகும் மனோ பக்குவம் எம்மிடம் இல்லை என்பதேல்லாம் வேறானவை.
அதற்கெல்லாம் அப்பால் கடந்த கால அரசியல் தவறுகள் குறித்த ஆய்வு, மீள் பரிசீலனை என்பவற்றை மேற்கொள்ளும் நிலைக்குக் கூட நாம் வந்தடையவில்லை.
எங்காவது ஒரு மூலையில் முன்வைக்கப்படுகின்ற விமசனங்கள் ஆய்வுகள் கூட எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் நோக்கில் அமைந்திருப்பதில்லை. தம்மை முன்னிலைப்படுத்தவும், சேறு பூசவும், பாத்திரப்படுகொலை செய்யவும், குழுவாத அடிப்படையிலும் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை.
ஒவ்வொரு அழிவிற்கும், அவலத்திற்கும் பின்னால் ஒவ்வொரு அரசியல் தவறுகளை நாம் கண்டுகொள்ள முடியும். அதற்குரித்தான சமூகக் காரணங்களை பகுத்தறிய வேண்டும். மாறாக 30 வருடங்களுக்கு மேலான தவறுகளின் வழியாக உருவமைக்கப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சி புதிய உலகமய வியாபாரச் சிந்தனையோடு இணைந்து கொள்ள விமர்சித்தல் என்பது சுயலாபத்திற்கான சேறடிப்பாக மாறிவிடுகின்றது.
இது வெறுமனே ஒப்பீடுகளுக்கான காலகட்டமும் அல்ல. இன்றைய தேவை குறித்த கரிசனை எங்கிருந்து உருவாகிறது என்பதே முதன்மையான கேள்வி. தமிழ்ப் புதிய கட்சிகள் பொதுவாக 3 அரசியல் தன்மைகளை முன்வைக்கின்றன.
1. நிர்வாக அமைப்புக்களை சீர் செய்யப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் கொண்ட, மறு சீரமைக்கப்பட்ட புலிகள்.
2. 80 களின் ஆரம்பத்தில் இடது சாரி தேசிய வாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பிரதிகளான அமைப்புக்கள்.
3. புலிகளின் மாற்றங்களற்ற தொடர்ச்சி.
இவை அனைத்துமே தமிழ்த் தேசியம் என்ற ஒருங்கு புள்ளியில் இணைகின்றன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனமைக்கான காரணமும், புலிகள் கோலோச்சிய 30 வருடங்கள் குறித்த மீள்பார்வையும் இவர்களைப் பொறுத்தவரை ஒரு சிறு குறி வட்டமாகவே காட்சிதருகிறது.
1. புலிகளின் தோல்விக்கு வெறும் ஆயுதங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையே காரணம்.
2. புலிகள் பாசிசக் கருத்துக்களைக் கொண்டிருந்தமையே அடிப்படையான தோல்வி.
என்ற அடிப்படையான கருத்துக்களை முன்வைக்கும் முதல் இரு பிரிவினரும் இவற்றைச் சீர் செய்யும் அமைப்பு முறையானது புதிய போராட்ட இயக்கத்திற்கான முன்நிபந்தனையாகக் கருதுகின்றனர். இதன் ஒரு முன் நோக்கிய பார்வையாக இரண்டாம் வகையினர் தம்மை அறிவித்துக்கொண்டு 80 களில் முன்வைக்கப்பட்ட இடதுசாரிக் கருத்துகளை மறுபடி அரங்கிற்குக் கொண்டுவருகின்றனர்.
மார்க்சியக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் இடதுசாரிகள் புதிய அரசியல் சூழல் குறித்த குறைந்த பட்ச மீளாய்விற்கும், மதிப்பீடுகளுக்கும் அது தொடர்பான உரையாடல்களுக்கும் கூட முன்வர மறுக்கின்றனர். குறித்த சமூகச் சூழல் பற்றிய பொருள்முதல் வாத ஆய்வையே முதலில் மார்க்சியம் கோருகிறது.
இது சமூகம் குறித்த அறிதலுக்கான ஆய்வு முறையாகும் என்கிறது. ஆனால் இடது சாரிகள் என்போர் இன்றைய சமூகம் குறித்த ஆய்வை நிராகரித்து பத்தொன்பதம், இருபதாம் நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட்ட காலாவதியாகிப்போன முடிபுகளையே இன்றைய சமூகச் சூழலாக ஏற்றுக்கொள்வதனூடாக, பொருள்முதல் வாதத்தை நிராகரிக்கின்றனர். இதனால் தான் இவர்கள் கருத்து முதல்வாதிகளாக மட்டுமே தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆக, இவர்கள் இடதுசாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது அர்த்தமிழந்து போன சொற்பதங்கள் மட்டுமே.
80 களில் இடது சாரி தேசிய வாத இயக்கங்கள் முன்வைத்த கருத்துக்கள்:
1. தேசம் தேசியம் சுயநிர்ணய உரிமை தொடர்பானவை.*
2. சமூக கட்டமைப்புக் குறித்த மாவோயிசத்திலிருந்து பிரதியாக்கப்பட்ட கருத்துக்கள்.**
3. கட்சி அமைப்புத் தொடர்பான கருத்துக்கள்.
4. ஐக்கிய முன்னணி குறித்த கருத்துக்கள்.
5. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை குறித்த கருத்துக்கள்.
6. அன்றைய உலக ஒழுங்கு குறித்த பார்வையும் அதன் இயக்கம் பற்றிய அறிதலும். **
இவை அனைத்திலும் உள்ளீடாக அமைந்திருந்த தவறுகள் தான் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்களின் 80 களில் இருந்து ஏற்பட்ட தோல்விக்குக் காரணங்களாக அமைந்திருந்தனவே தவிர தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சாத்தானின் சாபங்களல்ல.
இவை அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து நோக்க முடியாத கருத்தியல்களாகும்,
80 களின் ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களுமே இந்திய மேலாதிக்க வாத நோக்கங்களிற்காகப் பயன் படுத்தப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாகச் சீரழித்துச் சிதைக்கப்பட்டன என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் இந்தியாவின் பயன்பாட்டிற்கு உட்படக் கூடிய தத்துவார்த்தப் பலவீனத்தையும் கொண்டிருந்தன என்பது தான இங்கு குறித்துக்காட்டத் தக்கது.
இது ஒன்றல்ல. இடதுசாரி கருத்தியலோடான தேசிய விடுதலை இயக்கங்கள் புலிகளிடமும் இந்திய மேலாதிக்கத்திடமும் தோற்றுப் போனதென்பதும், புலிகளும் மக்களும் சாட்சியின்றி அழிக்கப்படதென்பதும் வெறுமனே தனிமனிதத் தவறுகளோ அல்லது தந்திரோபாயத் தவறுகளோ அல்ல. இவற்றிற்கும் மேலான அடிப்படைத் தவறுகள் குறித்து மறு விசாரணை செய்யப்படவேண்டும்.
உலகம் முழுவதும் கடந்த நூறாண்டுகளில் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவிக்கொண்ட துயர படர்ந்த வரலாற்றையே பார்த்திருக்கிறோம். இந்தத் தோல்விகளின் பின்புலம் குறுகிய குழுநிலை போக்கினைக் கடந்து மீள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். தோற்றுப்போன அரசியல் எல்லாம் தனிநபர் தவறுகள் அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து தர்க்கீக அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தின் சமகாலப் புறச் சூழல், மக்கள் திரள அமைப்புக்கள், கட்சி, புதிய உலக ஒழுங்குவிதி என்ற அனைத்துமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நவ தாராளவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம் வேலையற்றோரையும், வறுமை எல்லைக் கோட்டிற்குக் கீழிருக்கும் ஏழைகளையும், உலகத்தின் பெரும்பான்மையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சார்ந்து எமக்கு மலையைப் புரட்டும் மகத்துவம் இருக்கிறது நாங்களோ எலி வேட்டைக்காக மட்டும் இணைவுகளைக் கோருகிறோம்.
80 களின் ஆரம்பங்களில் சில துப்பாக்கிகளும் துண்டுப்பிரசுரம் வெளியிடும் வசதியும் இருந்தால் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம் என்ற நிலை இருந்ததை ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 25 நீண்ட வருடங்களின் பின்னால் அதே மாதிரியை முன்வத்தா கட்சியை அமைத்துக்கொள்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.
எதிர்ப்பியக்கங்களின் தேவை அவசரமாக உணரப்படுகின்ற இலங்கைக்கோ இந்தியாவிற்கோ வெளியிலிருக்கின்ற அனைவருக்கும் ஒரு கடமை உண்டு. அது முன்னைப் போல் கவர்ச்சியான தலையங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு கட்சியைக் கட்டமைப்பதாக நான் கருதவில்லை. ஒரு தேசத்தின் உற்பத்தியோடும், உணர்வுகளோடும் முற்றாகத் தொடர்பறுந்து போயிருக்கும் இன்றைய சூழலில் இரண்டு பிரதான விடயங்களை சமூக உணர்வோடும் நாம் முன்னெடுத்துச் செல்லலாம். முதலாவதாக இலங்கை அரசிற்கு எதிராகவும், அதிகார மையங்களுக்கு எதிராகவும், அவற்றின் உப அமைப்புகளுக்கு எதிராகவும் எமது எல்லைக்குள் அழுத்தங்களை வழங்க முடியும்; இரண்டாவதாக பிரதான தத்துவார்த்தக் கூறுகளை மீள் மதிப்பீடு செய்ய எம்மாலான அனைத்துப் பங்களிப்பையும் வழங்க முடியும்.இவை இரண்டுமே சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பதில் எந்தக் கருத்து மாறுதலும் இல்லை.
எங்கள் குழுக்களைப் பிரச்சாரப்படுத்த நபர்களையும், துண்டுப் பிரசுரங்களையும், அச்சுக் கருவிகளையும், இணையங்களையும், ஆயுதங்களையும் தேடிக்கொள்ளும் தகமை படைத்தவர்களாக இருந்திருக்கிறோம். எம்மைச் சுற்றி நடப்பவை குறித்து மீளாய்வுக்கு உட்படுத்துவதை நிராகரித்தே வந்திருக்கிறோம். தேவையானால் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில புரட்சிக்காரர்கள் விட்டு வைத்திருக்கும் சமூகம் குறித்த மதிப்பீடுகளை எந்த மாற்றமும் இன்றி மறு பிரதிசெய்து பிரயோகிக்க முற்பட்டிருக்கிறோம். தோல்விகள் இதிலிருந்து இந்தக் குறைபாட்டின் பகைப்புலத்திலிருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆக, கட்சிகளையும் இயக்கங்களையும் உருவாக்குவதற்கான தத்துவம் எதுவென்ற தேடலை உருவாக்குவதற்காக இணைவை ஏற்படுத்தலே காலத்தின் தேவை.
November 8, 2009 – மீள் பதிவு
“தவறுகள் தான் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்களின் 80 களில் இருந்து ஏற்பட்ட தோல்விக்குக் காரணங்களாக அமைந்திருந்தனவே தவிர தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சாத்தானின் சாபங்களல்ல.”
“80 களின் ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களுமே இந்திய மேலாதிக்க வாத நோக்கங்களிற்காகப் பயன் படுத்தப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாகச் சீரழித்துச் சிதைக்கப்பட்டன என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் இந்தியாவின் பயன்பாட்டிற்கு உட்படக் கூடிய தத்துவார்த்தப் பலவீனத்தையும் கொண்டிருந்தன என்பது தான இங்கு குறித்துக்காட்டத் தக்கது.”
“80 களின் ஆரம்பங்களில் சில துப்பாக்கிகளும் துண்டுப்பிரசுரம் வெளியிடும் வசதியும் இருந்தால் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம் என்ற நிலை இருந்ததை ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 25 நீண்ட வருடங்களின் பின்னால் அதே மாதிரியை முன்வத்தா கட்சியை அமைத்துக்கொள்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.”
இவை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான நிகழ்கால, வருங்கால எந்த ஒரு எத்தனிப்பை மேற்கொள்ளும் சக்திகளுக்கும் சொல்லப் படும் செய்தியாக, செவிகளில் வாங்கப் படும் செய்தியாக இருக்கவேண்டும்
எங்கே போய்விட்டார் சந்திரன்ராஜா? நெத்தியில் கோடாலிவெட்டு, நந்திக்கடலில் கரைவு, என அம்புலிமாமாக்கதைகளை எழுதாமல் தன் அவதானத்தை, விமர்சனத்தை நிதானமாக முன்வைக்கலாமே. மறந்துவிட்டது எல்லாவற்குமான சர்வரோக நிவாரணி நாலாவது அகிலத்தின் அறிக்கையில் உண்டு. அப்போ புலிகளின் சிங்கள மக்கள் மீதான படுகொலையும் கண்டிக்காமல் நாலாவது அகிலம் ஆதரித்ததே என்றால் கீலி,கூப்பர் என்ற அடுத்த அம்புலிமாமா கதைவரும். ரொட்ஸ்கி நாமம் வாழ்க!
இருபது யுரோ இலங்கைக்கு அனுப்பி மனிதாபிமானத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் தற்போது கச்சான் கோது கொடுத்து தாய்லாந்து ஆமை இறைச்சி பண்டமாற்று செய்யமுடியுமாவென்று விசாரிக்க நான்காம் அகிலம் சென்றுள்ளார்.
அமெரிக்காவின் பாராட்டுக்காக அலையும் ரஸ்யாவும், முதலாளீத்துவத்தை விழுங்கப் போகும் சீனாவும் சந்திரன் ராஜா கம்யூனிசக் கனவை காவு வாங்கி விட்டதால் அவர் இப்போது சிவன் கோயில் பூசாரி ஆகி விட்டதால் சந்திரன் ராசா இப்ப ரொம்ப பிஸீ.
என்னே! ரமில்மாறன் சீனா பற்றிய ஆய்வு.அடுத்து சிவன்கோயில் பற்றி ஒரு ஆய்வை முன்வையுங்கள். ரமில்மாறன். இடிச்சபுளிகளுக்கு இது அவசியமாக இருக்கிறது.
வார்த்தைகளால் இவ்வளவு செமஅடிவாங்கியும் உங்களக்கு சூடு சுரணை இருக்கிறதா? பலவீனமானவே! நையாண்டி வார்த்தைகளை பாவிப்பான். ஆகக்குறைந்தது ஐந்து யூரோக்களை அனுப்புங்கள்.-. உங்கள் அரசியல் தஞ்சத்திற்கு சிலவேளைகளில் ஈடாகலாம். இருபது யூரோவுக்கா கேலி செய்யாதீர்கள். இனிகாலங்களில் கருத்துச் சொல்ல வரமாட்டீர்கள் என நினைக்கிறேன். வந்தால்… வே.பி. தலைவிதி தான் உங்களை நம்பியவர்களுக்கு.
இந்த கட்டுரையாளரே இரண்டாவது பின்னோட்டத்தின் நபராகும். கருத்துச் சொல்பவர். உண்மையில் அரசியலில் வங்குரோத்து பேர்வழிகள் என்பது மட்டுமல்ல தமது கட்டுரைகளிலும் அதைத்தான் வெளிப் படுத்தகிறார்கள். ஒரு இணைத்தளத்தை தொடங்கிவிட்டால் தாங்கள் அரசியலில் ஏதோ ஒரு இடத்தை தங்கவைத்து விடலாம் என கனவு காணதீர்கள். தமிழன் யார் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஆகக் குறைந்தது இலங்கையன் என்பதை அத்தாட்சிப்படுத்துபவனுன் எவனே அவனே தான் ஈழத்தமிழன் என உரிமை கோரும் நியாயமும் இருக்கிறது. நான்தான் பைத்தியகாரதனமாக கதைக்கிறேன் என்றால் ப.வி.சிறீரங்கன் உடைய “நாம் எல்லாம் இலங்கையரே” என்ற கட்டுரையாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.
சந்திரன் ராஜா,
அனுமானங்களிலிருந்து முடிவிற்கு வராதீர்கள். வெளிப்படையான உரையாடலை ஏற்படுத்த முயற்சியுங்கள். நான் எழுதியுள்ள கட்டுரைகலில் பெரும்பாலனவற்றிற்கு பின்னூட்டங்களே இடப்படுவதில்லை. உங்களுடன் எனக்கு எந்த அடிப்படையிலும் உடன்பாடில்லை அதனை விமர்சிக்க எந்தத் தடையும் எனக்கில்லை. நான் புனைபெயரில் எழுத வேண்டிய தேவையுமில்லை.
உங்கள் மறுப்பு-மறுமொழிக்கு நன்றி நாவலன்.தற்போதைக்கு இது போதுமானவையே. உடன்பாடுயுடையவர்களை இலகுவில் ஒருமைப் படுத்த முடியுமென்றால் போராட்டங்கள் எதற்கு? விவாதங்கள் எதற்கு??. அவலங்கள் ஏதுமில்லாமல் பூபாளத்தில் அல்லவா? இந்த உலகத்தில் பொழுது புலர்ந்துவிடும்.
சந்திரன் ராஜாவை பலரும் ஏன் போட்டு தாக்குகிறீர்கள் அவரும் தனது கருத்தை சொல்லட்டும். கருத்துச் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. அவர் இலங்கை தேசியத்தை விரும்பக் கூடும் ஏனெனில் தமிழ் தேசியத்தில் காணப் பட்ட பிற்போக்கு கூறுகளால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப் பட்டோ ஒதுக்கப் பட்டோ இருக்கக் கூடும் அதன் காரணமாக அவர் இலங்கை தேசியத்தை விரும்பக் கூடும். இவ்வாறானவர்களையும் நாம் அணைத்துச் செல்வதானால் (கட்டாயம் செல்லவேண்டும்) தமிழ் தேசியம் தனது அனைத்து பிற்போக்கு முகங்களையும் களையவேண்டும்.
தன் இனத்தையோ கொல்லக் கொடுத்து இன்பம் கண்டவர்களின் நானும் ஒருவன் என்கிற பங்கிருப்பதால்… இதையும் தாங்கிக் கொள்வதால் பெரிதாக ஒரு துன்பம் வந்தடையப் போவதில்லை. மீன் வியாபாரிக்கு மீன்வாசம்.. பூ வியாபாரிக்கு பூவாசம்..இப்படியோ இதையும் சுகந்தமாக எற்றுக்கொள்ளுகிற மனநிலைக்கு மனம் பழக்கப் படுத்திவிட்டது. இதுபற்றி பெரிதாக நீங்கள் கவலைப் படாதீர்கள் திரு.ராகவன்.
கோமாளியைக் காணவில்லை என்று கேட்டால் ஏன் கோபம் வருகிறது? சர்க்கசில் கோமாளியின் பங்கு வெறும் இடைவெளி நிரப்பும் வேலையல்ல. சில கோமாளிகள் தமது திறமையால் மொத்த சர்க்கசையே பிரபலமாகியுள்ளார்கள். ஆனால் இங்கு வரும் கோமாளி மொத்த தமிழருக்கே தலைகுனிவு. அநாகரிய சொற்பதங்களைப் தாராளமாகப் பாவிக்கும் மனிதன் தனது முந்தய ” கருத்துக்களைப்’ ஒருமுறை பின்னோக்கிப் பார்த்தால் தனது நாகரியம் எப்படி என்று இவருக்கு புரியுமோ யாரறிவார்? செம அடி வாங்கி தொடர்ந்தும் உணர்வற்று எழுதும் இந்த ”மகா-ராசாவிற்கு” யார் கொடுத்தார்கள் அதிகாரம், கருத்து சொல்ல இங்கு யார் வரலாம் யார் வரக்கூடாது என்று சொல்வதற்கு? போர் குற்றவாளி இராயபக்ச தமிழரின் இரட்சகன் என்று பிதற்றுவதை நிறுத்தவே சிலர் இவருக்கு தமது கருத்தை எழுதப்போய் இவர் தனது புலம்பலைக் கேட்க வாசகர் ஏதோ தவம் கிடக்கிறார்கள் என்ற நினைப்பு. கட்டுரைக் கேற்ப கருத்தெழுதாது எப்போதும் தொழிலாளர் முதலாளி என்று இணையதளங்களில் அலைந்து விழுங்கிய மொத்த அசிங்கத்தை இங்கு வந்தா கக்க வேண்டும்?
சந்திரன் ராசா ஒரு சித்தர் அவரை கோமாளீ என்பது தவறூ சூர்யா.மகிந்தாவை ஈசனாக்கி அவர் வழிபடுவது அவரது அடிப்படை உரிமை.தொழிலாளீ முதலாளீ என்பது அவரது திருவாசகம்.திருமந்திரம் என்றூ வைத்துக் கொள்ளூங்களேன்.சந்திரன் ராசா என்றால் சிவன் எனும் பொருள் கொள்ளலாம்.
என்னைப் பொறுத்தவரை விவாதத்திற்குரிய சிறந்த ஆரம்பமாகவே இந்த கட்டுரையை அணுகுகின்றேன். அது தொடர்பாக மாக்சிசத்தை உயிர்மூச்சாக சுவாசித்துவாழும் மேதைகளை கருத்துக்கூறுமாறு கேட்டால் எனது பின்னூட்டத்தை எழுதுவது கட்டுரையாளாரா? என்று முடிபிழக்கும் விவாதத்தில் அல்லது புலன்விசாரணையில் இறங்கிவிடுகின்றார்கள். ஏனிந்த தடுமாற்றம்.