தேர்தலைப் நிராகரித்து யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று வாக்குக் கட்சிகளே கூறுகின்றன. ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரஸ் என்ற பாரம்பரிய வாக்குக் கட்சியின் புலம்பெயர் நீட்சிகள் அதற்கு ‘ஓ’ போட ஆரம்பித்தன. ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசின் வெகுஜன அமைப்பே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்கள் வாக்குக் கேட்கும் போது கூட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சின்னத்திலேயே கேட்கிறார்கள்.
தமிழ்த் தேசியமும் ‘அகில இலங்கையும்’ என்ற எதிர் எதிர் கருத்துக்கள் எப்படி ஒன்றாகி உருவமாகின என்றெல்லாம் கேட்டுவைக்கக்கூடாது.
இந்த ‘அகில இலங்கை’ தான் புலம்பெயர் ‘கடும்போக்கு’ தமிழ் உணர்வாளர்களின் ரிமோட் கன்ரோல் அமைப்பு. ‘தேசியத் தலைவரின்’ பெயரால் ‘ அகில இலங்கையை ‘ தமது தேசிய வியாபாரத்தின் மறுமுனை வடிகாலாக்கிக் கொண்ட புலம்பெயர் தமிழர்களும் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருகின்றனர்.
‘அகில இலங்கை’ சொல்வதைக் கேட்டு நீங்கள் ஏன் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருகிறீர்கள் என்று கேட்டால், மூச்.. தேசியத் தலைவரின் பேரால் இதைச் செய்கிறோம். தேசியத் தலைவர் கடவுள்… என்று ஆரம்பித்துவிடுகின்றனர்.
மந்தைகளாகவே மக்களை வைத்துப் பார்த்து ரசித்தவர்கள் தொடந்தும் அப்படியே வைத்திருக்க விரும்புவதில் வியப்பேதுமில்லை.
கஜேந்திர குமார் லிமிட்டட் உம் அதனது அமைப்புக்களான இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன உம் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரினாலென்ன, தலைகீழாக நின்று வாக்களிகக் கோரினால் என்ன மக்கள் அதனைக் கண்டுகொள்வதில்லை. தென்னிந்தியாவிலிருந்து மீசை துடிக்க ஈழம் பேசும் வை.கோ, சிமான் உட்பட ‘ஈழம் மட்டும்’ அரசியல் வாதிகளைப் போன்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும். இவர்கள் அனைவரதும் அரசியல் புலம் பெயர் நாடுகளை நோக்கியது.
இவர்கள் மந்தைகளாக எண்ணும் புலம்பயர் மக்களை சூடாறவிடாமல் பார்த்துக்கொண்டு தேசிய வியாபாரத்தின் ஊள்ளூர் இணைப்பதிகாரி போலத்தான் கஜன் பொன்னம்பலம் செயற்படுகிறார்.
தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்பதற்கு மக்கள் மீது நியாயமாகவே பற்றுள்ளவர்களுக்கு நியாயமான காரணங்கள் உண்டு. இந்த தேர்தல் அமைப்பே தவறானது என்றும் சமூக மாற்றத்திற்கான மக்களை அணிதிரட்டிப் போராடுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்கிறார்கள் அவர்கள். ஆனால், வாக்குச் சேர்ப்பதையே நம்பி வாழும் கட்சியான கஜேந்திரகுமாரின் குடும்பச் சொத்தான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வாக்குப் போடவே வேண்டாம் என்னும் போது தான் சந்தேகமே எழுகிறது.
வடக்கில் நிலைகொண்டிருகும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவரும், கொழும்பு உயர் குடி செல்வந்தர்களில் ஒருவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதால் அவருக்கு என்ன பலன்? மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான, மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவான வாக்குகள் குறைவடையும்.
கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் வடக்கில் மக்கள் வாக்களித்தால் மைத்திரி வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகமாகும் என்கிறார்கள். ஆக, மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகும். ஆக, மகிந்தவின் வெற்றியைக் கஜன் விரும்புகிறார் என்பதே இங்கு தெளிவாகிறது.
புலம்பெயர் அமைப்புக்களின் ஒரே அரசியல் ‘மகிந்தவைத் தூக்கில் போடவேண்டும்’ என்பதே. மகிந்தவைத் தூக்கில் போடவேண்டும் என்று அரசியல் நடத்தவேண்டுமானால் மகிந்த ஆட்சியிலிருக்க வேண்டும். இதனால் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் புலம்பெயர் அமைப்புகளும் ஒரே புள்ளியில் இணைந்து கொள்கின்றன. இதே போன்ற சமாந்தரமான காரணங்களுக்காக இந்த இரண்டு பகுதிகளும் பல்வேறு தளங்களில் இணைந்து செயற்படுகின்றன.
இதற்குக் கூட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய முலாம் பூசி விற்பனை செய்கிறது.
மைத்திரிபாலவோ மகிந்தவோ தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுகும் எதிரானவர்கள் தான். சிங்கள பௌத்த பேரினவாதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து தமிழ் மக்களையும் சிங்கள அப்பாவி மக்களையும் சுரண்டிக் கொழுத்தவர்களே இவர்கள்.
இதனைச் சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமானால் தமிழ்ப் பேசும் மக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது.
மகிந்தவைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திவிட்டு மைத்திரியை பயன்படுத்தி முழு இலங்கையையும் சுரண்டத் திட்டமிடும் ஏகாதிபத்திங்களே இன்று தேர்தலை நடத்துகின்றன. பரம்பரை பரம்பரையாக கட்சி அரசியல் நடத்தும் கஜனுக்கு இது கூடத் தோன்றவில்லை
இதே பாராளுமன்றத்திற்குச் செல்வதற்காக வாக்குக் கேட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி(அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இன்று தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருவது பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போலியை நிராகரிப்பதற்காக என்றால் இனிமேல் வாக்குப் பொறுக்கவே மாட்டோம் என அறிக்கைவிடத் தயாரா?
இனிமேல் நாங்கள் வாக்குக் கேட்க மாட்டோம் என்றும், மக்களை அணிதிரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று தம்மைச் சுய விமர்சனை செய்துகொண்டு கஜேந்திரகுமார் தெருவில் இறங்கிப் போராடுவாரானால் அவரின் பகிஷ்கரிப்புக் கோரிக்கை மீது சந்தேகங்ல்கள் எழாது.
அதற்கெல்லாம் அவர்கள் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குக்களைத் தட்டிப் பறிப்பதும், புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளைத் திருப்திப்படுத்துவதுமே ‘அகில இலங்கையின்’ ஒரே நோக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாங்களது கருத்தை வெளிப்படையாகவே முன்வைக்கிறார்கள். சுய நிர்ணைய உரிமை வேண்டாம் என்று காட்டிக்கொடுத்தாலும் நேரடியாகவே காட்டிக்கொடுக்கிறார்கள். கஜேந்திரகுமாரின் கதையோ வேறு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற கட்சி தமிழ்த் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகச் செயற்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்திலாவது தம்மிடம் மக்கள் சார்ந்த அரசியல் இல்லை என்றும், இனிமேல் தான் அரசியல் திட்டம் வரையப்பட வேண்டும் என்றும் இக்கட்சிகள் கூறவேண்டும், அல்லது இத் தேர்தலில் வாக்குப் பொறுக்கிகளின் மோதல்களிடையே நசுங்கிச் செத்துப்போகும் விலை மதிக்க முடியாத தியாகங்களை காப்பற்ற முடியாது. இத்தேர்தலை அனுபவமாகக் கொண்டு அடுத்த தேர்தலுக்கு முதல் மக்களின் முன்னணிப்படையான அரசியல் தலைமை உருவாக்கப்பட வேண்டும்.
மைத்திரியின் வெற்றியின் பின்னால்….!!!!
மகிந்த கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத எதனையும் தமிழர்களுக்கு வழங்கப் போவதில்லை. இன்னும் ஒரு தடவை வெற்றி பெற்றால், தொடர்ந்து 8 ஆண்டுகள் அவர் ஜனாதிபதியாக இருக்கலாம். அதன் பின்னர் அவரின் மகன் நாமல் அரசினைப் பொறுப்பெடுக்கும் வகையிலேயே எல்லாமே நடந்து வருகிறது. இது இந்த நாட்டிலே ஒரு குடும்பத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும். அதனால், மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இது சிங்கள தேசத்தின் தேர்தல். அதில் எமக்கென்ன வேலை என ஒரு சாரார் கூறுகிறார்கள். தேர்தலின் முடிவுகள் எம்மைப் பாதிக்கா விட்டால், நாம் ஒதுங்கி இருக்கலாம். ஆனால், இது அப்படி அல்லவே.
மகிந்தவா? மைத்திரியா? என்பதை எமது வாக்குகள் முடிவு செய்யும் என்றால், நாம் ஏன் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும்? இருவருமே இனவாதிகள் தான், இருவருமே எம்மை அழித்தவர்கள்தான். ஆனால், நாளைய தேர்தலில் யார் வெற்றிபெற்றால், எமக்கு ஒரு சிறு நன்மையாவது கூடுதலாக ஏற்படுமோ, அல்லது ஒரு இடைக்கால நிவாரணம் கிடைக்குமோ, அவரைத் தெரிவுசெய்ய நாம் ஏன் எமது வாக்கைப் பாவிக்கக் கூடாது?
மகிந்தவால் எமக்கு இனி நன்மையே இல்லை என்று ஆன பின்னர் போட்டியில் வெற்றி பெறக்கூடிய ஒரு குதிரையின் மேல் பந்தையம் கட்டுவதுதானே புத்திசாலித்தனம்.
2005இல் புலிகள் ரணிலைத் தோற்கடித்து அதன் மூலம் தாமே முற்றாக அழிந்துபோன அதே பழைய உத்தியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஆனந்தியும் கையாள்வது மகிந்தவை வெல்ல வைக்கத்தானே? இதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை?
இலங்கையில் உள்ள அனைவருமே ஜனாதிபதி மாற வேண்டும் என விரும்புகிறார்கள். மகிந்தவைத் தோற்கடிக்கக் கூடியவர் மைத்திரி மட்டுமே. அவரின் வெற்றியை உறுதி செய்ய சிறுபான்மையினரின் வாக்கு மிகவும் முக்கியமானது. மைத்திரி வெற்றிபெற்றுப் பதவிக்கு வந்தால், பேரம்பேச இது உதவியாக இருக்கும்.
இணக்க அரசியலில் எதுவுமே சாத்தியமில்லை என்பது கடந்தகால வரலாறு. சர்வதேச ஆதரவைத் தொடர்ந்தும் பேணியவாறு நாம் பேரம்பேசி உரிமைகளைப் பெற முயற்சிக்காமல், இரண்டறக் கலப்பதால், தமிழ் இனத்திற்கு நன்மை இல்லை.
சேர்.பொன்.இராமநாதன் தோளில் சுமந்து செல்லப்பட்டதால், அவருக்குக் கௌரவம், தமிழனுக்கு என்ன கிடைத்தது? அதே வழியில் இன்று பயணிக்கிறார் சுமந்திரன். சம்பந்தரை இணங்கவைத்து தனது விருப்பங்களை மட்டுமே தமிழர்களின் கோரிக்கைகளாகக் காட்டி சிங்களத்திடம் விற்பனை செய்கிறார் சுமந்திரன்.
இன்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூடக் கழட்டி விடப்பட்டுள்ளார். சம்பந்தர் இந்தியாவில் இருந்தபோது சுமந்திரன் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளே அனைத்தும். கட்சியின் தலைவர் மாவைக்குக் கூட எதுவுமே தெரியாமல் செயற்பட்டிருக்கிறார்.
புதிய அரசில் ஒரு முக்கியமான பாத்திரம் சுமந்திரனுக்குக் கிடைக்கும். ஆனால், அது தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை. ஜி.ஜி.பொன்னம்பலம், திருச்செல்வம், டக்லஸ் வழியில் சுமந்திரன் பயணிக்கப் போகிறார். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மக்களால் தெரிவே செய்யப்படாத ஒருவர் சர்வாதிகாரமாக தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறார். இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்???
இப்படியானவர்களை அகற்ற புலிகளைப் போன்ற ஒரு அமைப்பு இல்லையே என மனது ஏங்குகிறதா? தமிழர்களுக்கு விடிவு பிறக்காமலா போகும்? மகிந்த நினைத்தாரா தான் இவ்வளவு விரைவாக ஓடவேண்டி வருமென்று?
What is your view about federal and thamizharasu? The Tamils in Sri Lanka have been cheated in many ways under different names and banners since 1948- Talking in one tongue in Colombo and in another one in the north and east. No Tamil politicians make exception. Still there are differences among the so-called leaders. This is like the blind leading the blind.
மகிந்தாவின் குடும்ப அரசியல் போல்தான் தமிழரின் அரசியலும் இலங்கையில்நடக்கின்றது. தங்கள் குடும்பங்களே தமிழர்களிற்கு
தலைமை தாங்க வேண்டுமென்பதே பலரது விருப்பம். இலங்கைத்தமிழர்
சிங்களவரிடம் அடிவாங்கினாலும் பர்வாயில்லை,வன்னியில் அழிந்தாலும்
பர்வாயில்லை உலகெங்கும் அகதிகளானாலும் பர்வாயில்லை.
மாற்றுக் கருத்துச் சொல்வோர்க்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியான விவாதமுறை ஆகாது.
கொடியவன் ராசபட்சேயை தமிழ் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதும், இந்த வெறுப்பைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு பிரதிபலிக்கிறது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.
தேர்தல் என்றால் ஆய்ந்து முடிவெடுத்தல் என்று பொருள். ஆத்திரத்தில் முடிவெடுப்பது தேர்தல் எனப்படாது.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்
என்றார் திருவள்ளுவர். மக்களின் உணர்வுகளை உள்வாங்கி அதே போது அவர்களின் அடிப்படை நலனுக்கு உகந்த முடிவைத் தொலைநோக்குப் பார்வையுடன் எடுப்பதுதான் அரசியல் தலைமையின் வேலை. தலைமை என்பது மக்களுக்குத் தலையாக இருக்க வேண்டுமே தவிர வாலாகி விடக் கூடாது.
“விமர்சனம் செய்பவர்கள், மற்றும் கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களைப் பார்த்தோமானால் அரசுக்கு விசுவாசமானவர்கள் மற்றும் இந்த அரசை எப்படியாவது வெற்றியடைய வைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிகின்றது” என்று கூறுகின்றீர்கள். இது கடுமையான குற்றச்சாட்டு. உங்களால் இதை மெய்ப்பிக்க முடியுமா? அனந்தி சசிதரனும், மறவன்புலவு சச்சிதானந்தனும், சிவகரனும் அரசுக்கு விசுவாசமானவர்களா? இந்த அரசை எப்படியாவது வெற்றியடைய வைக்கும் முயற்சியில் இருப்பவர்களா?
உருத்திரகுமாரனும் அருள்தந்தை இமானுவேலும் வேறு பலரும் ததேகூ முடிவை ஆதரிக்கவில்லை என்பதாலேயே அவர்கள் எல்லாம் அரசுக்கு விசுவாசமானவர்கள் என்பீர்களா? த.தே.கூ தலைவர்கள் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் எடுத்துள்ள முடிவு தவறானது என்று காரண காரியத்தோடு வாதிட விரும்புகிறேனே தவிர, அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து, எங்கோ பெட்டி வாங்கி விட்டார்கள் என்று பழிதூற்ற நான் உடன்பட மாட்டேன்.
வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்: த.தே.கூ தலைமை மைத்திரிபால சிறிசேனாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருப்பதன் மூலம் சிங்களப் பேரினவாதத்தை உசுப்பி விட்டு சிங்கள மக்கள் ராசபட்சேக்கு வாக்குகளை அள்ளிப்போட வழிகோலியுள்ளது, இவ்விதம் ராசபட்சேயின் வெற்றிக்கு உதவியுள்ளது. ஆனால் இப்படிச் சொல்வது ததேகூ தலைவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது ஆகாது. அவர்களது தவறான முடிவின் விளைவைச் சுட்டி, அது எப்படி அவர்களது நோக்கத்துக்கும் மக்கள் விருப்பத்தும் எதிராக அமைகிறது என்பதை உணர்த்துவதே ஆகும்.
நீங்கள் செய்வதுபோல் உள்நோக்கம் கற்பித்து வாதிடுவதுதான் தமிழ்த் தலைவர்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர் துரோகி என்று தூற்றி எதிர்காலத்தில் ஒன்றுபடுவதற்குள்ள வாய்ப்புகளை அடியோடு சிதைத்து விடும். என்னைப் பொறுத்த வரை திரு சம்பந்தனின் இப்போதைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தவிர அவரின் உழைப்பையோ ஆற்றலையோ கேள்விக்குள்ளாக்க மாட்டேன். இயன்றால் உடன்படுவோம், இயலாதென்றால் வேறுபடுவதற்கு உடன்படுவோம் என்பதுதான் சனநாயக அணுகுமுறை. என்னை ஆதரிக்காதவர்கள் எல்லாம் என் பகைவர்கள் என்பது புஷ், ராசபட்சே போன்றவர்களின் சர்வாதிகார அணுகுமுறை. நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தில் சனநாயக அணுகுமுறைதான் பயனுள்ளது எனக் கருதுகிறேன்.
இந்தத் தேர்தலோடு உலகமோ இலங்கையோ மூழ்கிப் போய் விடப் போவதில்லை. சிங்கள ஆதிக்கமோ தமிழீழ விடுதலைப் போராட்டமோ முடிந்து விடப் போவதில்லை. இன்று வேறுபட்டு நிற்பவர்கள் நாளை ஒன்றுபட வேண்டிய தேவை வரும். இந்தப் பொறுப்புணர்வோடு நிதானத்துடன் விவாதிப்பது நன்று.
த.தே.கூ தலைமையின் தவறான முடிவை நியாயப் படுத்துவதற்காக நீங்கள் தந்தை செல்வாவையும் தலைவர் பிரபாகரனையும் துணைக்கழைக்கின்றீர்கள். திரு சம்பந்தன் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்கிறாரே, அதுவும் செல்வா வழி, பிரபா வழிதானா? ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றுவது எப்படி என்று அவரே வழிசொல்லட்டும். இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தின் படி தனிநாடு கேட்பவர்கள் தேர்தலில் நிற்க முடியாதுதான். திரு சம்பந்தன் தனிநாடு கேட்க வேண்டாம், ஆறாம் திருத்தத்தை நீக்கும் படிக் கேட்கலாமே, அதில் என்ன இடர்ப்பாடு? பதினேழாம் திருத்தம், பதினெட்டாம் திருத்தம் பற்றியெல்லாம் பேசுகிறவர் ஆறாம் திருத்தத்தைப் பற்றிப் பேசவே காணோமே! 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 பொதுத்தேர்தல், 1983 கறுப்பு யூலை, 2004 பொதுத்தேர்தல், 2009 இனவழிப்பு… எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு 1972க்குத் திரு சம்பந்தன் திரும்பிச் செல்ல விரும்புவதும் செல்வா வழி பிரபா வழிதானா?
போராட்டத்தில் ஏற்படும் இழப்புகளால் சோர்வுற்று மக்களே விடுதலை வேண்டாம் என்று சொல்லும் கட்டங்கள் வரலாம், அப்போதும் கூட விடுதலைக் குறிக்கோளைக் கைவிடாது பாதுகாத்து மக்களுக்கு ஊக்கமூட்டி விடுதலைப் போராட்டத்துக்கு அணிதிரட்டும் கடமை தலைமைக்கு உள்ளது. மக்களின் முன்னணிப் படையாக இயக்கம் செயல்பட வேண்டுமே தவிர அவர்களுக்குப் பின்னால் பதுங்குதல் கூடாது. இப்படிப் பதுங்குவதுதான் அரசதந்திரம் என்றால் அது நமக்குத் தேவை இல்லை.
ஆட்சி மாற்றம், ஆட்சி மாற்றம் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். இலங்கையில் இதற்கு முன் ஆட்சி மாற்றமே நடந்தது இல்லையா? முந்தைய ஆட்சி மாற்றங்களால் தமிழ்த் தேசிய இனத்திற்கு என்ன கிடைத்தது? இது வரை கிடைக்காதது இப்போது எப்படிக்கிடைக்கப் போகிறது? வரலாற்றின் படிப்பினைகளை மக்கள் அவசர ஆத்திரத்தில் மறக்கலாம், உங்களைப் போன்றவர்கள் மறக்கலாமா? அவர்களுக்கு நினைவூட்டுவது தலைமையின் கடமை அல்லவா? தமிழர்களுக்குத் தேவை ஆட்சி மாற்றமா, அரசு மாற்றமா? ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் ஆட்சி மாறுவதாலோ, ஆட்சி வடிவம் (அதிபர் ஆட்சி முறையிலிருந்து நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு) மாறுவதாலோ தமிழர்களுக்கான சனநாயகம் எப்படி மலரும்? இவ்வகையில் மக்களுக்கு மயக்கம் இருக்குமானால் அதைப் போக்க வேண்டிய தலைவர்களே மயக்கம் விதைப்பவர்களாகச் செயல்படலாமா?
ராசபட்சே ஆட்சி போய் சிறிசேனா ஆட்சி வந்தால் தமிழர்களுக்கு உருப்படியாக என்ன கிடைக்கும்? இது குறித்து ததேகூ தலைமை சிறிசேனாவுடன் உடன்பாடு ஏதும் செய்துள்ளதா? உறுதி ஏதும் பெற்றுள்ளதா? அப்படி எதுவும் இல்லை என்றால் தமிழ் வாக்குகளை விலைபேசாமலே விற்று விட்டதா? இது தமிழினத்தை அயலவன் கையில் தாரைவார்த்துக் கொடுப்பதாகாதா? தந்தை செல்வாவோ தலைவர் பிராபகரனோ இப்படி எப்போதாவது செய்ததுண்டா? இப்போது நிலைமை வேறு என்று சொல்வீர்களானால், செல்வா, பிரபா பெயர்களைத் துணைக்கழைப்பதை நிறுத்துங்கள்.
சிறிசேனா ஆட்சிக்கு வந்தால் இன்னின்னது கிடைக்குமென்பதற்கு ஆதாரம் கொடுங்கள். ராசபட்சே ஆட்சி தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்கிறீர்கள், சரி! சிறிசேனா ஆட்சி அப்படிச் செயல்படாது என்கிறீர்களா? சிறிசேனா ஒருவராவது ‘தமிழர்கள் தொடர்பாக ராசபட்சே கொள்கை வேறு என் கொள்கை வேறு’ என்று அறிவித்திருக்கிறாரா? இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றால், இவரைவிட அவர் மேல் என்று சொல்வது மக்களை ஏமாற்றுவதாகாதா? இந்த இருவரையும் இரண்டு தனிமனிதர்களாகப் பார்ப்பதா? அல்லது ஒரே சிங்களப் பேரினவாத இனக்கொலை அரசியலின் இரட்டை ஆளுருவங்களாகப் பார்ப்பதா? ஏமாறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு, ஆனால் ஏமாற்றும் உரிமை எந்தத் தலைமைக்கும் இல்லை.
“மைத்திரி சிங்கள மக்களையும் சிங்களக் கடும்போக்காளர்களையும் மீறி தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார் என்பது வேறு கதை” என்று இப்போதே சொல்கிறீர்கள்.
எதுவும் செய்ய மாட்டார் என்றால் அவரை ஏன் ஆதரிக்க வேண்டும்? இரண்டாவதாக, மைத்திரி தாமே ஒரு சிங்களக் கடும்போக்காளர் என்று உங்களுக்குத் தெரியாதா? அதற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லையா? அவர் செய்ய விரும்புவார் என்பது போலவும், சிங்களக் கடும்போக்காளர்கள்தான் கையைப் பிடித்து இழுக்கப் போகிறார்கள் என்பது போலவும் படங்காட்ட வேண்டிய தேவை என்ன?
நல்லது நடக்கும் என்று போலிச் சாமியார்கள் போல் ஆசி வழங்கிக் கொண்டிருக்காமல், தமிழ் மக்களுக்கு எது நல்லது, அது எப்படி நடக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்கிறீர்கள்:
“மிகவும் மோசமான யுத்தத்தினால் இடம் பெயர்ந்துள்ள லட்சக் கணக்கான தமிழ் மக்கள் இன்னும் மீள்குடியேறற்ம் செய்யப்படவில்லை, வீடுகள் வாழ்வாதாரங்கள் இன்னும் செய்யப்படவில்லை.
“மக்களின் காணிகள் இன்னும் இராணுவப் பிடியில் உள்ளது. வடக்கில் இன்னும் இராணுவச் சோதனைச் சாவடிகள், இராணுவச் சோதனைகள் தீரவில்லை.வடக்கு வாழ் மக்களை இந்த அரசு தனது இராணுவப் பிடிக்கள் வைத்துக் கொண்டு இராணுவ ஆட்சி நடத்துகின்றது.
“யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டள்ளதாக அரசு சொன்னாலும் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை இன்னும் இந்த அரசு முடிக்கவில்லை.”
இந்தக் கொடுமைக்கு சிறிசேனா பொறுப்பில்லை எனக் கருதுகிறீர்களா? பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் இனக் கொலைக் குற்றவாளியாக ராசபட்சேயுடன் கூட நிறுத்தப்பட வேண்டியவர் அல்லவா அவர்? தன் குற்றப் பொறுப்புக்காக அவர் இதுவரை தமிழ் மக்களிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுள்ளாரா? அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ததேகூ தலைவர்கள் கேட்டதுண்டா? பன்னாட்டுப் புலனாய்வின் முடிவில் சிறிசேனாவும் குற்றவாளி என்று காணப்பட்டால் ததேகூ தலைமை என்ன செய்யும்?
“இராஜதந்திரம் என்பது மக்களை அடகு வைப்பதல்ல” என்று நீங்கள் சொல்வதுதான் சரியானது. ஆனால் ததேகூ தலைமை தமிழ் மக்களை சிறிசேனா-சந்திரிகா-ரணில்-பொன்சேகா கும்பலிடம் அடகு வைப்பதை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது? நிபந்தனையற்ற ஆதரவை அடகு வைப்பது என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிப்பது?
“யுத்தம் முடிந்த பின்னரும் இலங்கையின் உண்மை நிலைகளை உலகத்திற்கு மறைத்து மனித உரிமைகளை நிலை நிறுத்தி நாட்டில் இனவேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சரிசமமாக வாழும் நிலையை மைத்திரி உருவாக்கித் தருவார் என்பதை நம்புவோம்” என்று நீங்கள் சொல்வதன் பொருள் அடியேனின் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இலங்கையின் உண்மை நிலைகளை உலகத்திற்கு மறைத்து மனித உரிமைகளை நிலைநிறுத்தி … என்றால் என்ன பொருள்?
இனவேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சரிசமமாக வாழும் நிலையை மைத்திரி உருவாக்கித் தருவார் என்று நம்பச் சொல்கிறீர்கள். ஐயகோ, மைத்திரியே சொல்லாததை எல்லாம் நீங்களாகவே இட்டுக்கட்டினால் எப்படி? சிங்களபௌத்த அரசமைப்பின் அடிப்படையிலேயே இனவேறுபாடுகள் இல்லாமலும் சரிசமமாகவும் வாழும் நிலை தெரியாமல்தான் தந்தை செல்வாவும் தலைவர் பிரபாகரனும் விடுதலைக்குப் போராடிக் கால விரயம் செய்து விட்டார்கள் போலும்! அன்னப் பறவைக்கு வாக்குக் கேட்கத் தெரிந்தவர்களுக்குப் பாலையும் நீரையும் பிரிக்கத் தெரியவில்லையே!
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மைத்திரிதான் இறுதி வாய்ப்பு என்கிறீர்கள். அவர்தான் நம்மை உய்விக்க வந்த கடவுள் போலும்! விடுதலைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அற வலிமையையும் அரசியல் ஆற்றலையும் நீங்கள் உணரவில்லை. இந்த ஒரு தேர்தலில் எவன் வென்றாலும் எவன் தோற்றாலும் தமிழ்மக்களின் போராட்டம் உறுதியாகத் தொடரும் என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.
“எஞ்சியுள்ள கோவணத்தையாவது காப்பாற்றுவோம்” என்பது உங்கள் இறுதிக் கெஞ்சல். சிறிசேனா வெற்றி பெற்றால் கோவணம் மிச்சப்படும் என்று நம்புவதற்கு என்ன அடிப்படை? ஏதாவது அசரீரிக் குரல் அப்படிச் சொன்னதா? இல்லை என்றால் சிறிசேனாவின் கடந்த கால அரசியல், இப்போதைய தேர்தல் அறிக்கை, அவரோடு சேர்ந்து நிற்கும் சந்திரிகா, ரணில், பொன்சேகா, ஜதிக ஹெல உறுமையா கும்பல் என்று அனைவரையும் ஒரு முறை உற்றுப்பார்த்து நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் — சிறிசேனாவால் உங்கள் கோவணம் காப்பாற்றப்படுமா என்று. உங்கள் கோவணத்தை பொது பல சேனாவிடம் இழப்பதா, ஜதிக ஹெல உறுமையாவிடம் இழப்பதா என்பதில்தான் ராசபட்சே வெற்றிக்கும் சிறிசேனா வெற்றிக்குமான வேறுபாடு அடங்கியுள்ளது. மற்றபடி வெங்காயத் தோல் அளவு வேறுபாடு கூட இல்லை.
“சிங்கள மக்களிடம் இனவெறியை இந்த அரசு ஏற்படுத்தி மைத்திரிக்கான ஆதரவைத் தட்டிப்பறிக்கப் பார்க்கின்றது. அதனால்தான் கூட்டமைப்பு சில விடயங்களை பகிரங்கமாக சொல்ல முடியாமல் உள்ளது” என்று இரகசியம் பேசுகின்றீர்கள். அதாவது சிங்கள இனவெறிக்கு அஞ்சி தமிழ் மக்களின் உடனடித் தேவைகளைக்கூட வெளிப்படுத்த முடியாது. அப்படியானால் அதே சிங்கள இனவெறிக்கு அஞ்சி நீதி கேட்காமல் வாய்பொத்திக் கிடக்க வேண்டியதுதான், விடுதலைக் கனவுகளை மறந்து விட வேண்டியதுதான். தமிழன் அடிமையாகவே இருக்க ஒப்புக் கொண்டு விட்டால் சிங்களனுக்கு இனவெறி வராது அல்லவா?
அறிவு சாராத வெறுப்புணர்ச்சி ஒன்றின் அடிப்படையில் மைத்திரிபாலாவை ஆதரிக்கும் முடிவு உங்களை எந்த எல்லைக்குத் தள்ளி விடுகிறது என்று காட்டவே இவ்வளவும் சொன்னேன். மற்ற படி உங்கள் நல்லெண்ணத்தின் மீது எனக்கு ஐயமில்லை.
ஒரு திருத்தம்: தமிழர்களைப் பல இடங்களில் சிறுபான்மை என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் இலங்கையை ஒரு தேசமாகக் கருதுவதால் இப்படிச் சொல்ல நேரிடுகிறது. இலங்கை என்பது சிங்கள தேசம், தமிழீழம் எனும் இரு தேசங்களை உள்ளடக்கியது. சிங்கள தேசத்தில் சிங்களர் பெரும்பான்மை, தமிழர் சிறுபான்மை என்றால், தமிழீழத்தில் தமிழர் பெரும்பான்மை, சிங்களர் சிறுபான்மை. நம் போராட்டம் சிறுபான்மை உரிமைகளுக்கான போராட்டம் அன்று, தேசிய விடுதலைக்கான போராட்டம். தேசிய விடுதலைக்கான போராட்டத்தை சிறுபான்மையினரின் போராட்டம் என்று பார்ப்பதால்தான் உங்கள் தேர்தல் முடிவு தவறாகிப் போகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
நம் அடிப்படைக் கோரிக்கைகளுக்கோ அவசரக் கோரிக்கைகளுக்கோ எள்முனையளவும் உதவாத தேர்தல் பங்கேற்புக்கு பதிலாக சிங்களப் பேரினவாதப் பதவிச் சண்டையில் தமிழர்களுக்கு அக்கறை இல்லை என்பதையும், அவர்களுக்கென்றுள்ள உரிமைக் கோரிக்கைகளையும் முன்வைத்துத் தேர்தலைப் புறக்கணிப்பதே நன்று.
ராசபட்சே வெற்றி பெற வேண்டும் என்று நானும் விரும்புவதாக நீங்கள் குற்றஞ்சாட்டலாம். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தேர்தல் நடக்கத்தான் போகிறது, இருவரில் ஒருவர் வெல்லத்தான் போகிறார் என்பதால் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெறட்டும் என்றே நானும் விரும்புகிறேன். நீங்கள் சொல்லும் காரணங்களால் அல்ல. என் காரணம் அறவே வேறு: மைத்திரிபாலா ஆட்சிக்கு வந்து உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாகும் போது நீங்களும் ததேகூ தலைமையும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவனின் நிலைக்கு ஆளாவதைப் பார்க்க வேண்டும். அப்போதாவது உங்கள் தவறுகளைக் களைந்து போராட்டப் பாதைக்குத் திரும்புவீர்கள் அல்லவா?
கடைசியாக இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் மோதி வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி ஏமாந்த தமிழகத் தமிழர்களைப் ப
நான் நினைக்கிறேன் இளங்கோவின் குறிப்பு சனவரி 8 இல் நடந்த தேர்தலுக்கு முன்னர் எழுதப்பட்டது என்று. சனநாயகத்தில் தேர்தலைப் புறக்கணிப்பது தற்கொலைக்குச் சமமானது. இலங்கை சட்ட சபையை புறக்கணித்ததால் ஏகசிங்கள அமைச்சரவை உருவாகியது. 1994 இல் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்ததால் டக்லஸ் தேவானந்தாவின் அரசியல் நுழைவிற்கு நாமாகவே கதவுகளைத் திறந்து விட்டோம்.2005 இல் சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தது தலையை கொள்ளிக் கட்டையால் சொறிந்த மாதிரி போனது. இன்று இராஜபக்சாவை அகற்றி, சிறிசேனாவை ஆட்சியில் அமர்த்தியதால் எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். இழந்த நிலத்தில் ஒரு பகுதியை மீள எடுத்துள்ளார்கள். இராணுவம் முகாம்களில் முடங்கியுள்ளது. முழுச் சிக்கலும் தீரவில்லை. ஆனால் சிறிசேனா அரசு சரியான திசையில் பயணிக்கிறது. சனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன கஜேந்திரகுமார் ஒரு அரசியல் ஞானசூனியம் என்பதை அந்தத் தேர்தலின் பின் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் எண்பிக்கின்றன.
சிறிசேனாவை ஆதரித்தால் குடி முழுகிப் போகும் என உண்மையாக ஆானால் முட்டாள்த்தனமாக நினைத்த கஜேந்திரகுமர் போன்றவர்கள் இப்போது என்ன சொல்கிறாரகள்கள்? மூக்குடைபட்டார்களா இல்லையா? இராஜபக்சாவா அல்லது சிறிசேனாவா? என வரும்போது முதலில் தெரிந்த பகையை ஒழிக்க வேண்டும். அதுதான் இராசதந்திரம். இதனை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார். கஜேந்திரகுமார் போன்றவர்கள் அதனைப் படிக்கவில்லை.
தன்துணை இன்றால் பகை இரண்டால் தானொருவன்
இன்துணையாகக் கொள்க அவற்றின் ஒன்று. (குறள் 875)
இதன் பொருள் துணையின்றித் தனித்து இருப்பவன் தன்னை எதிர்த்த இரு பகையில் ஒன்றைத் துணையாகக் கொள்ள வேண்டும். இதைத்தான் ததேகூ செய்தது. அதனால் பேரளவு பயன் இன்று ஏற்படாவிட்டாலும் ஓரளவு பயன் ஏற்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.
.