கச்சத்தீவு வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் கச்சத்தீவு விவகாரம் குறித்து தான் பிரதமருக்கு எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘1974ம் ஆண்டு மு.கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியை சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது’ .
என அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்குவந்த நாளிலிருந்து தமிழகத்தில் இதுவரை இருந்திராத அளவிற்கு பாசிச ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். ஆட்சிக்குவந்த சில தினங்களுக்கு உள்ளாகவே பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்றொழித்த ஜெயலலிதா அரசு, கூடங்குளத்தில் தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்கள் மீது கொலை, கொள்ளை, சூறையாடல், மிரட்டல் போன்ற சமூகவிரோதச் செயல்களை அவரது போலீஸ் நடத்திவருகிறது.
ஊழல் வழக்கில்லிருந்து விலைவாசி உயர்வு வரை ஜெயலலிதா சமூகத்தின் எதிரியாகவே மக்கள் உணர்ந்துகொள்ளும் நிலையில் அவற்றை மூடிமறைப்பதற்காக அவர் அணிந்துகொள்ளும் முகமூடிதான் தமிழ் இனவாதம்.








It is something of great aesthetic value. It will resonate for ever in our lives. I also have two daughters and a son like the late Dr. Shelton Kodikkara, Professor of Political Science, Peradeniya Campus who wrote about it in 1973. .