புதன், 13 ஆகஸ்ட் 2008
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி கச்சத் தீவில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலர் பிரபாகரன், மாநில இளைஞரணி செயலர் சரவணன் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதல் நடத்துவதும், உடைமைகளை பறித்துக் கொண்டு துரத்தி அடிப்பதும் தொடர் கதையாகி விட்டது.
இது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் மீனவர்கள் பாதுகாப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் கேள்விக் குறியாகிவிடும். எனவே தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கோரி கச்சத்தீவு மீட்பு போராட்டத்தில் ஈடுபட இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
முதல் கட்ட போராட்டமாக ‘கச்சத்தீவு நமதே’ என்பதை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள கொடிகாத்த குமரன் நினைவிடத்தில் இருந்து தேசியக் கொடியுடன் கச்சத்தீவு மீட்பு யாத்திரையை கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 10 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு ரத யாத்திரையாக வரும் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் மாநில செயலர் பல்லடம் அண்ணாத்துரை தலைமையில் கச்சத்தீவு சென்று இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளனர்.
முன்னதாக மத்திய, மாநில அரசுகள் உரிய பதில் அளிக்கும் என்று எதிர் பார்க்கிறோம். பதில் அளிக்காமல் போனால் கச்சத்தீவில் கொடி ஏற்றுவதை தடுக்க முடியாது” என்று கூறியுள்ளனர்.
சொல்லாதீர்கள்,செய்யுங்கள்.
மதிப்பிற்குரிய ஐயா பழ நெடுமாறன் அவர்களைப்போல் வாயளவில் வீரவார்த்தைகளப் பேசி காரியத்தை கவிழ்க்காமல் இருந்தால் சரி.
யந்திரப்படகுகளை களவாடிச்செல்வது
இந்திய மீனவர்களை ஏவி விடுவது இந்திய மீனவர் கூட்டத்துக்கு மத்தியில்
இருந்து இலங்கை இராணுவம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது
சிங்கள இராணுவ உடை அணிந்து இந்திய மீனவகளை கொண்று விட்டு ஓடுவது
இவ்வளவும் புலிகளின் சாமர்தியம்.நீண்ட காலச் சாமர்தியம் வெற்றி அளிக்க தொடங்குவது போல் தெரிகிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கச்சத் தீவில் தேசியக்கொடி ஏதுவ ஏதுவ யாழ் தமிழர்கள் என்ன இலுச்சயரகள என்ன பார்க்கலாம்
இந்தியாவிற்கு வடக்கில் பாகிஸ்தானுடனும், தெற்கில் இலங்கையுடனும்
தீயை மூட்டிவிடும் இந்துக்கட்சி. இவர்களிற்கு தமிழர்களிலும் அக்கறையில்லை
தமது நாட்டிலும் அக்கறையில்லை. இருந்திருதால் கச்சைதீவில்
பாரிய இந்துக் கோவிலை கட்டி வணங்கி வந்திருந்தால் இலங்கைக்கு
கொடுபட்டிருக்காமல் தடுத்திருக்க்லாம். இந்துபயங்கர்மாக மாறும் புலிபயங்கரவாதமேயிது.-துரை