Saturday, May 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஓரினச் சேர்க்கைதான் இந்தியாவின் பிரச்சனையா?:தொம்பன்

இனியொரு... by இனியொரு...
07/24/2009
in அரசியல்
0 0
4
Home அரசியல்

 hs1ஓரினச் சேர்க்கை தொடர்பான விவாதங்கள் நடந்ததைத் தொடர்ந்து டில்லியில் கருத்துத் தெரிவித்த கிறிஸ்தவ மத குரு. இது இந்தியக் கூட்டுக் குடும்ப வாழ்வை சிதைப்பதோடு இந்திய மரபை குலைத்து விடும் என்றார். இந்துச் சாமியார் பாபா ராம்தேவும், இந்து முன்னணி ராமகோபாலனும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் இதே கருத்தை பிரதிபலித்தார்கள். தங்கள் மதங்கள் வழங்கியிருக்கும் புனிதக் கடமைகளை இந்த ஓரினச் சேர்க்கை குலைப்பதாக இவர்கள் கருத்துத் தெரிவித்த அதே நேரம். இந்திய அரசு ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவே இருந்தது. வலுவான எதிர்ப்பு ஒன்று உள்துறை அமைச்சகத்தால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சாதகமில்லாமல் போயிருக்கும். டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டிருக்கும்.முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவியில் இருந்த போதே ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து கருத்துக்கள் எதுவும் இல்லை என்றாலும் அது இம்முறை மௌனமாகவே இருந்தது. மிக எச்சரிக்கையாக இவ்விஷயத்தை கையாண்டது. ஏனென்றால் ஓரினச் சேர்க்கை கலாசாரத்தை பிரதான மூன்று hs4மதங்களுமே எதிர்க்கின்றன. கொஞ்சம் பிசகிநடந்தாலும் மத்திய அரசை கவிழ்த்து விடும் ஆபத்து இதற்கு உண்டு என்பதால் எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள்.

 

ஆனால் இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் இந்த நீதிமன்ற அங்கீகாரத்தை நுணுக்கமாகப் பார்த்தால் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிற நாடு, மேற்குலகை முன்மாதிரியாகக் கொண்டு ஆசியாவில் ஒரு புதிய ஒழுங்கை கட்டமைத்துக் கொண்டிருக்கும் நாடு. இப்போது அதற்கு சுற்றுலா தொடர்பாகவும், இறுக்கமான சாதீய, குடும்ப அமைப்பிலிருந்தும் நாங்கள் மேற்குலகிலிருந்தும் வித்தியாசப்படவில்லை என்பதை உலகுக்குக் காட்டியாக வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது. பொதுவாக முற்போக்கு அறிவு ஜீவிகளால் ஆதரிக்கப்படுகிற ஹோமோ செக்ஸ், மரணதண்டனை கூடாது, மனித உரிமை மீறல்கள், போலி என்கவுண்டர்கள், போன்ற கோரிக்கைகள் கணக்கில் எடுக்கப்படாத நிலையில் ஓரினச் சேர்க்கையை மட்டும் ஏன் இந்தியாவில் அங்கீகாரத்திற்கு வருகிறது என்பதை யோசித்தால் நடந்திருக்கும் நல்ல விஷயத்திற்குப் பின்  காலனீய சிந்தனை மரபு ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். பொதுவாக இருபதாண்டுகளுக்கு முன்னர் வரை திருநங்ககைகள் குறித்த உறையாடல்கள் தமிழகத்தில் பொதுவெளியில் இல்லை. அப்போது தீவீரமாக பேசியவர்கள் சிறு குழுவினராக இருந்தனர். அவர்களின் கோரிக்கைகளை கவனிக்கவோ அது குறித்து ஒரு விவாதத்தை முன்னெடுக்கவோ  அக்கறையை ஆட்சியாளர்கள் யாரும் கொண்டிருக்க வில்லை. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் சிக்கியிருக்கும் இந்தியா 2004&ல் சுனாமி அலைகளால் தாக்கப்பட்ட போது மீனவ மக்களை குறிவைத்து ஏராளமான தன்னார்வக் குழுக்கள் களத்தில் இறங்கின. இந்தியாவில் முதலீடு செய்த போர்ட், பி.எம். டபிள்யூ, ஹூண்டாய், இன்னபிற பன்னாட்டு நிறுவனங்கள் சுனாமிக்கா கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களுக்காக செலவு செய்தன. அரசு செய்ய வேண்டிய வேலைகளை அரைகுறையாக தன்னார்வக்குழுக்கள் செய்தன. நிதி தீர்ந்ததும் அப்படியே போட்டு விட்டு இன்று அவர்கள் அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். ( தன்னார்வக் குழுக்களின் மிக பிரதானமாக குறியாக வன்னி மக்களும் இப்போது உருவாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது) சுனாமி மட்டுமல்லாது கலாசாரத் தளத்தில் பல் வேறு hs2குழுக்களை உருவாக்கி  களமிறக்கி விட்டன தனியார் நிறுவனங்கள். அவர்கள் ஹெச்.ஐ.வி கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளார்கள், திருநங்கைகள் என இவர்களின் உரிமைக்காகக் குரல் எழுப்புவதாக நிதிகளைக் கோரி அவர்களை ஒருங்கிணைத்து இந்தியா முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இதற்கு பெரும் ஆதரவும் கிடைத்தது. அந்த வகையிலேயே இது தன்னார்வக்குழுக்களுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் தோன்றுகிறது.

 

பாலினச் சிறுபான்மையோர் விஷயத்தில் நடந்திருக்கும் இவ்விஷம் மிகவும் நல்ல விஷயம்தான் அதை இந்தியா மாதிரியான ஒரு அரை நிலபிரபுத்துவ நாட்டிலிருந்து வரவேற்பது நல்ல விஷயமும் கூட, ஆனால் ஆண் வாரிசு சொத்துரிமை தொடர்பாகவும், இந்து மதம், சாதி, அதன் இன்னொரு அடுக்கான குடும்பம் என இவைகள் குறித்தெல்லாம் தன்னார்வக்குழுக்களுக்கு அபிப்பிராயங்கள் இல்லை. காரணம் அவர்ளுக்கு எல்லாமே நிவாரணம்தான். அரசியல் அல்ல ஓரினச் சேர்க்கை உரிமையை வென்று விட்ட ஒரு நாட்டில் மரணதண்டனைக்கு எதிராக குரலை உயர்த்த முடியாத சூழல். எந்த தன்னார்வக் குழுக்களும் இந்த மரண தண்டனை விஷயத்தை கையில் எடுக்கவில்லை. காரணம் இன்றைய காலனீய ஒழுங்கிற்கு அது தேவைப்படுகிறது. இந்தியாவில் அப்சல் குருவும் , பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங்கும் இருக்கும் வரை தூக்குக் கயிற்றின் கீழ் ஆடும் வரையிலேயே இந்தப் பதட்டத்தை அதிகரித்துச் செல்ல முடியும். இந்தப் பதட்டம் இப்பிராந்தியத்தில் நீடிக்கும் வரையே இந்திய, அமெரிக்க உறவுகள் நியாங்களைத் தேடி ஒன்றாகவே பயணிக்கும்.

 

ஓரினச் சேர்க்கையாளர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதமாக நீதிமன்றத்தில் முன் வைத்தது. ஓரினச் சேர்க்கை உறவு இயர்க்கைக்கு புறம்பானது என்று தண்டிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377&வது சட்டப் பிரிவு என்பது. 148 ஆண்டுகாலப் பழமையானது வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இயல்பிலேயே இயர்க்கைக்கு முரணாகவே இருக்கிறது என்று வாதிட்டார்கள். உண்மையிலேயே அப்படித்தான் தங்களை திருநங்கையாக உணரும் ஒருவர் இன்னொரு ஆணுடன் மனம் விரும்பி உறவு கொள்ளும் போது அது எப்படி இயர்க்கைக்கு விரோதமானது ஆகும். ஆனால் இந்த இடத்தில் திருநங்கைகள் ஒரு சிக்கலை எதிர் கொள்கிறார்கள். ஆணாகப் பிறந்து தன்னை பெண்ணாக உணரும் ஒரு திருநங்கை தன் உணர்வுக்கு எதிரான ஒன்றாகவே ஆண் குறியை உணறுகிறார். இது இயல்பாகவே அவரது மனதில் நிகழ்கிறது. அப்போது அவர் தன் ஆண்குறியை அகற்றி விட நினைகிறார். முன்னர் சேலம் போன்ற பகுதிகளில் கூர்மையான கற்களால் ஆண்குறியைச் சிதைத்து அகற்றுவார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் ஆண்குறியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யபப்படுகிறது இலவசமாக. ஆனால் அமெரிக்கா, பாங்காங் போன்ற வெளிநாடுகளிலும் சென்னை, மும்பை, புனே, டில்லி போன்ற நகரங்களிலும் ஆண் குறியை அகற்றி பெண் உறுப்பைப் பொறுத்த ஒரு இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறதாம்.  சாதாரண மருத்துவ மனைகளில் ஆண் குறியை அகற்ற மட்டும் இருபதாயிரம் ரூபாய் வரை ஆகிறதாம். ஆனால் எந்த தன்னார்வக்குழுக்களும் திருநங்கைகளுக்கு ஆண்குறிகளை அகற்ற பணம் கொடுப்பதில்லை. ,மாறாக அவர்களைக் காட்டி பணம் கறக்கவே தனார்வக்குழுக்கள் ஆர்வம் காட்டுகின்றன என திருநங்கைகளே குற்றம் சுமத்துகிறார்கள். ஆணாகப் பிறந்து தன்னை பெண்ணாக உணரும் ஒரு திருநங்கைகளில் 90% பேர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அல்லது அடித்துத் துரத்தப்படுகிறார்கள். தற்கொலை, கொலை, என பலவாராகவும் குடும்ப மேன்மை கருதி குடும்பத்தினரே திருநங்கைகளைக் கொன்றும் விடுகிறார்கள். வீட்டிலிருந்து வெளியேறிய நங்கைகளின்  வேட்கை முழுக்க ஆண்குறியை அகற்றுவதிலேயே இருக்கிறது. அது எப்போது தன் உடலில் இருந்து அகற்றப்படுகிறதோ அப்போதே அவள் விடுதலையாகிறாள். மூன்றாம் பாலினமாக மாற்றம் பெறுகிறார். அதற்கான உழைத்து சேமித்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து 60% திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் மனதளவில் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். காரணம் அவர்களிடம் பணம் இல்லை. இருபதாயிரம் இருந்தால் மட்டுமே இன்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும். அரசு மருத்துவ மனைகளுக்குச் சென்று இலவசமாக ஆணுறுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை என்கிற வசதி எல்லா மாவட்ட தலைநகர மருத்துவமனைகளிலும் இல்லை.

 

பதினைந்தாயிரத்தில் தொடங்கி ஐம்பதாயிரம் ரூபாய் வரை அறுவை சிகிச்சைக்கு செலவு செய்ய ஒரு திருநங்கை தயாராக இருந்தால் அவர் தன் விருப்பத்தைக் குலைக்கும் அடையாளத்தை அறுத்து எரிந்து விடலாம். ஆனால் உறுப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை இன்னொரு ஆணோடு உறவு கொள்வது என்பது இப்போதிருக்கிற சட்டத்தின் படி குற்றமே. இங்கே உணர்வு நிலை என்பது சட்டத்திற்கு முக்கியமல்ல அடையாளமே?ஆண் குறியுள்ள எவரும் ஆணே என்பதுதான் சட்டத்தின் அணுகுமுறை. ஆனால் இயர்க்கைக்கு முரணானான என்னும் தண்டனைப் பிரிவின் கீழ் சிக்கும் ஒரு ஓரினச் சேர்க்கை விருப்பத்தைக் கொண்ட ஆண் ஜோடிகளையும், பெண் ஜோடிகளையும்,  திருநங்கைகளோடு ஒன்று படுத்தி பார்த்து விட முடியாது.நார்மல் ஓரினச் சேர்க்கையாளர்களோடும், லெஸ்பியன்ஸ்சோடும், திருநங்கைகள்தான் தங்களை ஒன்றாக அடையாளப்படுத்திப் பார்க்கிறார்களே தவிர பெரும்பாலான ஓரினச் சேர்க்கையாளர்கள் மனதில் திருநங்கைகள் குறித்த பிம்பம் என்பது பொதுப்புத்தியில் என்ன பதிந்திருக்கிறதோ அதுதான். ஆக இங்கே விட்டுக் கொடுக்கும் நிலையில் இருப்பதும் அவர்கள்தான்.

 

 ஓரினச் சேர்க்கை என்பது பழக்க வழக்கங்களால் வருவது. பெரும்பாலான ஓரினச் சேர்க்கையாளர்கள் மேட்டுக்குடிகளாக இருப்பதும் பெரும்பாலான திருநங்கைகள் ஏழைகளாக இருப்பதும் இதில் ஆழமாக நோக்கப்பட வேண்டிய அதே நேரம் 148 பழமையான இயர்க்கைமுராணான என்கிற வரையறையின் கீழ் வரும் 377&வது பிரிவு மட்டும்தானா? இன்றைய இந்தியாவின் தண்டனை முறையில் இருக்கும் பல் வேறு சட்டங்களும், விவாகரத்துச் சட்டங்களும், பாலியல் வன்முறைச் சட்டங்களும், அரதப்பழையச் சட்டங்கள்தான். இந்திய அரசியல் சட்டத்தைக் காட்டிலும் நமது நீதிபதிகளும் ஆட்சியாளர்களும் இன்னும் மனுவின் நீதியையே வழக்கின் தீர்ப்பாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வர்க்க நிலையை கணக்கில் எடுக்காமல் வழங்கப்படும் தண்டனை முறை குறித்து எவ்விதமான கேள்விகளும் இங்கு இல்லை.

 

நீண்டகாலமாக இந்திய குழந்தைகளுக்கு மறுக்கப்படும் சமச்சீர் கல்விமுறை இன்றைய இந்திய காலனீய ஒழுங்கிற்கு எதிரான கொள்கையாக இருக்கிறது. வெள்ளை ருசியை நம் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் மெக்காலே கல்வி முறைதான் இன்னும் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே சமயம் மெக்காலே கல்வி முறைக்கு மாற்றாக ஓய்.ஜீ.பி குடும்பம், லதா ரஜினிகாந்த் குடும்பம், சோ ராமசாமி போன்றோர் குருகுலக் கல்வி எனப்படும் பார்ப்பனக் கல்விமுறையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் இந்துத்துவச் சாயலோடு இந்தப் பள்ளிகள் நடத்தப்படுவதால் இந்துச் சமூகத்தின் மேட்டுக்குடிகள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்ப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆரம்பக் கல்விக்கூடங்கள், நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகள் என கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பள்ளிகளைக் கொண்டு இயங்குவதுதான் தமிழக அரசின் கல்வித்துறை. இன்னமும் பெரும்பாலான ஏழைத் தமிழர்கள் அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயெ தங்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறர்கள்.விவசாயக் கூலிகள், தினக்கூலிகள், ரிக்ஷா தொழிலாளிகள்,கிராமப்புற ஏழைகள் என இவர்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும்  ஊழியர்களின் குழந்தைகள் கூட பக்கத்தில் உள்ள நகரத்து மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பப் பட்ட போது அந்த பள்ளிகளை தாங்கிப் பிடித்தது இந்த ஏழை மாணவர்கள்தான்.பாரபட்சமான கல்வித் திட்டத்தால் இந்த மாணவர்களின் கல்வித் திறன் குறைக்கப்படுகிறது. தமிழ் மட்டுமே தெரிந்து வளரும் இந்தக் குழந்தைகள் மீது சமூகம் ஒரு விதமான மெட்ரிக் மனோபாவ தீண்டாமையை கட்டவிழ்த்து விடுகிறது. படித்த பணக்கார வர்க்கமே இந்த தீண்டாமையை ஏழைக் குழந்தைகள் மீது தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

 

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்விக்கும் வேலைக்குமான வேறு பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.கல்வி என்பது சமூக அடிமைத் தளைகளை அறுத்தெரிந்து ஒரு மனிதன் சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டுவதும் அதன் படியே நடக்க அறிவால் தூண்டுவதும்தான் கல்வியின் பணி என்றும்.வேலை என்பது இந்த சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு உத்திரவாதம் அவளவுதான் என்று வேலையையும் கல்வியையும் பிரித்துப் பார்த்தார்.ஆனால் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் மெக்காலே கல்வி முறையைத்தான் நமது கல்வித் திட்டமாக நாம் வைத்திருக்கிறோம்.மெக்காலே கல்வித் திட்டத்தில் படிக்கும் ஒரு இந்தியக் குழந்தை உடலால் இந்தியராக இருந்தாலும் உணர்வாலும் ருசியாலும் வெள்ளையராக  வளர்வதுதான் மெக்காலேயின் கல்வித்திட்டம்.வழி வழிவாய மெக்காலே கல்வித்திட்டத்தை மனனம் செய்கிற நமது குழந்தைகள் பள்ளியில் அணியும் யூனிபார்மில் தொடங்கி அலுமினியத் தட்டேந்தி சத்துணவிற்காக நிற்கும் வரை தொடருகிறது இந்த தீண்டாமை. எல்லோருக்கும் ஆரம்பக்கல்வி, எல்லோருக்கும் சமச்சீர் கல்வி என்ற கோரிக்கை இன்றைய காலனீயவாதிகளால் ஏளனம் செய்யப்படுகிறது.

 

 

இது போல உறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு சட்டம் மனிதர் கழிவை மனிதர்களே அகற்றும் நடைமுறை தொடர்பானது. 1993&லேயே மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து தடை செய்யப்பட்ட விஷயம்தான் இந்த மனிதக் கழிவை மனிதனே அகற்றும் மிக இழிவான கேவலமான பணி. ஒரு மனிதனை மனிதக் கழிவுகளை அகற்றச் சொல்லி யார் உத்தரவிடுகிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் ஆறு மாதம் சிறைத்தண்டனை என்கிறது சட்டம். 1993&ல் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் சட்டத்தை முதலில் 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டது. 2006&ல் ஜெயலலிதா ஆட்சியின் முடிவில் அந்தச் சட்டத்தை தமிழகமும் ஏற்றுக் கொண்டது. ஆனால் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசுத் துறையின் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் கைகளால்தான் மனிதக் கழிவுகளை இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறார்கள்.பல முறை ரயிவே துறையில் இந்த முறையை ஒழிக்க முயர்ச்சிகள் எடுத்தாலும் அது எவ்வித பலனையும் அழிக்க வில்லை. இப்போது மீண்டும் மத்திய அரசு நாடு முழுக்க உள்ள நாற்பது லட்சம் கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.பார்ப்பன மரபில் இதெல்லாம் மனித இழிவாகவோ அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டதாகவோ தெரியும் போது இந்திய மனச்சாட்சி ஏன் ஓரினச் சேர்க்கையை மட்டும் அங்கீகரிக்கிறது என்பது காலனீய நோக்கில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம். தவிர ஓரினச் சேர்க்கை அங்கீகாரத்தை நானும் ஆதரிக்கிறேன்.

 

உணவுக்காகவும், கூலிக்காகவும் போராடும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் போராடுகிறார்கள். வசிப்பிடங்களுக்காக,உணவுக்காக, உழைப்புக்காக ஆனால் அரசோ உழைப்புக்கான ஊதியம் குறித்துப் பேசாமல் ‘‘வேலைக்கு உணவு’’ என்று பேசுகிறது. அப்படியானால் ஏழைகள் சோற்றால் அடித்த பிண்டங்கள்தானா? ஓரினச் சேர்க்கை மட்டுமேதான் இந்தியாவின் பிரச்சனையா? அதைத் தாண்டி இந்தியா வாழ்கிறதா?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ரோஹித்த போகொல்லாகம உத்தியோகப்பற்றற்ற விஜயங்கள்:3.5 மில்லியன் ரூபா மேலதிக செலவு!

Comments 4

  1. Barathi says:
    17 years ago

    ஒரினச் சேர்க்கையாளர்களை மனிதர்களாக குறைந்தது உயிர் உள்ள சீவிகளாகக்கூட ஏற்பதற்கு இந்த கேடுகெட்ட சமூகம் தயாராக இல்லை. பால் உறவுத்தேர்வை தெரிவு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் என்ற நியாயமான நியதியை முற்போக்கு பேசுகிறவர்கள்கூட இன்று ஏற்றக் கொள்ள தயாராக இல்லை. இந்த நியாயமான இந்தகோரிக்கைகளுக்காக நாம் எல்லோரும் சேர்ந்து குரல்கொடுக்கவேண்டும்.

    பாரதி.

  2. parthasarathi says:
    17 years ago

    india problem is sex and sex.because all the religius people and other confused indians more than centuries,its have to stop and people must have educate,other wise indian population might wipe out by aids and other virus.stop fooling snd start to learn.

  3. PURAM BOAKKU says:
    17 years ago

    I agree that More than gay rights capital punishement is amore important issue!

    //ஓரினச் சேர்க்கை உரிமையை வென்று விட்ட ஒரு நாட்டில் மரணதண்டனைக்கு எதிராக குரலை உயர்த்த முடியாத சூழல். எந்த தன்னார்வக் குழுக்களும் இந்த மரண தண்டனை விஷயத்தை கையில் எடுக்கவில்லை. காரணம் இன்றைய காலனீய ஒழுங்கிற்கு அது தேவைப்படுகிறது. இந்தியாவில் அப்சல் குருவும் , பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங்கும் இருக்கும் வரை தூக்குக் கயிற்றின் கீழ் ஆடும் வரையிலேயே இந்தப் பதட்டத்தை அதிகரித்துச் செல்ல முடியும். //

    கொலைகாரனுக்கு அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்க (அப்பாவிகளின் உயிரை எடுக்க) உரிமை உண்டு- ஆனால் சட்டம் கொலைகாரனுக்கு மரண தண்டனை வழங்க உரிமை இல்லை- என்பதுதான் பகுத்தறிவா? ஜனநாயகம் என்பது என்ன? கொடூரக் கொலைகாரனுக்கு, அப்பவிச் சிறுமியை கர்ப்பளித்து கொலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமை ஆக வழங்குவதுதான் சன நாயகமா? மேலை நாடுகளில் ஆயுள் தண்டனை என்பது 24 வருடம். அந்த ஆயுள் தண்டனையைக் கூட 3 ஆயுள் தண்டனை- 72வருடம் என்று வழங்குகிறார்கள்! நம்ப வூரில் அரசியல், பண, செல்வாக்கு உடையவன் நன்னடத்தை என்ற பெயரில் 8 வருடத்தில் வெளியே வந்து, வூருக்கு வந்து, ” டேய், நான் தலையைச் சீவிட்டு, உள்ளே போய்ட்டு, வெளியே வந்தவன்டா!” என்று மீசையை முறுக்கி, ‘அடுத்த கொலைக்கு நான் தயார்’ என்று சொல்லாமல் சொல்கிறான்! கொலை செய்தால், தூக்கு உறுதி என்று ஆகுமானால், கொலை செய்யத் தயங்குவான். உச்ச நீதி மன்றம், வழங்கிய தூக்கு தண்டனையைக் கூட, அரசியல் லாபத்துக்காக, அரசியல் வாதி தண்டனையை நிறைவேற்றாமல் விட்டு விடுகிறான். கொடூரமாக கொலை செய்தவன் அவன் எந்த இனத்தை, மதத்தை, மொழியை சேர்ந்தவன் ஆக இருந்தாலும் சரி, எந்தக் கட்சிக்காரன் ஆக இருந்தாலும் சரி அவனுக்கு மரண தண்டனை வழங்குவதுதான் சமூகத்துக்கு பாதுகாப்பு!குசராத் கலவரத்தில் 2000 பேரைக் கொலை செய்த கொடூரர்களையும், கோத்ரா ரயில் எறிப்பு சம்பவத்தில் 66 பேரைக் கொன்றவர்களையும் கண்டு பிடித்து மரண தண்டனை வழங்க வேண்டும்!

    இவர்கள் பரிவு காட்டுவது யாருக்காக? அப்பாவி மாணவிகளை, சம்பந்தமே இல்லாதவர்களை – துடிக்க துடிக்க நெருப்பில் கருக்கியவர்களுக்காக! உன் தலைவி உள்ளே போனால் இளம் மாணவிகளை ஏன் கொல்கிறாய்? ? உன்னைக் காக்க மனித உரிமை ஆர்வலர் வருவார், நமக்கு ஒன்றும் ஆகாது என்ற தைரியம் தானே?
    பில்லியனேர் மாமன், மச்சான்- உங்களுக்குள் சொத்து தகராறு என்றால்- நீங்கள் அடித்துக் கொள்ளுங்கள்- எதற்க்கு அப்பாவி கணினி பொறியாளர்களை கொல்ல வேண்டும்??

    மூவேந்தர் வழி வந்த முத்தமிழறிங்கர், கவிங்கர் அக்கா- இவர்களுக்கு பாதுகாப்புக்கு ஒரு குறைவும் இல்லை!!!
    இவர்களோடு அகிலம் எல்லாம் காக்கும் அங்காள பரமேசுவரியம்மா, முப்படைத் தளபதி, கரடியார், வீச்சரிவாள், தாங்கியார்- இவர்களுக்கும் பாதுகாப்புக்கு ஒரு குறைவும் இல்லை. ஒரு அடி தூரத்துக்கு 4 போலீசு! இது போதாது என்று தொண்டர் படை என்ற பெயரில் குண்டர் படை அணிவகுப்பு. இதை எல்லாம் மீறி
    அந்த எமன் கூட, இவர்களையோ, இவர்களின் உறவினர்களையோ, நண்பர்களையோ நெருங்க முடியாது!!!!
    எனவே ரவுடிகளின் காம வெறிக்கு சிக்கி மடிவது, வாய்க்காலில் நாற்று நாடும் அஞ்சலையும், BPO வீல்பணி புரியும் மலர்க் கொடியும் தான்! கொடீஸ்வரக் கோமான்களுக்கு, கோலோச்சுபவர்களுக்கு, மக்களை ஆண்டவர்களுக்கு, ஆச்சாரியார் என்ற போர்வையில் இருப்பவர்களுக்கு மரண தண்டனை ஒழிப்பினால் ஒரு பிரச்சினையும் இல்லை.
    சாதாரண குப்பனுக்கும், சுப்பனுக்கும், நசுக்கப் பட்டவனுக்கும், தாழ்த்தப் பட்டவனுக்கும், ஏழைக்கும் தான் பிரச்சினை. கோவில் திரு விழாவில் சிறிய வாய்த் தகராறில் ஆரம்பித்து தலைய வெட்டி தெருவில் உருட்டுற வீர விளையாட்டு- அதற்கு பதிலாக அடுத்த வருடம் பதில் தலைய வெட்டி தெருவில் உறுட்டும் வீர விளையாட்டு???எப்படி மாறும் இந்த நிலை???எனவே கொடூர குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். புரட்சி என்றால், ஏழை மக்களைக் காப்பது தான் புரட்சி! ஏழை மக்களின் தாலி அறுக்க படுவதை வூக்குவிப்பது புரட்சி அல்ல! !!! ஜால்ரா அடித்து காசு பார்க்கும் செயல் புரட்சியா?

  4. ashok - jaffna says:
    17 years ago

    சாதாரண மக்களுக்குப் புரியும்படி நியாயத்தைத் தெளிவுபடுத்தும் கட்டுரை பல விடயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. சிறந்த கட்டுரை. நாம் விரும்பும் சமூக ஒழுங்குமுறைக்கு மாறாக மனித இயல்புகள் தோன்றும்போது அந்த மனிதர்களை என்ன செய்வது? இதற்கு சட்டம்தான் வழி செய்ய வேண்டும். சட்டம்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தியா என்றொலென்ன இலங்கை என்றாலென்ன ஒரே வேலையைத் தான் செய்கின்றன. அவர்களின் நிகழ்ச்சிநிரலைக் கொண்டு வருகிறார்கள். வேலை செய்கிறார்கள்> தேவை முடிந்ததும் அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். உதாரணம் ஒன்று. யாழ்ப்பாணத்தில் ஒரு தொண்டு நிறுவனம் கடந்த வருடத்தில் தென்மராட்சியின் சில கிராமப் புறங்களில் படித்த சில இளம் பெண் பிள்ளைகளைச் சேர்த்து நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தது. கிராமத்திலுள்ள சில தகவல்களைச் சேகரிக்கும்படி அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். அவர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அந்த ஆட்கள் சென்றுவிட்டார்கள். இந்தப் பெண்கள் தாம் ஏதோ வேலை செய்வதாக நினைத்துக்கொண்டு தமக்கு ஒரு கட்டிடமும் நிதி உதவியும் கிடைத்தால் இயங்கலாம் என்று அரசியல் கட்சிகளிடம் சென்று உதவி கேட்டுத் திரிகிறார்கள்.
    வனனி முகாம்களுக்கு போதியளவு மலசலகூட வசதிகளையோ தண்ணீர் வசதியையோ ஏற்படுத்திக் கொடுக்க முடியாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அந்த மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்களை வழங்கப்போவதாக தரவுகளைச் சேகரித்துக்கொண்டு இருக்கின்றன. வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சில நிறுவனங்கள் கூறுகின்றன. எமது நாட்டிலேயே நல்ல கல்வி வாய்ப்பு இருக்கிறது> இலவசக் கல்வி இருக்கிறது. அவர்களை ஏன் நீங்கள் நாட்டைவிட்டு அகற்றப் பார்க்கிறீர்கள்? இங்கே உள்ள கல்வி அவர்களுக்குக் கிடைக்க சூழ்நிலை தான் வேண்டும். குளம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல உள்ளன. இவை நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டும். எமது நாட்டில் அமைதி திரும்ப இவர்கள் துரத்தப்பட வேண்டும். மனித உரிமை அமைப்பு என்ற பேரில் கூட இவர்கள் இயங்குவது எமக்கு நேர்ந்த அவலம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...