2009-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு. அமெரிக்க அதிபரான பாரக் ஓபாமாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆணு ஆயுதக் குவிப்பிற்கு எதிராகவும், உலக சமாதானத்திற்காக உழைத்ததற்காகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 10-ஆம் தியதி ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவ்விருதை அவர் பெற்றுக் கொள்கிறார். உலகெங்கிலும் உள்ள மூன்றாம் உலக நாடுகளை தனது அறிவிக்கப்படாத காலனிப் பகுதிகளாக அமெரிக்கா சந்தை நலன் கருத்து வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. என்பதுவல்லாமல் மத்தியகிழக்கிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும், கொடூரமான நேரடி மறைமுக யுத்தங்களை அமெரிக்கா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு கூட இப்போ காசுக்கும் அதிகாரத்திற்கும் அடிபணிந்துவிட்டதோ!
என்ன கொடுமை சார்!
அன்புள்ள inioru.com,
வேறு கோணத்தில் சிந்தித்தால் இப்படி விளங்கலாம்.
இதுவரை, உலக அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய சுயநலன்களுக்காக மட்டுமே பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளன.
மாறாக, இம்முறை ஒரு உலகப்பொதுநல தூர நோக்குடன், ‘உலக அமைதிக்கு ஒருகாலும் அமெரிக்க அதிபரால் குந்தகம் ஏற்படுத்தப்படக்கூடாது’ என்ற கண்டிப்பான நிர்பந்தத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தவேண்டியும், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி தரப்பட்டுள்ளது.
இது எப்படிஎன்றால், கிட்டத்தட்ட ‘திருடன்’ என்று நன்கு அறியப்பட்டவனிடம், அனைத்து சாவிகளையும் கொடுத்து, ஒரு பிரபல வங்கிக்கு காவல் வைத்து, அவனின் காவல் திறனை காண அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்திருந்தால், அவன் எப்பேர்பட்ட திருடனானாலும், திருடும் எண்ணம் வரவே வராதல்லவா? அதைத்தான்-அந்த கடிவாளம் போடுவதைத்தான்- நோபல் பரிசுக்கமிட்டி சமயோசிதமாக செய்துள்ளது.
என்னை கேட்டால் இந்த அமைதிக்கான நோபல் பரிசை உண்மையிலேயே பெற தகுதியானவர், இந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்ந்தெடுத்த அந்த நோபல் பரிசுக்கமிட்டி தான். வாழ்க அவர்களது அறிவும், பொதுநல சேவையும்.
அமெரிக்க ஜனாதிபதி வெறும் பொம்மையே. அவரை இயக்கும் உயரிய குழுவே முடிவுகளை எடுக்கும். இது பெரும் மு க்கள். நோபல் பரிசால் அமெரிக்க இயந்திரத்தில் எந்த மாற்றங்களும் வராது. நோபல் பரிசு தானும் ஓரு ஒஸ்கார் என நிரூபித்துவிட்டது..