இலங்கை போரில் இடம்பெயர்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போதுமான உணவு, சுகாதாரம் மற்றும் மலசல கூட வசதிகள் இல்லாமல் சிரமப்படு வதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த முகாம்களில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் சிவிலியனையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருக்கலாம் என்கிற சந்தேகக்கண்ணோடே இலங்கை அரசாங்கம் பார்பதாக, நீண்டநாட்களாக இலங்கை அரசியலில் இருக்கும் மிதவாத தமிழ் அரசியல் வாதியான ஆனந்த சங்கரி அவர்கள் தெரிவித்தார்.
BBC
ஆனந்தசங்கரி போன்றவர்கள் தங்களின் கடந்தகால தவறுகளை புனராலோசனை செய்யவேண்டும்! மகிநதாவின் “இலங்கையில் சிறுபான்மையினர் என்போர் இல்லை” என்பதன் உள்ளார்ந்தம்> எல்லாம் பெருமபான்மை என்பதே! தமிழ்மக்களின் தேசியம் சுயநிர்னய உரிமை தமிழ் கட்சிகள் என்பன இல்லாதொழிக்க> மகிநதாவின் குடும்ப அரசியல்> அரச சர்வாதிகாரத்தின் ஊடே புறப்பட்டுவிட்டது! இன்றைய நிலையில் தமிழ்தேசியத்தை பிரதிபலிக்கும கட்சிகள் தலைவர்கள் நிதானமாக> தமிழ்மக்களுடன் செயற்படவேண்டும்!