இன்று 20.1.2012 பிரித்தானிய அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் ஒன்று நடைபெற்றது. பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டம் சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்களை ஏற்படுத்துவதற்கு எதிராகவும், வரி அதிகரிப்பிற்கு எதிராகவும் நடைபெற்றது. போராட்டத்தின் குறித்த கட்டத்தில் போலிசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வேல்ஸ், ஸ்கொட்லாந்து போன்ற பகுதிகளிலிருந்தும் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் குறைந்தது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்ட்ருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்ஸ் பகுதியிலிருந்து 29 பஸ்களில் ஆர்ப்பாட்டக் காரர்கள் வந்திருந்தனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சி இப்போராட்டங்களுக்கு அரசியல் தலமை வழங்கப்படும் வரை அடுத்த நிலை நோக்கி நகர்த்திச் செல்லப்பட முடியாது என்றனர். ஆக, மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது ஒரு புறத்தில் கடமையாகவும் மறுபுறத்தில் அரசியல் தலைமைக்கான அவசியம் தேவையாகவும் முன்வைக்கப்பட வேண்டும் என்று கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
OCCUPY London.