Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்….. ஒரு கைது……-ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! : அஜித்

இனியொரு... by இனியொரு...
07/22/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
25
Home பிரதான பதிவுகள் | Principle posts
<font color=red>பொலிசாரால்  அழைத்துச் செல்லப்படும்  சங்கர்</red>
பொலிசாரால் அழைத்துச் செல்லப்படும் சங்கர்

அதிகாரத்தின் வெறித்தனத்திற்கு எதிராரான ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் அழிக்கப்படுகின்ற மனிதாபிமானம் மரணித்துப்போன சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இன்று காலை அதிகார வர்க்கத்தின் அநீதிகளைக் கண்டு கோபம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரை வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கடைந்தெடுத்த   பொய்க் குற்றச்சாட்டுகளோடு  கருணாநிதி அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அவர் அரசியல் கைதி கூட இல்லை. கிரிமினல். கொள்ளைக்காரர்களோடு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ஊடக சுந்திரத்திற்கு ராஜபக்ச இழைக்கும்  கொடூரங்களை விட இது எந்த வகையிலும் குறைந்தது அல்ல. காலை ஒன்பது மணி! சென்னை ஆரவரப்பட்ட ஆரம்பித்த நேரம்!! 34 வயதான சங்கரை 341.29(b)3235062(2) I.P.S என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட மதுரவாயல் என்ற பொலீஸ் சார்ஜண்ட் கைது செய்துள்ளார்!!!

உடனடியாகவே அவர் மீது பொய்வழக்க்குத் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சங்கரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த வருடம் தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யபப்ட்டவர் இந்த சங்கர்.

ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர் அதிகார பீடங்களின் ஊழல் மயப்பட்ட குணத்தை போட்டுடைத்தவர். இப்போது அவர் கைது செய்யப்பட்ட என்னகாரணம். சவுக்கு என்னும் இணையதளத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை அம்பலப்படுத்தி எழுதியதாகவும், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டுக்கு எதிராக எழுதியதாகவும், நக்கீரன் இதழின் ஆசிரியர் காமராஜ் அவர்களுக்கு எதிராக எழுதியதற்காகவும் இந்த மூன்று அதிகாரப் பிசாசுகளால் சங்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது ஊடகத்துறைக்கு கருணாநிதி அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை. நமது மௌனம்,  அரசின் செயலுக்கு வழங்கும் அங்கீகாரம். சங்கரை வழிப்பறி வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். வழிப்பறி வழக்கில் கைது செய்யப்படுகிற குற்றவாளிகள் உள்ளூர் ரௌடிகள் அடைக்கப்படும் செல்லில்தான் அடைக்கப்படுவார்கள். அப்படி சங்கரை சிறையில் அடைத்து சிறைக்குள்ளேயே ரௌடிகளை வைத்து தீர்த்துக் கட்டி விட்டு ரௌடிகளுக்கிடையே மோதல் ஒருவர் கொலை என்றூ கதையை முடிக்க இக்கும்பல் திட்டமிடுவதாகவும் செய்திகள் கசிகின்றன.

அன்பார்ந்த வழக்கறிஞர்களே! ஈழத் தமிழ் ஆதரவாளர்களே! புலம்பெயர் தமிழர்களே! இந்தப் பிரச்சனைகள் எல்லாமே ஈழத்தில் போர் நிறுத்தம் கோரிப் போராடிய தமிழக சக்திகளை ஊடகங்கள் மூலமாகவும் போலீஸ் துணையோடும் யார் எல்லாம் ஒடுக்கினார்களோ அவர்களே இப்போது சங்கரை கைது செய்திருக்கிறார்கள். நமது அரசியல் வேறு பாடுகளைக் களைந்து சங்கருக்காக குரல் கொடுப்போம். ……..சரி

சங்கர் எழுதியதாகச் சொல்லப்பட்ட அந்தக் கட்டுரையில் அப்படி என்னதான் இருக்கிறது…… எதற்காக ஜாபர்சேட்டும், நக்கீரன் காமராஜும் கருணாநிதியும் கொதிக்க வேண்டும். இதோ நீங்களே படியுங்கள் அந்தக் கட்டுரை.

ஒரு மகிழ்ச்சி…. ஒரு சோகம்…..

ஒரே நேரத்தில் இப்படி இரண்டு விதமான உணர்வுகள் வந்தால் அதை எப்படி அனுபவிப்பது ? அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

முதலில் சோகத்தை பகிர்ந்து கொள்வோம். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த, காவல்துறை ஐஜிக்கள் ஜாபர் சேட் மற்றும் சங்கர் ஜிவால் பிரியப் போகிறார்கள் என்ற செய்தியை சவுக்கு வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறது.

இரட்டையர்களாக இருந்து, தங்களின் இரண்டு ஜோடி காதுகளை, தமிழகத்தில் செல்போனில் பேசும் அத்தனை பேர் வாயிலும் வைத்து, ஒட்டு கேட்டு, மனித சமுதாயத்திற்கு, அரும்பெரும் பணியை ஆற்றி வந்த, இந்த இரட்டையர்கள் பிரியப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வருத்தமான செய்தி ? ஆம் நண்பர்களே.

சங்கர் ஜிவால், ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Research and Analysis Wing பிரிவுக்கு மாறுதலில் செல்ல இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான உத்தரவு வரப் போகிறது.

ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது, இந்தியாவின் வெளிநாட்டு, உளவு நிறுவனம். அமெரிக்காவின் சிஐஏ போல. இவர்கள் வேலை. அதாவது, வெளிநாட்டில் போய் ஒட்டுக் கேட்பது. அதுலதான் நம்ப ஆள் கில்லாடியாச்சே. இவரு, இவங்க அம்மா வயித்துல இருந்தப்பவே, மகாபாரத அர்ஜுனன் மகன் மாதிரி, ஒட்டுக் கேட்டவர் போலருக்கு.

சரி, இந்த சங்கர் ஜிவால் நெஜமாவே நல்லவரா ? கெட்டவரா ? இவரோட பின் புலத்தை சொல்லி விடுகிறேன். சவுக்கு வாசகர்களே முடிவு செய்யட்டும்.

சங்கர் ஜிவால் 1990ம் ஆண்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. இவர் பிஇ மெக்கானிக்கல் படித்த பொறியாளர். உத்தராகாண்டில் உள்ள அல்மோரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி பெயர் மம்தா சர்மா.

இவரது மனைவி மம்தா ஷர்மா பெயரில், “டி3டி டெக்னாலஜிஸ்“ என்ற ஒரு தொலைபேசி ஒட்டுக் கேட்கும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் ஆவணங்களின் படி, மம்தா சர்மா தொடங்கிய சில காலத்திலேயே, அவர் அந்நிறுவனத்திலிருந்து விலகி விட்டதாக கூறப் படுகிறது.

யாராவது, ஒரு நிறுவனம் தொடங்கும் போது இயக்குநராக சேர்ந்து விட்டு, தேவையான முதலீட்டை செய்து விட்டு, விலகுவதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?

காவல்துறை வட்டாரங்களில் விசாரித்ததில், இந்த நிறுவனமே, சங்கர் ஜிவாலின் நிறுவனம் தான் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நிறுவனம் எதற்கு தொடங்கப் பட்டது தெரியுமா ?
சங்கர் ஜிவால், ஐந்து ஆண்டுகள், தெற்கு மண்டல, போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் மண்டல இயக்குநராக பணி புரிந்தார். Narcotics Control Bureau என்று அழைக்கப் படும் இந்த நிறுவனத்தின் வேலையே, போதைப் பொருள் கடத்துபவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களை பிடிப்பதுதான்.

சட்ட பூர்வமாக ஒட்டுக் கேட்பது என்பது, மத்திய உள்துறைச் செயலாளரின் அனுமதியோடுதான் செய்யப் பட வேண்டும் என்பதற்காக NCB ல் உள்ள ரகசிய நிதியை பயன்படுத்தி, சட்ட விரோத ஒட்டுக் கேட்பு தொடங்கப் பட்டது.

சரி சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கலாம்.

அதை யார் செய்வது ? அப்போது, வெளிநாட்டிலிருந்து, இவ்வாறு சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கும் கருவிகள் வாங்கலாம் என்று திட்மிட்டார் சங்கர் ஜிவால்.

கருவிகளை ரகசிய நிதியிலிருந்து வாங்கி NCB அலுவலகத்தில் வைத்துக் கொள்ள முடியோதே ? அப்படி வைத்தால், சங்கர் ஜிவால், தோழர் தியாகுவைப் போல, “கம்பிக்குள் வெளிச்சங்கள்“ புத்தகத்தை இந்தியில் அல்லவா எழுத வேண்டியிருக்கும் ?

அதனால், ஒரு புதிய திட்டத்தை தீட்டினார் சங்கர் ஜிவால். அதுதான், இவரே பினாமி பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்குவது. இவ்வாறு நிறுவனத்தை தொடங்கும் பொறுப்பை வேறு யாரிடமாவது ஒப்படைத்து அந்த நபர் போட்டுக் கொடுத்து விட்டால்… … ?

அதனால் யாரையும் நம்பாமல், தன் மனைவியையே அந்நிறுவனத்தின் இயக்குநராக்குகிறார். ராப்ரி தேவி முதலமைச்சரானது ஞாபகம் இருக்கிறதா ? அதே ஸ்டைல் தான்.

சரி. சொந்த நிறுவனம் தொடங்குவதென்று முடிவாகி விட்டது. இதற்கு முதலீடு. அந்த சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கும் கருவி, 3 கோடிக்கும் மேல். இது 2005ல். இப்போது அதை விட லேட்டஸ்ட் வெர்ஷன் 8 கோடி ரூபாய்க்கு இஸ்ரேல் தயாரிப்பில் கிடைக்கிறது.

சரி நிறுவனம் மனைவி பெயரில் தொடங்கப் பட்டாகி விட்டது. இதற்கு முதலீடு எப்படி வந்தது ?. நிச்சயமாக, இவர் வாங்கும் சம்பளத்தில் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. இது பற்றித் தோண்டினால், இதை விட பெரிய பூதம் வருகிறது.

சங்கர் ஜிவால், NCB யின் மண்டல இயக்குநராக ஐந்து ஆண்டுகள் இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இவர் தென் மண்டல இயக்குநராக இருந்த போதுதான் மிக மிக அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. பல போடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டு பல்வேறு வழக்குகள் பதியப் பட்டன.

ஹெராயின் எனப்படும் போதைப் பொருளுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகம். இந்த ஹெராயின் மூன்று வகையாக பிரிக்கப் படுகிறது. தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 3
தரம் 1, சர்வதேச சந்தையில் ஒரு கோடி. தரம் 2, சர்வதேச சந்தையில் 60 முதல் 70 லட்சம். தரம் 3, சர்வதேச சந்தையில் 40 முதல் 50 லட்சம் விலை போகும்.

போதைப் பொருள் சோதனையின் போது, கைப்பற்றப் படும் போதைப் பொருட்கள், வழக்கு பரிசோதனைக்காக, 10 முதல் 20 கிராம்கள் எடுக்கப் பட்டு சோதனைச் சாலைக்கு அனுப்பப் படும். அதற்குப் பிறகு கைப்பற்றப் பட்ட பொருட்கள், NCBன் கோடவுன்களின் வைக்கப் பட்டிருக்கும்.

கோடவுன்களில் வைக்கப் பட்டிருக்கும் இது போன்ற பொருட்கள், வழக்கு முடியும் வரை அழிக்கப் பட மாட்டாது. வழக்கு முடிந்ததும், தீயிட்டு அழிக்கப் படும்.

இவ்வாறு கோடவுன்களில் இருந்த தரம் 1, ஹெராயினை, மூன்றாந்தர ஹெராயினை வைத்து மாற்றி விட்டு, முதல் தர ஹெராயினை, சர்வதேச மார்க்கெட்டில் சங்கர் ஜிவால் விற்று விட்டார் என்று ரகசியத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு மாற்றப் பட்டால், அந்த சரக்குகள் ஒரிஜினலா ட்யூப்ளிகேட்டா என்று சரிபார்க்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த வழக்குகள் முடியும் வரை கோடவுனில் இருக்கும். வழக்கு முடிந்தவுடன் தீயிட்டுக் கொளுத்தப் படும். இதை சரி பார்க்க வழியே இல்லை.
மத்திய அரசுப் பணி முடிந்து, சங்கர் ஜிவால் மாநில பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்ததும், சங்கர் ஜிவாலுக்கு, லேசாக கிலி பிடிக்கிறது.

ஒரு வேளை யாராவது கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது என்று. ஆனால், வழக்கு முடியும் முன், வழக்கு ஆவணங்களை அழிக்க நீதிமன்ற உத்தரவு வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு, வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளி சம்மதம் தெரிவிக்க வேண்டும். சங்கர் ஜிவால், 2006-2007 வாக்கில், புழல் சிறையில் போதைப் பொருள் வழக்கில் அடைக்கப் பட்டிருந்த, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங், சாம்சன், மற்றும் இவர்கள் வழக்கில் சம்பந்தப் பட்ட மேலும் இருவரிடம், இவர்கள் வழக்கின் சொத்துக்களை அழிக்க, சம்மதம் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஒரு அபிடவிட்டில் கையெழுத்துப் பெற முயற்சி செய்கிறார்.

இதில் ஒருவர் கையெழுத்துப் போட்டு விடுகிறார். மற்ற மூவரும், இந்த சொத்தை அழிக்க சம்மதம் தெரிவித்தால், ஏறக்குறைய குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும் என்பதால், மறுத்து விடுகின்றனர்.

இவ்வாறு, திருடனிடமே திருடி சங்கர் ஜிவால், டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கான முதலீட்டை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பதிவை படிக்கும் சிபிஐ அதிகாரிகள், தேவையான நடவடிக்கையை எடுப்பார்களா ?
இந்த டி3டி டெக்னாலஜிஸ் தனது வெப்சைட்டில், தாங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பில் நிபுணர்கள் என்று போட்டிருந்தார்கள்.

மேலும், தமிழக உளவுத்துறை தங்கள் க்ளையன்ட்டுகள் என்றும் போட்டிருந்தனர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கெல்லாம் தொடுக்கப் பட்டிருந்தது.
இப்போது,க்ளையன்ட்டுகள் என்ற லிங்க்கில், This page is under construction என்று வருகிறது. இந்த மாதிரியெல்லாம் நீங்க பண்ணுவீங்கன்னுதானே, நாங்க 20 இடத்துல அந்த பழைய வெப் பேஜ்ஜை சேவ் பண்ணி வைத்திருக்கிறோம். இப்போ என்ன பண்ணுவீங்க ? வெவ்வெவ்வே….

இதுதான் சங்கர் ஜிவாலின் பின்னணி. இப்போ இவரு நல்லவரா கெட்டவரான்னு நீங்கதான் முடிவு பண்ணணும்.

அடுத்ததா, அந்த மகிழ்ச்சியான செய்தி. அது என்ன தெரியுமா ?

எதிரியாக இருந்தாலும் ஒருவன் வீடு கட்டி, தொழில் விருத்தியடைந்து பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தால் சவுக்குக்கு மகிழ்ச்சியே. பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு சவுக்குக்கு உண்டு.

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், அரசின் விருப்புரிமை கோட்டாவில் வழங்கப் பட்ட வீட்டு மனையில், முதல்வரின் செயலாளராக இருக்கும் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரோடும், ஆளுநர் மாளிகையில் ப்ரோக்கராக இருக்கும் நஜிமுத்தீனோடும் நம்ப கர்ம வீரரோடும் இணைந்து, LandMark Constructions என்ற நிறுவனத்தோடு இணைந்து Flat கட்டி விற்கப் போகிறார் என்ற தகவலை சவுக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.

இதற்கான தொடக்க விழா அழைப்பிதழை இன்று சென்னையின் மிக மிக முக்கிய புள்ளிகளுக்கு வழங்கிய நஜிமுத்தீன், இவ்வாறு அழைப்பிதழ் வழங்கிய ஒரு நபர் “என்ன சார் இவ்வளவு நாளா இல்லாம திடீர்னு, கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்சுல இறங்கிட்டீங்க“ என்று கேட்டதற்கு, “எனக்காக இல்ல சார். ஜாபர் சேட்டுக்காகத்தான்.

ரெண்டு பேரும் சேந்துதான் பண்றோம். போற போக்கப் பாத்தா, அடுத்த வாட்டி டிஎம்கே வருமான்னு சந்தேகமா இருக்கு, சீக்கிரமா செட்டில் ஆயிடனும்னு சொன்னான். அவனுக்காகத்தான் இப்பவே ஆரம்பிக்கறோம்.

உங்களுக்கு Flat வேணும்னா சொல்லுங்க சார். “ என்று விட்டு, கவர்ண்மென்ட் மாறி விட்டால் மத்திய அரசுப் பணிக்கு போவதற்கு ஜாபர் சேட், இப்போதே தயாராகி விட்டதாகவும், இப்போது விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால், ஒரு ஆண்டு வரை ஜாயினிங் டைம் இருக்கும் Narcotics Intelligence Bureau வின் Regional Director General என்ற பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் தகவலையும் கூடுதலாக சொல்லியிருக்கிறார் நஜிமுத்தீன்.

ஆமாம் Flat constructionல் இறங்குவதற்கு அவருக்கு ஏது பணம் ? எப்படி முடியும் என்று கேட்பீர்கள். சவுக்குக்கும் அதுதான் ஆச்சர்யம்.

ஆனால் ஆதாரம் இருக்கிறதய்யா … இருக்கிறது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 06.06.2008 நாளிட்ட அரசாணை 2டி எண் 439ன் படி, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் ஜாபர் சேட்டின் மகள் ஜெ.ஜெனிபர் என்பவருக்கு, திருவான்மியூர் புறநகர் திட்டத்தின் கீழ், காமராஜர் நகர் (இங்கேயும் காமராஜா ?) என்ற இடத்தில் 4756 சதுர அடி மனை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஜெனிபர் அக்கா, நீங்க அப்படி என்னக்கா சமூக சேவை பண்ணீங்க ? சொன்னா, நாங்களும் அதே மாதிரி சமூக சேவை பண்ணி இவ்ளோ பெருசா இல்லைன்னாலும், ஒரு 1000 சதுர அடியில ஒரு ப்ளார் வாங்கிக்கிறோம். கொஞ்சம் சொல்லிக் குடுங்கக்கா ….

வீட்டு வசதி வாரியம், இந்த வீட்டு மனையின் விலை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று இருபது ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. இதற்கான மொத்த தொகையையும் ஜாபர் சேட்டின் மகள் ஜெனிபர் கட்டி விட்டதாக வீட்டு வசதி வாரிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவ்ளோ பணம் ஏது சார் உங்களுக்கு ?

உங்க எதிரி ஏ.கே.விஸ்வநாதன், வருமானத்திற்கு அதிகமா சொத்து சேத்துட்டதா அவர அரெஸ்ட் பண்றதுக்கெல்லாம் ப்ளான் போட்டீங்க… இதுக்கு உங்களுக்கு ஏது சார் வருமானம் ? எனக்கு தெரிஞ்சு, கவர்மெண்டுல நேர்மையா உழைச்சா இவ்வளவு சம்பளமெல்லாம் கொடுக்கறதில்ல.

ஒட்டு கேட்கறதுக்கு இவ்ளோ பணமா கொடுக்கறாங்க. நான் கூட எங்க பக்கத்து வீட்ல ஒட்டு கேட்டுப் பாத்தேன். எவனும் பத்து பைசா தர மாட்டேங்குறான்.
இதோடு இந்தக் கதை முடியவில்லை. இவ்வாறு தன் செல்ல மகளுக்கு அரசின் விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற ஜாபர் சேட், மகளின் பெயரில் உள்ள இந்த மனையை தன் மனைவி பர்வீன் பெயரில் மாற்றுகிறார்.

சின்ன பொண்ணுன்னு பிசினஸ் பண்ணும் போது தன் பெண்ணை ஏமாற்றி விடுவாங்கன்னு நெனச்சிருப்பாரோ ?

இன்னொரு தமாஷ் சொல்றேன் கேளுங்க. இவரு பொண்ணுக்கு வீடு கொடுத்த அரசாணையில் இவர் கொடுத்திருக்கும் முகவரி, எண் 23, ராஜா தெரு, கல்யாணி நகர் (மங்களகரமான பெயர்), திருவான்மியூர், சென்னை. (சார் உங்களுக்கு திருவான்மியூருலயே இன்னும் எத்தனை வீடு வேணும் ? வேற ஏரியா வாங்கியிருக்கக் கூடாது ?)

இவர் மனைவி, பர்வீன் கொடுத்திருக்கும் முகவரி, பழைய எண் 61, புதிய எண் 6, ஆர் ப்ளாக், 14வது தெரு, அண்ணா நகர், சென்னை 40. (சார் எப்படியாவது ட்ரை பண்ணி, புதிய தலைமைச் செயலகம் மாறியவுடன், அந்த பழைய ஜார்ஜ் கோட்டைய அரசு விருப்புரிமை கோட்டாவில் வாங்கிடுங்க. சூப்பர் பில்டிங். உங்க இமேஜுக்கு நீங்க இந்த வெள்ளை மாளிகையில இருந்தாத்தான் ஜம்முனு இருக்கும்)

இவுரு ஒருத்தரு ஆச்சா ? அடுத்தது கருணாநிதியோட செக்ரட்டரியா இருக்க ராஜமாணிக்கம். இந்த ஆள் ரிட்டையர் ஆகி எத்தனையோ வருஷம் ஆச்சு. காட்டுக்கு போற வயசுல, இந்த ஆள், செக்ரட்டேரியட்டுல உக்காந்துக்கிட்டு என்னா கூத்து பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா ?

இவரு பையன் பேரு துர்கா சங்கர். இவரும் சமூக சேவகராம். இவருக்கு நம்ம பிரபல சமூக சேவகரும், ஜாபர் சேட்டின் மகளும் ஆன ஜெனிபருக்கு வழங்கப் பட்ட வீட்டு மனைக்கு அடுத்த மனைக்கு அடுத்த மனை. இந்த மனை எண் என்ன தெரியுமா ? 538. இதன் மொத்த சதுர அடி 44668 சதுர அடி.

சரி இது ரெண்டுக்கும் நடுவுல 539 இருக்கே அது யாருதுன்னு நீங்க கேக்கறது தெரியுது. கொஞ்சம் இருங்க வர்றேன். இவரின் மனைக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஒரு கோடியே பன்னிரண்டு லட்சத்து தொண்ணுறாயிரத்து ஐநூற்று அறுபது ரூபாய். இவரும் மொத்த தொகையையும் செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவக்கின்றன.

இந்தத் தொகையை ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் செலுத்தினாரா, ராஜமாணிக்கமே செலுத்தினாரா என்பதை கடிதநிதி ச்சீ கருணாநிதிதான் சொல்ல வேண்டும்.
இப்போ அந்த 539 ப்ளாட் நம்பருக்கு வருவோம்.

இது யார் தெரியுமா ? நம்ப டர்ட்டீ பாய்ஸ் டீமுல இருக்கற கர்ம வீரர் தான். வேற யாரு. சும்மா சொல்லக் கூடாது சார். பேமிலியோட போட்டோவுல சூப்பரா இருக்கறாரு. நல்லா சிரிச்சுகிட்டு வேற இருக்கறாரு. நல்லா சிரிக்கட்டும். இப்போ கோபால் சிறை அனுபவங்களையும், நீதிமன்ற அனுபவங்களையும் எழுதுவது போல, இவரும் எழுதத்தானே போகிறார்.

இவருக்கு தன்னுடைய மனைவி ஜெயசுதா பெயரில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஜெயசுதா யார் ? வேற யாரு. அவரும் சமூக சேவகர் தான். (இவ்ளோ சமூக சேவகர்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் ஏன் இவ்வளவு அவலம் ? என்ன கொடுமை சார் ?) இவருடைய 539வது ப்ளாட் மொத்தம் 4764 சதுர அடி.

இவுரு படா கில்லாடி சார். இவரு பேர்ல இருக்கற காமராஜ் நகர்லே வாங்கிட்டாரு பாருங்களேன் ? இவரது மனைக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து, இருபத்தி எட்டாயிரத்து எண்ணுற்று எண்பது ரூபாய். இவரும் மொத்த தொகையையும், வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்தி விட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

(கோபால் சார். நக்கீரன்ல இவ்வளவு சம்பளமா கொடுக்குறீங்க ? அப்புறம் ஏன் உங்க நிருபர்கள், போற எடத்துலயெல்லாம் கவர் வாங்குறாங்க ? என்னமோ போங்க சார்.)
இவர்கள் அனைவரும் சேர்ந்து Land Mark construction என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்து கட்டுமானப் பணியை துவங்க இருக்கிறார்கள்.

Flat வேண்டுபவர்கள், ஜானி ஜான் கான் ரோட்டில் உள்ள பங்குதாரரையோ, உளவுத்துறையில் உள்ள பங்குதாரரையோ, தலைமைச் செயலகத்தில் உள்ள பங்குதாரரையோ, ப்ரோக்கர் நஜிமுத்தீனையோ அணுகவும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.

இப்போ புரியுதா சவுக்கின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று. எதிரியை வாழ்த்தும் பக்குவம் வேண்டுமையா, வேண்டும்.

http://www.savukku.net/2010/07/blog-post_19.html

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் ?

Comments 25

  1. அருண் says:
    16 years ago

    படுபயங்கரமாக இருக்கிறது. இவர்களை வீழ்த்த வேண்டியது அவசியப்பணி. மக்கள் விரோத ஜெயலலிதாவை விட படு மோசமான பாசிசச் சக்தியாக கருணாநிதி மாறி விட்டார்.

  2. அன்பு says:
    16 years ago

    நானும் சவுக்கு படித்திருக்கிறேன். பெரிய பத்திரிகை புடுங்கிகள் என்று சொல்பவர்கள் எழுத தயங்கும் விசயத்தை சவுக்கில் அம்பலப்படுத்திருக்கிறார்கள். இப்போது தான் அந்த துணிச்சல்க்காரர் சங்கர் என்பது தெரிய வந்திருக்கிறது. அவரின் துணிச்சலுக்கு வாழ்த்துகள்.
    அப்புறம் ஒரு தகவல் திருத்தம்.. சங்கரை வழிப்பறி வழக்கில் கைது செய்ய வில்லை. பைக்கில் போகும் போது எதிரே வந்த சுதாகர் என்பவரின் பைக்கில் மோதி அவரை அடித்ததாகவும், அவரை கொன்றதாகவும் காவாலித்துறை வழக்கு பதிவு செய்து அவரை ரிமாண்ட் செய்துள்ளது.
    நானும் பத்திரிகைக்காரன் தான் என்று பீற்றிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சியில் தமிழ் நாட்டில் தனிமனித சுதந்திரமே கிடையாது. அந்தளவுக்கு எல்லார் தொலைப்பேசியையும் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறார் ஜாபர் சேட். அதை கருணாநிதிக்கு ஐப்பாட்டில் போட்டும் கேட்க வைக்கிறார்… உங்கள் கொட்டம் அடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை…

  3. ranjini says:
    16 years ago

    ஈழத் தமிழர்களுக்காக உயிர் கொடுத்தவர்கள் ஷங்கர் போன்ற பத்திரிகையாளர்களும், ஏனையோரும். அவர்களுக்கு பிரச்சனை வரும் போது நாங்கள் எழுந்து நின்று குரல் கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் எமக்கு ஆதரவான உணர்வலைகள் இல்லாவிட்டால் வன்னியை மட்டுமல்ல எல்லா தமிழ்ப் பிரதேசங்களும் அழிக்கப்பட்டிருக்கும். ஷங்கர் தொடர்பான நிகழ்வுகளை எல்லா புலம் பெயர் தமிழ் இணையங்களும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்க வேண்டும். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு போன்றவற்றிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

  4. ramanan says:
    16 years ago

    நக்கீரன் நடத்தும் தாதாக்களின் சுய ரூபத்தைக் கிழித்தவர் சங்கர். அவருக்கு இந்தநிலை. அதுவும் உயர் பதவியிலிருந்த அவர் போன்றோருக்கே இந்தநிலை என்றால் மற்றவர்கள் எம் மாத்திரம்? இது தான் கடைசிச் சந்தர்ப்பம். போராட்டங்கள் வெடிக்காவிட்டால் கண்மூடி முழிக்கும் போது எல்லாமே முடிந்துவிடும்.

  5. அருண் says:
    16 years ago

    சங்கர் மிகவும் நேர்மையானவர் கருணாநிதியின் ஆதிக்க கும்பலை அம்பலப்படுத்தியதுதான் சங்கர் செய்த தவறு என்றால் நாம் சங்கரை பாதுகாக்க வேண்டும். இந்தப் பிரச்ச்சனையை மனித உரிமை அமைப்புகளுக்கு கொண்டு செல்வோம்.

  6. மருது சங்கர் says:
    16 years ago

    ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்டர் நக்கீரன் போன்ற பத்திரிகைகள் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து பிழைக்கும் போது எந்த பின்பலமும் இல்லாமல் சவுக்கு இத்தனை தைரியமாக கருத்துக்களை எழுதுவது பாராட்டுக்குரியது.சவுக்கை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. யாராவது துணை முதல்வர் ஸடாலின்,அல்லது மத்தியஅமைச்சர் அழகிரி கவனத்திற்கு இந்த சவுக்கை கோண்டு போனால் கண்டிப்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு சவுக்கடி கிடைக்கும்.
    மற்றபடி இதெல்லாம் கனிமொழி ஆட்கள் கருணா கண்டுகொள்ள மாட்டார்.

  7. பா.முருகன்.க்ராய்டன்,லண்டன் says:
    16 years ago

    இவ்வளவு நாளும் இப்படி ஒரு இணையம் இருப்பதே தெரியாமல் இருந்தது.சவுக்குக்கின் கட்டுரைகள் பிரமாதம்,பழைய ஜூவி படித்த பீலிங் கிடைத்தது.சவுக்கை நடத்தும் நபர்கள் இதை பிரிண்டில் கொண்டுவந்தால் நல்லதாய் இருக்கம்,அவர்களின் காண்டக்ட் நம்பர் இருந்தால் இந்த பதிவிலேயே யாராவது போடுங்கள்.அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும்.

  8. மதி says:
    16 years ago

    உண்மையில் வியந்தே போனேன் சிறப்பான இணையதளம். தமிழின் நம்பர் ஓன் புலனாய்வு இதழ் என்று நக்கீரன் காரன் இதுவரை ஊரை ஏமாற்றியிருக்கிறான். சவுக்குதான் உண்மையான புலனாய்வு இணையம். இதை மிகப்பெரிய அளவில் பரப்பி விட வேண்டும். இவனுங்களை பகைச்சுட்டு இவங்கே எவனும் தொழிலும் செய்ய முடியவில்லை. எதையும் பேசவோ, எழுதவோ முடியவில்லை. கருணாநிதி ஒழிந்தால் சரி என்ற மூட்டிற்கு வந்து விட்டோம்.

  9. kalagam says:
    16 years ago

    அடக்குமுறை ஒழிக

  10. sivashankar says:
    16 years ago

    இந்த வாரத்தின் மூன்றாவது செய்தி. மதுரை தினபூமி ஆசிரியர் கைது – சவுக்கு பதிவு ஆசிரியர் கைது – உமாசங்கர் சஸ்பெண்டு. தமிழ்நாடு யாரோ ஒருவர் நினைக்கும் திசையில் போகிறது. சர்வம் சிவார்ப்பனம்

  11. அன்பு says:
    16 years ago

    //அவரை கொன்றதாகவும் காவாலித்துறை வழக்கு பதிவு செய்து அவரை ரிமாண்ட் செய்துள்ளது//
    மன்னிக்கவும், கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் என்று வரவேண்டியது கொன்றதாகவும் என்று பிழை ஏற்பட்டுள்ளது.

  12. கருப்பு says:
    16 years ago

    தமிழகத்தில் பத்திரிகையாளர்களில் நிலை பற்றி நினைக்கும் போது வேதனையாகவும் நகைச்சுவாயகவும் இருக்கிறது. எப்போதுமே ஊடகங்களோ ஊடகவியளர்களோ பொதுப் பிரச்சனைகளுக்காக போராடியதில்லை. இலங்கை விஷயத்திலும் இப்போது அதிகார ஓநாய்கள் வேறுபாட்டில்லாமல் தங்கள் மீதே பாய்வதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் என்ன செய்ய முடியும் எல்லா ஊடகங்களும் கருணாநிதி கையில்தான் இருக்கிறது. அல்லது கருணாநிதியைச் சார்ந்து தொழில் செய்யும் முதலாளிகளாகவே ஏனைய ஊடகவியளார்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்

  13. கருப்பு says:
    16 years ago

    இந்த அதிகார வெறி பிடித்த கும்பல் அரசு நிலத்தை சமூக சேவகர்கள் என்று வளைத்திருக்கிறார்கள். ஜாபர்செட் செய்யும் சமூக சேவை என்ன? எல்லாவன் போனையும் ஒட்டுக் கேட்பது. கருணாநிதிக்கு மாமா வேலை பார்ப்பது இத்துதானே? சரி அவந்தான் போலீஸ்காரன். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சலம்பும் நக்கீரன் காமராஜுக்கு என்னவானது……….அவரது மனைவி என்ன சமூக சேவை செய்திருக்கிறார். சத்குரு ஜக்கிவாசுதேவின் பள்ளியில் படிக்கும் அங்கே படிப்பதே கோடீஸ்வரக் குழந்தைகள்தானாம். சத்குவைப் புகழ்ந்து எழுதுவதும் கருணாநிக்கு சொம்பு தூக்குவதும்தான் உங்கள் சமூக சேவையா? பத்திரிகை தர்மம் என்றால் என்னவென்று சவுக்குக் காரர்களிடம் கற்றுக் கொள்ளய்யா?

  14. மனிதம் says:
    16 years ago

    நடிகைகளுக்குச் சொறிந்து விடுவதும்.. ஆபாசமாக அட்டையில் போட்டு விற்று வயிறு வளர்ப்பதும்தான் நக்கீரன் செய்த வேலை. அனால் நான் எங்கேனும் சவுக்கில் தனிப்பட்ட முறையில் காமராஜையோ, கோபாலையோ திட்டியிருப்பார்கள் என்று எல்லா பதிவுகளையும் படித்தேன். எங்குமே அநாகரீகமான முறையில் திட்டவோ ஆபாசமாகவோ எழுத வில்லை. நக்கீரன் ச்வுக்கிடம் பத்திரிகை என்றால் என்னவென்பதை கறக வேண்டும்,

    • THAMILMARAN says:
      16 years ago

      தமிழர்கள் இப்படி சண்டை பிடிப்பதால்தான் அய்ந்து வீதமே இருக்கும் பிராமணர் தமிழர் மீது சவாரி செய்கின்றனர்.ஜீனியர் விகடன் மீதெல்லாம் நமக்கு கோபம் வருவதில்லை குமுதம் மீது கோபம் வரும் நக்கீரன் மீது பாய்வோம்.தமிழராய் இருப்போம் தமிழனை வாழ வைப்போம்.பத்திரிகையாளர் கலைஜர் ஆட்சியில் எதுவாக இருந்தாலும் தட்டிக் கேட் போம்.

      • மருது சங்கர் says:
        16 years ago

        தமிழனை கொல்ல துணைநின்ற கருணாவும் கருணாநிதியும் தமிழர்களா..?கருணாநிதி ஆட்சியில் எதை யார் தட்டுக்கேட்டார்கள்.எல்லா பத்திரிகைகளும் அரசு விளம்பரங்கள் இன்னும் பல சலுகைகளுக்காக கருணாநிதிக்கு சாமரமல்லவா வீசிக்கொண்டிருக்கிறது,சங்கராச்சாரி வழக்கை பலவீனமாக்கி அவனை தப்ப வைப்பது எந்த தமிழன்.பாப்பானுக்கு இட ஓதுக்கீடு கேட்கும் சங்கர மடத்தின் புரோக்கர் எஸ்,வி சேகரை தி.மு.க பொதுக்குழுவிற்கு அழைத்து ஙந்த து எந்த தமிழன்.
        மதுரையுல் பத்திரிகையாளர்களை அவன்களது குடும்பச் சண்டையில் உயிரோடு கொழுத்திவிட்டு அதன் வெப்பத் தணிவதற்குள் இதயம் இனித்தது கண்கள் பனித்தது எழுதியது எந்த தமிழன்.மகன் துணை முதல்வர்.இன்னொரு மகன் மத்திய அமைச்சர் முறையற்ற உறவில் பிறந்த கவிதாயினிக்கு ராஜ்யசபா.சாதாரண மனிதன் செய்தால் கள்ளக்காதல் அதையே கருணாநிதி செய்தால் போலிஸ் பாதுகாப்பா.தமிழகத்தை பீடித்திருக்கும் இந்த பீடைக்கா இவ்வளவு நாளும் ஓட்டு போட்டோம் என்ற குற்ற உணர்ச்சி வாட்டுகிறது.ஜெயல லிதாவே பரவாயில்லை.ஒழுக்கமற்ற நேர்மையற்ற அரசியல் சட்டத்திற்கு புறம்பான அந்த கருணாநிதி கருமாதி ஆகும் நாளே தமிழுக்கு பொன்னாள்.

        • Soorya says:
          16 years ago

          இதுவெல்லாம் தமிழ்மாறனுக்கு விளங்காது!

  15. பு.மணி says:
    16 years ago

    சவுக்கின் மூலம் அம்பலப்படுத்தப்பட்ட இந்த மோசடி அதிர வைக்கிறது.தேள் கொட்டிய திருடன் போலில்லாமல்.இவர்கள் சவுக்கில் எழுதியவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.சமுக சேவகர்கள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை கருணாதியின் தயவில் அபகரித்த இந்த மாபாவிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.இவர்கள் என்ன சமுக சேவைகள் செய்தார்கள்?இவர்களது சேவையால் பயன் அடைந்தவர்கள் யார்? என்பதையும் இந்த அரசு விளக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கருணாநிதி முன்பு முதல்வராக இருந்த போது வறுமையில் வாடிய கவிஞர் வைர முத்துவிற்கும்,நிர்மலா பெரியசாமி என்ற சன் டிவி நியூஸ் ரீடருக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டன.இவர்களும் சமுக சேவகர்கள்தானா?என்பதையும் இதேபோன்று எந்தெந்த ஆட்சிகாலத்தில் எந்தெந்த சமுக சேவகர்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன என்பதையும் அதன் விபரங்களையும் சவுக்கு வெளியிட வேண்டும்.
    சவுக்குக்கு உலகத் தமிழர்கள் ஆதரவு தரவேண்டுத் .நண்பர்கள் இந்த இணையத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும்.நக்கீரன் காமராஜ் என்ற பத்திரிகையாளர் இப்படி அரசு நிலைத்தை வளைத்துப்போடுவார் என்பது அதிர்ச்சியாய் இருக்கிறது.இனி நான் நக்கீரனை வாங்க மாட்டேன்.யாரும் இனி நக்கீரனை வாங்க வேண்டாம்.வீரப்பனுக்கே அல்வா கோடுத்த கோபால்தான் கேடு கெட்டவன் என நினைத்திருந்தேன்.காமாரஜ் கோபாலுக்கே அல்வா கோடுத்து அசத்திட்டார்ணேன்.

    • மாயாண்டி says:
      16 years ago

      நண்பர்களே
      தக்கீரன் கோபாலுக்கு போன் போட்டு சேலஞ்ச் தொடரில் இதைப்பற்றியும் எழுதச் சொல்லுங்கள் நிறையபேர் போன் பண்ணினால் அண்ணன் இதைப்பற்றி கண்டிப்பாக எழுதுவார்.

  16. திருமலை says:
    16 years ago

    ராஜாத்தியம்மாள் ஊரெல்லாம் நிலத்தை வளைத்துப், கனிமொழி, அழகிரி, ஸ்டாலின்,செல்வி,துரைதயாநிதி,உதயநிதி,மு.க தமிழரசு, கலாநிதி, தயாநிதி,என்று ஒரு கும்பலே தமிழகத்தை கூறு போட்டுக்கொண்டிருக்கிறது.இந்த நிலமையில் ஜாபர் சேட்,காமராஜ்,போலி பாதிரி ஜெகத்கஸ்பர் போன்றோர் மறுபக்கம் இப்படி கிடைப்பதை வெட்கமில்லாமல் சுருட்ட நினைத்தால் தம்ழ்நாடு இனி என்னாகுமோ?

  17. கே.கண்ணன் says:
    16 years ago

    சவுக்கு இன்னும் மோசடிக் கார்ரககளின் முக மூடியை கிழிக்க வேண்டும்.சவுக்கை அறிமுகப் படுத்திய இனிஒரு இணையத்திற்கு நன்றி

  18. davidraja says:
    16 years ago

    சிபிஎம், சிபிஐ, இத்தியாதி எல்லாம் என்ன புடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்? ஓட்டுக்கு மட்டும் புரட்சி தேவைப் படுகிறது புண்ணாக்கு ………………

  19. anpan says:
    16 years ago

    தமிழக ஊடகங்கள் செத்துப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது.எண்பதில் இதே கருணாநிதி மத்திய அரசின் தூர்தர்ஷனுக்கு எதிராகவெல்லாம் போராடுவது போல் நாடகமாடி……முரசொலி மாறனின் வாரிசுகளுக்கு கட்சி நிதி பல கோடியை எடுத்துக் கொடுத்து சன் டிவியை துவங்கினார். இன்று தமிழகத்தின் தின, வார இதழ்கள் எல்லாமே அவர்களின் குடும்பத்தின் கைகளில், எஞ்சியிருக்கும் முதலாளிகள் கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்தே இருக்கிறார்கள். விகடன் முதலாளி சீனிவாசனுக்கு சன் டிவியில் சீரியல் போகும் போது எப்படி உமாசங்கருக்காகவோ, அல்லது சங்கருக்காவோ ஜூவியோ, ஆனந்த விகடனிலோ செய்தி வெளியிடுவார்.,

  20. பாலன் says:
    16 years ago

    சரி குடுமுதம் மட்டும் ஒழுங்கா என்ன வரதராஜனுக்கும், செட்டியாருக்கும் பிரச்சனை இடையில் புகுந்த கருணாநிதி. இந்தச் சண்டையைப் பயன்படுத்து செட்டியாருடன் சேர்ந்து சமசரம் பண்ணுகிறேன் என்று குமுதத்தைக் கைப்பற்றி விட்டார். அரசைப் பற்றியோ, கருணாநிதிக்கு எதிராகவோ பாருங்காள் ஒரு துண்டுச் செய்தி கூட குமுதத்தில் வருவதில்லை. இப்போ குமுதத்தின் 20% வீதப்பங்குகள் ஸடாலின் கையில் இருக்கிறது. இனி குமுதம் மீள முடியுமா? நக்கீரன் என்பது பொறுக்குப் பண்ணாடை பத்திரிகை………அரசு காண்டிராக்டுகளை வளைத்துப் போட்டு நக்கீரன் கோபால் மாமா வேலை பார்த்து சம்பாத்திறார். இதுல வேற முறுக்கு மீசை வேற………செய்ற மாமா வேலைக்கு எதுய்யா முறுக்கு மீசை……….

    • xxx says:
      16 years ago

      குப்பைக்கூடையான குமுதத்தில் மீட்கும்படி என்ன இருந்தது?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...