நாட்டைப் பதற்ற நிலையில் பேணும் நோக்குடன் மகிந்த ராஜபக்ச பாசிச அரசு பொதுமக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். நேற்றைய தினம் ௨1.08.2011- புத்தளத்தில் பொலீசாரிற்கும் பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இன மத வேறுபாடுகள் இன்றி அரசிற்கு எதிரான போராட்டமாக நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் உக்கப்படுத்துவது இன்றைய ராஜபக்ச சர்வாதிகார அரசைப் பலவீனப்படுத்தும்.
இன்றைய தலவல்களின் அடிப்படையில் புத்தளம் பகுதியில் இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் காணப்படும் இனவாத அமைப்புக்கள் இப் போராட்டங்கள் குறித்து மௌனம் சாதிப்பது விசனத்திற்குரியது.