ஒரிசா: விஎச்பி வெறியாட்டம் ; பெண் உயிரோடு எரித்துக் கொலை; கிறிஸ்தவ தேவாலயங்கள் தீக்கிரை.

26.08.2008.
ஒரிசா மாநிலத்தில் விஎச்பி தலைவர் கொல் லப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கிறிஸ் தவ தேவாலயங்களுக்கு எதிராகவும், அப்பாவி கிறிஸ்தவ மக்களுக்கு எதிரா கவும் விஎச்பி – பாஜக – பஜ் ரங் தள் குண்டர்கள் பெரும் அராஜக தாக்குதலை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். ஏரா ளமான தேவாலயங்களை தீக்கிரையாக்கினர்.

ஒரிசா மாநிலத்தில் பழங் குடியின மக்கள் நிரம்பிய மாவட்டம் காந்தமால். இந்த மாவட்டத்தில் இயங் கும் கிறிஸ்தவ தேவால யங்கள், பழங்குடியின மக் களை மதமாற்றம் செய் வதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு விஎச்பியினர் கிறிஸ்தவ மக்களுக்கு எதி ராக பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். காந்தமால் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களி லும், நகரங்களிலும் 100-க் கும் மேற்பட்ட தேவால யங்களை கடுமையாக தாக்கி சேதப்படுத்தி தீக்கி ரையாக்கினர். தேவாலயங் களில் பணிபுரியும் கிறிஸ்தவ பாதிரியார்கள், கன்னி யாஸ்திரிகளை தாக்கி, வனப் பகுதிக்கு விரட்டினர்.

இத்தகைய மதவெறி அட்டூழியத்தை தலைமை யேற்று நடத்தியவர் அப் பகுதி விஎச்பி தலைவரான சுவாமி லட்சுமணானந்தா சரஸ்வதி என்பவர் ஆவார். 85 வயதான இவர் தொடர்ந்து மதவெறி நட வடிக்கைகளை தூண்டி விட்டார்.

இந்நிலையில், காந்த மால் மாவட்டம் புர்பானி யில் உள்ள அவரது அலுவ லகத்தில் ஞாயிறன்று இரவு புகுந்த அடையாளம் தெரி யாத நபர்கள், லட்சு மணானந்தாவையும், அவ ருடன் இருந்த மேலும் 4 பேரையும் சுட்டுக் கொலை செய்தனர்.

இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. விஎச்பி வெறியர்கள் கொடிய ஆயு தங்களோடு வீதிகளில் இறங்கி அப்பாவி கிறிஸ்தவ மக்களை குறிவைத்து தாக் கினர்.

ஞாயிறன்று நள்ளிரவு துவங்கிய இந்த வன்முறை திங்கட்கிழமை முழுவதும் தொடர்ந்தது. காந்தமால் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒரிசா முழுவதும் விஎச்பி – பாஜக குண்டர்கள் கிறிஸ் தவ தேவாலயங்களில் புகுந்து அடித்து நொறுக் கினர். ஏராளமான தேவா லயங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

காந்தமால் மாவட்டத் தில் பலிகுடா, பர்காமா, திஹாபலி, உதயகிரி உள் ளிட்ட பகுதிகளில் கிராமப் புற தேவாலயங்கள், வழி பாட்டுக் கூடங்கள் அனைத் தும் தீக்கிரையாக்கப்பட் டன. தலைநகர் புவனேஸ் வரத்தில் முழு அடைப்பு என்ற பெயரில் காவிப் படையினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

புல்பானி நகரில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்த போதிலும், அதையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட வெறியர்கள் கொடூர ஆயுதங்களுடனும், கொலைவெறியுடனும் அப்பாவி கிறிஸ்தவ மக் களை தேடித் தேடி தாக் கினர்.

காந்தமால் மாவட்டத் தில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக் கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கையில்லா தீர்மானம்

மாநிலம் முழுவதும் விஎச்பியினரின் வெறியாட் டத்தால் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. பாஜக ஆதரவுடன் ஒரிசா வில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் பிஜூ ஜனதா தள தலைவரும், முதல மைச்சருமான நவீன் பட் நாயக், இந்த வன்முறையை இன்னும் கண்டிக்கவில்லை.

இந்நிலையில், பாஜக – பிஜூ ஜனதா தள கூட்டணி ஆட்சியின் மீது நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை திங்களன்று சட்டமன்றத் தில் காங்கிரஸ் கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதனிடையே, அரசுக்கு ஆதரவு அளித்து வரும் பாஜக, ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூறியுள் ளது. இதனால் நவீன் பட்நாயக் அரசுக்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது.