ஒபாமா வருகையை எதிர்த்து மாவோயிஸ்டுக்கள் கேராளாவிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவை அதன் பிரதமர் மோடியுடன் இணைந்து கொள்ளையிடுவதற்கான திட்டங்களைச் செயற்படுத்த ஓபாமா குழு அணுசக்தி ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளது. தில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்ப்பாட்டங்களுக்குத் தடைவித்திக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டம், திருநெல்லி பகுதியில் உள்ள கேரளம் அரசின் சுற்றுலா ஓய்வு விடுத்திக்குள் அதிகாலை 3 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த மாவோயிஸ்ட்டுகள் 6 பேர் விடுதியில் இருந்த பொருள்களை தாக்கி சேதப்படுத்தினர்.
அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே இந்தத் தாக்குதலை நடத்துகிறோம் என விடுதியில் வேலை செய்தவர்களிடம் மாவோயிஸ்ட்டுகள் கூறியுள்ளனர்.
மேலும், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விட்டுச் சென்றனர்.
அமெரிக்காவின் ஆசியாவில் தலையிடும் திட்டமான ‘ஆசியாபிவோட்’ தெற்காசிய நாடுகளைக் குறிவைத்து இயங்கி வருகிறது. அமெரிக்காவிற்கு எதிராக இந்திய தேசியப் பற்றைப் பேசிய இனக்கொலையாளி மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை அமெரிக்க நிறுவனங்களே நடத்தின. அமெரிக்க அரசின் அடியாளாக மோடி அரசு செயற்படுகிறது, இந்தியாவில் மற்றொரு மத்திய கிழக்காக மாற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒபாமா வருகை முன்னுரை.