வணக்கம் சிக்காகோ !
ஒபாமாவின் வெற்றி-நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது சிக்காகோவிலாகும். அதிகம் தொழிற்சாலைகள் நிறைந்த இடம். உலக தொழிலாளர் தினம்-மேதினம் உருவாவதற்கு காரணமான போராட்டம் நடந்த இடம். விவேகானந்தரின் புகழ் சிகாகோ பெருரையினால்தான் பரவியது. இந்தியாவின் ஆன்மீகத்தின் மறுபக்கம் தெரிந்தது.- ரபேல்
அமெரிக்காவில் அனைத்தும் சாத்தியப்படும் என்பதை சந்தேகப்படும் யாராவது இன்னுமிருந்தால்,
இன்னும் எமது முன்னோர்களின் கனவு சாத்தியப்படுமா என்று ஆச்சரியப்படும் யாருமிருந்தால்,
எமது மக்களாட்சியின் சக்தி பற்றிய ஐயம் ஏதுமிருந்தால்,
இன்றிரவுதான் உங்களுக்கான பதில்.
(மக்கள் குரலொலி)
பாடசாலைகளையும் தேவாலயங்களையும் சுற்றி நீண்டிருந்த வரிசைகளினால் அந்தப் பதில் சொல்லப்பட்டது. இந்த நாடு எப்போதும் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் இப்படிக் கண்டதில்லை.
எனது மக்கள் 3 மணித்தியாலம் 4 மணித்தியாலம் என்று காத்திருந்தார்கள்.
பலருக்கு இதுதான் வாழக்கையில் முதல் தடவை. ஏனெனில் இந்த முறை நிச்சயமாக வேறுபட்டதாயிருக்கக்கூடும் என்று அவர்கள் நம்பினார்கள்.
இளையோரும் முதியோரும் பணக்காரரும் ஏழைகளும் சனநாயகக் கட்சியனரும் குடியரசுக் கட்சியினரும் கறுப்பரும் வெள்ளையரும் ஸ்பானிய அமெரிக்கரும் அமெரிக்க தொல்குடியினரும் ஆசியர்களும் ஒருபாலினச் சேர்க்கையாளரும் மற்றவரும் வலுவிழந்தோரும் மற்றவரும் ஓர் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.
அமெரிக்கர்கள் ஓர் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.
நாங்கள் ஒருபோதும் தனத்தனியான மக்கள் தொகுதியல்ல. நாங்கள் சிவப்பு மாகாணங்களாக இல்லை.(குடியரசுக் கட்சியின் நிறம்) நாங்கள் நீல மாகாணங்களாக இல்லை(சனநாயகக் கட்சியின் நிறம்). நாங்கள் ஐக்கிய அமெரிக்க மகாணங்களாக உள்ளோம். எப்போதும் இருப்போம்.
நாங்கள் இப்போது இந்தக் களத்தில் இந்த நாளில் இந்த இரவில் ஏற்படுத்தியருக்கும் முடிவினால் அமெரிக்காவிற்கு மாற்றம் வருகிறது.
(தனக்கு எதிராகப் போட்டியி;டட குடியரசக் கட்சியின் வேட்பாளர் மக்கெளின், துணை அதிபராக போட்டியிட்ட பைடன், தனது மனைவி மிசேல் மனைவி, குழந்தைகள், தேர்தல் பரப்பரையாளர், உதவியாளர், குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றி சொல்கிறார்.)
இவை அனைத்துக்கும் மேலாக…
இந்த வெற்றி உண்மையில் யாருக்குச் சேரவேண்டும் என்பதை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன்.
இது உங்களைச் சேரும். (மக்களை)
இது உங்களைச் சேரும்.
நான் இந்த பணியகத்துக்கான தகுதியான வேட்பாளராக இருந்திருக்கவில்லை.
நாங்கள் அதிகம் பணத்துடனோ ஆதரவுடனோ இதைத் தொடங்கவில்லை. எங்கள் தேர்தல் பரப்புரை வாசிங்ரன் நகரத்தின் மண்டபங்களில் முகிழ்க்கவில்லை.
(பொதுமக்கள் வாழும் வீடுகளிலிருந்து தான் தொடங்கியது.)
உழைக்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் சிறிய சிறிய சேமிப்பிலிருந்து ஐந்து டொலர் பத்து டொலர் இருபது டொலராகத் தந்தவைதான் எங்கள் பணம்.
இளைய சந்ததியினர் தங்கள் வழக்கமான பொறுப்பற்றபோக்கை தூக்கியெறிந்துவிட்டு வெளியே வந்தபடியால்தான் இது சிறப்பாக வளர்ந்தது. தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு சிறிய கொடுப்பனவுக்காகவும் குறைந்த தூக்கத்துக்காவும் வந்தார்கள். மிகவும் இளவயதினர் இ;ந்தக் கடும் குளிரிலும் அவர்கள் தங்களுக்கத் தெரியாத கதவுகளைப் போய்த் தட்டியதால் இது வளர்ந்தது.
பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இவ்வாறு தொண்டாற்றினார்கள். அவர்கள் விரும்பியது
மக்களால் மக்களுக்காக ஓர் அரசு என்பதை இரு நூற்றாண்டு;க்கு மேலாக சொல்லி வந்ததை
இவ்வுலகில் அது நம்பிக்கையற்றதாக போய்விடக்கூடாது என்பதை நிரூபிப்பதற்காக,
இது உங்கள் வெற்றி.
(மக்கள் கூக்குரல, கரவொலி;)
நீங்கள் வெறுமனே ஓர் தேர்தலை வெல்வதற்காக மட்டும் இதைச் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும்.
நீங்கள் எனக்காகவும் செய்யவில்லை என்பதும் தெரியும்.
நீங்கள் எங்களுக்கு முன்னால் இருக்கின்ற பாரிய குறிக்கோளையிட்டு இதைச் செய்திPர்கள்.
இன்று இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கையிலேயே நாளைய சவால்கள் எங்கள் முன் எங்கள் வாழ்வில் மிகப்பாரியவையாக இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். இரண்டு போர்கள். பூகோளம் சரிந்து கொண்டிருக்கும் நிலை, நூற்றாண்டில் மோசமான பொருளாதாரச் சிக்கல்.
இன்று இங்கு நின்றுகொண்டிருக்கையிலேயே அங்கே ஈராக்கின் பாலைவனங்களில் ஆப்கான் மலைகளில் வீரமுடைய அமெரிக்கர்கள் தங்கள் உயிர்களை முன்வைத்து எங்களைக் காப்பதற்காக துயிலெழுந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.
அவர்களுடைய தந்தையரும் தயார்களும் தங்கள் பிள்ளைகளை உறங்கவைத்துவிட்டு எப்படி வீட்டுக்கடன் கட்டுவது? எப்படி வைத்தியச் செலவுக்கு பணம் திரட்டுவது? எப்படி பிள்ளைகளின் உயர்கல்விக்கு பணம் திரட்டுவது? என்று யோசித்தபடி தாங்கள் உறங்காதிருக்கிறார்கள்.
புதிய சக்தி அங்கீகரிக்கப்படவேண்டும்.
புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்.
புதிய பாடசாலைகள் கட்டப்படவேண்டும்.
ஒருமைப்பாடுகளை சீர்ப்படுத்துவதே எதிர்கொள்ளவேண்டிய முதல் மிரட்டல்.
முன்னாலுள்ள வழி நீண்டது.
எங்களுடைய கோரிக்கை உயர்வானது.
இது ஒரு ஆண்டிலே ஒரு ஆட்சிக்காலத்திலோ அடையப்படமுடியாதது.
ஆனால் அமெரிக்காவே !
நான் இன்றிருந்ததைவிட நம்பிக்கையோடு எப்போதும் இருந்தது கிடையாது.
நாங்கள் அங்கே(இலக்கைச்) சென்றடைவோம்.
நாங்கள் மக்களாக அங்கே சென்றடைவோம்.
(மக்கள்: ‘ஆம், ஆம்;” கூக்குரல். நீண்டநேரம். ‘ஆம் எங்களால் முடியும்.”)
சில பின்னடைவுகளும் இருக்கக்கூடும்.
தவறான தொடக்கங்கள் இருக்கக்கூடும்.
அதிபராக நான் எடுக்கும் முடிவுகளுடன் பலர் முரண்படக்கூடும்.
அரசாங்கள் அனைத்துச் சிக்கல்களையும் தீரத்துவைக்கமுடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனால் நான் எப்போதும் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக உங்களுடன் (மக்களுடன்)உண்மையுடன் இருப்பேன்.
நான் உங்களுடைய குரலைக்கேட்பேன்.
குறிப்பாக நாங்கள் முரண்படுகையில்.
அனைத்துக்கும் மேலாக இந்த நாட்டின் மீட்டுருவாக்கத்தில் பங்கேற்கும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அதுதான் கடந்த 221 ஆண்டுகளாக அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரேயொரு வழி.
கட்டுமானம் கட்டுமானமாக,
செங்கல் செங்கல்லாக,
தூண் தூணாக,
21 மாதத்துககு முன்னால் தொடங்கப்பட்டது எதுவோ அது இந்த ஒரு வெற்றியின் அடியாழத்தில், இந்த இலையுதிர்கால இரவில் முடிந்துவிடாது.
இந்த வெற்றியென்னும் மாற்றத்தை மட்டும் நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
இது நாங்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் கொண்டுவருதற்கான வாய்ப்பு மட்டுமே.
நாங்கள் இதைவிட்டுவிட்டு பழையபடி முன்பிருந்த இடத்துக்கு திரும்பிப்போனால் அதை(இலக்கை) அடைய முடியாது.
இது நீங்கள் இல்லாமல் நடக்காது.
ஓர் புதிய மக்கள் பணிக்கான உந்து சக்தியின்றி நடக்காது.
ஓர் புதிய உந்து சக்தி
ஓர் தியாகம்.
ஆகவே நாங்கள் ஓர் புதிய உந்து சக்தியை முதன்மைப்படுத்துவோம்;.
நாட்டுப் பற்று
பொறுப்புணர்வு
அதில் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைப் பொருத்திக்கொள்ளவேண்டியும் கடுமையாக உழைக்கவும் வேண்டியிருக்கிறது.
எங்களை மட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் நினைவில் வைத்திருப்போம்.
இந்த பொருளாதாரச் சிக்கல் எதை எங்களுக்குச் சொல்லுகிறதென்றால்
பிரதான வீதி துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில்
வோல் வீதியை (பங்கச் சந்தை இருக்கும் றுயடட ளவசநநவ) நன்றாக வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதைத்தான்.
இந்த நாட்டில் நாங்கள் விழுவதோ எழுவதோ ஒன்றாகவே இருப்போம்.
ஒரு மக்களாகவே இருப்போம்.
நாங்கள், எனது ஆள் உனது ஆள் என்ற பாகுபாட்டுக்குள் விழும் தடுமாற்றத்தை; தடுப்போம்.
எங்கள் அரசிலை முதிர்ச்சியற்ற தன்மை நீண்டகாலமாகப் பழுதாக்கி வந்திருக்கிறது.
இந்த மாநிலத்தில் இருந்து (சிகாகோ இருக்கும் மிச்சிகன்) முதல் முதலில் குடியரசுக் கட்சியின் வெற்றிப் பதாகையை வெள்ளை மாளிகைக்கு தூக்கிச் சென்ற அந்த மனிதரை நினைப்போம். (குடியரசுக் கட்சி இங்குதான் முதலில் வென்று ஆட்சியைப் பிடித்தது.)
சுய முன்னேற்றம், தனிமனித விடுதலை, தேசிய ஒருமைப்பாடு போன்ற விழுமியங்களில் உருவான கட்சி அது.
இந்த விழுமியங்களையே நாங்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்கிறோம்.
இன்றிரவு சனநாயகக் கட்சி வெற்றியடைந்திருக்கும் இந்நேரத்தில் நாங்களும் அப்படிச் (கொடியைத் தூக்கிக் கொண்டு) செய்யப்போகிறோம். மிகவும் பொறுப்பணர்வுடனும் எங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் ஏற்பட்டிருக்கும் பிளவை இல்லாதாக்கும் தீர்மானத்துடனும்; அதைச் செய்யப்போகின்றோம்.
எங்களை விட அதிகம் பிளவுபட்டுள்ள நேரத்தில் நாட்டுக்கு ஆபிரகாம்)லிங்கன் சொன்னது போல, நாங்கள் எதிரிகளல்ல. நண்பர்கள். எங்களுக்குள்ள பிடிப்பு விரிசலைடையலாம். ஆனால் எங்கள் விருப்பின் உறுதி உடையக்கூடாது.
எனக்கு ஆதரவு தராத அமெரிக்கர்களுக்கு…
உங்கள் வாக்குகளை நான் இன்றிரவு வெல்லாதிருக்கலாம். ஆனால் உங்கள் குரல்களைக் கேட்கிறேன்.
உங்கள் உதவி எனக்கு தேவை.
நான் உங்கள் அதிபராகவும் இருப்பேன்.
(பலத்த குரலொலியும் கதைட்டலும்)
எங்கள் கடலின் கரைகளுக்கு அப்பால் இருந்து பாரத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பாராளுமன்றத்திலும் மாளிகைகளிலுமிருந்து
உலகின் மறக்கப்பட்ட மூலைகளிலிருந்து வானொலிகளுடன் இருப்பவர்களுக்கும்..
எங்கள் கதைகள்தான் தனித்தவை. ஆனால் எங்கள் விதிகள் பங்கிடப்பட்டுள்ளன.
ஓர் புதிய அமெரிக்க தலைமை உருவாகியுள்ளது.
உலகைப் பிய்த்துப் போடுபவர்களுக்கு…நாங்கள் உங்களைத் தோற்கடிப்போம்.
அமைதியையும் பாதுகாப்பையும் தேடுபவர்களுக்கு… நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்.
அமெரிக்கா இன்னும் பிரகாசமாகவும் திறனுடனும இன்னும் இருப்பதைப் பார்த்து வியப்போருக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்பகின்றேன்.
இன்றிரவு மீண்டும் நாம் நீரூபித்திருக்கிறோம்.
உண்மையான எங்கள் நாட்டின் பலம் எங்கள் ஆயுத பலத்தாலோ எங்களிடமிருக்கும் செல்வத்தாலோ வருவதல்லல.
தொடர்ந்து வரும் எங்கள் கருத்து நிலையால் வருவது.
மக்களாட்சி, விடுதலை, வாய்ப்பு மற்றும் நம்பிக்கை தருவதால் வருகிறது.
இதூன் உண்மையான அமெரிக்காவின் தன்மை.
அமெரிக்கா மாறும்.
எங்கள் ஒருமைப்பாடு,
நாங்கள் அடைந்தவை எங்களுக்க நம்பிக்கையைத் தருகிறது.
அவற்றைக்கொண்டு நாங்கள் நளைக்கும் சாதிப்போம்.
இந்தத் தேர்தலில் பல முதல் தடவையானவை நடந்துள்ளன. பல கதைகள் இன்னும் பல ஆண்டுகள் இவற்றைப்பற்றி கதைகள் சொல்லப்படக்கூடும்.
எனது மனத்தை கொள்ளை கொண்டது அட்லான்ராவில் வாக்களித்த ஓர் பெண்தான்.
இந்த தேர்தலில் தங்கள் குரல் கேட்கப்படவேண்டும் என்பதற்காக வரிசையில் காத்திருந்த பல லட்சக்கணக்கானவர்ளைப் போன்றவர்தான் அவரும். ஒரேயொரு விசயத்தைத் தவிர. அந்தப் பெண்மணி 106 வயதானவர்.
அடிமைத்தனத்தைத் தாண்டி அடுத்து வந்த சந்ததியில் பிறந்தவர்.
வீதியில் கார்களோ வானத்தில் விமானங்களோ இல்லாத நேரத்தில் பிறந்தவர்.
அவரை மாதிரி ஒருவர் இரு காரணங்களுக்காக வாக்களித்திருக்கக்கூடும்.
ஒன்று அவர் பெண் என்பதால்.
இரண்டாவது அவருடை தோலின் நிறத்தினால்.
இன்றிரவு
அமெரிக்காவின் வரலாற்றில் கடந்துசென்ற முக்கியமான காட்சிகளை நினைத்துப் பாத்தேன்.
கடுமையான நாட்களும் நம்பிக்கையும் போராட்டமும் முன்னேற்றமும்.
எங்களால் முடியாது என்று சொல்லப்பட்ட நேரத்தை,
அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கையில் அழுத்தமாயிருந்த மக்களை..
‘ஆம் எங்களால் முடியும் என்பதை”
பெண்களின் குரல்கள் அமைதியாக்கப்பட்டிருந்த நேரம்.
அவர்களின் நம்பிக்கைள் கைவிடப்பட்டன.
அந்தப் பெண்மணி வாழ்ந்து அவர்களுக்காக வாக்கு சாவடிக்கு வந்திருக்கிறார்.
ஆம் எங்களால் முடியும்.
(உள்நாட்டுப் போரின்) தூசி தணிந்த நேரத்தில் நாட்டில் எழுந்த பயமும் புதிய வேலை வாய்ப்புக்ளுக்கான புதிய பணிகளுக்கான தேவையும் வெற்றிகொள்ளப்பட்டதை அவர் பார்த்தார்.
ஆம் எங்களால் முடியும்.
எங்கள் துறைமுகத்தில் குண்டு வீழந்த போது
உலகம் குழப்பத்தில் ஆழந்திருந்தபோது
எமது சந்ததி எழுச்சியுடன் எழுந்து நின்றதையும் அதனால் மக்களாட்சி காப்பாற்றப்பட்டதையும் அவர் பார்த்தார்.
ஆம் எங்களால் முடியும்.
நாங்கள் வெற்றியடைவோம் என்று கூறப்பட்டது.
ஆம் எங்களால் முடியும்
ஒரு மனிதன் நிலவில் காலடி வைத்தான்
பெர்லினில் ஓர் சுவர் வீழந்தது.
எங்கள் அறிவியலினாலும் கற்பனைத்திறத்தாலும்
உலகம் இணைக்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்த தேர்தலில் அவர்; 106 வயதான அந்தப் பெண்மணி)ஓர் திரையில் தொட்டிருக்கிறார்
வாக்கைச் செலுத்தியிருக்கிறார்
ஏனென்றால் 106 ஆண்டுகளுக்கு பின்னர்
பல இருண்டகணங்களையும்; வெற்றிகரமான நாட்களையும் கண்டவர்.
அவருக்குத் தெரியும் அமெரிக்கா மாறும் என்பது.
ஆம் எங்களால் முடியும்.
அமெரிக்காவே !
நாங்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம.;
நாங்கள் நிறையப் பாரத்தும் விட்டோம்.
ஆனால் இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது.
ஆகவே இன்றிரவு நாங்கள் எங்களைக் கேட்டுக் கொள்வோம்.
எங்கள் குழந்தைகள் அடுத்த நூற்றாண்டைப் பார்ப்பதற்கு இருந்தார்களானால்,
இந்தக் குறிப்பிட்ட பெண்மணிபோல வாழ்வதற்கு எனது மகள் மிகவும் கொடுத்து வைத்தவராகவிருந்தால்,
என்ன மாற்றத்தை அவர்கள் பார்ப்பார்கள்?
என்ன வளர்ச்சியை நாங்கள் செய்து வைக்கப்போகிறோம்?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல இதுதான் எங்கள் வாய்ப்பு
இதுதான் எங்கள் கணம் !
இதுதான் எங்கள் நேரம் !
எங்கள் மக்களை வேலையைச் செய்ய மீண்டும் இழுத்துவருவதற்கு
எங்கள் குழந்தைகளுக்கு வாயப்புகளைத் திறந்து விடுவதற்கு
செழிப்பை மீளக்கொண்டுவருவதறக்கும்
அமைதியின் விளைவை ஏற்படுத்துவதற்கும்
அமெரிக்காவின் கனவை திரும்ப மேற்கொள்வதற்கும்
பலரிலும் நாங்கள் ஒன்றானவர்கள் என்ற
அடிப்படையான உண்மையைச் மீண்டும் உறுதியாகச் சொல்வதற்கும் !
நாங்கள் சுவாசிக்கையில் நம்பிக்கையுடன இருப்போம் !
முடியாது என்பவர்களையும்; நம்பிக்கையீனத்துடன் இருப்பவர்களையும்
(இந்த இடத்தில் பயன்படுத்திய சொல் முரட்டுப் பிடிவாதக் கோபம் போன்ற தொனியுடையது. அது பு~;i~யும் மறைமுகமாகக் குறிப்பிடலாம்.)
எதிர்கொள்கையில்,
எங்களால் முடியாது என்று சொல்லுபவர்களுக்கும்
இந்தக் கணத்தில்
நாங்கள் பதில் சொல்வோம்
மக்களின் உந்துசக்தியைத் திரட்டிச் சொல்வோம்
ஆம், எங்களால் முடியும்.
நன்றி.
அங்கே ஈராக்கின் பாலைவனங்களில் ஆப்கான் மலைகளில் வீரமுடைய அமெரிக்கர்கள் தங்கள் உயிர்களை முன்வைத்து எங்களைக் காப்பதற்காக துயிலெழுந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.”
“அவர்களுடைய தந்தையரும் தயார்களும் தங்கள் பிள்ளைகளை உறங்கவைத்துவிட்டு எப்படி வீட்டுக்கடன் கட்டுவது? எப்படி வைத்தியச் செலவுக்கு பணம் திரட்டுவது? எப்படி பிள்ளைகளின் உயர்கல்விக்கு பணம் திரட்டுவது? என்று யோசித்தபடி தாங்கள் உறங்காதிருக்கிறார்கள்.”
பேசியது ஒபாமாவா ஜோர்ஜ் புஸ்ஸா?
ஆம் எங்களால் முடியும்……செய்வாயிலிருந்து பூமிக்கு அணுகுண்டை ஏவ முடியும்….ஆம் எங்களால் முடியும்……. தொடர்ந்தும் உலக பொலிஸ்காரனாக வெற்றிநடை போட……ஆம் எங்களால் நம்ப முடியவில்லை…..பெர்லினில் ஓர் சுவர் வீழந்தது.
எங்கள் அறிவியலினாலும் கற்பனைத்திறத்தாலும்
உலகம் இணைக்கப்பட்டது. என்பதை!!!
ஒபாமா இப்போ ஹீரோ!
சாவேஸ்-வெனிசூலா- இனிமேல் ஹீரோ இல்லை.
கஸ்ரோ அவுட்!
கால் மார்க்ஸ் மறுபடி மறக்கடிக்கப்படுவார்!!
வாழ்க அமரிக்க சனநாயகம்!!!!
ஒரு சில கருப்பினத்தவரோ, தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும், சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.
அமெரிக்காவிலும் அப்படித்தான். ஒபாமா, கிளிண்டன், மெக்கைன் எவரும் தங்களது பிரச்சார உரைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பை நெருடும் வண்ணம் பேசுவதில்லை. ஈராக் போரோ, பாலஸ்தீனப் பிரச்சினையோ, உள்நாட்டில் வரிவிலக்கோ எதையும் அந்த ஆடுகளத்தின் விதிகளுக்கு உள்பட்டுதான் பேசமுடியும். ஒருவேளை ஒபாமா வென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி வீழ்ந்து விட்டதாகப் பொருளில்லை.
அமெரிக்கச் சமூகத்தின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் நிறவெறியானது தோலின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல. அது சமூகக் கட்டுமானம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் விளைவால் அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தைக் குவித்துவரும் வேளையில் அங்கு ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். ஏழைகளில் பெரும்பான்மையினர் “இயல்பாகவே’ கருப்பின மக்கள்தான் என்பதால் அங்கே நிறவெறியும் இயல்பாகத்தான் இருக்கிறது
இப்படி எல்லாத் துறைகளிலும் வேர் கொண்டிருக்கும் நிறவெறிதான் அமெரிக்காவின் இயக்கத்திலேயே கலந்திருக்கிறது. ஒருசில கருப்பினத்தவர் மேல் நிலைக்கு வந்து விடுவதனால் மட்டுமே நிறவெறி எந்த விதத்திலும் அங்கே முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்து வெட்டப்படும்போதுதான், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கருப்பின மக்களின் விடுதலையும் சாத்தியம்.
அதுவரை கன்டலீசா ரைஸ், காலின் பாவெல், பாரக் ஓபாமா, மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான், மாஜிக் ஜான்சன், டைகர் வுட்ஸ், டென்சில் வாஷிங்டன் முதலிய கருப்பின மேன்மக்கள் துரோகிகளாகவோ, ஒத்தூதிகளாகவோ, அல்லது கோமாளிகளாகவோ அமெரிக்க மக்களின் பொழுதைச் சுவாரசியமாக்குவதை மட்டும்தான் செய்யமுடியும்.
பாரக் ஒபாமா அமெரிக்காவின் அப்துல் கலாம் மட்டுமே. ஒட்டுமொத்த கருப்பின மக்களும் நிறவெறியில் பொசுங்குகையில், இசுலாமிய மக்கள் வேட்டையாடப்படுகையில், ஒபாமா, அமெரிக்க அரசின் face saver-ஆக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். இந்திய ஊடகங்களின் ஆர்ப்பாட்டமும், அடிமைக் கொண்டாட்டம்தான் அருவறுப்பாக இருக்கிறது.
ஓபாமா வந்து விட்டார் உலகத்துக்கே விடுவி வந்து விட்டது என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மவர்களை என்ன சொல்ல! காங்கிரஸ் கட்சியில் கூட கக்கன் இருந்தார்,கஞ்சி குடித்தார்,தெருவில் படுத்தார். அதே மாதிரி காமராஜர் இருந்தார், இப்படி எல்லாம் கதை சொல்வார்களில்லையா? அப்படியா ஒரு பிம்பம் ஓபாமாவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, உங்கள் கேள்விகளும் கட்டுரையும் அருமை.வினவு
//ஒரு சில கருப்பினத்தவரோ தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம்.//
இப்படி எங்கும் எழுதப்படவில்லை. இது ஒபாமாவின் பேச்சின் மொழி மாற்றுத்தான்.
ஆனால் சில குறிப்புக்கள்
அமெரிக்காவில் கறுப்பர்கள் ஏழைகள் என்ற பொத்தாம் பொதுவான பார்வை…
அங்கு 50 விழுக்காட்டினர் ஏழைகள். அதில் கறுப்பரும் உண்டு.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்தை நீங்கள் எல்லாரும் சேர்ந்து வெட்டுங்கள்.
(இப்பவும் பாருங்கள் வன்முறையை //வெட்டுங்கள்// விட்டுவிட முடியவில்லை)
அதற்கு முதற்கட்டமாக விண்டோசையும் கொம்பியூட்டரையும் கைவிடலாமே.
கூகிள்காரன் மட்டும் எவ்வளவு லாபம் பார்க்கிறான். பாருங்கள் எல்லாரும் அமெரிக்கர்கள். பலவேளைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கதைப்பவர்கள் பலர்தான் அமெரிக்காவின் வளர்ச்சிக்குப் பலவகைகளிலும் உதவுபவர்கள்.
பலவற்றுக்கும் பதில்சொல்வதற்கல்ல நோக்கம்.
ஒன்று மட்டும்தான்.
ஒபாமா ஓர் குறியீடு.
அடிமைத்தளை தந்துகொண்டிருந்த மனத்தின் வடுவில் ஓர் சிறிய ஆறுதலுக்கான அடையாளம்.
அடிமைத்தளையைச் செய்த சந்ததி நாம் என்று எண்ணியவர்களுக்கு ஆறுதல்.
அவ்வளவுதான்.
ஒபாமா ஓர் குறியீடு.
இந்த இடத்தில் நிறத்தை நிப்பாட்டிப்போட்டு கொஞ்சம் சாதியைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டால் என்ன நடக்கும்? இலங்கையின் தமிழர்களில் சாதி வெறிபிடித்தவர்கள்தானே அதிகம்.
திலத் என்பதை விடுங்கள் .
ஒவ்வொரு சாதியாகப் பேசுவோம்.
யாரை யார் ஒடுக்கினார்கள். யார் ஒடுக்குகிறார்கள் என்று பேசுவோம். வர்க்கத்துக்குள் கொண்டு போய் சாதியை ஏன் புதைத்துக்கொணடிருக்கிறுNhம் என்றுபார்ப்போம்.
இதே வர்க்க்க கண்ணாடிபோட்டுத்தான் பார்ப்போம் என்ற தமிழக மார்கசியத் தலைவர்களின் சிந்தனையில் வந்த மாற்றத்தைப்பற்றிப் பார்ப்போம்.
அதற்கொரு விவாதக்களத்தை இனியொரு திறந்தால் மகிழ்வுடன் நான் தயார்.
நிற்க
ஒபாமா ஓர் குறியீடு.
அதுதான் செய்தி.
சமாதான முறையில் அமெரிக்கா உலக-உறவுகளை கையாளுமா?
உலகத்தை மறுபங்கீடுசெய்யும் செய்யும்பொழுது தன்பங்கிற்கு விமானங்களையும்
இராணுவவீரர்களை ஆபிரிக்காவுக்கு அனுப்பும்பொழுது ஒபாமாவின் விமானங்கள்
ஆபிக்கமக்களின் தலையில் குண்டுகளைப் பொழியும் போது வாசகர்களே!
உங்கள் மனச்சாட்சி மனநிலை எதுவாகயிருக்கும்?
அல்லது அப்படிப்பட்ட விபரீதம் எதுவும் நடந்துவிட முடியாது
என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?
நல்லதுநடக்கும்படி நாம்விரும்புவது வழக்கம்
ஒன்பது ஏழைகள் இருந்தால்தான் ஒருபணக்காரன் இருக்கமுடியும் எனும்விதி இருக்கும் போது?இதற்கு அமெரிக்கா விதிவிலக்காக இருந்திடமுடியுமா?
ஒபாமாவின் ஆளுமை குறித்து உருவாக்கப்படும் இந்த ஒளிவட்டங்கள், நம்பிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரின் சமூகஅரசியல் கருத்துக்களைக் கீறிப் பார்ப்போம். அமெரிக்காவைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற டோனி மோரிசன் என்ற கருப்பினப் பெண் எழுத்தாளர், “”அமெரிக்கக் கருப்பின மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், வெள்ளை நிற அமெரிக்கர்கள், ஒரு ஆதர்சனக் கருப்பின அதிபர் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த விருப்பத்தை ஈடுசெய்யும் வண்ணம் இருக்கும் கருப்பு அமெரிக்கனை, அமெரிக்கா அதிபராகத் தேர்வுசெய்யக்கூடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஒபாமா, அப்படிப்பட்ட ஆதர்சனக் கருப்பின அதிபராக இருப்பேன் எனக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறார்.
ஒபாமைவைப் பொறுத்தவரை, இனப்பாகுபாடு அரசியல் பிரச்சினையல்ல; வெறும் பொருளாதாரப் பிரச்சினை. “”கருப்பின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைக்கவில்லை; தொழில். வேலைவாய்ப்பு போன்ற அவர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; கருப்பினக் குடியிருப்புகளில் குழந்தைகள் விளையாட பூங்காக்கள் இல்லை; அப்பகுதியில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் இல்லை. இவை போன்ற பற்றாக்குறைகள்தான் வன்முறை உருவாக உதவுகின்றன. கருப்பின மக்கள் இரண்டாம்தர குடி மக்களாக நடத்தப்படுவதற்கு இவைதான் காரணங்கள்” என்கிறார் ஒபாமா. தீண்டாமைக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லை என் ஆர்.எஸ்.எஸ். பித்தலாட்டம் செய்வது போல, நிறவெறிக்கும் வெள்ளையர்க்கும் தொடர்பில்லை எனக் காட்ட முயலுகிறார், ஒபாமா.
கிறித்தவ மதகுரு ரைட், “”கடவுள் அமெரிக்காவைச் சபிக்கட்டும்” எனப் பேசி வருவதை, மனசாட்சியுள்ள எந்தவொரு கருப்பின அமெரிக்கனும் ஆதரிக்கவே செய்வான். ஆனால், ஒபாமாவோ வெள்ளை நிறக் கனவான்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற சுயநலத்திற்காக, அம்மதகுருவின் பேச்சுக்களை இப்பொழுது கண்டித்துள்ளார். தீண்டாமைக்காக இந்து மதத்தை வெறுக்கக் கூடாது என்பது போல, வெள்ளை நிறவெறிக்காக அமெரிக்காவைக் குற்றம் சொல்லக் கூடாது என்கிறார்,ஒபாமா.
இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போல, அமெரிக்க அரசு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கருப்பின மக்களுக்குச் சட்டபூர்வ சலுகைகளை வழங்கி வருகிறது.வெள்ளை நிறவெறியர்கள் இச்சலுகைகளை அடியோடு ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறார்கள். ஒபாமா இப்பிரச்சினையில் கழுவுற மீனில் நழுவுற மீனாக நடந்து கொள்கிறார். இது போன்ற சலுகையை பல்கலைக் கழகங்கள் வழங்கும் பொழுது, இன அடிப்படையைவிட, பொருளாதார வரையறையை அளவு கோலாகக் கொள்ளலாம் என ஆலோசனை கூறுகிறார். இப்படிபட்ட ஒபாமாவை, வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமல்ல, நம்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் பிடிக்கும்.
கருப்பின ஒபாமாவின் இந்தச் சறுக்கல்களுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவரது நடுத்தர வர்க்கத்துப் பின்னணி. ஒபாமாவின் தந்தை கருப்பராக இருந்தாலும்கூட, வெள்ளை நிறத் தாயும், பாட்டியும்தான் அவரை வளர்த்தனர். ஒபாமா, தனது ஆரம்பக் கல்வியை இந்தோனேஷியாவில் உள்ள மேட்டுக்குடி பள்ளிக்கூடத்திலும்; சட்டப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் முடித்தார். இருபது வருடத்திற்கு மேலாகத் தவறாது தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர். கிறித்தவ மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என்ற கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருபவர். அவரது நடை, உடை, பாவனை, ரசனை, பேச்சு, பொழுதுபோக்கு என்ற அனைத்தும் கனவான்களுக்கேயுரிய கண்ணியமிக்கது. அரசியலில் பெரிய பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே பொது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர், ஒபாமா.
Written by புதிய ஜனநாயகம்
தேர்தல் ஒரு மோசடி நாடகம். திரை மறைவில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அரசின் வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். உலகெங்கும் போர் வெறியன் என்று கெட்ட பெயரெடுத்த புஷ் போன்றவர்களை வைத்து இனிமேல் அரசியல் நடத்த முடியாது, அதற்கு பதிலாக வசீகர தோற்றம் கொண்ட, அதுவும் சிறுபான்மை கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா சிறந்த தெரிவாக பட்டிருக்கலாம். “ஒபாமாவா இப்படி?” என்று பலர் எதிர்பார்க்காத ஒருவரைக் கொண்டு காரியங்களை சாதிப்பது இலகு. அதாவது “மென்மையான ஏகாதிபத்தியம்” தான் இனிமேல் அமெரிக்காவின் வெளித்தோற்றத்தை தீர்மானிக்கப் போகின்றது.
http://kalaiy.blogspot.com/
ஆர்பம்,
நீங்கள் சொல்வது மிகச் சரியானதே!
இழந்து போன அமரிக்காவின் ‘இமேஜை’ திருத்துவதற்கு அமரிக்க அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட மென்மையான முகமே இந்த ஒபாமா.
ஒபாமா தொடர்பான ஜோன் பெர்கின்ஸின் பார்வையும் இவ்வாறு தான் உள்ளது.
யாராவது ஒபாமாவின் இருநுால்களையும்பற்றிக் கருத்துச் சொல்லமுடியுமா?
யாராவது வாசித்தவர்கள் இருந்தால் சொல்லலாம்.
ஒபாமாவின் கனவு அமெரிக்கா அதில் அடித்தளமிட்டிருக்கிறது என்கிறார்கள்.
//ஒபாமா இப்பிரச்சினையில் கழுவுற மீனில் நழுவுற மீனாக நடந்து கொள்கிறார். இது போன்ற சலுகையை பல்கலைக் கழகங்கள் வழங்கும் பொழுதுஇ இன அடிப்படையைவிடஇ பொருளாதார வரையறையை அளவு கோலாகக் கொள்ளலாம் என ஆலோசனை கூறுகிறார்.//
//ஒரு சில கருப்பினத்தவரோஇ தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும்இ சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.//