ஒபரோய் தேவனின் நாட் குறிப்பிலிருந்து என்ற அச்சுப் பதிவு அவரின் மறைவிற்குப் பின்னர் 80 களின் ஆரம்பத்தில் அவரது இயக்கத்தினரால் வெளியிடப்பட்டது. அவர் தனது நாட்குறிப்பில் எழுதியவற்றை திருத்தங்கள் எதுவுமின்றி அச்சுப் பதிவாக குறைந்த எண்ணிக்கையில் ஆர்வமுள்ளவர்களின் வாசிப்பிற்காக வழங்கினர். இயக்கங்களை இந்திய அரசு கையாள ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலப்பகுதியில் பதியப்பட்ட இத்தரவுகள் விடுதலை இயக்கங்களின் தோற்றுவாய் குறித்த பொதுவான தகவல்களைத் தருகின்றது. ரெலா(TELA) இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராகத் திகழ்ந்த ஒபரோய் தேவன் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலம் மக்களை அணிதிரட்டுவதிலிருந்தோ, ஆயுதப் போராட்டத்திற்கு புரட்சிகர மக்கள் பிரிவுகளை ஆதார சக்திகளாக இணைத்துக் கொள்வதிலிருந்தோ ஆரம்பிக்கவில்லை. தனி நபர் படுகொலைகள், இலங்கை அரச பெரும்பான்மைக் கட்சிகளை அழித்தல் போன்ற தனி நபர் இராணுவ வன்முறைகளிலிருந்தே ஆரம்பமானது. ஒரு புறத்தில் பலமான மக்கள் அணிகளைக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கங்கள் தேசிய விடுதலைப் போராட்டம், தேசிய இன முரண்பாடு குறித்து கோட்பாட்டுரீதியான தவறான முடிவுகளை முன்வைத்து போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தன. உணர்ச்சிவயப்பட்ட சாகசவாத இளைஞர் குழாமின் தன்னிச்சையான தாக்குதல்கள் மக்களைப் பார்வையாளர்களாக்கியது. போராடப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய மக்கள் வேடிக்கை பார்க்கப் பழக்க்கப்படுத்தப்பட்டனர். மக்கள் பலத்தில் தங்கியிருக்க வேண்டிய இயக்கங்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலம் இது. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு ஒளிவு மறைவற்ற வரலாற்று ஆவணம்.
மகேஸ்வரன் என்னும் இளைஞர் 1972 இல் இங்கிலாந்து சென்று பிரபல்ய வளாகத்தில் பொறியியலாளராக 2 வருடத் தேர்ச்சி பெற்று இறுதியில் நாட்டு விடுதலையே எனப் போராட நாட்டிற்கு வந்தார். பனாகொடை, மட்டக்களப்பு ஆகிய சிறைகளிலிருந்து தைரியமாகத் தப்பி வரலாறு படைத்தார்.
தமிழ் ஈழம் விதலை அடைய வேண்டும் என்பதில் மிக உறுதியாயிருந்தார்.குலசிங்கம் போல் வேகமாக செயற்பட வேண்டுமெனும் எண்ணம் கொண்டவர். நான் வாங்கிக் கொடுத்த கருவிகளோடு செயலில் இறங்கி அரசால் கைது செய்யப்பட்டு இன்றும் மீண்டும் கைதாகி பனா கொடை இராணுவ முகாமில் காவலில் உள்ளார், அவரோடு சேர்ந்து ஜவர் அதே முகாமில் காவலில் உள்ளனர்.இவர் எந்த ஒரு இயக்கத்தோடும் சேர்ந்து கட்டுப்பாட்டோடு இயங்காததாலேயே மிகக் குறிய காலத்தில் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து 2 வருடங்கள் சிறையில் இருப்பதால் அவர் சிறிது மனத் தளர்வடைந்திருப்பதாக தெரிகிறது.
அரசு தற்போது தமிழ் ஈழப் புரட்சியாளர்களை நசுக்க பல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இப்போது தமிழீத்தில் உள்ள சூழ்நிலையைச் சரியாக ஆராய்ந்து செயலில் இறங்குவது விவேகமில்லை என நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதைக் கேட்கவில்லை.
1980 ஆம் ஆண்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் தமிழ் மன்ற இயக்குனர் குழு தேர்தல் நடந்தது. அதில் ஜ.தே.க. கூட்டணி என இருகோஸ்டிகளாகப் தமிழ் மாணவர் பிரிந்து தேர்தலில் நின்றனர். த. கூட்டணி சார்பில் நின்ற தலைவர் எனது நண்பர். எம் அமைப்பில் உறுப்பினராகைருந்தவர். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். தோத்ததும் பத்தாதென ஜ.தே. க. ஆதரவு இளைஞர்களால் (குடிபோதையில்) தாக்கப்பட்டார். அந்நண்பர் தேர்தல் முடிவு வெளியாகும் போது ஏதும் பிரச்சினைகள் வரலாமென என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் நான் வேறு நான்கு தோழர்களோடு பிரச்சனை வந்தால் சமாளிக்கும் ஆயத்துடனே அங்கு செய்ன்றேன்.
எதிபார்த்தபடி தாக்குதல் நடக்கையில் நான் எவ்வளோ எடுத்துச் சொல்லியும் ஜ.தே. க. செவி சாய்க்காத்தால் நாம் எம்மிடருந்த கருவிகளைக் கையிலேந்தி களத்தில் இறங்கினோம். ஏறத்தாழ 40 பேரோடு 4 பேர் நாம் போராடினோம்.
அவர்கள் தரப்பில் மூவர் கத்திக் குத்துக்கு ஆளாகினர். அவ்வளவுதான். இரத்தத்தைக் கண்டதும் அத்தனை பேரும் மாயமாய் மறைந்தனர் . அதிலிருந்து சட்டக் கல்லூரியில் அரசியல்ரீதியாக தமிழ் மன்றம் என்ன முடிவெடுத்தாலும் நான் முறுக்கிட்டு வேறு கருத்தைக் கூறினால் பெரும்பாலனவர்கள் அதை ஏற்றுக் கொள்வர். சட்டமன்ற (தமிழ்) விழாக்களுக்கும், தமிழ்மன்ற கூட்டங்களுக்கும் நான் அழைக்கப்பட்டேன். அங்கு படிக்கும் யாழ் மாணவர்கள் பலருக்கு நான் விடுதலை இயக்கத்தோடு தொடர்புள்ளவன், எனத் தெரியுமாதலாலேஎயே எனக்கு அழைப்பு கிடைத்தது.
அவ்றோ விமானம் விடுதலை இயக்கத்தினரால் தாக்கப்பட்டதும் கொழும்பில் பதட்டநிலை ஏற்பட்டது. வெள்ளவத்தை. வத்தளை,ஜாஎல, இரத்மலானையில் அங்காங்கே தமிழர் வீடுகள் தாக்குதலுக்குள்ளாகின. அப்போ எனது இயக்க உறுப்பினரோடும் வேறு தமிழ் இளைஞர்களையும் சேர்த்து பல முக்கிய எமக்கு ஆதரவாளர் வீடுகளில் சில நாட்கள் முழு இரவும் நித்திரை இல்லாது ஆயுதபாணியாக காவல் காத்தோம்.
இப்படியிருகையில் நவம்பர் மாதமளவில் சிறி,குட்டிமணி ஆகியோர் யாழ் வந்தனர். தாம் பல திட்டங்களோடு வந்திருப்பதால் பிரச்சாரம் ,உறுப்பினர் சேர்த்தல் ஆகிய வேலைகளை விட்டு. தரும் வேலைகளைச் செய்யச்சொன்னார்கள். தை மாதம் தங்கண்ணாவும் வந்துசேர்ந்தார். அந்நாட்களில் செட்டி சுதந்திரமாக உலாவுவதை அறிந்து( அரசிற்கு தகவல்கொடுப்பவர் , தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவராக இருந்தார்) 18- 3- 81 அன்று அவரை கல்வியங்காடு சந்தையில் வைத்து சுட்டுக் கொன்றோம்.
அடுத்து முழு இலங்கையையே கலக்கிய, முழு இலங்கையையே அதிசயிக்க வைத்த, தமிழ் இளைஞர்களால் இப்படியும் செய்ய முடியுமா என தமிழ் ஈழ மக்களைத் திகைக்க வைத்த (82 இலட்சத்தொகை) 25 – 3- 81 அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளையை நடத்தினோம்.(வழக்கு தற்போது நடப்பதால் பாதுகாப்பை முன்னிட்டு அதை விவரிக்க விரும்பவில்லை).
இந்நாட்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பிளவுகள் , தனிப்பட்ட பூசல்கள் காரணமாக ) கலைக்கப்பட்டு அதை வழிநடத்திய பிரபாகரன் எம்மோடு வந்து சேர்ந்தார். அவர் எமது இயக்க தலைவரோடு என்ன என்ன பேசினார் என்பதை இயக்க உறுப்பினர் அனைவரும் அறிவர்.
அண்ணா! நான் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன் . நீங்கள் என்னை உங்களோடு சேர்த்து இயங்க அனுமதிக்கா விட்டால் நான் தற்கொலை செய்வேன். நான் ஒரு சாதாரண உறுப்பினராகவேஇருந்து செயல்பட விரும்புகிறேன்,நான் மீண்டும் எனது தாய் இயக்கத்திலேயே சேர விரும்புகிறேன் எனக்கூறியே எம்மோடு வந்து சேர்ந்தார். அவர் எமது இயக்கத்தில் சேர்க்கப்படுவதை சிறி, இராசுப்பிள்ளை ஆகியோர் வன்மையாக எதிர்த்தனர். ஆனால் இறுதியில் தலைவரின் முடிவிற்கு கட்டுப்பட்டு அவர்கள் இம்முடிவை ஏற்றனர்.
11.08.1982
தொடரும்…
முன்னையவை:
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (5) -தனி நபர் படுகொலைகளின் ஆரம்பம்
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து(4) – கொள்ளையர்களால் கொல்லப்பட்ட குலசிங்கம்
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து 03.06.1982 – யாழ் நகரத்தை முற்றுகையிட்ட மக்கள் எழுச்சி
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (2)
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)
தொடர்புடைய பதிவுகள்:
ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்
அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)
நான் 97 ஆம் ஆண்டு வரை இயக்கத்தில் இருந்தும் தேவனைப் பற்றி எனக்கு தெரியாது. தின்னவேலியில் தேவன் வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவருக்கும் எனக்கும் இயக்கம் ஆறு மாதம் தண்டனை கொடுத்த போது அவர் சொல்லி தேவன் யார் என்று தெரிந்து கொண்டேன். ஒபரோய் கோட்டலில் வேலை செய்ததால் ஒபரோய் தேவன் ஆகினார். அவர் வீட்டிலேயே இயக்கங்கள் வளர்ந்தனவாம். குடும்பம் முழுவதும் இயக்கங்களுக்கு உதவி செய்ததால் தேடப்பட்டதாம். நேர்மையான போராளி என ஊரில் சொல்வார்களாம். புது சந்ததிக்கு தேவனை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி.
புலிகளின் தலைவர் பிரபாகரன் ரொலோ இயக்கத்தில் சேர்ந்ததும் நீர்வேலிக் கொள்ளை அடித்ததும் நான்கு வருடங்களின் முன்னரே ஐயர் தனது வரலாற்றுக் குறிப்பில் எழுதியிருந்தார். தேவனின் டயரி அதனை உறுதிப்படுத்துகிறது.
தேவனை தன்னிச்சையாக முடிவெடுத்து சுட்டுக்கொன்றவர் கிட்டு என அறிந்துள்ளேன்.
டெலோ தடைசெய்யப்பட்டபோது தேவனின் சகோதரன் பர்வாமோகன் கிட்டுவால் பிடிக்கப்பட்டு வைத்திருந்த போது பிரபாகரனே தேவனின் குடும்பம் தன்னை பலதடவை தங்கள் வீட்டில் வைத்திருந்து காப்பாற்றிய தனக்கு மிகவும் இக்காட்டான காலங்களில் உதவிய குடும்பம் என கிட்டுவிடம் கூறி மோகனை ஒன்றும் செய்யாது விடுவிக்கும்படி உத்தரவிட்டு விடுவிக்கப்பட்டவர் எனவும் நம்பகமான தகவல்.
தன்னிச்சையான கொலையா? புலிகள் இயக்கம் மிகவும் கட்டுக் கோப்பான இயக்கமல்லோ?
அப்போது புலிகளின் தலைமை தமிழ்நாட்டிலிருந்தது . எல்லாவற்றுக்கும் யாழிலிருந்து தமிழ்நாட்டிலிருப்பவரை கேட்டுக்கொண்டா மிட்வெடுக்க முடியும் .
மேலும் சூழ்நிலை கருதி முடிவெடூக்கும் அதிகாரத்தை புலிகளின் தலைமை கிட்டுவுக்கு வழங்கியிருக்கலாம் .
அது அந்த இயக்கத்தை பொறுத்த விடயம். இதில் வோட்டருக்கு என்ன பிரச்சனை ?
புலிகள் இயக்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவர் புது இயக்கம் தொடங்கவோ அல்லது மாற்று இயக்கமொன்றில் சேரவோ கூடாது என்ற புலிகளின் கட்டுப்பாட்டு விதி என்னவாயிற்று? பிரபாகரனிற்கு அந்த விதி பொருந்தாதோ?
அந்த விதி டெலோவில் இருக்கவில்லையென்பதையும் , புலிகள் இயக்கத்தில்தான் அந்த விதி இருந்ததென்பதையும் திருவாளர் வோட்டர் அறிவாராக