21.10.2008.
இலங்கை இனப் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி யுள்ளது.
2008 அக்டோபர் 19-20 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளதாவது:-
நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாமல் நீடித்து வருகிற இலங்கைத் தமிழர் கள் பிரச்சனைக்கு ஒன்று பட்ட இலங்கைக்கு உட் பட்டு தமிழர்கள் பெரும் பான்மையாக வாழும் இலங் கையின் வடக்கு – கிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு மாநில சுயாட்சி மற்றும் அது தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் வழங் கிப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டுமென துவக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஆனால், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண் பதற்கு பதிலாக, இரு தரப் பிலும் ஆயுத மோதல்கள் தொடர்ந்தன. அடுத்து நார்வே நாட்டு பிரதிநிதிகள் சமரச முயற்சியில் ஈடுபட் டார்கள். இம்முயற்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டு தற்பொழுது, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக் கையால் அப்பாவி இலங் கைத் தமிழர்கள் சொல் லொண்ணாத் துயரங்க ளுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்குப் பெருத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட் டுள்ளது. தாங்கள் வாழும் பகுதிகளை விட்டு இரண்டு லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி யுள்ளனர்.
இலங்கை இனப் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அக்டோபர் 14 அன்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
இலங்கை அரசு மீது இந்திய அரசு ராஜீய ரீதி யான நிர்ப்பந்தத்தைச் செலுத்தி, ராணுவ நடவடிக் கைகளை நிறுத்தி வைத்து பேச்சுவார்த்தை மூலம் இலங்கை தமிழர் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வு காண முயல வேண்டும். இலங்கைக்கான ஆயுத உதவிகளை நிறுத்த வேண் டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண் டும். அவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூல மாக உணவு, மருந்து உள் ளிட்ட மனிதாபிமான உத விகளை நீட்டிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக் குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத் துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை வலியுறுத்தும் முகமாக வரும் அக்டோபர் 21 அன்று நடைபெறும் மனித சங்கிலி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும், ஊழியர்க ளும் கலந்து கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது.