யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் இரண்டு மணி நேர அவகாச்த்துள் வெளியேற்றப்பட்டமை மனித குலத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் ஈனச் செயல் என்பதை இன்று யாரும் மறுக்கவில்லை. முஸ்லீம் மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் இலங்கைப் பாசிச அரசு முஸ்லீம் மக்களை வியாபாரப் பொருளாக்குகின்றது. இந்த வியாபார வலைக்கு தலைமை தாங்கும் ஒரு பகுதி சமூகத்தின் புத்திசீவிகளாக உலா வருதலும், இன்னுமொரு பகுதி இந்த வலைக்குள் தம்மையறியாமல் வீழ்ந்திருப்பதும் அவல அரசியல்.
இலங்கையில் தன்னுரிமையும் கொண்ட தேசிய இனமான முஸ்லீம் தமிழர்கள் வெறுமனே தேசிய இனம் மட்டுமன்றி, சர்வதேசியப் பண்பையும் கொண்டவர்கள். இலங்கை அரச ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லீம்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடினால் இலங்கை மகிந்த குடும்ப அதிகாரம் ஆட்டம்காண ஆரம்பிக்கும் என்பதை அரசும் அதன் ஆதரவாளர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
மகிந்த குடும்பம் கட்டவிழ்த்துவிட்ட கிரீஸ் பூதம் கிழக்கிலிருந்து துரத்தப்படமைக்கு முஸ்லீம்களின் வீரம் மிக்க போராட்டமே அடிப்படையாக அமைந்தது. வன்னி இனப்படுகொலைக்குப் பின்னர் முஸ்லீம் மற்றும் வட கிழக்குத் தமிழர்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.
முஸ்லீம் தமிழர்களுக்கும், வட-கிழக்குத் தமிழர்களுக்கும் திட்டமிட்ட முரண்பாட்டை இலங்கை அரசு ஏற்படுத்த முனைகிறது.
இந்த நிலையில் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடும் முஸ்லீம்களை வழ-கிழக்குத் தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பும் வகையில் 71 பேர் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட அறிக்கை அமைந்திருந்தது.
இவ்வறிக்கையை விமர்சிப்பவர்களை தனி நபர் தாக்குதலுக்கு உள்ளாக்க முற்படும் இருவரை இங்கே காணலாம். சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்(EPDP) கீரன் (சிறீ TELO) ஆகிய இருவருமே இங்கு விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
பாசிச இலங்கை அரச அமைச்சர் ஒருவரை ஐரோப்பாவிற்கு அழைத்து தலித் மாநாட்டை நிகழ்த்திவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரலெழுப்புவதாகக் கூச்சலிடும் இவர்கள் அபாயகரமானவர்கள்.
இவ்வேளையில், அண்மையில் தமிழ் நாட்டில் இந்து பாசிச குழு ஒன்றின் யாத்திரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டமை மட்டுமன்றி அவர் விஷ்வ இந்து பரிஷாத்தில் இலங்கைப் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
இது மற்றொரு வழியில் முஸ்லீம் தமிழர்களுக்கும் வடகிழக்குத் தமிழர்களுக்கும் எதிரான முரண்பாட்டை ஆழப்படுத்தும் செயற்பாடாகும். இவர்கள் அனைவரதும் பின்புலத்தில் இலங்கை இந்திய அதிகார வர்க்கங்கள் செயலாற்றுகின்றனவா என்ற அச்சம் ஏற்படுகின்றது.
இந்த நிலையில் அனைத்து சமூக உணர்வுள்ள, மக்கள் பற்றுமிக்க சக்திகளுக்கும் மக்களைக் கூறுபோட்டு அரசியல் வியாபாரம் நடத்தும் இந்த நச்சு விதைகளுக்கு எதிராக விழிப்படைய வேண்டும்.
90 per cent of the muslims in sri lanka speak Tamiil and they are not with sri lankan government. these two guys are trying to get something from government. please dont try to divide tamils. we hated ltte but not our north – east tamil brothers.
சிறுபான்மை மக்கள் இடையே ஒரு ஐக்கியம் ஏற்படவேண்டும். அதை தமிழ் மக்கள் யுத்தத்தின் பின்னரும் முயற்ச்சி எடுக்கவில்லை என்று ரங்கன் தேவராஜன்(EPDP) கூறுகிறார். முதலில் அவரின் கூற்றுப்படி பெரும்பான்மை சிங்களவருக்கும் சிறுபான்மை தமிழருக்கும் இடையில் ஒரு ஐக்கியம்வரவில்லையே. யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்களையும் சிங்கள மக்களையும் மீள் குடியேற்ற தமிழ் மக்கள் வரவேட்க்கவில்லை என்று சொல்லும் இந்த ரங்கன் தேவராஜன்(EPDP)க்கு தமிழ் மக்களை அனுராதபுறத்திலும்,கண்டியிலும், மாத்தறையிலும் மற்றும் சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களை சிங்களை இந்த சிங்கள அரசும் முஸ்லீம் மக்களும் மீள்குடியேற்ற முன்வரவில்லையே.! எதற்கு இப்போ இந்த meelkudiyetram யாழ்ப்பாணத்தில். முதலில் தமிழ் மக்களை வர்களின் sontha இடங்களில் வாழ மீல்குடியேற்றிய பின்னர் இதை பற்றி பேசலாம். அது பேசும் தகுதி சிங்கள அரசிடம் தான் இருக்கிறது. தமிழ் மக்களை பற்றி அக்கறை கொள்ளாத ரங்கன் தேவராஜக்கு சிங்கள முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றத்தின் மீது வந்த அக்கறை என்னவென்று சொல்ல்வது. இங்கு தமிழர் பகுதியில் தமிழர்கள் அல்லாதோர் மீள் குடியேற்றம் என்று பேசவரும் முன் தமிழர்களை சிங்கள பிரதேசங்களில் அவர்களின் இடங்களில் மீள்குடியேற்ற வழிசெய்யவேண்டும். இதை செய்யவோ இதை பற்றி பேசவோ தகுதி இல்லாதவர்கள் இங்கு இந்த அரசியல் தெருவாதத்தை முன்வைக்க தேவையில்லை.
முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றத்தின் மீது வந்த அக்கறையும், அவர்களின் இழப்புகள் மீதுவந்த அக்கறையும்’ தமிழ்மக்கள் மீது இவர்களுக்கு ஏன் வரவில்லை.! அப்போ இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகவே சிந்திகிறார்கள் செயல்படுகிறார்கள். ஆகக்குறைந்த பச்சமாக 83ம் ஆண்டியில் இருந்துதாவது’ தமிழ் மக்கள் இழப்புகளை கணக்குபோட்டு, புனர்வாழ்வு செய்யவேண்டும். இது ஒரு அரசாங்கத்தின் கடமை,. ஒவ்வொரு அரசியல்வாதியிங்கடமையும் ஆகும். தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்கலான அனுராதபுரம்,மாத்தறை,கண்டி, போன்ற இடங்களில் அவர்களின் காணிகளை மீளகொடுத்து மீள்குடியேற்ற இவர்கள் பேச முவரவேண்டும். அதன் பின்னர் பாதிக்கபட்ட முஸ்லீம் மக்களை புனர்வாழ்வு கொடுக்கலாம். இப்போ அவசியம் அற்ற விடயத்தை (தமிழ்மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியலை’ அதற்குள் மேலும் தமிழ் மக்களின் இடங்களை நிரப்ப, முஸ்லீம் சமூகதினிடையே பிரிவினையை கொண்டுவர முயற்சிப்பதும்) தேவையற்றது. மறைகழண்ட நிலையே முஸ்லீமக்கள் சார்பாக பேசுவார்கள் இடத்தில் காணமுடிகிறது.
ஒரு சமூகம் சார்பாக ஆதரவு காட்டி பேசலாம் தவறு இல்லை. ஆனால் அதற்க்கு முன்பு என்ன செய்யவேண்டும் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கவேண்டும். தமிழ்பிரதேசத்தில் சிங்கள,முஸ்லீம் மக்களை மீள் குடியேற்ற சிந்திக்கும் முன்னரே’ தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர வழிசெய்யவேண்டும். தமிழ்மக்களின் பிரச்சனை தீர்ந்த பின்னர் (அனுராதபுரம்,மாத்தறை,கண்டி, போன்ற இடங்களில் அவர்களின் காணிகளை மீள கொடுத்த) பேசமுன்வரவேண்டும். இல்லாது போனால் இவர்களின் வாதம் மறைகழண்ட நிலையே காட்டிநிற்கிறது. முட்டாள்கள் தான் இவர்களின் கருத்தை என்றுகொல்வார்கள்.
இந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட,இந்த வகை உரையாடலுக்குள்ளும்,71 நபர்களது கோரிக்கை-அறிக்கையென்பதற்குள்ளும் இருக்கும் அரசியலைச் சமாந்தரமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
இலங்கையில் இனங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளும் ஏதோ இனக் குரோதத்தால்-ஐய்யப்பாடுகளால் எழுந்தாக இருக்கமுடியுமா?
இந்தக்கீரன்,அல்லது ரங்கன் தேவராஜன் போன்றவர்களது கருத்தானது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கானவொரு அரசியல் தீர்வுக்கான பாதையுள்,ஒரு நீண்டகால அரசியல் தீர்வுசார்ந்த ஆரம்பப் புள்ளிகளையே குழப்பிச் சிறுபான்மை இனங்கள்மீது ஒவ்வொரு புறமாக அவநம்பிக்கையையும்,அவதூறையும் விதைத்துத் தொடர்ந்து வரலாற்றுப்பழியூடாக ஒரு இனத்தை இலங்கையில் எந்தவுரிமையுமற்ற நிலைக்குட்படுத்துவதற்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்துக்கிசைவான தெரிவுகளில்(மக்களுக்குள் நிலவும் பல்வேறு “வேறுபாடுகளை” மேல் நிலைக்குக்கொணர்ந்து அவையூடாகப் பிராதான கோரிக்கையை நீர்த்துப்போக வைத்தல்-திசை திருப்பிய அதிர்வுகளின்வழி, மீளப் பிரித்தாளும் வியூகத்தைத் திட்டமிட்டுச் சிங்கள அரசுக்கேற்ப இயக்குவது) அரசியலாகச் செய்கின்றனர்.
இதற்கு முன்மாதிரியாக நிர்மலா போன்றவர்கள் தமது சகோதரியின் படுகொலையை எப்படிப் பிரபலமாக்கி ஒரு அரசியலை இலங்கையரசுக்கேற்பச் செய்தார்களோ,அதையே, மீளவுஞ்செய்வதில் தொடர்ந்து கருத்தியற் போராட்டத்தை இத்தகைய வடிவங்களில் செய்கின்றனர்.
ராஜனி திரணகம போன்ற எத்தனை ஆயிரம் மக்கள் இலங்கையின் இனவொடுக்குமுறை அரசின் சூழ்ச்சியால்-ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டனர்.இந்த இனவொடுக்குமுறை அரசியற்றொடர்ச்சியால் பலபத்து இயக்கங்களைத் தோற்றுவித்த இந்திய நலனானது, இலங்கையின் மக்களுக்குள் நிகழ்த்திய அரசியலானது மக்களுக்கு விரோதமாக இயக்கங்களை வைத்தே காரியம் செய்துகொண்டது.
அதன் தொடர்ச்சியானது மீளவும், தமிழ்பேசும் மக்களை மொட்டையடிப்பதில் அதே தமிழர்களை வைத்தே நாடகமிடுகிறது. இதுள்,நிர்மலாவென்ன-கீரனென்ன?
அனைத்து நபர்களதும் பின்னே உருவாகி விருட்சமாகி இருக்கும் பிராந்திய நலன்சார் அரசியலது வேட்டைதாம் முக்கியமானது அதைப் பரவலாகவும் பேசியாக வேண்டும்.
நாவலன் வரும் 7ஆம் தேதி பெப்ரவரி,கேள்வி நேரத்தில் பங்குபெற முடியுமெனக் கருதுகிறேன்.
இந்த 71 பேர்களில் எவரும் வந்து விவாதிக்கக்கூடியவொரு களத்தை திறப்போம்.
இன்றைய சூழலில் இத்தகைய 71 பேர்களது முகத்தோடு வரும் கோரிக்கை-அறைகூவல்கள் யாவும் பின்னே அதிகார வர்க்கத்தின் அரசியல் நலத்தைப்க்கொண்டியங்குகின்றது.இது,இலங்கை அரசினது இனவொடுக்குமுறை நிகழ்வால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ அல்லது வேறெந்த மக்களுக்கோ எந்த விடிவையும் தரப்போவதில்லை!முஸ்லீம் மக்களது பெயரால் மேலெழும் இந்த அரசியலானது சமீபத்தில் தலித்துவ மக்கள் பேராலும் எழுந்து, இலங்கைச் சிறுபான்மை இனமக்களுக்குள் இனவொடுக்குமுறையென்ற ஒன்றே இல்லாததுபோலக் கட்டமைத்து.அதன் உச்சமாக இதுவும் மேலெழுந்து மேலுமொரு சிக்கலான முரண்வெளியை நமக்குள் தோற்றுவிப்பதில் இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் வெற்றி கொள்கின்றனர். இவர்களது லொபி அரசியற் செயற்பாட்டையும்,மீளவும் இந்திய அரசும்,இலங்கையும் இணைந்துத் தம் வலுக்கரத்தை இனங்களுக்கிடையில் மெல்ல திணித்துத் தமிழ்பேசும் மக்களது அரசிற் தீர்வுகள்-கோரிக்கைகளை நீர்த்துப்போக வைப்பதும்,வரும் வசந்தகாலத்தில் ஜெனிவாவில் நிகழும் மனிதவுரிமைசார் நிகழ்வூக்க இருக்கையில் இலங்கையின் பாசிச அரசினது இனவழிப்புக் குறித்தும் விவாதங்கள் எழ இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவும்,தமிழ்பேசும் மக்களும் தமக்குள் இனவாதத்தைக்கொண்டிருந்தனர், தமக்குள்வாழ்ந்த சிறுபான்மை இனத்தை ஒட்டமொட்டையடித்து வெருட்டியடித்தனர், என்பதெல்லாம் ஒரு அரசியலாக மேலெழுகிறது!
நிர்மலா தலைமையில் அணிவகுக்கும் 71 ஆட்டுக்குட்டிகளும்,சிங்கள மேலாதிக்க வாதத்தைக் காப்பதற்கெடுக்கும் முன்நிபந்தனையாகிறது.தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு வலுவான அமுக்கக் குழுவாக இது இயங்க வைக்கப்படுவதற்கானவொரு முன்னோட்டமே இந்தக் கோரிக்கை-கையெழுத்து நடவடிக்கை.
இது,திட்டமிடப்பட்ட சதி.
இதற்கேற்பக் கீரன் தொடர்ந்து பேசும் விவேகமற்ற விதாண்டாவாதமானது அரசு என்றால் என்ன அதன் தாத்பாரியம் எப்படி ஆதிக்கமாக மக்களுக்குள் இயங்குகிறதென்பதை வேடிக்கையாகப் புரிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ் வுரையாடல் மூலஞ்செய்கிறார்.
இதுவொரு,தேவையோடுதாம் இத்தகைய முரட்டு மோடர்களை வைத்து இலங்கையின் அரச ஆதிக்கமும்,இந்திய அரசும் தமது நிகழ்ச்சி நிரலைக்குறித்து முன்னோட்டமாகச் சில கருத்துக்களத்தைத் தகவமைக்கிறது.இதனூடாக விரியும் அடுத்த நகர்வானது இலங்கையின்இனப்பிரச்சனையுள் எந்தவித அரசியற் தீர்வையும் தட்டிக்கழிப்பதற்கும்,அதன் வாயிலாக மக்களைத்தொடர்ந்து ஏமாற்றித் தமது அரச அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்குமான வியூகமே இப்போதைய தெரிவில் முதலிடம் வகிக்கிறது.
யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளாக இருப்பவர்களே,முஸ்லீம் மக்களது வருகையை எதிர்ப்பதென்பதைத் தமிழர்களாக மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கலைக் குறித்து எவரும் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை.இதுவொரு தீங்கான திரிபு அரசியல்.
இனவழிப்பைச் செய்த அரசு,புலிகளை அழிக்கும்போது”புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறு”என்றார்கள்.அப்போ,தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறானவொரு இயக்கவாத அரசியலும் அதுசார்ந்த அரசியல் நகர்வுஞ் செய்த இஸ்லாமிய மக்களுக்கெதிரான அரசியலை ஏன் இப்போது தமிழ்பேசும் மக்களினத்தின் பெயரால் நீட்டி முடக்குகிறார்கள்?
இந்த”தமிழீழப் போராட்டம்”என்பதன் ஆரம்பமே சிங்கவாத அரசின் இனவொடுக்குமுறையின் விளைவுதானே?
இனவொடுக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஒடுக்கிவரும் அரசானது,அத்தகைய ஒடுக்குமுறையத் தவிர்த்து இனங்களுக்கிடையில் சமாதான சக வாழ்வைச் செய்திருந்தால்,அரசியல்ரீதியாக நியாயமானவொரு தீர்வைச் சிறுபான்மை இனங்களுக்குள் ஏற்படுத்தியிருந்தால், புலிகள்போன்ற அந்நிய அடியாட்படை அமைப்புகள் தோன்றியிருக்க முடியாது.
அவ்வண்ணம், இந்திய சூழ்ச்சிக்குப் பலியாகி,இந்தியாவின் ஆலோசனைக்கிணங்க அநுராதபுரச் சிங்கள மக்கள் கொலைகள்-இஸ்லாமியர்களைத் துரத்தியடித்தலென்ற மக்கள்விரோதச் செயல்களை நமக்குள் செய்யும் இந்நிலை தோன்றியிருக்க முடியாது.
இது திட்டமிட்ட மேற்குலக மற்றும் இந்திய-இலங்கைச்சதி அரசியல்.
இன்றும், அதே பழையபாணிப் பிரித்தாளும் தந்திரத்துடன்,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பைத் திட்டமிட்டு மறைக்கவும்,அதன்மீதான கவனத்தைத் திசைதிருப்பித் தம்மை நியாயப்படுத்த முனையும்,இலங்கை-இந்திய ஆளும்வர்க்கத்து அரசியலை முன்னெடுக்கும் இந்த 71 நபர்கள் அடங்கிய கூட்டம் மிகவும் மோசமானவொரு லொபிக்குழுவாக நமது மக்களதும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களதும் உரிமைகளை நசுக்குவதற்கேற்ப இந்த முரட்டுத்தனமான-முட்டாள்தனமான கோரிக்கையூடாக அந்நியத் தேசங்களுக்கு கருத்தியற் காவிகளாகவும்,எமக்குள் ஒரு அமுக்கக் குழுவாகவும் இறக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மிக விரிவாக வரும் 7 ஆம் தேதி கேள்வி நேரத்துள் உரையாடலாம்.
தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.01.2012
தோழர் ப.வி சீறீரங்கன் என்று அழைப்பது எனக்கு ரொம்பவும் கூச்சமாக இருக்கிறது.
யாழ் தழிழ்மக்களில் தோன்றிய ஆயுதக்குழுக்களால் வெளியேற்றபட்ட பட்ட
முஸ்லீம்மக்கள் மீளக்குடியமர்த்தப் படுவதில் தங்களுக்கு சங்கடம் ஏதாவது உண்டா?.
அடச்சீ>மணியண்ணை தோழர் சிறீரங்கன் என்றழைக்கக் கூச்சப்படுவது இயற்கைதானே?பின்ன இருக்காதோ! ஐயா மகிந்தாவைத் தோழமைகொண்டவுள்ளங்கள் சரியான கொழ்யூனீஸ்டுக்கள் அல்லவா?நம்மை மாதிரிப் புதியதைத் தேடியபடி இன்றைய பீட்டர் சிமாவை-தோமஸ வாக்கினரைக்கூடச் சந்தேகப்படும் நமது வாசிப்புக்கு முன் நீங்கள் கூச்சமடைவது ஒரு பெரிய விஷயந்தாம் தோழரே! 🙂
உங்கள் வாசிப்பு எம்மை விட கூடியதில்லை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உதாரணத்திற்கு ஒருவேட்டைக்காரன் சுட்டபுலியின் உடம்பில் கால் பதித்து படம் எடுப்பான். அதை பெருமையாகவும் பலர்பேர் பார்க்கும் வண்ணம் மாட்டிவைப்பான். நீங்கள் படிப்பில் புலி அல்லவா? புத்தகத்தையும் அலுமாரிகளையும் காட்டுவதும் ஒரு வகை படிப்பு புலிவீரமல்லவா.
இப்படியான படிப்புமேதைகளுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வருவதுண்டு. இந்த சந்தேகங்கள் இலகுவில் குணப்படுத்த முடியாதவை. ஒரே வழி மனிதநேயத்திற்கு இறங்கி வந்தால் மட்டுமே!. அதாவது யாரையும் வர்க்கப் பார்வை கொண்டு பார்ப்பது. அது தான் தங்களின் படிப்பில் தவறவிட்ட பகுதி.
முஸ்லீம் மக்களை மீளக்குடிறே ஒத்துழைப்பை வழங்கச் சொல்லித்தானே உங்களிடம் கேள்வி கேட்டோம். முஸ்லீம் எல்லாம் வசதியானவர்கள் சுரண்டுபவர்கள் என்பது உங்கள் கருத்தா? நீங்கள் பொதுவுடைமை இலட்சியத்தை தூக்கிப் பிடிக்கும் பொதுயுடமை இலட்சகரா? எது எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்.
வர்கப்பப்போராட்டம் எப்பொழுதம் சரியான பாஷையில் மறுமொழி சொல்வது கிடையாது. இருந்தாலும் அதுவும் வர்க்கப் போராட்டத்தின் இழைவுகளே என்பதை நாம் தான் கண்கொள்ள வேண்டும். இதில் இருந்து தோற்றம் பெற்றவையே 71 கிளர்ச்சி என்றாலும் 83 இனக்கலவரத்திற்கு பிறகு புத்துயுர் பெற்ற தமிழ்மக்களின் ஆயுதக்கிளர்ச்சி என்றாலும் இருந்தாலும் நாம்தானே எது வர்க்கப் போரட்டத்திற்கு பொருந்தக் கூடியது என்பதை வரையறை செய்ய வேண்டும். மகிந்தா ராஜபக்சா முதாலித்துவவாதி என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. அவர் இல்லாத இடத்தில் யார் வந்திருப்பதாக உங்கள் மேதாவிலாசத்திற்கு தெரிகிறது? என்னை பொறுத்தவரை ரணிலோ சரத்தோ வந்திருப்:பார் என்றே தோன்றுகிறது. அப்படிவந்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் பங்கருக்குள் சுகக்குடித்தனம் செய்திருப்பார். வன்னி விவசாயிகள் தங்கள் சுகந்திரத்தை இழந்திருப்பார்கள். வடக்கும் தெற்கும் இருக்கும் போக்கவரத்து பொருளாதார தொடர்புகள் முற்றுமுழுதாக அறுவுண்டிருக்கும். இதைத்தானே நீங்கள் விரும்புவது சிறீரங்கன் அவர்களே! இதுவும் கொம்யூனிஸ்கள் தேடிய தேட்டமாக கணக்கில் வரவு வைப்போம்.
//இந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட//
முதலில் அறிக்கை தவறானது என்பதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள். இல்லையேல் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் சொல்லிவிட்டார்களே என்பதற்காக இதை நிராகரிக்கிறீர்கள் உன்று பொருள் படும்.
கையெழுத்திட்ட அனைவரதும் சகல அரசியல் கொள்கைகளையும் நான் ஆதரிக்கிறேன் என்றோ கலந்துரையாடல்களில் கூறப்பட்ட சகலவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றோ பொருளல்ல. ஆனால் இந்தக் கலந்துரையாடல்களிற்கு முன்னர் கையொப்பங்களை வாசிப்பதற்கு முன்னர் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்தக் கருத்துடன் நீங்கள் முரண்படுகிறீர்கள்?
இல்லாவிட்டால் “தமிழுரிமைச் செடிக்கு ஏக போக உரிமை கொண்டாட சிறிரங்கன் முயல்கிறார் ” என்று எதுவித ஆதாரமுமில்லாமல் நானும் – அல்லது யாராவது சொல்லிவிட்டுப் போகலாம்.
நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களை நையப் புடைத்துவிட்டு வேண்டுமானால் மண்டையில் போட்டுவிட்டு, உங்கள் வீட்டு வாசலில் வைத்தே வன்முறை தவறு என்றும் அமைதியும் சமாதானமும் வேண்டும் என்று அறிக்கை விடுகிறேன். உங்களது நண்பர்கள் எனது அறிக்கையை தவறில்லை என்று எனக்காகப் பிரச்சாரம் செய்வார்கள். முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது கோடாபயவும் ஒரு அறிக்கை விட்டார். மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை நடைபெறுகிறது என்று. ஒரு அறிக்கை அதன் உள்நோக்கம், அதன் சார்புநிலை எல்லாம் மறுப்பு அறிக்கைகளாக வெளியாகியுள்ளன. இப்போ நீங்கள் கோடாவை நியாயபடுத்திய கருணா போல பேசுறீர்கள். உங்களைப் போல பலரைக் கண்டாயிற்று.
என்ன தர்சினி கதைக்கிறீர்கள். நித்திரையால் எழும்பி வந்தவன் போதையில் இருப்பவன் இருந்தும் கூட சிலவேளைகளில் நிதானமான பேச்சுகள் வரும். இது கூட உங்களிடம் இல்லையே?.
எழுபது வீதத்தை கைப்பற்றி விட்டோம் இன்னும் முப்பது வீதமான இடம் தான் பாக்கி இருக்கிறது என முழங்கியவர்களிடம் இருந்து தான் தமிழ்மக்கள் கொடிய துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை நாம் சொல்லியா தெரியவேண்டும் தர்சினி அவர்களே!?.
எதையும் நிதானமாக கதையளப்பதே சாலச் சிறந்தது!.
ஓமோம் சந்திரன், தமிழ் மக்கள் தாங்கள்,நித்திரையிலும், போதையிலும் இருக்கும்போதா ? புலிகளுக்குநாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களைக்கொடுத்தார்கள்: அல்லது யாழில் சோரியகதிர் ராணூவநடவடிக்கையின் போது , யாழில் உள்ள 5 இலட்சம் மக்களும் போதையிலா புலிகள் பின்னால் சென்றார்கள்? அல்லது வன்னியில் ஜெயசிக்குறுய்நடவடிக்கையில் வன்னியின் அத்தனை மக்களும் புலிகள் பின்னால்நித்திரையிலா சென்று அச் சமரை பைத்தியங்கல் ஒரு போதும் தங்களை பைத்தியங்கள் என்று ஒப்புக் கொள்வதே இல்லை. தாங்கள் தயவுசெய்து ஒருநல்ல மனவியாதி வைத்தியரைப் பார்க்கலாமே..?
புலிகள் சொல்வதைக் கேட்டு அதனை வேத வாக்காகக் கொண்டு வடமராட்சி தென்மராட்சிக்குச் சென்றவர்கள் பின்னர் புலிகள் கூவியழைத்தும் நில்லாமல் வலிகாமம் சென்றது மட்டும் போதையிலா?
போரிற்குப் பயந்து மக்கள் வேற்றிடம் தேடி ஓடுவது இயற்கை. ஒருசிலர் புலிகளுக்கும் டிமிக்கி கொடுத்தனர். எஞ்சிய யாழ் மக்கள் புலிகளால் துரத்தி விடப்பட்டனர் என்பதே உண்மை.
உங்களின் சூழலிற்கு உனது கருத்தைப் பொருத்திப் பாருங்கள். “அமைதியும் சமாதானமும் வேண்டும்” ஆகவே இவனைத்தாக்கியவன் மண்டையில போட்டவனும் இதற்கெதிரானவன் இவனை நிராகரி (அல்லது கைது செய்) என்று நீங்கள் தொடங்க வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு கோத்தபாய அமைதியும் சாமாதானமும் வேண்டுமென்கிறான். கோத்தபாய தவறானவன். ஆகவே எங்களுக்கு அமைதியோ சமாதானமோ தேவையில்லை என்று ஏன் கூச்சலிட வேண்டும்?
தர்சினி
உங்களின் உதாரணத்திற்கு எனது கருத்தைப் பொருத்திப் பாருங்கள். “அமைதியும் சமாதானமும் வேண்டும்” ஆகவே இவனைத்தாக்கியவன் மண்டையில போட்டவனும் இதற்கெதிரானவன் இவனை நிராகரி (அல்லது கைது செய்) என்று நீங்கள் தொடங்க வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு கோத்தபாய அமைதியும் சாமாதானமும் வேண்டுமென்கிறான். கோத்தபாய தவறானவன். ஆகவே எங்களுக்கு அமைதியோ சமாதானமோ தேவையில்லை என்று ஏன் கூச்சலிட வேண்டும்?
இங்கே நடப்பது இதுதான். முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்தில் இவர்களிற்கு விருப்பமில்லை எனவே கையெழுத்திட்டவர்கள் மீதான தாக்குதல் மூலம் அறிக்கையின் சாராம்சத்தையே நிராகரிக்கிறார்கள். முஸ்லீம் – தமிழ் மக்களிடையேயான ஒற்றுமையீனமே தமிழுரிமைச் செடி என்பது இவர்களின் அடிப்படைக் கருத்து.
ரெக்கார்டிங் வருமா வராதா??
இந்தவிவாதத்தில் கருத்துக் கூறிய திரு.சபாநாவலன் அண்ணாவுடைய கருத்தைநான் முற்று முழுதாக ஆதரிக்கிறேன். திரு.தீரன் அவெர்களே தயவு செய்து உணர்ச்சிவசப் படாதேயும். வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளி யேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பது ஊரே அறிந்த விடயம்.உமக்குத் தெரியாதல்ல. இருந்தாலும் ஒரு முறை கூறிவைக்க விரும்புகுறேன். கிழக்கில் தமிழ்மக்கள் சிங்கள இராணுவ, ஊர்காவல் படையாலும், அத்தோடு சேர்ந்த முஸ்லிம் ஊர்காவல், காடையர்களாலும் சுடப்பட்டும் , வெட்டப்பட்டும் கொல்லப்பட்டும் , அவெர்களது சொந்தக் கிராமத்தை விட்டு விரட்டப்பட்டும், பலர் கைது செய்யபட்டு காணாமல் போயும் தமிழ்மக்கள் கிழக்கில் இந்த இரண்டு தரப்பாலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கையில் , வடக்கிலோ முஸ்லிம் மக்கள் புலிகளது கட்டுப்பாட்டில் எந்தவித அச்சமும் இன்றியும், பயமும், இழப்பும் இன்றியும் , கிழக்கில் முஸ்லிம் மக்கள் , தமிழ் மக்களுக்கு எதிராகநடத்தும் தாக்குதலுக்கும் , தங்களுக்கும் ஏதும் தெரியாதது போல் இருந்தது, குறிப்பாக புலிகள் அமைப்பில் இருந்த கிழக்கு மாகாண தளபதிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் மிகுந்த கோவமும் , மனக்கசப்பும் உருவானாது, அதன் விளைவாக அன்று கிழக்குமாகாணத் தளபதிகளான, குறிப்பாக கருணா, கரிகாலன் போன்றவர்களும் ,கிழக்கின் முக்கிய போராளிகளும் , இங்கு வடக்கில் வந்து எமது தேசியத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு வாரகாலமாகநடந்த ஆலோசனையில் அல்லது வாக்கு வாதத்தில் கருணா சொன்னது என்னவென்றால், கிழக்கில் தமிழர்கள் முஸ்ல்லிகளால் கொல்லப்படும் போது, வடக்கில் முஸ்லிம்கள் புலிகளின் பாதுகாப்பில் இருந்த்தால், இனி கிழக்குமாகாணப் போராளிகள் சண்டைகள் எதிலும் ஈடுபட மாட்டார்கள்:; அத்துடன் வடக்கு- கிழக்கு தமிழர்களிடையே புலிகள்நாங்களே பிரதேசவாதத்தை ஊக்குவிக்கிறோம் என்று. இப்படி தலைவரினதும், புலிகள்து மத்தியகுழுவினது சம்மதமும் இல்லாமலும், புலிகளுக்குள்ளும், தமிழர்களுக்குள்ளும் பிரிவினை வந்துவிடக் கூடாது என்றும், குறிப்பாக கருணா தலைமையிலான கிழக்குமாகாணப் போராளிகளாலெயே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றைக்கு வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் தமது சொந்தக்காணியில் குடியேற வழி இல்லை. பாதுகாப்பு வலயம்நீக்கப் படவில்லை. கரையோர தமிழர் மீன்பிடிக்க வழி இல்லை. ஆனால் புத்தளம் , சிலாபம் , கிண்ணியா முஸ்லிம் மக்களோ பாதுகாப்பு வலையங்களில் சர்வ சாதராணாமாக மீன்பிடித்து விட்டு செல்கிறார்கள்: இப்படி வடக்கு தமிழ் மக்கள்நாங்கள் பிச்சை எடுக்கும்நிலையில் இருக்கையில், முஸ்லிம்களுக்கு அதிகாரம் கொடு, அவ்ர்களை முதலில் குடியமர்த்து என்றால், தமிழர்களுக்கும் -முஸ்லீம்களுக்கும் சண்டை வராமல் என்ன வரும். இதைதானே திரு.சபானாவலன் அண்ணா அவெர்கள் விரிவாகச் சொன்னார். தீரன் அவெர்களே குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்க வேண்டாம்.
மேற்கத்தைய வானொலி தொலைக்காட்சிகளைத் தொடர்பு கொள்ள எனக்கு வசதியில்லை. நாவலன் – தயவுசெய்து இதனைத் தெளிவாக்கவும். இப்படி நீங்கள் கூறினீர்களா?
இந்த அறிக்கையின் கபட நோக்கம் தெரிந்துதான் முஸ்லிம் பிரதினிதிகள் மெளனம் காக்கும் அதேநேரத்தில் ரங்கன் , கீரன் போன்ற அரச எடுபிடிகள் வித்தியாசமான கோணத்தில் பாய்கிறார்கள். போல் பொட் ஒரு மாக்சிச வாதி என்று கீரனுக்கு யார் சொல்லி தொலைத்தார்களோ? ரங்கன் போல் நாவலனால் சுதந்திரமாக யாழ் சென்று மக்களை சந்திக்க முடியாததென்பது ரங்கன் அறியாத ஒன்றல்ல. மற்றும் புத்திஜீவிகள் என்ற பதம் பன்படுத்தியதற்கு நாவலன் இனியொரு வாசகர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் ஏனெனில் புத்திஜீகள் என்றால் யார் என்பதை பிழையாக அடையாளம் காட்டியதற்கு
இந்த விடயம் சார்பாக நாவலனின் பார்வை கனமானதாகவும், தெளிவானாதாகவும் உள்ளது.
ஒருவர் பேசும் போது அவர் வெளிப்படுத்தும் இயல்பு, இவர் வல்லமைக்கு இனி சொல்ல என்னதான் உள்ளது என்ற கண்ணோட்டத்தைப் பிறருக்கு கொடுத்துவிடும். அப்படியே ‘அரவிந்தன்’ என்பவரின் விக்கல், இருமல் கலவை வார்த்தைகளில் அடிப்படைப் பேச்சுரிமைகூட பந்தாடப்படுகின்றது, ‘இந்த அறிவுலட்சணத்திற்கு, இதன் தலையில் ஏன் இந்தப் பனங்காய்’ என்றே எண்ணவைக்கின்றது.
கவனத்தில் கொள்க: முக்கியமான விடயம்.. இன்று தெற்கில் எல்லா வியாபாரநிறுவனங்களிலும் முஸ்லீம்கள் மிக வேகமாக முன்னேறிவிட்டார்கள். இரண்டாவது பெரும்பான்மை இனம். இதனை சிங்களவர்களால் தக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் சிங்கள அரசு தமிழர்களை முஸ்லீம் களுகு எதிராக திருப்பி வைக்கிறது.
யாழ்.மாநகர சபையை ஆள்வது மகிந்தாவின் நண்பர்கள் கூட்டம். மீள்குடியேற்றத்தை யார் தடுக்கின்றார்கள் என்பது
ரங்கனுக்குத் தெரியும் . ஒரு விடயத்தை பற்றி பேசும் போது, அதனைத் திசைதிருப்பும் வகையில் வேறு விடயங்களை
சேர்க்கக் கூடாது. ‘யாழ் வெள்ளாளர் மாதிரி பேசுகிறாய்’, ‘உன் கையில் ஆயுதம் இருந்தால் பொல்பொட் மாதிரி ஆகிவிடுவாய்’ என்று
சம்பந்தமில்லாது விடயங்களை கீரன் பேசுகிறார். இதை பார்க்கும் போது, நாவலனுக்கு அடித்து விடுவாரோ என்று எதிர்ப்பாத்தேன்.
யாழ்பாணத்தில் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்கள் மார்க்சிசவாதிகள்
என்பதை கீரன் மறந்து விட்டாரோ. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
இலங்கையில் ஆட்கடத்தல் கப்பம் வாங்கிய உதயன் ரெலோவைச் சோர்ந்த கீரனும் இந்த தொலைக்காட்சி பேடடியில் வரும் கீரனும் ஓரே ஆளா? அறிய விரும்புகிறேன். இவரைப்பற்றி நிறைய விசயங்கள் உண்டு. உதயன் ரெலோ கீரனின் அடாவடித் தனங்கள் பற்றி இலங்கையில் சிங்கள ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன. லண்டனில் இருந்து வெளிவரும் குளோபல் தமிழ் செய்தி இணையத்திலும் இவரைப் பற்றி செய்திகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் வந்த செய்தியை இணைத்துள்ளேன். இருவரும் ஒரே ஆளா என்பதை தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.
Tamil people being swindled by Sri TELO
2010-07-30
Sources from the Wanni told Lanka News Web that a group of persons who have defected from the TELO and formed a separate organization called Sri TELO is currently engaged in playing out monies from displaced Tamil civilians in the North claiming they are trying to get land and building toilets for the displaced persons.
The Tamil civilians are being swindled by Sri TELO, which has the support of the government, by operating a false kachcheri. It is learnt that a considerable amount of money taken from the innocent civilians are being divided among government officials as well.
One Udayan acts as the leader of the Sri TELO group. He has received political asylum in Norway and is therefore a Norwegian national. The other person called Nimo, has received political asylum in Germany and is a German national. Both these individuals fled the country in the 80s and received political asylum in the respective countries by making various claims against the country.
The third person heading the group is one Keeran, who is a British national. He arrived in London after being released from the Boossa camp, where he was held captive for his actions against the Indo-Lanka Accord.
Sources told Lanka News Web that this group had taken monies from displaced civilians for the land in Karpak Street in Mannar that was given free by the government.
http://www.lankanewsweb.com/news/EN_2010_07_30_002.html
கீரனை விடுங்கள். அவர் தாதா என்பது தெரிந்த விட்யம். ரங்கன் கேப்பதற்கு பதில் என்ன
“யழ்பாணம் போகாமல் இங்க இருந்து கொண்டு எப்படி முஸ்லிம் மக்களை பற்றி பேச முடியும்”
. நாவலன் லண்டன் வந்து 25 வருசமாவது இருக்கும். யாழ்ப்பானம் என்ன கலர் தெரியுமா?
ரங்கன் தனக்கு எந்த சொத்தயும் செர்த்து கொள்ளவில்லை. எல்லோருக்கும் தெரியும். எப்படி வியாபாரிகள் என்று அழைப்பீர்?
டக்ளசுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதானால் , நாவலனும் யாழ்ப்பாணம் போகலாம். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கினால்,நேரே
நான்காம் மாடிக்குத்தான் அவர் செல்ல வேண்டிவரும். நாட்டுக்குப் போகாத, யாழ்ப்பாணக் கலர் தெரியாத எங்களுக்கு இதையெல்லாம் வந்து
ஏன் சொல்லுறியள் சிவபாலன். பேசாமல் ‘டான்’ டிவியில கதைக்கலாமே.
கீரன் சில நாகரீகங்களை பழகலாம்.நாவலன கதைக்கும் போது இடையில் புகுந்து ,அவர் சொல்ல வந்த சேதியை சொல்ல விடாமல் குறுக்கிட்டு பேசுவது அநாகரீகம்.அவரவர் முறை வரும் போது பேசும் நாகரீகத்தை நம்மவர்கள் எப்போது கற்று கொள்ளபோகிறார்கள்.வாய் கிழிய ஜனநாயகம் மண்ணாங்கட்டி என்று புலம்புவார்கள்.
நாவலன் இன்னும் உறுதியாக கதைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.ஏனென்றால் மற்றவர்கள் தங்களது பக்க நியாயத்தை தெளிவாக பேசியிருக்கிறார்கள்.
கீரன் நாவலனை தடுப்பதிலேயே குறியாக இருந்து தேவையில்லாத சில வியாக்கியானங்களை கதைத்தார்.இது தான் புலிகள் பாணி.பிரபாகரனிடம் ஆய்தம் இருந்தது இவர்களிடம் இல்லை.
நாம் திருந்த இன்னும் எவ்வளவோ தூரம் இருக்கிறது என்பது வருந்த தக்க செய்தி.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை ஒட்டாண்டியாகி ,மருந்து குடித்து செத்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்கள், பெற்ற குழந்தையை பற்கைறளிலும் கிணறுகளிலும் சாக்கு மூட்டைகளிலும் எறிந்து கொண்டு இருக்கிற தமிழ் மக்கள் குடியேற்ற வேண்டுமாம். அதுவும் இருபது வருடத்துக்கு முதல் முஸ்லிம் மக்கள் என்னென்ன வகதிகளோடு இருந்தார்களோ அத்தனை வசதிகளும் செய்து குடியேற்ற வேண்டுமாம்.; தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் கொடுத்தது நாலு தகரமும் தடிகளும் தான். அதை வைத்து எங்கே கொட்டில் போடுவது என தமிழ் மக்கள் அலைந்து அழிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் மட்டுமா இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளார்கள்? அதை விட தமிழ் மக்களா முஸ்லிம் மக்களை துரத்தினார்கள்? அல்லது புலிதான் அவர்களை வாழ விட்டிருந்ததா? முஸ்லிம் மக்களின் வெளிறே;றத்திற்கு புலிகளே பொறுப்பு. உங்களை வித்தியாசமாக காட்ட வேறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஏன் இரு சமூகங்களை மோத வைக்க முயல்கிறீர்கள்? இடப்பெயர்வின் அவலம் உங்களை விட தமிழ் மக்களுக்கு நன்கு புரியும். முஸ்லிம் மக்களை குடிறே அரச அதிகாரிகளே தடுக்கிறார்கள் என கூறிக் கொண்டு தமிழ் சமூகத்தை நோக்கி ஏன் அறிக்கையை திருப்புகிறீர்கள்? உங்கள் நோக்கம் இதிலிருந்தே தெரிகிறது . நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கேணையர்கள் என முடிவுகட்டி விட்டீர்கள்.முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் புலிகளோடு முடிந்து போன விடயம். வருங்காலத்தில் அவர்கள் தமது மீள் குடியேற்றத்தை தமிழ் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலம் அடைந்து கொள்வார்கள். ஏனெனில் தமிழ் மக்களும் தமது நிலங்களில் குடியேற வேண்டும்.
சாதிக்கெதிராக பேராடப் போபவர்கள் எல்லாம் பகிரங்மாக நீ ஒரு வெள்ளாளன் என கர்ஜித்ததைக் கேட்ட போது துரோகி என ராஜினியை, கேதீஸ்வரனை, சுந்தரத்தை -(அவர்களின அரசியலையும் கருத்துக்களையும் )சகிக்கமுடியாத புலிகளின் வன்மமும் அவர்களின் துப்பாக்கி குண்டுகளின் இடியோசையுமே தீபத்தின் அரங்கில் அன்று எதிரொலித்தது.
இந்த விவாதத்தில் திரு. சபா நாவலன் என்பவரின் கருத்தில் நான் உடன்படுகிறேன். அவர் இன்னும் பல விஷயங்களை சொல்ல முற்பட்டாலும் திரு.தீரன் போன்றவர்கள் குழப்பியடிக்க கூடியதாகவே இருக்கிறார். திரு.தீரன் போன்றவர்கள் பொதுவாக பாசிச கருத்துகளை ஆதரிபவர்கள் இவர் போன்றவர்களிடம் திரு சபாநாவலன் போன்றோர்களது கருத்து நிட்சயம் எடுபடாது என்பது நாம் அறிந்த விடயமே!! இலங்கையின் முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களம்க்கு இடையிலான இனப்பிரச்சினையில் தீர்வு காண முனையும் போது தமிழர்கள் முஸ்லிம்களின் பங்கும் அவர்களது அரசியல் பரிமாணமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இலங்கையில் அரசு தமிழருக்கிடையிலான இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதில் பல நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்னமும் ஆரோக்கியமான விவாதத்துக்கும் நிலைக்கும் அது கொண்டு வரப்படவில்லை. தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதில் சிங்கள அரசாங்கம் சில தந்திரங்களை எதோ ஒரு சில காரணங்களுக்காக செயல்படுகிறதோ என்று நினைக்கத்தோன்றுகிறது. இந்த நிலைமை இன்று மட்டும் அல்ல, தந்தை செல்வா காலத்தில் இருந்து இந்த நிலை தொடர்வதை பார்க்கிறோம். ஆனால் உண்மையில் சிறுபான்மையாகிய நாம் எமது இனங்களுக்கான புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் இன்றைய சூழ்நிலையில் இந்திய நாட்டின் ஒத்துழைப்பு முழுமையாகக் காணப்படாது போனால் நிச்சயமாக இனநெருக்கடிக்குத் தீர்வு சாத்தியமே இல்லாமல் போய்விடலாம். முழு நாட்டினதும் எதிர்பார்ப்பு இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிரந்தர தீர்வுக்கு வழிசமைக்கப்பட வேண்டுமென்பதேயாகும். இங்கு நான் குறிப்பிடும் கருத்து மேலே உள்ள குறிப்புக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கிலே உள்ள விஷயங்களையும் இங்கு குறிபிடுவது அவசியம் என்று கருதுகிறேன். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம் இனத்தவர்கள் கவனிக்கப்படவில்லை. இன்று நிலைமாறி முஸ்லிம்களின் பிரச்சினையும் உள்ளடக்கியே தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசும் மாநில அரசும் கொண்டிருப்பது ஓரளவு மன ஆறுதலை அளிக்கிறது.
இலங்கை முஸ்லிம்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்குமிடையில் தொப்புள் கொடி உறவு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள், எடுத்த முடிவுகள் காரணமாக அந்தத் தொப்புள் கொடி உறவு அறுந்து போயுள்ளது. அதன் தாக்கத்தை இலங்கை முஸ்லிம்களும் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எமக்கிடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். மாநாடு நடத்தப்படுவதோடு தமது பணி முடிந்து விடக்கூடாது. உறுதியான ஆக்கபூர்வமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் . தமிழ், முஸ்லிம் உறவு மீண்டும் பயனுள்ளதாக கட்டியெழுப்ப வேண்டும். முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்… இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி, நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த ‘புத்திமத்’ களுக்கு [சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை. கடந்த 17 வருட காலமாக, வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவரும் கூற வேண்டும். யாழில் இருக்கும் அரச உத்தியோகத்தர்கள் தடுக்கின்றார்கள் என்று கூறுவது , ஏதோ அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போலவும், அங்கு மக்களாட்சி நடப்பது போலவும், சந்திரசிறியும், சத்துருசிங்காவும் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்யாமல் படை முகாமிலும், அரச விருந்தினர் மாளிகையிலும் முடங்கிக் கிடப்பது போலவும் இருக்கிறது இந்தப் புனைவுக் கதை. ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசானது, அவர் என்ன சாதி, எந்தப் பிரதேசம், எந்த சிறுபான்மை தேசிய இனம் என்று பார்த்து ஒடுக்குவதில்லை. எதிர்வரும் தேர்தலில், குடாநாட்டு முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து, அரச தரப்பினரால் [எந்தக் குழு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்] இந்த விவகாரம் கிளப்பப்படுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.
அத்துடன் இங்கு கருத்து எழுதிய “thamizhan ” போன்றோர்களது கருத்து மிகவும் சரியாகவும் தெளிவாகவும் உள்ளன. நன்றி
சிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு!
சிறிரெலோ என்ற குழு இலங்கை புலனாய்வுத்துறையினரால் உருவாக்கப்பட்டதாக பொதுவான கருத்து நிலவி வருகின்றது. இந்நிலையில் குழுவின் தலைவன் உதயன் தொடர்பாக திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. உதயன் புலிகளின் தலைமைச் செயலகத்தினாலேயே மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஈபிடிபி யினுள் நுழைக்கப்பட்டதாக புலிகளின் தலைமைச் செயலகத்தின் நிதிப்பொறுப்பாளர் பாண்டியன் தெரியப்படுத்தியுள்ளார்.
புலிகளின் தலைமைச் செயலகம் எனப்படும் பிரிவின் நிதிப்பொறுப்பாளனான பாண்டியனுக்கும் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாட்டாளன் சுதனுக்குமிடையே இடம்பெற்ற தொடர்பாடலில் , வரவுசெலவு தொடர்பாக பேசப்பட்டபோது உதயனை கொழும்புக்கு அனுப்பி ஈபிடிபி யினுள் நுழைப்பதற்கு பெருந்தொகையான பணத்தினை தான் செலவிட்டதாக பாண்டியன் தெரிவிக்கின்றார். (ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.)
இவ்வாறு ஈபிடிபி யினுள் நுழைக்கப்பட்ட உதயராசா பின்னர் தனித்துச்சென்று சிறிரெலோ எனும் நாமத்தைச்சூட்டிக்கொண்டார். அதன் பெயரால் பல்வேறு தேர்தல்களில் அரச அனுசரணையுடன் போட்டியிட்டார். ஆனால் எந்தவொரு தேர்தலிலும் ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முயற்சித்து வருகின்றார். இது தொடர்பாக மாவை சேனாதிராஜா , அடைக்கலநாதன் ஆகியோருடன் பலமுறை பேசியுள்ளார். ஆனால் இழிபுகழ்பெற்றுள்ள இவரை உடனடியாக கூட்டமைப்பில் சேர்த்துவிட முடியாது என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது நிலைமைகள் சற்று சாதகமாக உள்ளதாக நம்பப்படுகின்றது.
அதேநேரம், இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வருவதானால் சிறிரெலோ என்கின்ற வாக்கியத்தை விட்டுவிட்டு ரெலோவின் உறுப்பினராக வரமுடியும் என அடைக்கலநாதனால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், உதயனை சிறிரெலோ என்ற நாமத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அனுமதித்தால் குட்டிமணிரெலோ, தங்தத்துரைரெலோ என்று இன்னும் பல நாமங்களுடன் பலரும் வருவார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
அவ்வாறு சிறிரெலோ என்ற வாக்கியத்தை விடுவதானால், தனக்கு ரெலோவில் ஏதாவது பதவி ஒன்று தரவேண்டும் எனக் கேட்டாராம் உதயராசா. அப்போது நீர் ரெலோ வில் இருக்கும்போது என்ன பதவி வகித்த நீர் எனக் கேட்கப்பட்டதாம். சாதாரண ஓர் உறுப்பினராக இருந்த நீர் தற்போதைக்கு அவ்வாறே தொடரவேண்டும் எதிர்காலத்தில் பார்க்கலாம் எனச் சொல்லப்பட்டதாம்.
Written By ilankainet at Thursday, December 22, 2011
http://www.ilankainet.com/2011/12/blog-post_7812.html
விடியோ பதிவுகளைப் பார்க்கும் பொழுது ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ளமுடிகிறது- நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா; நடு நிலைமையாக நடந்துகொள்ளவில்லை. இது முதலாவது தடவையல்ல கடந்த பல நிகழ்விலும் இவா; நடுநிலைமையை கடைப்பிடிக்கவில்லை. கீரன் ஏன் பதட்டப்படுகின்றார். அமைதியாக கதைக்கலாம்.
கையொப்பமிட்டவர்களில் எத்தனை பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட் போது புலிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்? கையொப்பமிட்ட டி.பி.எஸ் இவ் விடயத்தை ஆதரித்து புலிகளுக்கு ஆதரவாக தனது பத்திரிகையில் எழுதியுள்ளார். தேடகம் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதுக்கு எதிராக ரொரண்ரோவில் கூட்டம் நடாத்தியபோது தேடகத்தை கண்டித்து தனது பத்திரிகையில் எழுதியுள்ளார். அவர்களது முக நுhலில் மேலும் பல விடயங்களை இணைத்துள்ளனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா; நடு நிலைமையாக நடந்துகொள்ளவில்லை. இது முதலாவது தடவையல்ல கடந்த பல நிகழ்விலும் இவா; நடுநிலைமையை கடைப்பிடிக்கவில்லை. அவர் எதை பிடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர் இம்முறை முஸ்லீம்கள் என்றதும் திரும்பவும் நிகழ்ச்சிகளை உருவாக்கினார் இதனால் தீபத்தினுள்ளே ஒரு இறுக்கு உள்ளது ஆனால் கீரன் எல்லாவற்றையும் உடைத்து கொட்டி விட்டானே!!
கீரன் போன்றவர்களை விவாதத்துக்கு தெரிவு செய்வது தீபன் தொலைக்காட்சி நடுவர் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இவர் போன்ற தரவழிகள் சும்மா போகின்ற ஓணானை தேவை இல்லாமல் வேட்டிக்குள் போடுவதைப் போன்று ஏதாவது குழப்பிக் கொண்டே இருப்பார்கள். இங்கு நாதன் போன்றோர்களது கருத்து வேண்டுமென்றே உதாசீனப் படுத்தப்பட்டது மனதுக்கு வேதனையே கொடுக்கின்றது.
1. Why these advocates for Muslims failed to raise their voice against the Srilankan govt which could have resettled the diplaced Muslims within a short pwriod if they wish to.
2. Why these advocates failed to raise their voice for the tamils displaced and still suffering in the camps in Eastern province, for the last several years.
3. Why they failed to raise their voice for five hundred thousand Tamils deported from upcountry to India.
4. Why……..for the tamils staying in refugee camps in India.
5/ Why……for the tamils kept in Prisons without charge or trial for several years.
Nemi
Jaffna Tamis & Jaffna Muslims
Ethnic cleansing was on October 30, 1990 when all remaining Muslims in Jaffna were ordered to assemble to Osmania college’s play ground and well known LTTE leader Anjaneyar or elamparuthy ordered all of them to leave the city within two hours. They were only allowed to carry 50 rupees each , and take with them only the clothes and slippers they were wearing on. The LTTE looted almost all possessions in the Muslim houses. Many houses were stripped off tiles, wooden frames, doors, windows, etc.
Muslim’s Lands Forcibly Occupied by the LTTE after Ethnic Cleansing of Jaffna Muslims in October 1990 are 1256 lands, Muslim Residential Houses Destroyed by the LTTE are 1,391 Houses, valued Rs.497,859,750.00, according to the People’s Secretariat report in 1990 , Muslims Properties Robbed by LTTE were 2,430 robberies, valued Rs. 694,607,633.00 according to the People’s Secretariat report in 1990 ,total Muslim population in Jaffna municipal area was more than 15 thousands in 4800 families now they are doubled in number , According to the People’s Secretariat 7200 jaffna muslim families are living in 28 camps in puttlam
This was the most notorious act, ever memorable and never forgettable painful memory of Jaffna Muslims.
years 2006 rehabilitation ministry had initiated a project to rehabilitate 18,240 northern Muslim families living under inhuman conditions in these camps, six hundred houses under the project have been handed over to manner families and another 600 are getting ready..
Tamils & Government
On the morning of June 7, heavily armed Sri Lanka Police officers entered low-budget hostels in the Wellawatte, Kotahena, Pettah and Wattala areas of Colombo and asked 376 persons, comprising 291 males and 85 females, who did not have valid reasons for being in Colombo to leave. They were then put into buses and were sent away from Colombo to destinations in the east and north of Sri Lanka. People were taken to the town of Vavunia and made to stay in a detention camp. On the next day they were handed over to Government officials of Vavunia.
The Sri Lankan Supreme Court on June 8, 2007 issued an injunction on the Sri Lanka Police to stop the evacuation of residents of Colombo lodges after hearing a fundamental rights petition filed by a non governmental organization, the Center for Policy Alternatives, Sri Lanka (CPA As a result of the ruling, police boarded 185 out of the 270 people who were sent to Vavunia onto five buses and took them back to Colombo. President reprimanded his police chief for the deportations and ordered the Inspector General of the Police to present a report on the manner of transportation of the Tamils and on the alleged exceeding of authority by the officials involved. He has also invited the people who were sent to Vavunia to return to Colombo.
கொஞ்சநாளா , தீபம் தொலைக்காட்சி இப்படியான தலைப்புக்களைத்தான் தேர்ந்தெடுக்கிறது. ஏற்கனவே சந்தாதாரர்கள் குறைந்து கொண்டுவருவதாக அறிகிறோம். ஒன்று எடுத்தால் ஒன்று FREE என்று ,ஒருவருட சந்தாவை இலவசமாகக் கொடுத்து, ஓட இருந்தவர்களை இழுத்துப் பிடித்துள்ளார்கள். பேசாப்பொருளை பேசுவது நல்லதுதான். ஆனால் மக்களைப் பிரிக்கும் வகையில் அது அமையக்கூடாது.
இப்போது எனது பார்வையில் இந்த நிகழ்ச்சி பற்றி பேசப்போகிறேன். கொஞ்சம் வெளிப்படையாக இருக்கும். பதிலிடமுன் நூறு தடவைகள் யோசிக்க வேண்டுகிறேன்.
”ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லையடி” என்பது போலிருக்கிறது கீரன், ரங்கனின் வாதங்கள். கீரனுக்கு மார்க்சிசத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு. ஆனால் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கிறார். நல்லவேளை தோழர் சண்முகதாசன் இப்போது உயிரோடு இல்லை. ஆகவே செந்தில்வேல்தான் இவருக்கு வகுப்பு எடுக்க வேண்டும்.
இனி விசயத்திற்கு வருவோம்.
பொது மன்னிப்பு கேட்க பல விடயதானங்கள் இருக்கிறது. யார், யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். இது எல்லா மக்களையும் குறிப்பிடவில்லை. ஒடுக்குமுறைச் சிந்தனையாளர்களை மட்டுமே குறிக்கின்றது.
-இன்னமும் ,’தாழ்த்தப்பட்ட மக்கள் ‘ என்று சொல்லப்படும் தமிழர்களை , மிகக் கேவலமாக நடாத்தியதற்கு யாழ்.உயர் குடியினர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். கீரனும் கேட்க வேண்டுமென நினைக்கிறேன்.
– தீவுப் பகுதியில் வாழும் மக்களை ‘தீவார்’ என்று ஒதுக்கிய ஏனைய குடாநாட்டு தமிழர்கள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
– யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் வெளியேற்றப்படும் போது, அதற்கு எதிராகப் போராடாமல் கையறுநிலையில் நின்ற அனைத்து யாழ் மக்களும் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
– பாயோடு ஒட்டவைக்கும் மாயாஜாலக்காரரென்று, கிழக்கு மக்களைப் பார்த்துப் பரிகசித்த தமிழ் தேசியவாதிகள் ,அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும்.
-போராட்டம் ஆரம்பித்தவுடன், உயிரைக்காப்பற்ற வெளிநாடுகளில் ஓடி ஒளிந்து, தமிழீழமே எமது மூச்சு என்று சவடால் விடும் புலம்பெயர் மக்கள் , தமிழீழமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
– தமிழீழப் பிரகடனம் செய்து, இந்தியாவிற்குள் ஒளிந்து கொண்ட கூட்டணியினர் ,தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
– வெள்ளைவான் கடத்தல்காரரோடு கூட்டுச் சேர்ந்து, மக்கள்நலன் பற்றி பேசுவோர், தாய் மன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
– அதிரடிப்படையோடு கூட்டுச் சேர்ந்து கிழக்கிலுள்ள தமிழ் கிராமங்களை முற்றாக அழித்த முஸ்லிம் ஊர்காவற்படையினர், அம்மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
– காத்தான்குடி மசூதியில் படுகொலைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் உறவினர்களிடம் , உயிரோடுள்ள விடுதலைப்புலிகள் மன்னிப்புக் கோர வேண்டும்.
-கிழக்கிலும், அனுராதபுரத்திலும் , கொழும்பிலும் கொல்லப்பட்ட சிங்கள மக்களிடம் ,புலிகள் சார்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
– 56 இலிருந்து முள்ளிவாய்க்கால் வரை ,சிங்கள பெருந்தேசிய இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களின் குடும்பத்தினரிடமும், மக்களிடமும் சிங்கள மக்கள் மன்னிப்புக் கோர வேண்டும்.
– இந்திய அமைதிப்படையை அழைத்து வந்து, கிழக்கில் முஸ்லிம்களையும் , வட-கிழக்கில் தமிழர்களையும் கொன்று குவித்த ஜே.ஆரின் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
– இன்னமும் சிறைகளிலும், சித்திரவதை முகாம்களிலும் வாடும் அனைத்து அரசியல் கைதிகளிடமும் மகிந்த இராஜபக்ஷ மன்னிப்புக் கோர வேண்டும்.
ஆகவே தொப்பி அளவாக உள்ளவர்கள் மன்னிப்புக் கேட்கலாம்.
இதை வாசிக்கும் போது ‘பாதிப்பை’ ஏற்படுத்தியவர்களுக்கு கோபம் வரும்.
இதுவல்ல இப்போதுள்ள பிரச்சனை. தமிழ்பேசும் சிறுபான்மைத்தேசிய இனங்களின் வாழ்வினை கருவறுக்க , சிங்கள பௌத்த பேரினவாதம் வேகமாகச் செயற்படுகிறது. இதனை எவ்வாறு ஒன்றிணைந்து முறியடிக்கப்போகிறோம்?
மனம் திறந்து பேசுங்கள். தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்ல புரிந்துணர்வினை ஏற்படுத்துங்கள். பேரினவாத நிலவிழுங்கிகளால் ,தேசம் பறிபோவதை எடுத்துக் கூறுங்கள். இரண்டு இனங்களும் சேரவே கூடாதென ஆப்பு வைக்கும் சுயநலவாதிகளை, புறக்கணியுங்கள். அப்போது விடிவு வரும். வெளிச்சம் எம்மைத் தேடி வரும். கேள்வி நேரத்தில் உங்கள் நேரத்தை வீணடிப்பதை விட , இணைவிற்கான பணியில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். இன நல்லிணக்கம் இங்குதான் முதலில் உருவாக வேண்டும்.
உங்கள் குறிப்பைப்பார்க்கையில் நெஞ்சு குளிருகின்றது. “உதெல்லாம் பழங்கதை. இப்ப உதை மறந்துட்டு பொதுப் பிரச்சினைக்காகப் போராடுவம் (என்ற பாசையில என்ற பிரச்சினை தான் பொதுப்பிரச்சினை) நாங்கள் ஆட்சியமைச்சதுக்குப்பிறகு உதெல்லாம் நாங்கள் தீர்த்து வைப்பம்” என்கிற பொதுவான கூக்குரலுக்கு நடுவில உங்களின் குரல் வரவேற்றகத்தக்கது.
நீங்கள் கூறிய பல பிரந்நினைகள் நடந்த போது புரியாத வயதினாலும் கையறு நிலையாலும் நானும் மெளனமாக இருந்திருக்கிறேன். அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்.
மற்றப்படி இலங்கையில் தீபம் தொலைக்காட்சி எட்டாத தொலைவிலுள்ள நான் அது பற்றியோ அதில் வந்த நபர்களின் பின்புலம் பற்றியோ கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
மாக்சிசம் என்கிறது சரி அது என்ன வெள்ளாள மார்க்சிசம்??? உது மாதிரி வேறும்பல மாக்கிசப் பிரிவுகள் இருக்கொ கீரன்??
கீரன் சாதியம் கதைத்தார். எனக்கெண்டால் விளங்கேலை நாடார் சமூகத்தை சேர்ந்த இவர் ககோதரங்கள் கரவெட்டியில் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு செய்த வேலைகளுக்கு கீரன் முதல் மன்னிப்பு கேட்கவேணும். இந்த லட்சணகாரர்தான் தலித் முண்ணணி உறுப்பினர்கள் எண்டது இன்னொரு விசயம்..
மற்றவர்களை பார்த்ர்து வெள்ளாளம் கதை கதைப்பவர்களுக்கு ஆனால் அவையவைக்கு மட்டும் வெள்ளாம்பெட்டை வேணும் கட்டுறத்துக்கு
கீரன் : பல்வேறு அறிக்கைகள் வந்திருக்கு.அதில் முக்கியமானது கிழக்கு பல்கலை கழக உபவேந்தர் கலாநிதி எம்.எல் ஏ .காதர்,கொழும்பு பல்கலை கழக விஞ்ஞான துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எஸ் அனிஸ் சிராஜ் போன்றோர் இந்த அறிக்கையை வரவேற்க்கின்றார்கள்.
நாவலன் :இவர்கள் யாருமே இடம் பெயர்ந்த முஸ்லீம்களை பிரதிநித்துவ படுத்துபவர்கள் அல்ல.
ரங்கன் : நீங்கள் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிரீர்கள் ?
நாவலன் :நாங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.நாங்கள் ஒரு கருத்தை சொல்லுகின்றோம்
கீரன் : இவர்களுக்கு கருத்து சொல்ல எந்த வகையில் உரிமையில்லை.?
நாவலன் செய்வது விதண்டாவதம்.அவரது கருத்துக்கு எந்த ஆதாரமில்லை.இவர் மறைமுகமாக் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கிறார் என்பதே நமது தீர்ப்பு.
இரண்டாவது வீடியோவில் 0750 – 0832 நிமிடங்களில் ஓடு பகுதியை பார்க்கவும்.
இரண்டு ஒட்டுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து நாவலனைப் பார்த்து நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறீங்கள் என்று கேட்டதற்கு பதில் சொன்னதே நாவலனின் தவறு அல்லது நாகரீகம். கருத்து சொல்வது வேறு பிரதிநிதித்துவ படுத்துவது வேறு என்று கப்பக் காரர்களுக்கு எங்க விளங்கப் போகுது?
மூர்த்தி,நமது தீர்ப்பு என்று , நீர் “நமது ” என்ற சொல்லுக்குள்” யார், யாரை” எல்லாம் அடையாளப்படுத்துகின்றிர். உமது நண்பர்கள் வட்டத்தையா? அல்லது உமது உறவினர்களைச் சேர்த்தா,? அல்லது, நீர் என்ன கிராமமக்களை அடையாளப்படுத்தும் கிராமசங்கத்தலைவரா, இல்லை நகராட்சித் தலைவரா,அல்லதுநீரும் எதாவது கட்சியின் தலைவரா, ??? நீர், ரங்கன் , கீரன் ,நிர்மலா, சேனன் போன்றவர்களிற்க்கு ஏதோ தாங்கள் தான் ஒட்டுமொத்த தமிழர்களினதும் குரல் என்றநினைப்போ. ? அல்லதுநீங்கள் எல்லாரும்தான் ஈழதமிழரின் இன்றைய பாதுகாவலர் என்ற கனவோ? நீங்கள் எல்லாரும் வடக்கு கிழக்கில் சென்று ஓட்டு கேட்டுப்பாருங்கள் : அப்போது தெரியும், உங்களுக்கு “ஓட்டை” விடச் “செருப்புதான்” அதிகமாக விழுந்தது என்று. வடக்கில் முஸ்லிம் மக்கள் மீழக்குடியேற தமிழ்மக்களே நீங்கள் அனுமதிகிறீர்களா இல்லையா என்று வாக்கெடுப்புநடத்திப் பாருங்கள்: அப்போது தெரியும் தமிழ்மக்களது தீர்ர்ப்பு என்ன என்று!
கீரனுக்கு மாக்சியத்தின் மீது இவ்ளோ வெறுப்பு ஏன். சிறீ டெலோ அன்ரி மாரக்சிட்டா?
//நாவலன் செய்வது விதண்டாவதம்.அவரது கருத்துக்கு எந்த ஆதாரமில்லை.இவர் மறைமுகமாக் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கிறார் என்பதே நமது தீர்ப்பு.// மூர்த்தி@ ஐயா, மூர்த்தி அவர்களே கீரன், ரங்கன் போன்ற ஒட்டுக்குழுகளுக்கு வேலைசெய்யும் மகிந்தாவின் பிட்டத்தை நக்கி பிழைக்கும் தமிழின துரோகிகளுக்கு புலிகளின் தண்டனை எப்போதும் உண்டு.
its funny that rangan speaks about human rights. your party EPDP can even decide who the next university VC is but you cant help muslims? what the hell is this??
ரங்கன் என்ற ஈ.பி.டி.பி உறுப்பினன் நாவலனை பார்த்துக் கேகிறான், அரச அதிகாரிகள் முஸ்லீம்களுக்கு உதவி செய்யவில்லையா. மக்களைக் கொல்லுவதும், எரிப்பதும் சித்திரவதை செய்வதும் இந்த ஈ.பி.டி.பி தானே! இந்தக் கேள்வியை ரங்கனைநோக்கி அல்லவா கேட்க வேண்டும். ஏன் உங்களது அதிகாரிகள் முஸ்லீம்மக்களுக்கு எதிர்.
விவாதத்தில் கலந்து கொண்ட கீரனும் ரங்கன் கோஸ்டியும் உங்கள் கருத்துக்களை இட்டு வருத்தமோ சிந்தனையோ படமாட்டார்கள். கம்யூட்டரில் குத்தி எறிகிறார்கள் என கூலாக அடுத்த முறை விவாதத்தில் வந்து சொல்லுவார்கள்.
ஒருகாலத்தில் வவுனியாவில் அரசபடையின் அட்டூழியங்களுடன் அதற்க்கு இணையாக புளட் இயக்ககும் ஈ.பி டி பி யும் இருந்து வவுனியாவை ஒரு Killing Field ஆக வைத்திருந்தார்கள் ஆனால் 2008 பின் அரச படையின் செல்லப்பிள்ளையாக சிறிரெலா என்ற இயக்கம் உருவெடுத்து வவுனியாவை ஒரு கொலைக்களமாகவும் ஒரு கப்பம் அறவிடும் பூமியாக மாற்றியிருந்தார்கள். அந்த பெயரைக் கேட்கவே மக்கள் நடுங்கின்ர் . அந்த இயக்கத்தில் முக்கிய உறுப்பினராக சுவிஸ் நாட்டில் இருந்து வந்த உதயன் என்பவரும் இலண்டனில் இருந்து வந்த கீரனும் இருந்தனர். தனது பாவத்தை கழுவுவதற்க்காக் கீரன் இப்போ தலித் அரசியலையும் முஸ்லீம் அரசியலையும் கையில் எடுத்து உள்ளார்.
முன்னைநாள் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் தங்கள் பாவங்களை கழுவி புண்ணியம் தேட இந்த நாட்களில் பல நாடகங்களை நடிக்க வேண்டிய பரிதபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.அதை மறைக்க அவர்கள் எடுக்கும் அவதாரங்கள் இன்னும் அசிங்கமானதாக இருக்கிறது.அதுமட்டுமல்ல தாம் ஏதோ எல்லாம் தெரிந்த மேதாவிகள் போலவும் நடிக்கும் ஆபத்தான சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கிறார்கள்.
புதியவன்
/இவ்வேளையில், அண்மையில் தமிழ் நாட்டில் இந்து பாசிச குழு ஒன்றின் யாத்திரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டமை மட்டுமன்றி அவர் விஷ்வ இந்து பரிஷாத்தில்(VISHWA HINDU PARISHAD VHP) இலங்கைப் பிரதிநிதி என்றும் அறிவித்தார்./–
Rameswaram (Rameshwar in pure Tamil)in the South of Tamil Nadu state in India, was the scene of an ugly rumpus on the tenth of this month when a well-known Sri Lankan Tamil businessman(57 year old Thirukumar Nadesan is an “Ilangaithamizhan”) visiting for a religious purpose was victimized in a deplorable act of rowdyism.
Thirukumar is a devout HINDU who frequently visits India for religious and cultural purposes.He has been to places of religious significance such Benares,Gaya and Haridhwar in North India and several places in South India like Thiruppathy. Thirukumar Nadesan has often been to Rameswaram where the famous Ramanathaswami temple dedicated to Lord Shiva.
BRAHMIN BROTHERS:
Although the incident happened on January 10th its reverberations continue still.The federation of Brahmins associations in Rameswaram with a membership over 500 announced a hunger strike in protest over the attack on Thirukumar Nadesan.Although the Police gave permission to stage it on Friday January 20th the permission was later revoked.Shankara Vaathiyaar the president of the Brahmins federation has said that at present the hunger strike has only been postponed.
The rise of racist vigilantism in Tamil Nadu manifesting itself in disgusting forms such as the recent rowdyism at Rameswaram needs to be condemned vehemently.
Tamils of Sri Lanka must disassociate themselves with despicable acts such as these that are being committed by racist rabbles in the name of Pan-Thamizhian solidarity.