ஒசாமா பின்லாடன் கொலை செய்யப்பட்டது குறித்த பல்வேறு முரண்பட்ட தாவல்கள் வெளியாகின்றன. அமரிக்கத் தொலைகாட்சிகள் ஒளிபரப்புச் செய்த அவரின் இறந்த பின்னான படங்கள் பொய்யானவை என மேற்கின் ஊடகஙள் பல ஒப்புதல் வழங்கியிருக்கின்றன. இதே வேளை, அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடனை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் “த டான்” ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் தங்கியிருந்த பின்லேடன், அமெரிக்கப் படையினர் தம்மை நெருங்கிவிட்டதை அறிந்து, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, தமது பாதுகாவலர் ஒருவரையே சுட்டுக் கொல்லுமாறு கேட்டிருக்கலாம் என்றும், அவரது விருப்பப்படி பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக் கொன்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்ததாக அந்த ஏடு கூறியுள்ளது.
ஒன்று அல்லது இரண்டு குண்டுகளில் பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், “தப்பிச் செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது இவ்வளவு அருகில் இருந்து பின்லேடனை சுட்டிருக்க முடியுமா?” என்றும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது








அலை அடித்து ஓய்ந்திருக்கிறது.ஒரு கொடிய பசாசு கொல்லப்பட்டுள்ளது.இதில் ஓசாமா மிருகம் மூச்சை எப்படி விட்டது எனும் கதைகள் இப்போது பிரபலம்.ஆண்டவன் அருளால் அமெரிக்கா இவனை போட்டது மகிழ்ச்சி தருகிறது.எலி செத்தது போலக் கிடக்கிறான் ஓசாமா.இந்தப் பயங்கரவாதியின் மரணம் உலக சமாதானத்திற்கான ஜனனம்.வாழ்க அமெரிக்கா. ஒழிக பயங்கரவாதம்.இழிந்தவன் ஓசா மண்டயைப் போட்டான் மண்ணூக்கு இனி மகிழ்ச்சியே.
இதே வசனங்களை மூன்று வருடங்களிற்கு முன்பு மகிந்த பாவித்ததாக ஞாபகம்
//வாழ்க அமெரிக்கா//
முட்டாள் THAMIL MARAN
பின்லேடனை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது.http://www.vinavu.com/2011/05/02/osama-obama/
ஓசாமா என்ன சேகுவோராவா கசாப்புக் கடைக்காரன்.பிணம் தின்னிக் கழுகு.. எங்கள் இனத்துக்கு வாழ்க்கை தந்த அமெரிக்கன் என் உறவினன், உயிர் காக்கும் தோழன்.ஆனால் ஒசாமாக் கூட்டம் அப்படியா? ஆப்காபிஸ்தானில் புத்தர் சிலைகள உடைத்தும்,, பாகிஸ்தானில் இந்துக்கள கொன்றூம் கொலை வெறீ ஆடும் கூட்டத்துக்கு தலைவனாய் இருந்தவன்.அரக்கனை ஒழித்த அமெரிக்கா வாழ்ந்தால் மட்டுமே சனநாயகம் வாழும் இந்த நரிகள் தலையெடுத்தால் நம் நிலை நடுக்கடல்தான்..உலக சமாதானத்தூதன் அமெரிக்கா வாழ்க்.
பின்லாடன் ஒரு பயங்கரவாதி புலம்பெயர் தமிழ்புலிகள் ஒவ்வொருவரும்பயங்ரவாதிகள். எனவே பிரபாகரனை பலி கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் உல்லாச வாழ்வு வாழ்கின்றார்கள். பேச்சில்மட்டும் தமிழ்,நம் உறவுகள்.
தொப்புள்கொடி. செயலில் எமக்கு எவ்வாறு மற்ரவனிலும் கூட சுருட்டெல்லாமென்பதே நோக்கம். -துரை
ʽʽபயங்கரவாதம்’’
இன்றைய அரசபயங்கரவாதத்தை பாதுகாக்கும் கேடயம்.