ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் என்று சொல்வதை விட தீவிரவாத கவுன்சில் என்று தாராளமாக சொல்லலாம் என்று லிபிய அதிபர் கடாபி ஆவேசமாக பேசினார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
கடாபி பேசுகையில் , ஐ.நா. சபையும்இ பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது.
பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கடாது. ஆப்பிரிக்க யூனியன்,லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும்இ நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜான் கென்னடி , மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா , வியட்நாம் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல , ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.
பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன் என்றார் கடாபி.
கடாபி ஐ;நா; சபையின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளார! மூன்றாம் உலக நாட்டுமக்களின் அபிலாசைகளை பிரதிபலித்துள்ளார்!
நாட்டாண்மை நடுவங்களின் பிடரியை பிடித்து உலுக்கி உள்ளார். ஒரு முறை கியூப அதிபர் தோழர்.பிடல்காஸ்ட்ரோ அவர்களின் அய்.நா. உரையைப் போன்றே எம்மை நினைக்கத் தூண்டுகிறது