ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட்சியும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர், இலங்கையில் சிறுவர்கள் படையில் இணைத்து கொள்ளப்பட்டமை தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், கிராமங்கள் கிரமமான முறையில் அபிவிருத்தி செய்யபட்டு வருவதாகவும், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் தலையீடு தொடர்ந்து வருவதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
594 சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீண்டும் இணைத்துள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சாட்சி எதுவுமின்றி பேரினவாத மகிந்த அரசின் சிறைக்குள் வைக்கப்படுள்ளனர். பலர் திட்டமிட்டுப் போதைப்பொருள் பாவனைகு அரசபடைகளால் அடிமையாக்கப்படுகின்றனர். குழந்தைகள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இவர்களின் அவமானப்பட்டியலில் பெயர் இருப்பதாலோ-ஐ.நா.கண்டிப்பதாலோ என்ன பயன் இருக்கிறது.இலங்கை போர் குற்றத்துக்கு ஐநா கண்டித்து என்ன நன்மை கிடைத்துள்ளது.?வல்லரசுகளின் எடுபிடிதான் ஐநா.
சரியாக சொன்ன வார்த்தை
very good reply
இலங்கை போர் குற்றத்துக்கு இலங்கையெ அலீந்தலும் கவலைபட் எதுவும் இல்லை
thus that corred
உலக வரைபடத்தில் இலங்கை இருப்பதே அவமானம்
இந்த ரத்திகாவெல்லாம் ஐநா வை ஒரு தொழில்வழங்கும் ( தங்களுக்கு ) மையமாக பாவித்து வயிற்றுப் பிழைப்புநடத்துபவர்கள். போய் எங்கேன்னாலும் ஒர் தனியார் நிறுவனத்துல அவுங்கட தெறமய கட்டச்சொல்லுங்க, முடியாது அவுங்களால. ஐநா செலவுல அவுங்களுக்கு முதல் வகுப்பு விமான பயணமும், 5 ஸ்டார் கோட்டேல் வசதியும், சாப்பாடும் வேறே எங்க சும்மா கிடைக்கும். இப்பிடி இடைகிட ஒரு பீலாவ விடிருவாங்க அவ்ளோதான்.
sri lankha is a bad country
Another Karikalan? Dr. Radhika Cumarasamy is doing great there in the United Nations.