Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஐ.நா அறிக்கை – புலி ஆதரவு, அரச ஆதரவு அரசியலுக்கு அப்பால்… : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
04/28/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
14
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஆயிரக்கணக்கான மனித உயிர்களின் மரண ஓலத்தை மேற்கு நாடுகள் தமது அரசில் சுழற்சி முறைக்காக மொழிபெயர்தத போது வெளியானது தான் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை. தொழில் நுட்பம், அதிலும் தகவல் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியின் எல்லைகளை எட்டிப்பிடித்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் மனிதப் படுகொலைகள் அனைத்தையும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் வெளியிடப்பட்டிருக்கும் “மனித உரிமையின் காவலர்களின்?” அறிக்கைகளும் பரிந்துரைகளும், அவர்களின் நோக்கங்களுக்கு அப்பால், இனப்படுகொலையின் வேர்களைச் சென்று விசாரித்திருக்கின்றது.

அறிக்கை சராம்சத்தில் நான்கு வகையான பாத்திரங்களை வினவியுள்ளது.

1. இலங்கை அரசும் அதன் ஆதரவு சக்திகளும்

இலங்கை அரசின் மனித குலத்தின் மீதானதும் மனிதாபிமானத்தின் மீதானதுமான கோரச் சம்பவங்கள் சுட்டிக்காட்டப்படுள்ளன. சிங்கள பௌத்த பேரினவாததின் ஊற்று மூலம் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. இலங்கை அரசிற்கு ஆதரவளித்த நாடுகள் மேலோட்டமாகச் கோடிட்டுக் காட்டப்படுள்ளன.

2. தமிழீழ விடுதலைப் புலிகள்.

தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிப் “புனிதத்தைக்” கட்டமைத்துக் கொண்ட நிறுவனத்தின் சொந்த மக்கள் மீதான வன்முறைகள், மனிதத்தின் மீதான தாக்குதல்கள் சுட்டிக்காட்டப்படுள்ளன.

3. புலம் பெயர் சமூகம்.

புலிகளுக்கு ஆதரவளித்த புலம் பெயர் தமிழர்களின் கண்மூடித்தனமான முட்டாள் தனத்தையும், அடிப்படைவாத கருத்தியலும் அதனூடான குற்றவியல் ஆதரவு நிலைப்பட்டையும் தொட்டுச் சென்றிருக்கிறது.

4. மேற்கு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும்.

தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதி குறுகிய நிலப்பரப்பில் அடைத்து வைக்கப்பட்டு ராஜபக்ச அரசினால், பேரினவாதக் கட்சிகள் அனைத்தினதும் துணையோடு சாகடிக்கப்பட்ட போது ஆயுதங்களை வழங்கிய அரசுகளுக்கும், பார்த்துக்கொண்டிருந்த அதிகாரங்களுக்கும் மேம்போக்கான கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கையின் முடிபுகள்

அடிப்படையில் நான்கு வேறுபட்ட சக்திகள் மேலோட்டமாகப் பகுத்தாராயப்பட்ட போதும், எந்தவகையான முடிந்த முடிபுகளும் முன்வைக்கப்படவில்லை.

1. குறித்த நபர்களோ, நபர்களின் தொகுதிகளோ சம்பவங்களின் சூத்திரதாரிகளாகச் சுட்டிக்காட்டப்படவில்லை.

2. சம்பவங்கள் போர்க்குறங்கள் என முடிந்த முடிபாக கூறப்படவில்லை, போர்க்குற்றங்களாகவும், தண்டனைக்கு உரியனவாகவும் மாறலாம் என்ற அனுமானங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.

நடைபெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னதாக நிறுவப்பட்டு, யுத்தக் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கபட்டுள்ளது. இரண்டு வருடங்களின் பின்னர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிபுணர் குழுவிற்கு நடைபெற்றவை யுத்தக் குற்றங்களா என்பதைக் கூட முடிவுசெய்வதற்கு “நிபுணத்துவம்” இல்லாமல் போனது இறுதி நோக்கத்தின் மீது சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

பொறி வைக்கும் அறிக்கை…

அப்படியே அடுத்த கட்டத்தில் இலங்கை அரசின் இனவழிப்பின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் நிறுவப்பட்டாலும், அவை தண்டிக்கப்படுவதற்கான பொறிமுறை ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் இன்றுவரை இல்லை என்பதே உண்மை. பாதுகாப்புச் சபை, ரஷ்யாவையும், சீனாவையும் மீறி முடிவெடுக்க முடியாது. நிபுணர் குழு ஒத்துக்கொள்வது போன்றே ஐக்கிய நாடுகள் நிறுவனமே புதிய பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளது.

இன்று வரை இலங்கை அரச அதிகாரத்திற்கும், கொலைக்குற்றவாளிகளுக்கும், பேரினவாதிகளுக்கும் தாம் தண்டிக்கப்படுவதற்கான உடனடிச் சாத்தியப்பாடுகள் இல்லை என்பது நன்கு தெரிந்த விடயம்.

அனைத்திற்கும் அப்பால் இலங்கை அரசை மிரட்டி தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குரிய கருவியாகப் பயன்படும் தன்மையை அறிக்கையின் முழுமை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேற்கை நோக்கிய இலங்கை அரசின் நெகிழ்வுத்த்னமையைப் பொறுத்தே ஐக்கிய நாடுகளின் அடுத்த நகர்வு அமைந்திருக்கும் என்பது சந்தேகப்படவேண்டிய ஒன்றல்ல.
இது தவிர, எவ்விதமான அரசியல் வேலைத்திட்டமும் அற்ற பரந்துபட்ட மக்கள் பலம் குறித்தோ அதற்கான சிந்தனைத் தளமோ அற்ற மிகவும் பலவீனமான புலம் பெயர் புலி சார் அமைபுகளையும் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் நிறுத்தி வைத்திருப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் அறிக்கை கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும், இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் மகிந்த ராஜபக்ச அரசு, அதன் ஆதரவு சக்திகள், புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் போன்றவற்றை மேற்கு தனது கட்டுப்பட்டிற்குள் உட்படுத்தி வைத்திருப்பதற்கான ஆயுதமாக நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை காணப்படுகிறது.

ஆக, இலங்கை அரசையும், தமிழ்த் தேசிய அரசியலையும் குறிப்பாக புலிசார் அரசியலையும் தமது தேவைக்காகப் பயன்படுத்தும் தன்மைகொண்ட மிகத் தந்திரமான கூறுகளைக் கொண்ட அறிக்கையே இப்போது வெளியாகியுள்ளது.

அறிக்கையின் பின்னான இலங்கை அரசின் அரசியல்…

சீனா, இந்தியா போன்ற நாடுகளின் எல்லைக் கோட்டை மீறி இலங்கை அரசு நீண்ட தூரம் செல்ல முடியாத நிலையில், சிங்கள பௌத்த உணர்வைத் தூண்டி பேரினவாதத் நெருப்பிற்கு எண்ணை ஊற்றி தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை அரசு செயற்பட ஆரம்பித்திருக்கிறது. மக்கள் ஆதரவுத் தளம் பேரினவாதத்தை நோக்கி விரிவடையும் நிலையில் அனைத்துப் பிரதன அரசியல் கட்சிகளும் அறிக்கைக்கு எதிராகவும் பேரினவாத அரசியலுக்கு ஆதரவாகவும் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. இந்தப் பின்னணியில் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது.

பேரினவாத நச்சு வேர்களை நோக்கிய இயக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிங்களை மக்கள் மத்தியில் இலங்கை அரச பிரசாரம் முடுக்கிவிடப்படுள்ளது. இலங்கையில் கையெழுத்து வேட்டை என்ர பெயரில் சிங்கள பௌத்த உணர்வு துண்டப்படுகிறது.

அறிக்கைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.

பேரூர்ந்துகளின் நடத்துனர்களிடமும், பொதுச் சேவைத் துறையினரிடமும், மக்கள் சேவைத் துறையிலிருக்கும் தனியார் நிறுவனங்களிடமும் கையெழுத்துப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைக் கிராமங்களில் கூடப் பேரூர்ந்து ஓட்டுனர்கள் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தியத்தலாவ முகாமிற்குச் செல்லும் வழியில் தேனீர்க்கடையொன்றில் பலர் கூட்டமாக நின்று கையெழுத்திடுவதைக் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த மலையக இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

அறிக்கையின் பின்னான புலிசார் அமைப்புக்களின் அரசியல்…

இவ்வாறு தூண்டப்படுகின்ற சிங்கள பௌத்த இனவாத அரசியலுக்கு எதிராக தமிழ் இனவாத அரசியலைப் புலி ஆதரவு புலம் பெயர் அமைப்புக்கள் பல முன்வைக்கின்றன. சிங்களவர்கள் இணைந்துவிட்டார்கள் தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து கொள்ளுங்கள் என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஒரு வகையில் சிங்கள மக்களை இன்வாத அரசியலை நோக்கிக் கவரும் கருவியாக ராஜபக்ச குடும்ப அரசிற்கும் ஏனைய பேரினவாதிகளுக்கு மறைமுகமாகத் துணைபோகும் அழிவு அரசியலே இந்த இனவாதம்.

மனிதாபிமானிகளதும், ஜனநாயக முற்போக்கு சக்திகளதும், போராடும் உலக மக்களதும் ஆதரவைப் பெற்றுக்கொள்கின்ற வலிமை ஒடுக்கப்படும் தேசிய இனம், அழிக்கப்படும் மக்கள் கூட்டம் என்ற வகையில் தமிழ்த் தேசிய இனத்திற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. அறிக்கை கூறுகின்ற புலிகளின் போர்க் குற்றங்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பன உலக மக்களிலிருந்து எம்மை அன்னியப்படுத்துகின்றது. இன்றும் முன்வைக்கப்படும் இனவாத அரசியல் இந்த அன்னியப்படுத்தலை ஆழப்படுத்தி இலங்கை அரச பாசிசத்திற்குத் துணை போகின்றது.

செய்யவேண்டியது என்ன…?

அறிக்கை முன்வைக்கும் பொறியிலிருந்து ஒடுக்கு முறைக்கு எதிரான முற்போக்குத் தமிழ்த் தேசிய அரசியல் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், இலங்கை, இந்திய, சீன, மேற்கு அரசுகளுக்கு எதிரான ஜனநாயக, முற்போக்கு, மனிதாபிமான அணிகளோடு இணைந்து தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

உறுதியான திடம் மிக்க வேலைத் திட்டத்தின் அடிப்படையிலும், நியாயமான நோக்கங்களின் பின்னணியிலும் “ஒரு குடையின் கீழ்” ஒருங்கிணைவது என்பது தேவையானதே.

இன்றைக்கு எம் முன்னாலுள்ள உடனடித் தேவை.

1. ராஜபக்ச குடும்ப அரசையும் பேரினவாதத்தையும் உள்நாட்டில் பலவீனப்படுத்தல்.

2. சரவதேச மக்கள் மத்தியில் ராஜபக்ச அரசிற்கு எதிரான அபிப்பிராயத்தை ஏற்படுத்தல்.

அறிக்கை கூறுவது போல் புலிகள் போர்க்குற்றங்கள் குறித்த சுய விமர்சம வெளிப்படையாக முன்வைவைக்கப்படுவதிலிருந்தே ஒடுக்கு முறைக்கு எதுரான தமிழ்த் தேசிய அரசியல் புலிகளின் நடவடிக்கைகள் ஊடாகப் பெற்றிருக்கும் அனாகரீகமான, அவமானகரமான கோர விம்பம் களையப்படவும் பழுதுபார்க்கப்படவும் முடியும். இதனூடாகவே உலக மக்களின் பொதுப் புத்தியை மாற்றத்திற்கு உட்படுத்த முடியும். தவிர, சேகரிக்கப்பட்ட பணம் ஈறான புலிகளின் சொத்து விபரங்கள் பொதுத் தளத்திற்குக் கொண்டிவரப்பட்டு மக்கள் நலனுக்காகவும், மக்கள் சார்ந்த அரசியலுக்காகவும் வெளிப்படைத் தன்மையோடு அது பயன்படுத்தப்பட வேண்டும்.

ராஜபக்ச அரசும் ஏனைய பேரினவாதக் கட்சிகளும் தம்மை நிறுவனப் படுத்திக்கொள்ள சிங்கள பௌத்தப் பேரினவாதத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

இதனை உள் நாட்டில் முறியடிக்க…

1. நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை..ப் பிரசாரப்படுத்த வேண்டும்.

2. ஜே,வி.பி அழிக்கப்பட்ட போது ஒரு லட்சம் சிங்கள் இளைஞர்கள் இலங்கை அரரசால் கொலைசெய்யப்பட்டதை விடக் கோரமாத் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் எனபதை சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும்.

3. இலங்கைப் பேரினவாதம் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரான நஞ்சு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

4. நாம் போர்க்குற்றங்களோடு கூடிய புலிகளின் நலன்களுக்க இல்லாமல் அழிக்கப்படும் அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் குரல் கொடுப்போம் என்பதை தெளிவாகக் கூற வேண்டும். இதற்காக, புலி என்ற அடையாளத்தைத் துறக்க வேண்டும்.

5. ராஜபக்ச தண்டிக்கப்படாவிட்டால் இனிமேல் உலகின் எந்தச் சர்வாதிகாரியும் சாட்சியின்றி அப்பாவி மக்களைக் கொன்றுபோட்டுவிட்டு சுகபோகங்களை அனுபவிக்க நேரிடும் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.

6. முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

புலியெதிர்ப்பு புலி ஆதரவு என்ற எல்லைகளைக் கடந்து…

புலியெதிர்பு அல்லது புலி ஆதரவு என்ற இரண்டு குறுகிய வரம்புகளுக்குள் இயங்கும் புலம்பெயர் அரசியல் சிந்தனை இரண்டு அபாயகரமான எல்லைகளைக் கொண்டுள்ளது. புலியெதிர்ப்பு அரசியல் நேரடியாகப் பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கும் அதே வேளை புலி ஆதரவு மறைமுகமான ஆதரவை வழங்குகிறது.

இவை இரண்டிற்கும் அப்பாலான அரசியலை மக்கள் சார்ந்து உருவாக்கும் பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. கடந்தகாலக் கற்றலுக்காக அறிக்கையைப் பயன்படுத்தும் அதே வேளை அதன் அழிவுகரமான கூறுகளை அகற்றி, மீளமைப்புக்கு உட்படுத்துவதனூடாக புதிய பலம் மிக்க ஜனநாயக, முற்போக்கு சார்பு நிலையைக் கொண்ட புதிய அரசியலை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறான பலத்தில் கால்பதித்துக்கொண்டே ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் தேசிய இன விடுதலைக்காகவும் தன்னுரிமைக்காகவும் தமது போரட்டத்தை முன் நகர்த்த முடியும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கோர்டன் வைஸின் கருத்துக்களை உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது .டொம் ஹோக்லி

Comments 14

  1. Joseph says:
    15 years ago

    30 வருட ஆரசியல் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் .
    30 வருட ஆயுத யுத்தம் தலைவைர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அடுத்த 30 வருடம் என்த வேலுப்பிள்ளை
    வீனை தீர்பானொ?

  2. Vaani says:
    15 years ago

    இந்த ஐநா அறிக்கை இலங்கையில் வாழும் தமிழர் மத்தியில் அச்சத்தையே உருவாக்க வழி வகுத்துள்ளது. சிங்களவர் ஒருங்கிணைவதற்கும் ; தமிழர்கள் ஒடுக்கப்படுவதற்கும் அடி மட்ட சிங்கள மக்களையே மாற்றி விடும் அபாயம் தெரிகிறது.

    ஆயுதத்தை கொடுத்து கொலை செய்ய வழி செய்து விட்டு ; கொலையாளி நீதான் என்பது போல இருக்கிறது அறிக்கை. கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ; நீதிபதிகளாகவும் ; குற்றப் பத்திரிகை தாக்கல் செய்பவர்களாகவும் ஆகி விட்டார்கள். இலங்கை மக்கள் அனைவரும் பகடைக் காய்களாகி விட்டார்கள். 

    இதை சில புலம் பெயர் அமைப்புகள் தமது வாழ்வாதாரத்துக்கு பணம் கறக்க பாவிப்பார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

    எம்மை அன்னியர்கள் பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள் என ; இலங்கை மக்களாக உணரும் வரை விமோசனம் இல்லை. 

    • panni says:
      15 years ago

      //இதை சில புலம் பெயர் அமைப்புகள் தமது வாழ்வாதாரத்துக்கு பணம் கறக்க பாவிப்பார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.//
      புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு அறிக்கையைப் பயன்படுத்தி இலங்கை அரசைப் பலவீனப்படுத்தலாம் என கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதே அதை விடுத்து ஒரு பக்கத்தை மட்டும் குறைகூறும் நீங்கள் அரச ஆதரவுக் குழுவா என்ன?

      • Vaani says:
        15 years ago

        //புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு அறிக்கையைப் பயன்படுத்தி இலங்கை அரசைப் பலவீனப்படுத்தலாம் என கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதே அதை விடுத்து ஒரு பக்கத்தை மட்டும் குறைகூறும் நீங்கள் அரச ஆதரவுக் குழுவா என்ன?//

        இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளே ஒற்றமைப்படாத போது ; புலத்தில் மட்டும் என்ன நடக்கப் போகிறது. ஐநா அறிக்கையில் புலம் பெயர் தமிழ் அமை;புகள் தொடர்பாக உள்ள குறிப்பை பார்த்தீர்களா?

        “புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள் தாயக தமிழ்மக்களுக்குப் பயன்பட வேண்டும்”
        புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான தனது பரிந்துரையை தனது அறிக்கையில் மிகத் தெளிவாக வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. இது தொடர்பான விடயம் யுத்தக் குற்ற அறிக்கையின் பக்கம் 132ல் இடம்பெற்றுள்ள பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரையே இடம்பெற்றுள்ளது.

        http://www.lankaenews.com/tamil/news.php?id=2190

  3. sinnappodi says:
    15 years ago

    கிழக்கில், பல தமிழர்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் அழித்தார்கள். அதற்காக, முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.

  4. sankar says:
    15 years ago

    //அறிக்கை கூறுவது போல் புலிகள் போர்க்குற்றங்கள் குறித்த சுய விமர்சம வெளிப்படையாக முன்வைவைக்கப்படுவதிலிருந்தே ஒடுக்கு முறைக்கு எதுரான தமிழ்த் தேசிய அரசியல் புலிகளின் நடவடிக்கைகள் ஊடாகப் பெற்றிருக்கும் அனாகரீகமான, அவமானகரமான கோர விம்பம் களையப்படவும் பழுதுபார்க்கப்படவும் முடியும். இதனூடாகவே உலக மக்களின் பொதுப் புத்தியை மாற்றத்திற்கு உட்படுத்த முடியும். தவிர, சேகரிக்கப்பட்ட பணம் ஈறான புலிகளின் சொத்து விபரங்கள் பொதுத் தளத்திற்குக் கொண்டிவரப்பட்டு மக்கள் நலனுக்காகவும், மக்கள் சார்ந்த அரசியலுக்காகவும் வெளிப்படைத் தன்மையோடு அது பயன்படுத்தப்பட வேண்டும்.// நிச்சயமாக உங்கள் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.

  5. APPUU says:
    15 years ago

    புலி புலின்னு கத்துங்கய்யா ?கருணா டக்ளசு மாதிரி விலை போனவங்களா விட்ருங்க?விலைபோகமா விதையானவங்கள திட்டி தமிழர்களுக்கு நல்லது நடக்கமா பாத்துக்குங்க?சாதி மத பேதங்கள் மறந்து தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.கவைக்கு உதவாததைப் பிறகு கதைக்கலாம்.இலங்கையை போர்குற்ற வழக்கில் தண்டித்து ஈழவிடுதலைக்கு உலகத்தமிழர்கள் ஒன்றிணைவோம்

    • Mathimaran says:
      15 years ago

      போர்க்குற்ற வழக்கில் போர்க்குற்றவாளிகளையும் இணைத்து, சாம்பார் போட்டு ராசபக்சவுக்கு குடிக்க கொடுங்க. போர்க்குற்ற வழக்குப் போட உலக ஆதர்வு வேணும். போர்க் குற்றவாளிகளாக இருக்கிற வரை உலக ஆதரவு கிடையது. ராசபக்சவுக்கு வெள்ளி திசைதான்.

  6. உமா says:
    15 years ago

    நல்ல கட்டுரை நடுநிலையான பார்வை. ஆனால் எங்களால் ஒன்றிணைய முடியுமா?
    சிங்களவர்கள் தமக்குள் அதிகாரத்துக்காகப் போட்டியிடுவார்கள். அதேநேரம் தமது இனத்தவனுக்கு அடுத்தவனால் ஆபத்து என்றால் ஒன்று சேர்ந்து காப்பாற்றுவார்கள். ஏன் எம்மால் மட்டும் அது முடியாமல் உள்ளது யாராவது கூறுவீர்களா?
    இப்பொழுது கூட நாடுகடந்த அரசுடன் மோதுவதில் பேரினவாத அரசைவிடத் தமிழர்களே முன்னிற்கின்றனர். இவர்களுக்குத் தமிழர்களின் நல்வாழ்வைவிடத் தமது அதிகாரமே பெரிது. வேறு காரணம் உண்டா? இலங்கையைத் தமது வழிக்குக் கொண்டவரவே மேற்குலகு ஐ.நா. மூலம் முயற்சிப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதில் இருந்து நாம் ஏதாவது பயனைப்பெறமுடியாதா எனப் பார்த்தல் நன்றல்லவா?

  7. Vaani says:
    15 years ago

    //எங்களால் ஒன்றிணைய முடியுமா?//

    ஒன்றிணைந்து கரம் கோர்த்து சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை மறக்கும் வரை சாத்தியமில்லை.
    துரொகிகளை தயவு செய்து அழைக்காதீர்கள். உங்களை நீங்கள் புனிதர்களாய் நினைத்தீர்கள்.
    இன்று நீங்கள் மகா பாதகர்களாகவும் ; துரோகிகளாகவும் நிற்கிறீர்கள்.
    இப்படியானவர்களை நம்பி எம்மையும் இழந்து ; எம் மக்களையும் இழுவுக்கு தள்ள முடியாது.

    சனம் சாவதை உலகம் பார்த்தால் ; தமிழீழத்துக்கு வழி கிடைக்கும் என
    மேற்குலகின் கதையை நம்பி ; அனைவரையும் தள்ளிக் கொண்டு போய் பரலோகம் கண்ட ஞானத்தை எவராலும் மறக்க முடியாது.

    மீண்டும் மீத முள்ளவர்களை ஐநா கப்பலில் ஏற்ற வெள்ளைக் கொடியோடு வந்து  பாடையில் போக வழி தேடுவதா?

  8. அரிச்சந்திரன் says:
    15 years ago

    புலி ஆதரவு, அரச ஆதரவு அரசியலும் ஐ.நா அறிக்கையும் என்ற தலைப்பே பொருத்தமானது.

  9. chandran.raja says:
    15 years ago

    அறுதாலி பிள்ளையில் அம்பட்டன் பழகியதாக ஒரு பழமொழியுள்ளது. கேட்பதற்கு யாரும் இல்லையென்றிருந்தால் யாரும் யாராலும் என்னவும் செய்யமுடியும் என்பதே பழமொழியின் அர்த்தமாகும். இலங்கையரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் விசாரிக்கப் புறப்படுவதும்(?) உலகஜனநாயகத்தை வழிநடத்துவதாக யாரும் இனியும் எண்ணியிருந்தால் அவர்களை போல் ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது.. சதாம்குசேயினை ஒழிப்பதற்கு கடாபியை ஒழிப்பதற்கு ஐ.நாடுகளுக்கு என்ன காரணம் தேவைப்பட்டுதோ அதே காரணங்கள் தான் இங்கும் பாவிக்கப் படுகிறது.

    அங்கு எண்ணையாக இருந்தால் இங்கு கிழக்காசியவில் தமதுதேவைகளைப் பூர்த்தி
    செய்வதற்கு இலங்கை அச்சாணியாகப் பயன்படுகிறது என்கிற பூலோகசாத்திரத்தை
    யாராலும் புரிந்துகொள்ள முடியும். புலிகளோ ஐக்கியதேசியகட்சிகளோ இலங்கையில் ஆட்சிசெய்யுமாக இருந்தால் ஐ.நா.சபைக்கு இப்படியான விசாரணை
    நடத்தவேண்டுமென்ற கேள்விகள் எழுவதற்கு எந்த காரணமும் எழுந்திருக்காது.
    இதில் நாம் எப்படி கேள்வி எழுப்புவது? சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? அமெரிக்காவால் உலகபணமுதலைகளின் வாழ்விற்காக ஏற்படுத்திய ஒருநிர்வனமே
    ஐ.நாடுகள்சபை. அதில் பலவெடிப்புகள் உள்ளபோதிலும் அறுபது ஆண்டுகாலங்களில்
    அதன் உலகமக்களின் உழைப்பை சுரண்டி பணத்தை கொள்ளையிட்டத்தை அறிவோம். அதில் ஒருபகுதியை பிச்சையிட்டதையும் அறிவோம். ஆகவே… வல்லரசு ஆதிக்கம் சரிவுற்ற நிலையிலேயே மீண்டும் ஒரு இரத்தயாற்றை

    இலங்கையில் ஓடவிடுவதற்காண தயாரிப்பே! போர்குற்ற விசாரணை என்பது. இதில் கடந்தகாலத்தில் இலங்கையில் இருந்து வெளியேறிய மாபியா மனோபாவத்தை உடைய முதாலித்துவ சட்டநிபுணர்கள் சேவைமனப்பான்மையில் தோன்றிய மில்லியனர்கள் எரியும்விளக்கிற்கு எண்ணை ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே
    நல்லொண்ணமிக்க தமிழ்மக்கள் அறியவேண்டிய செய்தியாகும்.

  10. Vaani says:
    15 years ago

    //புலிகளோ ஐக்கியதேசியகட்சிகளோ இலங்கையில் ஆட்சிசெய்யுமாக இருந்தால் ஐ.நா.சபைக்கு இப்படியான விசாரணை நடத்தவேண்டுமென்ற கேள்விகள் எழுவதற்கு எந்த காரணமும் எழுந்திருக்காது.//

    உண்மையான கருத்து. புலியை வளர்த்து ; மேற்குலகுக்கு பணியாது தப்பாட்டம்  ஆடியதால் புலிகளை அழத்தார்கள். மகிந்தா ; திசை மாறிச் செல்வதால் இப்படித் தொடர்கிறது அரசியல். தமக்கு சதகமானவர்கள் (ஐதேக) ஆட்சிக்கு வந்தால் ; இவை இல்லாமல் போகும். அது உடனடியாக நடக்காது. உள்ளே குடுமி சண்டை.

  11. Pingback: Indli.com
  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...