இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்த அணி சேர்க்கை தெற்காசியாவில் ஆதிக்கப் போட்டியின் ஈர்ப்பு மையமாக இலங்கை உருவாகியிருப்பதை மீண்டும் உறுதிசெய்கின்றது. தமது ஆதிக்க நலன்களுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்கும் ஆதிக்க நாடுகளின் அங்கங்கள் அனைத்தும் தெற்காசிய அரசியலை தமக்குச் சார்பானதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இலங்கை புனர்வாழ்வு நடவடிக்கைகளை ஐ.நா குழப்பக் கூடாது என ரஸ்யா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய நாடுகளின் அறிக்கையாக கருதப்பட முடியாது என ரஸ்யா குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை, இலங்கை மீதான யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.







