உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.
சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாக கருது செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த காலத்தில் மட்டுமல்ல உக்ரேயினில் நாசிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் வேளையிலும் நவனீதம்பிள்ளை இரு தரப்பிலும் போர்க்குற்றங்கள் நடைபெறுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தை உமிழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரிக்கான படுகொலைகள் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் பிறந்த வளர்ந்தவரான நவநீதம் பிள்ளை அப்படுகொலைகள் தொடர்பாக இதுவரை மூச்சுவிட்டது கூடக் கிடையாது.
தாம் பெறும் ஊதியத்திற்காக ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழலாகச் செயற்படும் நவி பிள்ளை போன்ற கூலிகள் தம்மைப் புனிதப்படுத்த இறுதியில் கூறுகின்ற விமர்சனங்கள் கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பித்துவிடாது.
So, today only know about these people…?
All are Global-Survival politics…
இதுவரை விட்ட தவறுகள் என்பதற்கு அப்பால் இவர்கள் தற் போதாவது சகலதையும் உணர்ந்து கொண்டார்கள் என்பதற்கு மதிப்புக் கொடுக்காமல். புலம் சமூக அமைப்புக்களும் ஊடகங்களும் தாம் எதனை செய்தார்கள் என்பதனை நிரூபிக்க தகுதி இல்லாத போது. அடுத்தவர்களில் மட்டும் தவறுகளை ஆராய முடியாது.
ஒரு இனத்தின் விடுதலை அதற்கான சந்தற்பங்கள் ஆராயப்படும் போது அது பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தோர் எமது மண்ணில் இனவாதத்தை உருவாக்கி வளர்பதற்கு சந்தற்பம் அளித்து அவர்கள் வளர்கப்பட்டார்கள் அரசியலில் சிங்கக்கொடி ஏற்றி சிங்கள தேசத்தை உருவாக்கி காரணத்தாலும் ஆயுதப் போராடத்தை தவறு என தமிழர் கூட கருதிய காரணத்தாலும் உலகத்தின் அணுகு முறைகள் எமது இனத்தின் விடுதலைப்போரை நிராகிரித்து . எதிரி எமது இனத்தைஅழிப்பதற்கு காரணமாக அமைந்தது .
ஆனால் சர்வதேசம் தொட்டு தாயக மக்கள் வரை இன்று பலதரப்பட்ட முன் னேற்றங்களுக்கான நகர்வை கடந்த காலப் போராட்டம் சார்பாக நியாயப்படுத்திய போதும் . புலம் பெயர் சமூகமானது தமது அடிமட்ட நகர்வில் இருந்து ;இதுவரை தமது இலக்கை மாற்றவில்லை. அதற்கு காரணம் கருணா என்பதோடு மட்டும் இல்லை.
சகல தரப்பிலும் தவறுகாண முடியும் ஆனால் தவறு என தெரிந்து கொண்டும் தவறுகளுக்காக உழைக்கும் இனம் உலகத்தமிழினமாக இருப்பதே தமிழினத்திற்கான அவமானம். .
காரணம் முள்ளிவாய்காலில் விடுதலைப் போராட்டம் மெளனிக்கப்பட்டது என்ற செய்தியை அடுத்து உருவாக்கப்பட்ட நா.க.தமிழீழ அரசாங்கமானது அதனை உலகத்தமிழினம் பயன்படுத்திக் கொண்ட நகர்வு தவறு என்பதனை அடையாளம் காணப்படாத வரை . புலம் பெயர் சமூக ஊடகங்கள் அமைப்புக்களது விமர்சனங்கள் தம்மை பலப்படுத்திக்கொண்டு அரசியல் என்ற அடிமட்ட நகர்வை சமூகத்தை ஏமாற்ற கையாளும் நகர்வு என்பதனை புலம் பெயர்அமைப்புக்களது ஊடக அதர்ம வழிகளாகவே வரலாற்றுப்பதிவாக இன்றைய நிலை உள்ளது.
அதனால் ஊடகங்களும் அமைப்புக்களும் உண்மைவழிகளில் எமது இனத்தின் விடுதலைக்கு பணிஆற்ற வேண்டும் . அல்லது சர்வதேச தராதரத்திற்கு அமைவாக நன்மை தீமைஎது என்பதனை உணர்ந்து யதார்தங்களுக்கு அமைவாக செயல்பட வேண்டும். .
எமது வரலாற்றுப்போரில் 30வருட ஆயுதப் போராட்டமானது உலகத்தமிழினம் என்ற அடையாளத்தை பெற்றுள்ள போதும். அதற்கு ஆதரவாக ஊடகங்களின் தர்ம வழிகள் இல்லை. விமர்சனங்கள் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் தவிர்க்க முடியாத ஒன்று . ஆனால் அதற்கன சந்தற்பம் எது என்பதனை உணர மறுத்து எதிரிக்கு சந்தற்பங்களை உருவாக்கி கொடுப்பதால் அதனை விமர்சனம் என மட்டும் கூற முடியாது. அவையே பலதரப்பட்ட விளைவுகளையும் உருவாக்கி உள்ளன.