அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பதிலியாகப் (proxy) பயன்படும் நாடு துருக்கி. அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராகப் போராடுவதற்கு துருக்கியை இராணுவ மயப்படுத்தி வருவதாக அமெரிக்க அரசு கூறுகிறது. துருக்கி ஐ.எஸ்.ஐ,எஸ் இற்கு எதிராகப் போராடுவதாக பல்தேசிய வியாபார ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் நேட்டோ பயங்கரவாதப் படைகள் இணைந்தே செயற்படுகின்றன என்பது பல தடவைகள் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டன.
துருக்கியின் ஹரியர் டெய்லி இன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் F-16, F-4 ஆகிய துருக்கியப் போர் விமானங்கள் சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடும் குர்திஸ் தொழிலாளர் கட்சியின் (PKK) நிலைகள் மீது தாக்குதல் நடத்தின எனக் கூறுகின்றது.
PKK இன் இராணுவப் பிரிவு தனது இணையத்தில் வெளியிட்ட தகவலின் அடிபடையில் அவர்கள் மத்தியில் இழப்புக்கள் இல்லை என அறிவித்துள்ளனர்.
துருக்கிய அரசிற்கும் குர்து போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நிலவும் காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலானது போர் நிறுத்த மீறல் என PKK குற்றம் சுமத்தியுள்ளது.
அதே வேளை சிறையிலிருக்கும் PKK இன் தலைவர்களில் ஒருவரான ஒசலான் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு கட்சியைக் கோருவதாக அச்சுறுத்தியுள்ளார்.
ஏகாதிபத்திய அரசுகளால் பிரித்துத் துண்டாடப்பட்ட குர்திஸ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்காகப் போரடிவரும் கம்யூனிச இயக்கமான பி.கே.கே இன் பேச்சாளரான அலன் ஒட்டாமான் ஜேர்மன் தினசரியான டொச்வெல் சிஸ்ட் இற்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேவையான அளவு போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக சிரியப் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
குர்தீஸ் இன மக்களின் சிரியாவின் விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்கள் மக்கள் நிர்வாகத்தில் நேரடியாகப் பங்களிக்கும் ஆட்சியை பி.கே.கே உருவாக்கியுள்ளது. நிலங்கள் பங்கிடப்பட்டு மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுளன. சோவியத் அமைப்பு முறை போன்ற மக்கள் கவுன்சில்கள் அமைக்கப்பட்டு முதலாளித்துவ – பல்தேசிய ஜனநாயகத்திற்கு எதிரான ஜனநாயக முறைமை நடைமுறையிலுள்ளது.
Kurds are like the Sri Lankan Tamils. Anyone can kick them around.
But, Srilankan Tamils kick by Srilankan Tamils…