ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளதாரம் 2013 ஆம் ஆண்டு 0.3 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார நெருக்கடி முடிவிற்கு வரும் என்ற எதிர்வு கூறியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வியாளன் விடுத்துள்ள அறிக்கையில் அதற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்தைத் தெரிவித்துள்ளது. அதே வேளை வேலையற்றோர் தொலை 12.2 வீதம், அதாவது 19 மில்லியன் மக்கள் தொகை எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் அவநம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது. 2013 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் சிதைவடைவது மட்டுமன்றி அதன் பிரதான நாடுகளான பிரான்ஸ் ஜேர்மனி போன்றன எதிர்பாராத அமைப்பியல் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.