இத்தாலியின் சென் அன்டீயா மருத்துவ மனையின் தற்கொலைத் தடுப்புப் பிரிவின் நெறியாளரான மொரீசொ பொம்பிலி என்பவர் வேலையின்மை, கடன் தொல்லை ஆகியவற்றால் தற்கொலை செய்துகொள்பவர்களின் தொகை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். அரச புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்கொலைகள் 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் ஊடகங்களும் சரிந்து விழும் ஐரோப்பியப் பொருளாதாரத்தின் உண்மை நிலையை மறைத்து வருகின்றன.
இதன் மறுபுறத்தில் ஐரோப்பா முழுவதிலும் பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணம் பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலே என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் பண நெருக்கடியைப் பயன்படுத்தி வங்கிகள் முழு நாட்டையும் சுவீகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை வங்கிகளும் அவற்றினூடாகப் பணம் வழங்கும் வியாபார நிறுவனங்களுமே தீர்மானிக்கின்றன. உலகத்தில் விரல்விட்டெண்ணக்கூடிய சில பணக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தேசிய அரசுகள் கொண்டுவரப்படுகின்றன. இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் கூட இந்த நிறுவனங்களுக்காக நேரடியாகவே இயங்கும் நிலை உருவாகி வருகிறது.
Europe is the most developed continent. Depression and suicidical tendancies are now common in the world. People need help. That is available for the asking. The family and support of that side is more important.