ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் உயரதிகாரிகளின் பிரசன்னம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவிலியன்களை விடுவிக்க வழிகோலும் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை தெரிவித்துள்ளது.
வன்னிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை துரித கதியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், இலங்கை விவகாரம் பாதுகாப்புப் பேரவை விவாதங்களில் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது யதார்த்த நிலையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்கள் நேரடியாக அவதானிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை கண்காணிப்பாளர்கள். இலங்கைக்கு மட்டுமன்றி வன்னி மோதல் தவிர்ப்பு வலயத்திற்கும் விஜயம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவிச் சிவலியின்களது உயிர்கள் காவு கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாள் தோறும் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 15 முதல் 20 வரையிலான அப்பாவிச் சிவிலியன்கள் கொல்லப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.