ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவை சுதந்திரமான விசாரணைகளுக்கு அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை அரச ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவான கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவுடன் உரையாடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய ஹெகலிய ரம்புவக்கல ஐக்கிய நாடுகளுக்கு விசாரணை நடத்த எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்றகிறார்.
அழிப்பு நடத்தப்பட்ட இடங்களில் தடையங்கள், சாட்சிகளை முற்றாக அழிக்கப்படும் வரையில் காத்திருந்த ஐக்கிய நாடுகள் இலங்கை அரசின் மீது எந்த அழுத்தங்களும் வழங்கத் தயாரில்லை. ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதை அதிகார அரசியலில் நாட்டம் கொண்ட தமிழ் ஊடகங்களும் புலி சார் அரசியலும் முன்னெடுப்பதில்லை.