ஐக்கிய நாடுகள் சபையை இலங்கையுடன் இணைந்து செயற்பாடுமாறு இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர்,தலைநகர் பாரிஸில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். 1952ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வரும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் போர்க் குற்றங்களை முன்வைக்கும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை நீதியான முறையில் தயாரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னை மனித உரிமையின் பாதுகாவலனாகக் கூறிக்கொள்ளும் ஐ,நா நிறுவனத்தின் முன்னாலேயே பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மகிந்த ராஜபக்ச அரசினால் கொல்லப்பட்டனர்.
எண்ணை வளங்க்ளை மேற்கு நாடுகள் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக உலகின் மூலை முடுக்கெல்லாம் மூக்கை நுளைக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற போது மூச்சுகூட விடவில்லை.
உலக மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு இனக் கொலையாளி ஐரோப்பாவின் இதயப் பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு எதிராகப் பேசுகின்ற வரைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதே ஐக்கிய நாடுகளையும ஐரோப்பாவையும் இனம்கண்டுகொள்ளப் போதுமானது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் ராஜினாமா
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.
லியாம் பொக்ஸின் இலங்கைக்கான விஜயம் உட்பட உத்தியோகபூர்வ பயணங்களில் அவரின் நெருங்கிய நண்பரான அடம் வெரைட்டியும் பங்குபற்றியமை தொடர்பாக லியாம் பொக்ஸ் ஊடகங்களினதும் எதிர்க்கட்சியினதும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
இப்பின்னணியில், இன்று வெள்ளிக்கிழமை அவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilmirr…4-16-00-07.html
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! தேசியத்தலைவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அதிகாரமிழந்து வருகின்றார்கள். உலகில் சத்தியத்தையும், தர்மத்தையும் எதிர்பார்த்த தானைத்தலைவனை பின்னிருந்து வீழ்த்திய கோழைகள் வீழ்ச்சிய்டைவதை பார்த்து பெருமிதம் அடைகின்றோம். இது எங்களின் காலம். அதாவது எஙகளை போன்ற கோவில்காரர்களின் காலம். இலுப்பை ப்ழுத்துவருகின்றது.