தங்களின் அடிப்படைத் தேவைகளை வெற்றிக் கொள்வதற்காய் ஐக்கியத்துடன் போராட துணிந்த கொட்டகலை தொண்டமான் புரம் மக்ககள் கொட்டகலை கொமர்சல் தொண்டமான் புரம் மக்கள் நீர் மின்சாரம் இல்லாமல் கடந்த 10 வருடங்களாக ஏங்கி வருகின்றனர்.
கொட்டகலை சேரிங் குரோஸ் தனியார் தோட்ட குடியிருப்புக்களில் இருந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு கொட்டகலை கொமர்சல் பிரதேசத்தில் வீடுகட்டி குடியேற்றப்பட்ட இந்த மக்களில் 22 வீடுகளில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பப் படுவது அவர்களை அங்கு பலவந்தமாய் குடியேற்றியவர்களிடம் கூறி பொறுமையிழந்த பொது மக்கள் தாங்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய வருபவர்களை கிராமத்திற்கு வர விட மாட்டொம் என்று தங்களின் பொராட்ட குனாம்சத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.
பத்து வருடகாலமாக மின்சார வசதி செய்து கொடுக்கப்படாமல் இருப்பதனால் பிள்ளைகள் தங்களின் கல்வியை இடையில் நிறுத்தி தலை நகரிலும் வேறுசில இடங்களுக்கும் வேலைக்கு சென்றிருப்பதாகவும் பாடசாலை சீருடைகளை ‘அயன்’ பண்ணி அணியக்கூட வசதியில்லாமல் துன்பப் படுவதாகவும் மண்ணெனணெய் விளக்கில் கல்விகற்று பலருக்கு கண்கள் பழுதாகி போனதாகவும் முறையிட்டனர்.
இந்த கிராமத்தில் தள்ளாத வயதில் தண்ணீர் சுமந்து தடுமாறி தலை குப்புறவீழ்ந்து படுகாயமடைந்த அனேகர் இந்த கிராமத்தில் வாழ்கின்றனர் மோத்தமாக 30 வீடுகள் கட்டப்பட்டு அதிலே 08 வீடுகளக்கு மாத்திரம அனைத்து அடிப்படை வசதிகளையும் பூரணப்படுத்தி கொடுத்து உள்ளனர்.
அந்த 08 வீடுகளில் வசிப்பவர்கள் பிரபல தொழிற்சங்கம் ஒன்றின் மாவட்ட பிரதிநிதிகளும் அமைச்சர்கள் சிலரின் சாரதிகளும் ஆகும் மற்றய அணைவரும் ஏழை பாமர தொழிலாளர்கள் .
இவர்களை இரவோடு இரவாக பலவந்தமாய் அநாதைகளைப் போல் கொண்டு வந்து குடியேற்றி விட்டனர்; என்று பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகின்றனர் இவர்களின் துயர் துடைப்போம் என்று கூறி வாக்கு கேட்டு வெற்றிப் பெற்றவர்கள் ஏமாற்றி விட்டனர் என்று கோபத்துடன் கொட்டகலை தொண்டமான் புர மக்கள் கூறுகின்றனர். எனவே இனிமேல் வாக்கு கேட்டு இந்த கிராமத்திற்கு வாக்கு கேட்ட யாரும் வராமல் இருந்தால் நாகரீகமாக திரம்பலாம் என்று கூறுகின்றனர்.
மலையகம மாட்சியடைந்துள்ளது என்று பொய்யாக உலகத்திற்கு காட்ட முயற்சிக்கும் அரசியல் வாதிகள் தாங்களே தங்களின் முகத்தைப்பார்த்துக் கொள்ள வேண்டம் என்றால் வநித பார்க்க வேண்டிய இடம் இந்தக்கிராமமமாகும்