சமச்சீர் கல்வி ரத்து நடவடிக்கை பின்னணியில் தனியார் பள்ளிகள் இருக்கின்றன என்றும் சமூகநீதி நோக்கில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒரே தரமான கல்வி கிடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை தொடர்ந்து நடத்த அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடினார்.
சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சமச்சீர் கல்வி நிபுணர் குழு ஆராய்ந்து கடந்த 5ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் 766 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அந்த அறிக்கையின் மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு முன்பு நேற்று தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.
சமச்சீர் கல்வி திட்டத்திற்கு ஆதரவாக மூத்த வக்கீல் என்.ஜி.ஆர். பிரசாத் ஆஜரானார். சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வாதாட வந்திருந்த முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் தலைமை நீதிபதி இக்பால் அனுமதி மறுத்தார். முந்தைய ஆட்சியின்போது சமச்சீர் கல்வியை ஆதரித்து ஆஜராகி இருப்பதால் தற்போது அரசுக்கு எதிராக வாதாடுவது சரியாக இருக்காது என்று தலைமை நீதிபதி இக்பால் விளக்கம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு வக்கீல் வில்சன் சமச்சீர் கல்வி வழக்கில் ஆஜராகவில்லை.
தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதிடுகையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி சமச்சீர் கல்வி குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. சமச்சீர் கல்வி கைவிடப்படும் என்று அரசு எங்கேயும் குறிப்பிடவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமாக இல்லாததால் சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டு தள்ளிவைக்க அரசு விரும்புகிறது.
எல்லா மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு உள்ளது என்பதை உயர் நீதிமன்றம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், தற்போதைய சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமாக இல்லாததால் 2005 தேசிய பாடத்திட்டத்தின்படி, தரமான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் தேவை. 2 கோடி மாணவர்களின் நலன் முக்கியம் என்றார்.
தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன், ”சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமானதாக இல்லை” என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இக்பால், பழைய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
புத்தகங்கள் அச்சடிப்பு தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தியை சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள் என்று அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டார். ”அதுபற்றி ஏதும் தெரியாது” என்று அவர்கள் பதில் அளித்தனர். அப்போது தலைமை நீதிபதி இக்பால், புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருவதை அரசே ஒத்துக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.
நீதிபதி மேலும் கூறுகையில், ”சமச்சீர் கல்வி வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி புத்தகங்கள் அச்சடிக்கும் செயல் நீதிமன்ற அவமதிக்கு ஆகாதா? சமச்சீர் கல்வி வழக்கில் அரசுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என்ற எண்ணத்தோடு புத்தகங்களை அச்சிடுகிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் பதில் அளிக்கையில், சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன. இந்த கல்வி ஆண்டை மாணவர்களுக்கு ஒன்றும் இல்லாமல் விட்டுவிட முடியாது. மாணவர்களின் நலன் கருதி ஒரு மாற்று ஏற்பாடாகத்தான் பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்த புத்தகங்களை பயன்படுத்திக்கொள்வோம். இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை பயன்படுத்திக்கொள்வோம்” என்றார்.
”நீதிமன்ற உத்தரவை மீறி பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுவதை பதிவுசெய்து கொள்ளவா?” என்று கேட்ட தலைமை நீதிபதி இக்பால் அதன்படி, அந்த கருத்தை பதிவுசெய்து கொண்டார்.
இந்த நிலையில் ஜெயலலிதா பெருந்தொகையான பணத்தை தனியார் கல்விநிலையங்களிடமிருந்து பெற்றுக்கொண்டாரா என பரலான கேள்வி எழுப்பப்படுகிறது. தனியார் மயம் என்பதும் மக்களை ஒட்டச் சுரண்டும் தாராளவாதக் கொள்கை என்பதும் மூன்றாம் உலக அரசுகளினதும், அதிகார மையங்களதும் அடிப்படைக் கொள்கையாயினும் அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவதை விரைவுபடுத்தலில் லஞ்சம் ஊழல் போன்றன பெரும் பங்காற்றுகின்றன.
பெருத்த ஐரோப்பிய புலிகள் அம்மாவுக்கு ரண்டாந்த்தரம் வாழ்த்து அனுப்பி வெத்தில வெச்சு கடுத்தாசி அனுப்புங்கோ. எண்டாலும் அம்மா நல்லவ. .. என்ன காசக்கண்டா அவ ஓட்டமற்டிக்கா இன்னும் கொஞ்சம் ஊதீடுவா.