ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது.
மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
மேலும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் தமது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அட்டர்னி ஜெனரல் உள்ளிட்டோருடன் தமிழக அரசின் முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசாரன் ஆஜராகி, தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோர் மீது ஆயுதச் சட்டம், தடா சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சட்டப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுதான் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அப்படி அனுமதி பெறவில்லை என்று கூறினார். ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றிதான் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுவிக்க தமிழகத்துக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. ஆனால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினர். மேலும் தமிழக அரசு எந்த அடிப்படயில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது என்பதை 2 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்காலத்தில் ஜெயலலிதாவிற்கு வாய்ப்பாகப் போன நீதிபதி சதாசிவத்தின் பரிந்துரை அவரை அதிரடித் தீர்மானம் எடுக்கத் தூண்டியது. மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மூன்று பேரை மட்டுமல்ல ஏழுபேரையும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யவேண்டும் தவறினால் தான் அவர்களை மானில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விடுதலை செய்வேன் என அறிவித்தார். மாநில அரசிற்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய அதிகாரம் வழங்கும் குற்றப்பிரிவு 432 இன் அடிப்படையிலேயே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
குற்றவியல் பிரிவு 432 ஐ பின்னதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிரிவு 435(1) கட்டுப்படுத்துகிறது என்பது ஜெயலலிதாவிற்குத் தெரியாததல்ல. அடிப்படையில் பிரிவு 435 இன் அடிப்படையில் மத்திய அரசு அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் சார்ந்த வழக்குகளில் மாநில அரசு சுயாதீனமாக முடிவெடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தீர்மானத்தை மத்திய அரசும் அதேவேளை பாரதீய ஜனதாக்கட்சியும் எதிர்க்கின்றன. காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தனது வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்திய தேசியப் பற்று என்ற பழமைவாத ஒருங்கிணைப்பை நம்பியிருக்கின்றன. இந்துத்துவம் என்ற பிந்தங்கிய இளைகளால் பிணைக்கப்பட்டுள்ள இந்தியத் தேசியம் பாரதீய ஜனதாவினதும் காங்கிரசினதும் அதிகாரவர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான முகமூடி. ஜெயலலிதா போன்ற மாநில முகவர்கள் இதன் அடியாட்கள் மட்டுமே.
ஆக,வை.கோ ஆதரிக்கும் பாரதீய ஜனதாவும் அதே வேளை காங்கிரசும் ஏழு பேரும் விடுதலை செய்யப்ப்படுவதை எதிர்க்கின்றன.
அப்பாவிகளை மரணபயத்தோடு சிறையில் அடைத்து வைத்திருந்த இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதுநிதிகளான ஜெயலலிதாவும், காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அப்பாவிகளின் உயிர்களகளை பந்தாடிக்கொண்டிருக்கின்றன.
How many years have they been jail. That itself is Capital Punishment already.
First of all, they aren’t the main characters of the assassination,the mandators and the killers were all gone.If the Indian judiciary system and the people want that this people must be punished, because, this way others would learn a lesson,the time is over, 23 years are too many for them.
The problem is dirty politics.If some honest Indian believes their country going to come a super power,I am very sorry for them.
In this political game… All are expected…
Read my previous commets..
ஆனால், கிளைமாக்ஸ் இனித்தான் உள்ளது…
இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ள நிலையில்…
ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்தால்… தான் என்ன புலுடா விட்டு தனது அரசியல் விபச்சாரத்தை தொடருவது என்று கருணாநிதி ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் வீடுகளில் இருந்தோ… மடியில் இருந்தோ… மாறி மாறி யோசித்துக் கொண்டு இருப்பார்…
இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அம்மையாருக்கு வெற்றி… விடுதலை செய்யப்படாவிட்டாலும் அம்மையாருக்கு வெற்றி…
https://inioru.com/?p=39298#comment-39326