கடந்த மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை யூன் மாதம் 5 ம் தேதிக்குள் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் வழக்கம் போல் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
சென்ற மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. அவர்களின் உடல் நிலை ஒருவர் பின் ஒருவராக மோசமடைந்தது.
முகாம் தமிழர்களை இந்த மாதம் 5 ஆம்தேதிக்குள் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் முகாம் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் தமிழக அரசு வழக்கம் போல் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. முகாம் தமிழர்களும் எவ்வளவோ நம்பிக்கையுடன் இருந்தனர். தாங்கள் விடுதலை ஆவோம் என்று நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டது தமிழக அரசு.
இப்போது விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
தமிழின வாதம் பேசும் ஜெயலலிதா பாசிச அரசும் அதற்கு வக்காலத்து வாங்கும் சீமான், வைகோ,நெடுமாறன் போன்ற சந்தர்ப்ப வாதிகளும் இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை. தமிழீழம் பெற்றுத் தருவோம் என மூலைக்கு மூலை மேடை போட்டு முழங்குகிறார்கள். புலம் பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்தவும் வாக்குப் பொறுக்கவும் இவர்கள் நடத்தும் நாடகத்தைநம்பி ஈழத் தமிழ் அகதிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
Late Leader Mohammed Hussain Mohammed Ashraff also once said that he may able to do where the late Leader Appapillai Amirthalingam failed. These refugees are now pawns in the diplomatic checker board. They are delibrately ignoring them.
இந்தியாவுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டால் இந்திய தூதுவராலயத்தின் கோபத்திற்கு ஆளாகவேண்டிவரும் அல்லது இந்திய விசா மறுக்கப்படலாம் என அஞ்சி பல இணைய தளங்கள் மெளனம் சாதிக்கும் வேளையில் அது குறித்து கவலை கொள்ளாது தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான செய்திகளை அதுவும் சிறப்பு முகாம் மற்றும் நக்சலைட்டுக்களின் செய்திகளை வெளியிட்டு வரும் “இனியொரு” நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அதுவும் புலிகள் அழிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட அது மூடப்படவில்லை. அது குறித்து யாரும் அக்கறை கொள்ள வில்லை என்பது இன்னும் வேதனையானது.இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் காண்பதே தனது இலட்சியம் என்று இன்று கூறிக்கொண்டிருக்கும் கருணாநிதி அவர்கள் ஆகக்குறைந்தது மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தான் ஆரம்பித்த சிறப்பு முகாமை மூடுவாரா?
Tholar. Balan, that is true that both government will exercise their sovereign right s and refuse visa to those who make irresponsible statements. Late Cyril Mathew was trying to say something thirty years or so ago what then President J. R. Jayawardena could not say in public. There are proper diplomatic channels between Indian and Sri Lanka. What can the guys and gals in Tamil Nadu could do? United Nations should start an assisted return program for the Sri Lankan Tamils refugees as they did for the Afghan refugees in Pakistan.