ரஜீவ் காந்தி கொலை தொடர்பாக தூக்குத்தண்ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள மூவருக்கும் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் அதாவது சாகும் வரை சிறைத் தண்டன விதிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கும்பகோணத்தில், நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக இந்த மூவர் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 32 பேரையும் அவர்கள் இயற்கையாக சிறையிலேயே மரணம் அடையும் வரை தண்டனை அளிக்க வேண்டும்.
பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பையும் இதுபோலவே வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.
கொலையோடு தொடர்பற்ற மூவரையும் தண்டித்தே தீரவேண்டும் என்பதில் காங்கிரஸ் அரசியல்வாதிகள் குறியாகவுள்ளனர்.
எவ்வாறேனும் அப் பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும்
சபாஷ்,வீ ரன்.