இலங்கை மக்களுக்கு நாளை (இன்று) மிகவும் முக்கியமான தினமாகும். ஜனநாயகம் இறுதியில் வெற்றிபெற்றிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.
தமது விருப்பத்திற்கு இணங்க அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்காக இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எவரை இலங்கை மக்கள் தெரிவு செய்கிறார்களோ அத்தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது என்று கிருஷ்ணா நேற்று தெரிவித்ததாக
ஏ.என்.ஐ. செய்திச் சேவை குறிப்பிட்டது.இலங்கையில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நேற்று கருத்துத்தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் இறுதியாக ஜனநாயகம் வெற்றியீட்டியிருப்பதையிட்டு இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் வாக்காளர்களும்!
நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதியோ முன்னாள் இரானுவதளபதியோ முன்றில் இரண்டு பெருண்பான்மையை பெற முடியாமல் தவிக்கும் நிலையில் இன்று ஜனநாயக ஓட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தலைவர்கள் உட்பட சின்னாபின்னமாகி போயுள்ள தமிழ் கூட்டமைப்பு உட்பட ஒவ்வோருவரும் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில், சிவாஜிலிங்கம் தனியே கேட்கும் நிலலையிலும் மூத்த அரசியல் வாதியானவரும் புலிகள் தலைமையகமாக கொண்ட கிளிநொச்சியை பிரதி நெறிப் படுத்தியவருமான தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.ஆனந்தசங்கரி
அவர்கள் இன்று கிளிநொச்சி மயான பூமியான நிலையில், கிளிநொச்சி மக்கள் தம் நிலம், உடமை, உறவு எல்லாவற்றையும் இழந்து கூடாரங்களுக்குள்ளும், முட் கம்பி வேலிகளுக்குள்ளும் அடைபட்டு இருக்கும் நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவாகும் ஜனாதிபதிக்கு 15 அம்ச கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
நாளை இலங்கை வாழ் மக்கள் வாக்களிக்கப்போகும் ஜனாதிபதி தேர்தலில் முதலில் வேட்பாளர்களின் நிலையையும் பின் வாக்காளர்களின் நிலையையும் பார்ப்போம்.
முதன்மை வேட்பாளர்கள் எப்று எடுத்தால் இருவர் நிற்கிறார்கள், ஒருவர் 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி அரசியல் குடும்ப பின்னணியில் உள்ள குடும்பத்தில் பிறந்து, சட்டக்கல்லூரியில் கல்வி பயின்று 1970ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, 2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டு, 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி அடுத்த ஆறு வருடங்களிற்கு இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஈழத்திருநாட்டில் கடந்த முப்பது வருடங்களாக அந்நிய சக்திகளின் ஊடுருவல்களாலும், விலைபோன தமிழ் சிங்கள தலைமைகளாலும் சீரழிந்து போய் உள்ள நாட்டில், சொந்த நாட்டிலேயே மக்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு, தமிழர்க்கு என்று ஓர் தனிநாடு பெற்று தருவதாக தம் சொந்த மக்களையே அநாதைகளாக்கியது மட்டுமல்லாமல், புதைகுழிகளுக்குள் தள்ளி, யாருக்கு எதிராக போராட வெளிக்கிட்டோமோ, அவர்களிடமே பிச்சைகாரரிலும் கீழாக கையேந்தும் நிலைக்கு இட்டு சென்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையிலான அந்நிய சக்திகளின் ஊடுருவலின் ஆளுமைக்கு உட்பட்டிரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டின் ஓர் பகுதி மண்ணை மட்டுமல்லாமல், அவ்மக்களையும், தனது அரசியல் தலைமையால், தனது நேச நாடுகளின் உதவியுடனும், ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்து இராணுவத்தில் சேர்ந்த சிங்கள இளைஜர்களின் அர்பணிப்புடன் மட்டுமல்லாமல், புலிகளை வெல்வது என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு மத்தியில் மீட்டெடுத்து இன்று யாழ் செல்லும் பாதையை திறந்து, முப்பது வருடங்களிற்கு பின் முதல் தடவையாக மனிதக் குண்டுகள் வெடிக்காத, இயந்திர ஆகாயப்பறவைகளில் இருந்து குண்டு மழை பொழியாத சூழ்நிலையில் மக்கள் ஓரளவு, மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரக்காற்றை சுவாசிக்க காரணமானவர்.
மற்றவரை எடுத்தால் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் தலைமையை ஏற்று இராணுவதலமையை மேற்கொண்ட, 1950ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி பிறந்து, 1970ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து commanderஆக (December 6, 2005 – July 15, 2009 ) இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி மட்டும் கடமையாற்றி, இலங்கை இராணுவத்தில் முதன்முதலாக four star rank எடுத்த பெருமைக்குரியவரும், Sri Lanka’s most successful army commander என்ற பெயர் எடுத்தவரும் ( Indian National Security Advisor Mayankote Kelath Narayanan to describe him as the “best army commander in the world”.), 2006ம் ஆண்டு April மாதம் 25ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிருந்து உயிர் தப்பியவரும், ” “இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் அளவுக்கு மீறிய உரிமைகளைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது சிங்கள மக்களது நாடு என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவர்களை நாம் எமது மக்களாக நடத்துகிறோம். நாங்கள் இலங்கையில் எழுபத்தைந்து சதவீதமாக இருக்கிற காரணத்தால் இங்கு விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எமது நாட்டை பாதுகாக்க எங்களுக்கு உரிமை உண்டு. எமது நாடு பலம் வாய்ந்தது. அவர்கள் விரும்பினால் இங்கு இருந்து விட்டு போகலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையின் கீழ் அளவுக்கு மீறி உரிமைகளை கோருவதை நிறுத்த வேண்டும்” (இவரின் இவ் பொறுப்பற்ற பேச்சுக் குறித்து அரசு இன்னும் மவுனமாகவேயிருக்கிறதுடன், இந்தப் பேச்சுக்கு முதன்மை வேட்பாளரான ஜனாதிபதியிடமிருந்து வாயளவிலான கண்டனம் கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) என்று கூறியவரும், நாலாம் கட்ட இறுதிப்போரின் பின் Chief of Defence Staff ஆக பதவி உயர்வு பெற்று, 2009ம் ஆண்டு Novembeமாதம் 16ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்து தமிழீழ விடுதலை புலிகளை வழிநடத்தியவர்களால் வழிநடத்தப்படுகிறார் என்று கணிக்கப்படும், UNPயின் பொது வேட்பாளராவார்.
மேலும் இத் தேர்தலில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாகியவரில் ஒருவராகிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஏதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டத்துறை, துறைமுகம், பெற்றோல் உள்ளிட்ட விடங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த நாட்டின் ஏகாதிபத்திய வாதிகள் தெரிந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டு, நாட்டில் இன்று பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டுமே காணாமல் போயுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ஷவும், அவருக்கு கீழ் இராணுவத் தளபதியாக அவரது கட்டளைகளை அன்று நிறைவேற்றிய சரத் பொன்சேகராவுமே காரணம் எனவும், இவர்களே இறுதி நேரப் போரின்போது, பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணமானவர்கள், இவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது, வடக்கு கிழக்கில் உள்ள வளங்களையும் மக்களையும் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவே தமிழ் இளைஞர்கள் கிளர்ச்சி செய்தார்கள், அது தவறல்ல எனக் கூறி மறைமுகமாக புலி ஆதரவாளர்களின் வாக்கையும் வேண்டுவது போல், தமிழ் மக்கள் அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கூடாது, ஜனாதிபதி தேர்தலில் 50 வீதமான வாக்குகள் ராஜபக்ஷவோ அல்லது சரத் பொன்சேகாவோ பெறக்கூடாது என்பதற்காகவே நானும் தமிழ் மக்கள் சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கமும் போட்டியிடுகின்றோம். மக்கள் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்றைய வேட்பாளராகிய எமது வல்வை தந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின், இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவிலும் மற்றைய நாடுகளிலும், பொங்கு தமிழ் நிகழ்வுகளிலும், உரை நிகழ்த்தி பிரச்சாரம் செய்துவந்த, TNAஇல் அங்கம் வகித்து, ஸ்ரீகாந்தாவுடன் சேர்த்து தமிழீழ விடுதலை இயக்கமான ‘டெலோ’ வில் இருந்து நீக்கப்பட்டடுள்ள, முன்னர் பெறுமதி மிக்க வாகனம் ஒன்றை வன்னிப் பகுதிக்கு கொண்டு சென்று விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல பத்து மணித்தியாலயங்களாக இலங்கைன் இரகசிய பொலிசாரினால் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்து பின் இந்தியாவிற்குச் சென்று பின்னர் பல மாதங்களாக வெளிநாடுகளுக்கும் தமிழ் நாட்டிற்கும் மாறி மாறி பயணம் செய்து, இந்தக் காலப் பகுதியில் தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் காரசாரமான மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி கடைசியில் திடீரென்று இலங்கைக்கு கால் பதித்து, அவருக்கு இலங்கை அரசாங்கத்தால் எந்த ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படாமல் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அவர்களின் இடங்கள் நிரப்பப்பட்ட போது அந்தக் கதிரைகளில் ஒன்றைப் பற்றிக் கொண்டவரான சிறீகாந்தாவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தச் சென்று, ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி சென்று, இந்திய குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு, தற்போது பனாகொடை இராணுவ முகாமிற்குச் சென்று அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலைப் பொறுப்பேற்று தேவையான பத்திரங்களில் கையெழுத்திட்டு, சடலத்தைப் பெற்றுக்கொண்டு, வல்வெட்டித்துறை கொண்டு சென்று, தஞ்சம் செய்து, இலங்கை இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாமியார் சின்னம்மாவை, மாலைதீவில் உள்ள அவரது உறவினர்களிடம் கொண்டு சென்று ஒப்படைத்து கொழும்பு திரும்பிய தமிழர் கூத்தமைப்பு எம்.கே.சிவாஜிலிங்கம் ஆவார்கள்.
இனி நாம் வாக்காளர்களை பார்ப்போமானால், முன்று இனத்தவர் வாக்களர்களாக உள்ள நிலையில், சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்குகள் பிரதான இரண்டு வேட்பாளர்களுக்கும் பிரியும் நிலையில், தமிழ் வாக்காளர்களின் வாக்கிற்கு அடுத்த முக்கிய வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கமும், விக்கிரமபாகு கருணாரட்ன அவர்களும் குறி வைத்து தமிழரின் வாக்குகள் பிரதான இரண்டு வேட்பாளருக்கும் போகாதமாதிரி தம் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள்.
வாக்காளர்களில் சிங்கள வாக்காளர்களை பார்க்குமிடத்து, இராணுவத்தில் சேர்ந்த இளைஜர்களின் குடும்பத்தவர்களின் வாக்குகளும் UNPசார்பான நகர்புற வாக்குகள், வடமத்திய, வடமேல் வாக்குகள் சரத் போன்செகராவிற்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் இருக்கும் வேளையில், அவரது கூட்டணியில் இணைந்து இருக்கும் JVPஇன் வாக்குகள், தற்போது கடைசியாக ஆதரவு கொடுத்து இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களான பண்டாரநாயகா ஸ்ரீமா தம்பதிகளின் புதல்வியும், 17வருட UNPஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவருமான, 11வருட காலம் தொடர்ந்து (November 12, 1994 to November 19, 2005) ஜனாதிபதியாக இருந்து யாழ் மாவட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டவருமான காலம்சென்ற விஜயகுமாரதுகாவின் துணைவியாகிய சந்திரிகா வியஜகுமாரதுன்கவின் ஆதரவு வாக்குகள் பொது வேட்பாளராக நிற்கும் சரத் போன்செகராவிற்கு கிடைக்குமிடத்தில், இக்கூட்டணி செய்யும் பிரச்சாரங்கள் தன் இராணுவ தலைமைதான் நாட்டை பயங்கரவாதத்த்ஹிளிருந்து மிட்டேடுத்தது போன்றவையும், விலைவாசி ஏற்றம் (ஒருவராலும் விலைவாசிய குறைக்க முடியாது), ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் ( முன்றில் இரண்டு பெருன்பான்மை பெறாமல் ஒருவராலும் ஜனாதிபதி முறையை ஒழிக்கமுடியாது) முதலியவற்றை வைத்து சரத் போன்செகரா வாக்கு கேட்கிறார்.
தற்போதைய ஜனாதிபதியை மகிந்த ராஜபக்ஷவை எடுத்தக்கொண்டால், இவர் தனது அரசியல் தலைமையிலால்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டு நாடு, நாடு மக்கள் விடுதலை அடைந்துள்ளார்கள் என்பதுடன், நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதாக பிரச்சாரம் செய்வதுடன் அரச ஊடக இயந்திரங்களை நம்பி முக்கியமாக எதிர் வேட்பாளரின் பிழைகளை கண்டுபிடித்து மக்கள் முன் வைப்பதிலும் முன்னுரிமை வைத்து, தென்னிலங்கை மக்களின் வாக்குகளை நம்பி சிங்கள வாக்குகளை கேட்கிறார்.
தொடர்ச்சி………..
இனி நாம் தமிழ் வாக்களர்களை பார்க்குமிடத்து, இவைகளை முக்கியமாக ஆறு விதமாக வாக்களர்களை பிரிக்கலாம்.
1. மலையக தமிழ் வாக்குகள்.
2. கிழக்கிலங்கை தமிழ் வாக்குகள்.
3. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர் வாக்குகள்.
4. யாழ் மாவட்ட வாக்காளர்கள்
5. வன்னி மாவட்ட வாக்காளர்கள்.
6. தென்னிலங்கை (கொழும்பு) வாக்காளர்கள்
முதலாவதாக மலையாக வாக்காளர்களை பார்க்குமிடத்து, மலையக அரசியல்வாதிகள் அவர்கள் சார்ந்த மக்களின் முன்னேற்றம் கருதி அரசமைக்கும் அரசாங்கத்துடன் சேர்வதையே வழக்கமாகக்கொண்டவர்கள். ஆதலினால் தற்போதைய அவர்களின் அரசியல் தலைவர்கள் இருபக்கமும் பிரிந்து நிற்கும் நிலையில் இவர்களின் வாக்குகளும் இரண்டாக பிரிந்து செலும் நிலையையே எதிர்பார்க்கக்கூடியதாக உள்ளது.
இரண்டாவதாக கிழக்கிலங்கை தமிழ் வாக்காளர்களை பார்க்குமிடத்து, ஏற்க்கனவே தமிழீழ விடுதலைப்புளிகளிளிருந்து எல்லையோர கிராமங்களில் முஸ்லிம், சிங்கள மக்களை வேட்டையாடியது மட்டுமல்லாமல், தமிழ் சிறார்களை பிடித்து புலியமைப்பை கட்டி வளர்த்து, பின் பிரிந்தும் சகோதர தமிழ் படுகொலைகளை புரிந்து, தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து, அமைச்சராக இருப்பவரின் ஆதரவு, கிழக்கிலங்கை முதல்வர் சந்திரகாந்தனின் ஆதரவு மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்குமிடத்து, கிழக்கின் வசந்தம் மூலம் பயனடைந்த மக்களின் வாக்குகளுடன், கள்ள வாக்குகளும் போடப்படலாம்.
அதே நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சம்பந்தர் கோஷ்டியின் ஆதரவு, தற்போது ஆதரவு தெரிவித்திருக்கும் மட்டு நகர சிவகீதா பிரபாகரனின் ஆதரவுடன்( சரத் வென்றாலும் என்று சிவகீதா பிரபாகரனை சரத்துடன் அமைச்சர் விநாயகமூர்த்தி முரலிதரன்தான் நிற்கச் சொன்னதாக ஒரு செய்தி), இன்னும் இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறிதிகளில் சலிப்படைந்து, ஏமாற்றம் அடைந்திருக்கும் மக்களின் வாக்குகள் சரத் போன்செகராவிர்க்கு போடப்படலாம்.
முன்றாவதாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்களை பார்க்குமிடத்து, இவர்களில் முழுவருக்கும் வாக்கு சீட்டு இல்லாத நிலையில், வாக்கு சீட்டு உள்ளவர்களும் இரண்டு வகையாக உள்ளனர். ஒரு சாரார் புலி சார்பாக இருந்தவர்களும், மாவீரர் குடும்பம்களை சேர்ந்தவர்களும், கடைசி யுத்தத்தில் உறவினர்களை பரி கொடுத்தவர்கள். மறு சாரார் புலியின் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டு வெளிவரமுடியாத நிலையில் பிள்ளைகளை புலிகளுக்கு பறி கொடுத்தவர்கள், மற்றும் கடைசியாக தப்பி வரும்போது புலிகளால் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டு, உறவினர்களை பறிகொடுத்தவர்கள். இவர்களில் முதலாமவர் சரத்திற்கும் இரம்டாமவர் மகிந்தவிற்கும் தமது வாக்குகளை போடலாம். ஆனால் இங்கும் இவர்களின் வாக்குகள் 1000ரூபாய் கொடுத்து வாங்கப்படுவதாக செய்திகள் வருமிடத்து, கள்ள வாக்குகளும் போடப்படலாம்.
நான்காவதாக யாழ் மாவட்ட வாக்களர்களை பார்க்குமிடத்து, இவர்களில் தற்போது வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்து வாக்கு சீட்டு கிடைத்வர்களும், அங்கு வசிப்பவர்களும் அடங்குவர். இவர்கள் மத்தியில் “மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! வடகிழக்கு இணைபிரியா அழகு!” என்று புலி இருக்கும் மட்டும் கோஷம் போட்டு தற்போது ” “மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி!” மட்டும் கோஷம் போட்டு, மஹிந்த அரசிடம் 10அம்ச கோரிக்கை வைத்து, யாழில் மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்து வரும் மாண்புமிகு கவுரவ அமைச்சரின் மஹிந்த சிந்தனை, வடக்கின் வசந்தம் வேலைத்திடங்கள், பிரச்சாரங்கள் எடுபடுமிடத்து அவர்களின் வாக்குகள் மகிந்தவிற்கு போடப்படலாம்.
இதில் TNAஇன் சம்பந்தர்-மாவை குழுவின் ஆதரவு சரத்திற்கு இருப்பதனாலும், தமிழ் மக்களின் வாக்குகள் UNPஇற்கே கிடைத்து வருவதாலும், இந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் உள்ள நிலையில் யாழில் கூடுதலான வாக்குகள் சரத்திற்கே கிடைக்க vaaippu உண்டு.
உதாரனத்திற்க்கு: கடந்த ஜனாதிபதி தேர்தலில் UNPஇக்கு தமிழரின் வாக்குகள் விளாமல் புலியின் மூலம் பணம் கொடுத்து, தடுத்து ஜனாதிபதியாக வந்தவர்தான் தற்போதைய ஜனாதிபதி, அத்துடன் கடந்த மாநகர சபை தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.
ஐந்தாவதாக வன்னி மாவட்ட வாக்களர்களை பார்க்குமிடத்து, இவர்களில் தற்போது புலியின் கட்டுப்பாட்டிலிருந்து வந்தவர்களும், தீவகத்தில் 90களில் கூலிப்படைகளால் துரத்துப்பட்டு இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களும், நிரந்தரமாக அங்கு வசிப்பவர்களும் அடங்குவர். இங்கு கடந்த நகராட்ச்சி தேர்தலை எடுத்துக்கொண்டால் நிலைமை விளங்கும், ஆனால் தற்போது நிலைமை மாறி வவுனியாவில் மக்களின் நன்மதிப்பை பெற்று நடுநிலைமை வகித்து மக்கள் சேவையே மகேசன் சேவையென மக்களுக்கு சேவை செய்து வந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினர் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவிற்கு தமது ஆதரவை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நகராட்ச்சி தேர்தலில் தமக்கு வாக்கு விளாமல் செய்த கூட்டூடோ ஒன்றாக ஒரே மேடையில் மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்த நிலையில், அத்துடன் புலியான, குடும்பமே புலியான பாராளுன்மன்ர உறுப்பினர் கனகரத்தினம் சிறையில் இருந்து மஹிந்த கோஷத்துடன் வெளிவந்த நிலையில் கணிசமான வாக்குகள் மகிந்தவிற்கு விழலாம்.
அதே நேரம் அதே நகராட்ச்சி தேர்தலை சந்தித்து வெற்றியீட்டிய சம்பந்தர் கோஸ்டியின் ஆதரவாளர்கள் சரத்திற்கே தமது வாக்குகளை போடுவார்கள். இங்கு இன்னும் ஒன்றை நாம் பார்க்க வேண்டும், முன்பு புளொட்டை ஆதரித்தவர்கள் தற்போதைய புளொட்டின் தலைமை ஏற்ற முடிவை ஏற்று மகிந்தவிற்கு தமது வாக்குகளை போடுவார்களோ என்பது சந்தேகமே.
ஆறாவதாக தென்னிலங்கை (கொழும்பு) வாக்களர்களை பார்க்குமிடத்து, மனோ கணேஷன் சரத் பக்கம் உள்ளார், அத்துடன் வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் இன்றும் தெற்கில் வாடகை விடுகளிலேயே குடியிருக்கிறார்கள், அத்துடன் கடந்த சில வருடங்களாக நடந்த கடத்தல்கள், கப்பங்கள் முதலியவற்றாலும், இன்றும் கொழும்பில் தமிழருக்கு சிங்களவருக்கு உள்ள சுதந்திரம் இல்லாத நிலையில், என்றும் UNPஇன் வாக்குகள் கொழும்பு தமிழரிடம் இருந்து கிடைத்து வந்த நிலையில், சரத்திற்கே பெருன்பான்மை வாக்கு விழலாம். (காரைநகரை சேர்ந்த மண்ணெண்ணெய் மகேஸ்வரன் வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது)
தொடர்ச்சி………..2
சிவாஜிலிங்கத்திற்கு புலி ஆதரவாளர்களின் வாக்குகள் விழலாம்.
விக்கிரமபாகு கருணாரட்ன அவர்கட்டு இடதுசாரிகளின் வாக்குகளும், அத்துடன் இரண்டு முதன்மை வேட்பாளர்களிலும் விரக்தியடந்தவர்களின் வாக்குகள் விழலாம்
நாடு தழுவிய ரீதியில் மக்களின் கடைசி நேர முடிவே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. இதில் இருவரில் ஒருவரும் முன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க மாடார்கள். அத்துடன் மக்களின் கடைசி நேர முடிவு சரத்தை கொண்டு வரலாம்…….ஆனால் இது நாட்டிற்கும், மக்களிற்கும் நல்லதா என்பதே கேள்வி.
***மேலும் சில அரசியல்வாதிகளின் கருத்துக்களும், மக்களின் கருத்துக்களும், முக்கிய தரவுகளும்:
*புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவே உள்ளது -சித்தார்தன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவெ தொடர்ந்தும் இருந்து வருவதாக புளொட்ட அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வலுவை இல்லாமல் செய்வதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச மீது தமிழ் மக்கள் வெறுப்புடன் இருப்பதாகவும் அதனால் இம்முறைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகவேனும் அவர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பார்கள் என்றும் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே சித்தாhதன் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
*இதற்கிடையில், புலம் பெயர்ந்த மண்ணில் உதித்துள்ள மே 18 இயக்கம் நீண்ட காலமாக, பல்வேறு நெருக்கடிகளையும் மீறி தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்திற்கு துணிச்சலாக முகம் கொடுத்துவரும் நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த தோழர் விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளதாக அறிக்கை விட்டுள்ளது.
*மேலும், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் பிரசாரப் பணிகளுக்காக மட்டும் 450 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளதாக இலங்கையில் ஊழல் மோசடிகள் குறித்து கண்காணித்து வரும் அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
*ட்ரான்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ‘பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டம் அமைப்பு, இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தமது இத்தகைய பெரும் செலவீனங்களுக்காக பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்து வெளிப்படுத்தவில்லையென சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் பிரசாரப்பணிகளுக்காக சுமார் 80 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக 378 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இந்தளவு பணம் எங்கிருந்து பெற்றக்கொள்ளப்பட்டது என மக்கள் நிதி மீதான அக்கறையை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
*மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
*இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெரும் ஜனவரி 26ம் தேதியை துக்க தினமாக அனுசரிக்குமாறு இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
* இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர, நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
* வன்முறைச் சம்பவங்களின்போது பிரதான இரு வேட்பாளர்களதும் ஆதரவாளர்களென நம்பப்படும் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்
* இந்தத் தேர்தலில் நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்டவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது கால ஜனாதிபதி ஆட்சிக்கான மக்கள் ஆணைகோரி மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு பிரதான சிங்களக் கட்சிகள் பலவும் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு வழங்கியுள்ளன. தனது தேர்தல் விஞ்ஞாபனமாக 14 அம்சங்களை வெளியிட்டுள்ளார்.
*இவருக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் நாற்பது வருடகால சேவை புரிந்தவர். இவருக்கும் சிங்களக் கட்சிகள் பலவும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவரும் பத்து அம்சங்கள் கொண்ட தனது திட்டத்தை மக்கள் முன்வைத்துள்ளார். இந்த இரு பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய 20 பேரில் ஒரு தமிழரும் இரு முஸ்லிம்களும் அடங்குவர்.
* வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோரில் 45ஆயிரத்து 732 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 602 பேரும் வன்னி மாவட்டத்தில் 29ஆயிரத்து 990 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 பேரும் திரு கோணமலை மாவட்டத்தில் 118 பேரும் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
.
இராமன் ஆண்டாலென்ன; இராவணண் ஆண்டாலென்ன!
சகல இன மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்து மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!
As Max Lerner said: “When you choose the lesser of two evils, always remember that it is still an evil.”
நன்றி! அலெக்ஸ் இரவி
பிற்குறிப்பு:
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகள் தொடரும்:
இத்தேர்தல் தொடர்பான கட்டுரை தேர்தலுக்கு முதல்நாள் வரையப்பட்டதாகும்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் அதிகரியொருவர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் கேட்டதால் மக்கள் அச்சத்தில் வாக்களிக்கவில்லை என யாழ்.தேர்தல் அத்தியட்சகர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா நலன்புரி கிராமங்களில் 50வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தில் வடக்கு கிழக்குக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 43வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3.5வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் சிற்சில காரணங்களுக்காக வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுளார்.
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிய:
http://www.slelections.gov.lk/news.html
alex ravi
ha ha ha hhhhhhaaaaaaaaaaaaaaa
if u want to analize atlease u have to know the truth, and u need to know how to read common peoples mind, but u don’t have both, then how can besaid u are an analist. pooooooooooooooooor alex. may be ur are an former EPRLF or RUNAWAY EPDP member
eh ? hahahahahaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaah.
வடக்கில்
யாழ்ப்பாணத்தில் சரத்பொன்சேகா 1,13,877 (63.84%) வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 44,154 (24.75%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் சரத்பொன்சேகா 70,367 (66.86%) வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 28,740 (27.31%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சரத்பொன்சேகா 1,46,057 (68.93%) வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 55,663 (26.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திருமலை மாவட்டத்தில் சரத்பொன்சேகா 87,661 (54.09%) வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 69,752 (43.04%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் சரத்பொன்சேகா 1,53,105 (49.94%) வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 1,46,912 (47.92%) வாக்குகளையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்டம் உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் 16மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும் 06மாவட்டங்களில் சரத்பொன்சேகாவும் முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வடகிழக்கில் மகிந்த தோல்வியடைந்தது என்றும் இல்லை, சரத் வென்றதும் இல்லை.
ஆனால் வடகிழக்கில் எதிர்பார்த்த வாக்களிப்புகள், வேறு யாராவது வேறு மாதிரி எதிபார்த்து இருந்தால், அது அவர்களின் முட்டதனம் என்று தான் கூறவேண்டும் (மேலிருக்கும் எனது கட்டுரையை திரும்ப படியுங்கள்)
ஆனால் இந்த வாக்குகளின் எண்ணிக்கை, வாக்களித்தவர்களின் எண்ணங்கள், வாக்களிக்காதவர்களின் எண்ணங்கள், ஆராயப்படவேண்டியவை, பரிசீலிக்கப்படவேண்டியவை.
இவற்றிற்கு யார் பொறுப்பு………..இம்மக்களின் அபிலாஷைகளை, மனங்களை வென்றெடுப்பது எப்படி, யாரால் முடியும், எங்கெங்கு மாற்றங்கள் தேவை, மாற்றா….மாற்றுக்கு மாற்றா?……………..எங்கேயோ சறுக்குது மாதிரி தெரியவில்லை?……எங்கேயோ பிழை நடக்குது…நடந்திருக்கு மாதிரி தெரியவில்லை?…….உலகில் விடையில்லா கேள்விகள் இல்லை……..எல்லாவற்றிகும் விடையுண்டு……….முதலில் தான் என்ற அகங்காரங்கள் அகல வேண்டும்……..மக்களை நேசிப்பது அறிக்கைகளிலும், கூட்டம் போடுவதிலும், மேடைப்பெச்ச்களிலும் இல்லை, மக்கள் எம்மை நேசிக்க வேண்டும………..மாற்றங்கள் தேவை…….நாட்டை பயங்கரவாதத்திளிளிருந்து விடுவித்த மஹிந்த தலைமை மாற்ற வேண்டிவைகளை, வேண்டியவர்களை மாற்றுவாரா?
விபரம் தொடரும்……..
நன்றி!
அலெக்ஸ் இரவி
பிற்குறிப்பு:
இதில் சிரிப்பதற்க்கோ, அழுவதர்க்கோ, கொண்டாடுவதர்க்கோ ஒன்றுமில்லை…..இது எம்மக்களின் வாழ்க்கை, புலன் பெயர்ந்தவர்கட்டு பொழுதுபோக்கு (சகலருக்கும்), இதில் நான் தனிப்பட்டரீதியில் ஒருவரையும் குற்றம்சாட்டவோ, ஆதரிக்கவோவில்லை.
வடக்கில் 20% பேர் தானே வாக்களித்தனர்.
அதல்லவா முக்கியமானது.
மக்கள் தமிழ்த் தலைவர்களை மட்டுமல்ல பல பிரமுகர்களையும் தினக்குரல், சுடரொளி உட்பட்ட ஊடகங்களையும் அல்லவா நிராகரித்துள்ளனர்.
கிழக்கிலும் தமிழரின் வாக்களிப்பு மந்தமாகவே இருந்தது.
பேரை மட்டும் கவர்ச்சியாய் எக்ஸ் எண்டு வைத்தால் மட்டும் காணூமே மண்டையையும் கொன்சம் பாவிக்க வேணூம் எக்ஸ்.தொண்டர் திலகங்கள் குண்டு எறீன்சதை கேள்விப் படேல்ல போல கிடக்கு.
பேர் உமக்குக் கவர்சிசியாயிருக்க sex அல்ல xxx.
சனம் மண்டையை நல்லாவே பாவிச்சுத்தான் போடாமை விட்டது.
உளறாமை ஊரிலை வந்து விசாரியும்.
வன்னியிலையும் அதே கதை தான்.